Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Monday, April 27, 2026

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Thursday, April 9, 2026

உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க


 சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இரான்-அமெரிக்கா போரைப் பொறுத்தவரை இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சற்று ஆசுவாசமளிக்கிற செய்தி.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த போர் நிறுத்தம்.

இதனை டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இரானும் ஒப்புக் கொண்டுள்ளது.



மேலே உள்ள செய்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே இன்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு முயற்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்று திமுக எம்.பி சல்மா கருத்து சொல்லி விட்டாராம்.  அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சங்கிகள் குதிக்கிறார்கள்.


சங்கிகளின் அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.

சரியானதொரு கருத்தை வெளியிட்ட சல்மாவை கைது செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது?

மோடிதான் விஸ்வகுருவாக இருந்து போரை முடித்து வைப்பார் என்று இவர்களாகவே முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் அந்த பெயர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணிப்பூரிலேயே மத்தியஸ்தம் செய்ய முடியாத டம்மி பீஸ் மோடி.

இரண்டாவது இவர்கள் சல்மாவை மதக்கண்ணால்தான் பார்க்கிறார்கள்.

அதனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்தைத்தான் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 

Thursday, March 26, 2026

ட்ரம்பின் குரு சீமான் . . .

 


ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.


இப்படியெல்லாம் பேச அவர் சீமானிடம்தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மோடியையும் சீமானையும் தவிர இப்படியெல்லாம் கதை அளக்க உலகில் வேறு யார் இருக்கிறார்கள்!

ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?

Tuesday, March 17, 2026

வேடிக்கைக்காக தாக்குவாராம் மெண்டல் ட்ரம்ப்

 


நேற்றைய ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி கீழே . . .


இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளதால் இரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தனக்கில்லை என்று சொல்லியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இரானிற்கு பேச்சு வார்த்தை மேஜைக்கு வரும்  எண்ணம் இருந்தால் கூட நாங்கள் வேடிக்கைக்காக இரானின் "கார்க்" தீவின் மீது குண்டுகள் போடுவோம் என்று சொல்கிறார்.

சும்மா வேடிக்கைக்காக குண்டு போடுவோம் என்று சொல்கிற ஆளை "முற்றிப் போன பைத்தியக்காரன்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பைத்தியக்காரனின் சினேகிதன்/அடிமை/எஜமான் மட்டும் நல்ல மன நிலை கொண்டவராகவா இருக்க முடியும்?

நான் இஸ்ரேலின் நெதன்யாஹூ வை சொல்கிறேன். 

நீங்கள் யாரை நினைத்தீர்கள்? 

Saturday, March 14, 2026

போரில் ட்ரம்ப் இன்று 😆😆😆😆


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்னன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த காணொளி கீழே உள்ளது. கடைசி வரை கண்டிப்பாக பார்க்கவும். நாளைக்கு மோடிக்கும் இதெ நிலை வரப்போகிறது.



Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ? 

அமெரிக்க ஜனாதிபதியாக? இந்திய பிரதமராக?

 


ப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பக்கத்தில் பார்த்த காமெடி கீழே உள்ளது


அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்று வெள்ளை மாளிகைக்கு ஒருவர் தொலைபேசியில் சொல்ல, "நீ என்ன பைத்தியமா?" என்று வெள்ளை மாளிகை ஊழியர் பதில் சொல்ல, முதலில் தொலைபேசி செய்தவர் கேட்கிறார் "அது கட்டாயமா?" என்று.

இதையே சில நாட்கள் முன்பாக வேறு மாதிரி படித்தேன்.

அடுத்த இந்தியப் பிரதமராக விரும்புகிறேன் என்று பிரதமர் அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் கூற பிரதமர் அலுவலக அலுவலர் " நீ என்ன முட்டாளா?" என்று கேட்கிறார். பிரதமராக விரும்பியவர் கேட்கிறார் "அதுதான் அத்தியாவசிய தகுதியா" என்று.

