Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Friday, May 1, 2026

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

 We shall Overcome என்ற பாடலின் தமிழ் வடிவம் கீழே உள்ளது.  இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே என்ற நம்பிக்கையை அளிக்கும் பாடலை மே தினத்தன்று பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும்.

கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைவருக்கும்

மே தின வாழ்த்துக்கள்.



நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல, இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய் ஓர் நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

விடுதலை வரும்

விடுதலை வரும்

விடுதலை வரும் உண்மையாய்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

 


 

Tuesday, March 31, 2026

ஐவரும் வெல்ல வாழ்த்துக்கள்

 


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)  சார்பில் 

பழனி தொகுதியில் தோழர் என்.பாண்டி,

கீழ்வேளூர் தொகுதியில் தோழர் டி.லதா,

கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் எம்.சின்னதுரை,

பத்மநாபபுரம் தொகுதியில் தோழர் ஆர்.செல்லசுவாமி,

திருவொற்றியூர் தொகுதியில் தோழர் எல்.சுந்தரராஜன்

ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

அவர்களின் குரல் உழைக்கும் மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக, மத நல்லிணக்கத்தின், மதச்சார்பின்மையின் குரலாக தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும்.

இந்த பதிவை படிப்பவர்களில் இத்தொகுதிகளின் வாக்காளர்கள் யாராவது இருப்பின் அவர்களை 


சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

Sunday, December 7, 2025

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக தோழர் களப்பிரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துடிப்பு மிக்க தோழர் ராஜனாக அறிமுகமானவர். தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். தொழிற்சங்க தளத்தில் பணியாற்றுவதை விட கலை, பண்பாட்டு தளத்தில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காண்பித்தார். அதன் தொடர்ச்சியாய் ஒரு முக்கியமான அமைப்பின் முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார். 

ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர். அதில் காஷ்மீர் பயண அனுபவமும் பாகிஸ்தான் பயண அனுபவமும் மிக முக்கியமானது.

அவரது தலைமையில் தமுஎகச புதிய சிகரங்களை அடையட்டும்.

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன் . . .


அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .

பிகு : மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில் 2013 ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலூர் கலை விழாவின் போது எடுக்கப்பட்டவை.

Tuesday, April 22, 2025

புரட்சித்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 



புவியை புரட்டிப் போட்ட தலைவர்,
உழைப்பாளி மக்களுக்கு அதிகாரத்தை
வென்றெடுத்துக் கொடுத்தவர்,
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
மார்க்சிய வழியில் அரசை உருவாக்கியவர்.
 
எல்லாரும் எல்லாமும் பெறலாம்
என்பது சாத்தியமானது.
 
வறுமை ஒழிந்தது,
நோய்மையும் ஓய்ந்தது.
மண் வளம் பெருகியது,
மனித வளமும் கூட . . .
 
கலையும் அறிவியலும்
வானளவு உயர்ந்தது,
விண்வெளியும் வசமானது.
 
அடிமைச்சங்கிலியைத் தவிர
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ பொன்னுலகமே
உள்ளதென்பது உண்மையென்பதை
செயலில் காட்டி
புதியதொரு உலகைப் படைத்தவர்.
 
பிற நாடுகளின்
விடுதலை வேள்விக்கு
வேகம் கொடுத்தவர்.
 
உலகின் உண்மையான
முதல் புரட்சித் தலைவருக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, January 5, 2025

வாச்சாத்தி நாயகருக்கும் சுவாமிக்கும் வாழ்த்துக்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகச் சரியான தோழரை மாநிலக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது.

தோழர் பெ.சண்முகம் என்றால் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆட்கள் சேர்ந்து நடத்திய அராஜகத்திற்கு எதிரான உறுதியான போராட்டம்தான் நினைவுக்கு வரும். இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அப்போராட்டத்தினை முன்னெடுத்தவர் தோழர் சண்முகம்.

எங்கள் கோட்டத்தின் இரு நிகழ்வுகளுக்கு அவரை அழைத்துள்ளோம். 

அண்ணல் அம்பேத்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். "வேட்டையை வாழ்வாகக் கொண்ட வனத்தின் மைந்தன் ஏகலைவன், துரோணரைப் பார்த்து வில் வித்தை கற்றுக் கொண்டதாக சொல்வதே ஒரு கட்டுக்கதை" என்று அவர் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு வந்த நேரத்தில் எங்கள் கோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அண்ணல் அம்பேத்கர்-வெண்மணி தியாகிகள் நினைவுக் கருத்தரங்கத்தில்  உரையாற்ற வருமாறு அழைத்தோம். அவரும் உடனடியாக ஒப்புக் கொண்டார். 