டொனால்ட் ட்ரம்பும் மோடியும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டனர்,


Friday, March 6, 2026

இது இந்தியாவின் அசிங்கம் மோடி

 


ட்ரம்பின் உத்தரவுக்கு அடிபணிந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா  எண்ணெய் வாங்குவதை குறைத்து கிட்டத்தட்ட நிறுத்தும் நிலைக்கு எடுத்துச் சென்றார் மோடி.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா என்ணெய் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை முப்பது நாட்களுக்கு தளர்த்துவதாக அமெரிக்க சொல்லியுள்ளது.



இந்தியா யாரோடு, என்ன வணிகம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா கட்டளையிடுவது எப்பேற்பட்ட அசிங்கம்! இப்படிப்பட்ட இழிநிலைக்கு இந்தியாவை கொண்டு வந்த நிறுத்தியுள்ள மோடி மிகப் பெரிய அசிங்கம் , , ,

Tuesday, March 3, 2026

அவர்கள் காந்தியின் குரங்குகள் அல்ல தோழர்

 


இரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி யை அமெரிக்க, இஸ்ரேல் கொலைகாரப்படைகள் கொன்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களுடைய பதிவு கீழே உள்ளது.



இரானிய அரசின் சில ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடு இருப்பினும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரையும் மற்ற உயரதிகாரிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜியோனிஸ்ட் இஸ்ரேலும் இரானின் இரையாண்மைக்கு எதிராகவும் சர்வதேச விதிகளுக்கு முரணாகவும் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.

லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் கடைபிடித்த அதே உத்திகளைத்தான் அமெரிக்கா கையாள்கிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா அளந்து விட்ட பொய்கள் அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா மர்றும் சிரியா அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளது.

அமெரிக்க ராணுவத்துறை உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இரானில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி இரானில் செய்து வரும் குற்றங்களுக்கு எதிராக உலகளாவிய அளவில் குரல் எழுப்ப இந்தியா முன்னெடுக்க வேண்டும். 

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழலில் அனைத்து ஜனநாயகக்குரல்களையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைத் தாக்குதல்களும் அதற்கான எதிர்வினைகளும் நிறுத்தப்படும்.

தோழர் எம்.ஏ.பேபி சொன்னது மிகவும் அருமையான ஆலோசனை. முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைவராக இது போல செயல்பட்ட நாடுதான் இந்தியா. 

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் கேட்பார்களா?

அயத்துல்லா அலி காமேனி கொலையை கண்டிக்காத ஆள் மோடி. இஸ்ரேலோடு நிற்பேன் என்று வெளிப்படையாக கூவியவர் அவர்.

மகாத்மா காந்தியின் குரங்குகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் இவர்கள்.

இவர்கள் நல்லதை பார்க்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை கேட்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை பேசவும் மாட்டார்கள். 

Monday, February 23, 2026

தொழிற்சங்கமாய் ஒன்றிணைவோம் - மோடியிடம் லூலா

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

ஏன்?

முதலில் அந்த செய்தியை பாருங்கள்.


தொழிற்சங்கவாதியும் பிரேசில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடித்து ட்ரம்ப், மோடி போன்ற கிறுக்கு பிடித்த தலைவர்களின் வரிசையில் வரும் போல்சனரோவை தோற்கடித்து இப்போது பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் லூலா பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன சொன்னார்?

டொனால்ட் ட்ரம்பின் அராஜக வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகள், தனியாக அவரோடு பேசுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சங்கம் போல ஒன்றிணைந்து பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக என் அனுபவமும் இதுதான். ஒரு தனி தொழிலாளி, ஒரு கம்பெனி நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பேசினால் எந்த பயனும் கிடைக்காது. அதுவே தொழிற்சங்கமாக ஒன்றிணைந்து போராடும் போது அந்த கூட்டு சக்தியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதுதான் லூலா சொன்னது. 

அப்போது மோடியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

என் அனுமானங்கள் இரண்டு.

முதல் அனுமானம் மேலே உள்ள படத்தில் உள்ளது.

இரண்டாவது குரங்குக் குளியல் கீழே உள்ளது. 

"நானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்பை குஷிப்படுத்த எனென்னம்மோ செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதிலே இந்த ஆளு பேசினது ட்ரம்புக்கு தெரிஞ்சா அதுக்கு என்ன திட்டுவாரோ?"


Friday, February 13, 2026

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

Sunday, February 8, 2026

ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்தால்

 


காலையில் முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.


டொனால்ட் ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்து பாருங்கள்.

கலாய்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

ஆனால் அப்படி கலாய்ப்பவர்கள் செல்லும் இடம் திஹார் சிறையாகவோ அல்லது போலி எண்கவுண்டராகவோ இருக்கும். 

Tuesday, February 3, 2026

மீண்டும் மோடியை சிறைப்படுத்திய ட்ரம்ப்

 


இந்தியாவை மோடி மீண்டும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ளார். 

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதை நிறுத்தியதற்காகவும்
அமெரிக்காவிடமிருந்தும் எதிர்காலத்தில் வெனிசுலாவிடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டதற்காகவும்,
அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக்குவதற்கு ஒப்புக் கொண்டதற்காகவும்

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான வரியை மனமிறங்கி 25 % லிருந்து  18 % ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ட்ரம்ப் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதெல்லாம் ஒரு டீலா மோடி?

இப்படி இந்திய நலனுக்கு எதிராக செயல்பட வெட்கமில்லையா?

இதிலே 56 இஞ்சர் என்று பெருமை வேறு.

Tuesday, January 6, 2026

அசிங்கம் மோடிக்கு அல்ல, இந்தியாவிற்கு

 


"மோடி நல்ல மனுசன்தான், நல்ல பையன்தான். நான் கோபமா இருக்கேன்னு தெரியும். அதனால் என்னை குஷிப்படுத்த ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யை படிப்படியா குறைச்சுட்டான்"

இது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பத்திரிக்கையாளர்களிடம் பேசியது.

"ஆமாம் அது உண்மைதான். அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் காத்ரா, நீங்கள்தான் உங்கள் ஜனாதிபதியிடம் எப்படியாவது மத்யஸ்தம் செய்து கூடுதல் வரி விதிப்பு 25 % ஐ நீக்கச் சொல்ல வேண்டும். அவர் சொன்னது போலவே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து விட்டோம்."

இது அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் அதே பத்திரிக்கையாளர் சந்திப்பினல் சொன்னது.

இது பற்றி கருத்து தெரிவிக்க வெளியுறவுத்துறை மறுத்து விட்டதாம். இந்த லட்சணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெரிய அப்பாடக்கர் என்று வேறு சங்கிகள் கதையளப்பார்கள்.

ட்ரம்ப் இப்படி மீண்டும் மீண்டும் திமிரோடு பேசுவது மிகப் பெரிய அசிங்கம், 

வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத மோடிக்கு அது அசிங்கமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அது இந்தியாவுக்குத்தான் பெரிய அசிங்கம்.

மோடியை பிரதமராக வைத்துள்ளதைத் தவிர பெரிய அசிங்கம் இந்தியாவிற்கு இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?

அதுவும் சரிதான் 

 

Saturday, January 3, 2026

நோபல் பரிசை ட்ரம்புக்கு மாத்துங்கய்யா

 


புவனேஸ்வரிலிருந்து இன்று அதிகாலைதான் வீடு திரும்பினேன். இன்று பராமரிப்பிற்கான மின் தடை வேறு. மோட்டார் ஓடாத பிரச்சினை வேறு. அதனால் சமூக வலைப்பங்கள் பக்கம் ரொம்பவே தாமதமாகத்தான் வந்தேன்/ 

வலைப்பதிவு எழுத வேண்டிய முக்கியமான மூன்று CONTENT கள் கிடைத்தது. 

திமுகவில் உள்ள சங்கி என்று சந்தேகப்பட வைத்துள்ள சேகர் பாபு பயன்படுத்திய அடாவடி வார்த்தை.

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் முன்னேற்றம்.

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.

இதில் கடைசியை முதலில் எழுதுகிறேன்.

ஹூயூகோ சாவேஸ் காலத்திலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் பன்னாட்டு மூலதனமும்  வெறியோடு குறி வைத்துள்ள நாடு வெனிசுலா. சாவேஸிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோவை அகற்ற அனைவரும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கான சதிச்செயலில் ஈடுபட்டு வரும் கொரோனா அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அழிவுக்கான நோபல் பரிசாக அளித்தார்கள். ட்ரம்பிற்கு அதில் வருத்தம் வேறு.