வாச்சாத்தியில் பழங்குடி இன மக்களுக்கு, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க கண்ணீர் வடியும் முகங்களோடு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அவரே உடைந்து போனார். அந்த மக்களின் துயரத்தோடு தன்னை பிணைத்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

கருத்தரங்கிற்கு மூன்று நாட்கள் முன்பாக அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத வேலை காரணமாக என்னால் வர முடியவில்லை என்று சொல்வாரோ என்ற அச்சத்துடன்தான்  பேசினேன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அரியாகுஞ்சூர் என்ற கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தோற்றுப் போன ஒருவர் அங்கிருந்த 11 பழங்குடி மக்களின் குடிசைகளை இடித்துத்தள்ளி விட்டார். அவர்களுக்கு உங்கள் சங்கம் சார்பாக உதவ முடியுமா என்று கேட்டார். 

நாங்களும் உடனடியாக சுற்றறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுக்க இரண்டே நாளில் கணிசமான தொகை வசூலானது. அந்த தொகையை அவரிடம் அளித்தோம்.


அவர் அந்த தொகையை எங்களிடமே கொடுத்து நீங்களே நேரில் சென்று அம்மக்களுக்கு பொருட்களாக வழங்குங்கள் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்திரனும் செங்கம் ஒன்றியச் செயலாளருமான மறைந்த தோழர் குமரேசனும் ஒருங்கிணைக்க நாங்கள் மறு நாளே அரியாகுஞ்சூர் சென்று வந்தோம். 



மன நிறைவு அளித்த ஒரு பணி அவரால்தான் சாத்தியமானது. 

மாணவர் சங்கத்தலைவராக, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவராக, விவசாயிகள் சங்கத்தலைவராக மிகச் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அவர், மாநிலச் செயலாளர் என்ற பொறுப்பிலும் சிகரம் தொடர வாழ்த்துகிறேன்.



எங்கள் தோழர் கே.சுவாமிநாதன் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது.

அவர் பணி ஓய்வு பெறும் போது எழுதிய 

தோழர் சுவாமி - சுற்றறிக்கையையும் தாண்டி

என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். ஓய்வறியா போராளி என்பது அவருக்கு மிகவும் பொருந்தும். 25 ம் தேதி வெண்மணியிலேயே அவருக்கு கடும் காய்ச்சல். அதன் பின்பு 29, 30 தேதிகளில் திண்டுக்கல், மதுரையில் கூட்டங்கள்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடைப்பயணத்தை துவக்கி வைக்க வேலூர் வந்து விட்டார். 

தோழர் சுவாமிநாதன் புதிய பொறுப்பிலும் முத்திரை பதிப்பார். தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


Wednesday, January 1, 2025

புத்தாண்டு இனிதாய் அமையட்டும்

 


புத்தாண்டின் முதல் பதிவாய் என்ன எழுதலாம் என்று யோசித்தேன். எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த இரு தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை அளிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



வெறுப்பும் வன்முறையும் புதிய வாழ்வியல் நடைமுறைகளாக  மாறி வரும் இன்றைய சூழலில் அமைதியாய் ஒன்றிணைந்து வாழ்வது, உண்மை, நீதி, அனைவருக்குமான நலன் ஆகிய அழகிய விழுமியங்களுக்காக போராடுவது இன்றியமையாதது. இந்த அழகிய சித்தாந்தங்களை வளர்த்தெடுக்க அழிவு சக்திகளையும் இருளையும் பின்னுக்குத் தள்ள வேண்டியது அவசியமாகும்.

2025 ல்  இந்த உயரிய இலக்குகளை வென்றெடுப்பதற்காக முன்னேறுவதற்கான  பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                                                               -        தோழர் அமானுல்லாகான்                                                                               முன்னாள் தலைவர்    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை கொண்டு வருகிறது. வெறுப்பை அன்பின் மூலம் அகற்றுகிற, பாகுபாட்டை சமத்துவம் மூலம் அகற்றுகிற, போர்களை அமைதி வென்றெடுக்கிற, வளர்ச்சியையும் செல்வத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிற மனிதத்திற்காக ஒன்றிணைகிற சிறப்பானதொரு உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. 

இவை ஒரு நாளில் நிகழாது. புத்தாண்டு அதற்கான பாதையை வழிகாட்டட்டும். 

அனைத்து தோழர்களுக்கும்  மகிழ்ச்சியான 2025  புத்தாண்டு அமைய எனது வாழ்த்துக்கள்

                                                        தோழர் கே.வேணுகோபால்,

                                                  முன்னாள் பொதுச்செயலாளர்,

                      அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

 அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிகு: புத்தாண்டின் முதல் பதிவில் ஒரு இனிப்பு இருக்கட்டும் என்பதற்காக இன்று நான் தயாரித்த பீட்ரூட் அல்வா மேலே . . .