ரஷ்யா-உக்ரைன் போரைத்தவிர மற்ற அனைத்து போர்களையும் நிறுத்தி விட்டேன் என்று கதையளந்து (அது கதை என்று மறுக்கும் துப்பு கூட இல்லாத கோழை மோடி என்பது வேறு)  கொண்டிருக்கும் ட்ரம்ப்  இன்று தன் நாட்டுப் படைகள் மூலம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி மதுரோவை கைது செய்து விட்டோம் என்று கொக்கரித்துள்ளார்.

அநேகமாக கணபதி அய்யர் பேக்கரி டீலிங் போல கொரோனா அம்மையாரிடம் நாட்டை கொடுத்து விட்டு அழிவிற்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெற்றுக் கொள்வார்.

அவர்களுக்கு ஒரு வரலாற்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும். 

இப்படித்தான் 2002 ம் ஆண்டு குட்டி ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போது கலகம் நடத்தி சாவேஸை பதவியிலிருந்து அகற்றி கைது செய்தார்கள். மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து புரட்சி செய்து மூன்றே நாட்களில் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.

வரலாறு மீண்டும் திரும்பும். . .



Thursday, November 6, 2025

மோடியின் மௌனம் ட்ரம்பிற்கு பயந்தா?

 


நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சோஹ்ரான் மம்தானியின் தந்தை மகமது மம்தானியின் பூர்வீகம் குஜராத்.  அவர் பிறந்ததே பம்பாயில்தான். 

அதே போல் தாய் மீரா நாயர் பிறந்ததும் ஒடிஷாவில். திருமணம் வரை இந்தியாவில்தான் இருந்துள்ளார். உலகின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் அவர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இரு முறை சிறந்த இயக்குனராக விருதும் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த யாராவது சின்னஞ்சிறிய வெற்றி பெற்றால் கூட அவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் மோடி நியூயார்க் மேயர் என்ற மிக முக்கியமான பொறுப்பை வென்றுள்ள ஸொஹ்ரான் மம்தானியை பாராட்டி ஒரு வார்த்தையாவது எழுதியுள்ளாரா என்று அவர் ட்விட்டர் பக்கத்தை தேடித் தேடிப் பார்த்தேன். எதுவுமே இல்லை.

டொனால்ட் ட்ரம்பால் வெளிப்படையாக எதிர்க்கப்பட்ட, தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்றும் பாலஸ்தீன ஆதரவாளர் என்றும் அறிவித்துக் கொண்ட ஒருவரை இந்திய வம்சாவழியினர் என்று வாழ்த்தும் அளவிற்கு மோடிக்கு தைரியம் இருக்கிறதா என்ன?

மோடி தன்னை 56  இஞ்ச் மாவீரன் என்று வெளியில் பீற்றிக் கொண்டாலும் பேஸ்மெண்ட் வீக்கான படு கோழைதான்.

பிகு: இன்னும் கூட ஒரு தகவல் உள்ளது. அது பிறகு . . .

மக்கள் மதிக்கலை ட்ரம்பே, மஸ்கே

 


கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன.

ஜனாதிபதி ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக  குர்டிஸ் என்றொருவரையும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை ஆதரித்த பெரும் பணக்காரன் எலான் மஸ்க் குவாமோ என்றொருவரை நிற்க வைக்க ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய வம்சாவழி இஸ்லாமியர் ஸோஹ்ரான் மம்தானி என்பவரும் களத்தில் இருந்துள்ளனர்.

மம்தானி ஒரு கம்யூனிஸ்ட். அவரை மேயராக தேர்ந்தெடுத்தால் நியுயார்க் நகருக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று ட்ரம்ப் அறிவித்தார். குர்டிஸ்ற்கு வாக்களிப்பது மும்துமியோ இல்லை வேறு என்ன பெயரோ, அந்தாளுக்கு வாக்களித்தது போலாகும் என்பது எலான் மஸ்கின் பிரச்சாரம்.





ஆனால் நியூயார்க் நகர மக்கள் இந்த இருவரையும் மதிக்கவில்லை.  ஸோஹ்ரான் மம்தானிக்கு  வாக்களித்து  அவரை மேயராக தேர்ந்தெடுத்து விட்டனர்.


இவரது வெற்றி முக்கியமானது.

ஏனெனில்

ஸோஹ்ரான் மம்தானி  தன்னை சோஷலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். முதலாளித்துவத்துற்கு எதிரானவர் என்றும் சொல்லியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கும் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் ஆதரவாக உள்ளவர்.

அமெரிக்காவில் மற்ற இடங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் ட்ரம்பிற்கு செமத்தியான அடி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.

நியூயார்க் நகர மேயராக ஒரு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அதுவும் அமெரிக்க பெரும்பான்மை மக்களுக்கு ஒத்துவராத கொள்கைகளைக் கொண்டவர் வென்றுள்ளது சிறப்பானது.

ஸோஹ்ரான் மம்தானிக்கு வாழ்த்துக்கள்.

பிகு: இன்னும் ஒரு விஷயம் எழுத வேண்டும். என் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொண்டு மாலை எழுதுகிறேன். 




Thursday, October 23, 2025

மோடி, ட்ரம்ப் பொய்யன் யார்?

 



கடந்த செவ்வாயன்று ட்ரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளார். 

அந்த தொலைபேசி பேச்சு பற்றி ட்ரம்ப் சொன்னது 

"நாங்கள் இருவரும் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினோம். ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசினாலும் கூட வர்த்தக பேரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார். ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, பாகிஸ்தானுடன் போர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினோம்"

இது ட்ரம்ப் கூறியது.

அதுவும் எங்கே? யாரிடம்?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கு அளித்த தீபாவளி விருந்தின் போது.

ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு விட்டது என்று இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை ட்ரம்ப் கூறினாலும் இந்தியா அது பற்றி வாய் திறக்கவேயில்லை என்று ஆங்கில இந்து நாளிதழ் சொல்கிறது.

மோடி என்ன சொல்கிறார்?

தீபங்களின் திருவிழாவான இன்று நம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் உலகெங்கும் நம்பிக்கை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து அனைத்து வடிவிலுமான தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம்" 

இதிலே  யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?

இரண்டு பேர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். இரண்டு பேர் சொல்வதும் பொய்யாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் அடிப்படையில் இருவருமே பொய்யர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள், சந்தர்ப்பவாதிகள், மோசடிப்பேர்வழிகள்.

இரண்டு நாட்டு மக்களைக் குழப்ப இருவருமே பேசி வைத்துக் கொண்டு கூட பொய் சொல்லியிருக்கலாம்.

ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லும் தைரியம் மோடிக்கு வராத வரை ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரி அப்படி மோடி சொல்லி விட்டால், மோடி உண்மையை பேசுகிறார் என்று ஒப்புக் கொள்வீர்களா என யாராவது அனாமதேயம் கேட்கலாம்.

அப்படி மோடி தைரியமாக சொல்லட்டும்.

அதற்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"





Saturday, October 4, 2025

இப்போ அதென்ன சொர்க்கமா ட்ரம்பு?

 


ஆஸ்கார் அமைதி விருதுக்கான கனவுப் போட்டியில், ஓ சாரி நோபல் அமைதி விருது வாங்க மோடியோடு துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் டரம்பு ஹமாஸ் இயக்கத்திற்கு கெடு விதித்துள்ளார். 

அவர் முன்மொழிந்த காஸா அமைதித் திட்டத்தை அவர் சொன்ன காலக்கெடுவிற்குள் ஹமாஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு தான் நரகத்தை காண்பிக்கப் போவதாக ட்ரம்பு மிரட்டியுள்ளார்.

ஆமாம், ட்ரம்பு, இப்போ காஸாவில எல்லோரும் சொர்க்கத்திலியா வாழ்ந்து கிட்டு இருக்காங்க?

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் பெண்களையும் குழந்தைகளையும் மருத்துவமனைகளையும் குறி வைத்து நடந்து காஸா முழுதுமே இடிபாடுகளாக மாறியுள்ளது.  பசியும் பட்டினியும் நோயும் காயங்களும் சடலங்களும் என ஏற்கனவே காஸா நரகமாகத்தான் இருக்கிறது.

இதிலே புதிதாக எந்த நரகத்தை காண்பிக்கப்ப் போகிறாய்?

பிகு: காலையில் செய்தித்தாளை பார்த்து எழுதிய பதிவு இது. வேறு வேலைகள் காரணமாக உடனடியாக பதிவிட முடியவில்லை. இப்போது பார்த்தால் நிலைமை மாறியுள்ளது. அது பற்றி விரிவாக இன்றோ, நாளையோ எழுதுகிறேன்.

Tuesday, September 23, 2025

ஞாபகம் வருதா மோடி???

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த புகைப்படம் ஜெய்சங்கரின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தது.


இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி, ஹெச்1பி விசாக்கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தியது போன்ற அமெரிக்க ஜனாதிபதி கிறுக்கன் ட்ரம்பின் முடிவுகள் மிகப் பெரிய இடியாக விழுந்துள்ள நிலையில் இவற்றை எப்படி மாற்ற வைக்க முடியும் என்ற கவலையெல்லாம் இருக்குமல்லவா! அதுதான் அவர் முகத்திலும் வெளிப்படுகிறது.

ட்ரம்பும் மோடியும் நண்பர்கள் அல்லவா! அப்படி இருக்கையில் மோடிக்கு வலி கொடுக்கும் முடிவுகளை எப்படி ட்ரம்ப் எடுக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழலாம்.

ஆமாம். மோடியும் ட்ரம்பும் நண்பர்கள்தான்.

எப்போது ?

ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் . . .

அவர் இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அவரது வெற்றிக்காக மோடி மிகவும் பாடுபட்டார். "நமஸ்தே ட்ரம்ப்" என்ற பெயரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்தார். சங்கிகள் இந்தியாவில் யாகம் எல்லாம் செய்தார்கள். அவர் மூன்றாவது முறையாக போட்டியிட்ட போதும் சங்கிகள் யாகம் செய்தனர்.

ஆனால் இரண்டாவது முறை போட்டியிட்ட தேர்தலில் தோற்றுப் போன பின்பு மோடி அவரை கண்டுகொள்ளவில்லை. ஜனாதிபதி ஜோ பைடனின் நல்ல புத்தகங்களில் ( GOOD BOOKS ) இடம் பெறவே விரும்பினார். ஜோ பைடனின் மனைவிக்கு மோடி அளித்த நாற்பது லட்ச ரூபாய் வைர நெக்லஸ் ( அது ஒன்றும் தாமோதர்தாஸ் வீட்டு சொத்தல்ல, இந்திய கஜானாவிலிருந்து செலவழிக்கப்பட்டதுதான்) எல்லாம் கிறுக்கன் ட்ரம்பை எரிச்சலூட்டியிருக்கும்.

அது மட்டுமா ட்ரம்ப் மூன்றாம் முறையாக போட்டியிட்ட சமயத்தில் மோடி அமெரிக்கா சேன்ற போது "மோடி என்னை சந்திக்கவுள்ளார்" என்று ட்ரம்ப் சொன்ன போது அப்படியெல்லாம் எந்த திட்டமும் இல்லை என்று அவசரம் அவசரமாக மறுத்தார்.

இதன் விளைவாகவே ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பே கிடையாது.  இந்திய வரி விதிப்பு முறையையும் எரிச்சலோடு கண்டித்தார்.

இந்திய பாகிஸ்தான் போரை நான்தான்  தடுத்தேன் என்று இருபதுக்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் சொல்லியும் மோடி அதனை ஏற்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

அது மட்டுமா ஒபாமா போல தானும் நோபல் அமைதி விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகையில் அதற்கான போட்டியாளராக மோடியை அவரது அல்லக்கைகள் முன்னிறுத்துகின்றனர்.

இவையெல்லாம் நினைவுக்கு வருகிறதா மோடி?

மோடிக்கு ஞாபகம் இல்லையென்றாலும் உங்களுக்கு நினைவில் உள்ளதல்லவா ஜெய்சங்கர்?

மோடி மத உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கனென்றால் ட்ரம்ப் இன உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கன்.

இந்த  இரண்டு கிறுக்கன்களின்  கிறுக்குத்தனத்தால் பாதிப்பு என்னமோ சாதாரண மக்களுக்குத்தான்.

இந்த பிரச்சினைகள் தீர என்ன வழி?

அது அந்த இருவருக்கே வெளிச்சம் . . .