Wednesday, July 31, 2024

இந்தியாவில் முதல் முறையாக . . .

 


இந்தியாவில் முதல் முறையாக . . .

துப்பாக்கி சுடும் போட்டியில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்த பதக்க மங்கை மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் சரப்ஜோத்சிங்குடன் இணைந்து இன்னொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றதில்லை.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று "ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்" என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

Sunday, November 12, 2023

தீபாவளி ஸ்பெஷல் "ரகசியக் கனவுகள்"

 


தீபாவளியை முன்னிட்டு "பீமா" படத்தில் வரும் "ரகசியக்கனவுகள் ஜல், ஜல் . . ." பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Friday, July 15, 2022

தோழரின் செஞ்சுரி . . .

 


இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் இந்திய உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் அடிமை இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலுமாக எட்டு வருட சிறை வாழ்க்கை, மூன்று வருட தலை மறைவு வாழ்க்கை, எண்பது வருட பொது வாழ்வு என தன் வாழ்வையே மக்களுக்கு அர்ப்பணித்துள்ள மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இன்று நூறாவது வயதை நிறைவு செய்துள்ளார்.

 எளிமையின் அடையாளம்,

தியாகத்தின் வடிவம்,

மார்க்சிய ஞானத்தின் இருப்பிடம்,

போராட்ட உணர்விற்கோர் முன்னுதாரணம்.

விவசாயிகளின் தோழர், 

தொழிலாளிகளின் நண்பர்,

தமிழ் ஆர்வலர்,

அற்புதமான மனித நேயர்,

கடினமான உழைப்பாளி,

மூன்று முறை தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டவர்,

தீக்கதிர் நாளிதழின் முதல் ஆசிரியர்,

விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்டவர்.

சிங்கத்தின் கர்ஜனையாக இப்போதும் ஒலிக்கும் கம்பீரக் குரல்

 எத்தனையோ போராட்ட களம் கண்டு இன்று நூற்றாண்டை நிறைவு செய்துள்ள மாபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா என்றும் நலம் வாழியவே

Friday, January 14, 2022

இணைந்தே வர …..

 



பொங்கல்
இனிமையின் அடையாளம்.
கரும்பு
சுவையின் அடையாளம்.
மஞ்சள்
நறு மணத்தின் அடையாளம்.
சீறும் காளை
வலிமையின் அடையாளம்.
 
அனைத்தும் இணைந்ததாய் வாழ்வு ருசிக்க
 

இனிய பொங்கல்,  தமிழர் திரு நாள்  நல் வாழ்த்துக்கள்.

Friday, December 31, 2021

இருப்பினும் 2021 சிறப்பே !!!

 


 

கொரோனா இரண்டாம் அலையின் எண்ணற்ற துயரங்கள்,

மோடி அரசின் தொடர் தாக்குதல்,

தனியார்மயமாக்கல், பணமயமாக்கல் என தேசத்தின் சொத்துக்கள் விற்பனை,

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வில்லாமை,

எண்ணற்ற ஆளுமைகளின் மறைவு,

 என்று 2021 வருடம் பல துயரங்களையும் சவால்களையும் அளித்தாலும் கூட 2021 சிறப்பான ஆண்டுதான்.

 ஏன்?

 முறியடிக்க முடியாத மூர்க்கத்தனமான அரசு என்ற பிரமையை தகர்த்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்த விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் வெற்றியடைந்த ஆண்டு.

 இடது முன்னணி ஆட்சி மீண்டும் கேரளாவில் வெற்றி பெற்ற ஆண்டு.

 அடிமைகளின் ஆட்சி அகன்று திமுக ஆட்சி தமிழகத்துக்கு வந்த ஆண்டு.

 சிலியிலும் ஹோண்டுராஸிலும் நார்வேயிலும் போர்ச்சுகலிலும் இடதுசாரி சிந்தனையோட்ட அரசுகள் ஆட்சிக்கு வந்த ஆண்டு. பொலிவியாவிலும் வெனிசுலாவிலும் அவர்கள் தங்களை தக்க வைத்துக் கொண்ட ஆண்டு.

 இவையெல்லாம் எதிர்காலம் மீது நம்பிக்கையை அளிக்கிறது. போராட்ட எழுச்சி அளிக்கிறது.

 நாட்டிற்கும் மக்களுக்கும் ஒற்றுமைக்கும் எதிரான அரசு வரும் ஆண்டில் மேலும் மேலும் பலவீனமாகும் வகையில் நம் இயக்கங்கள் அமையட்டும்.

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, November 5, 2021

அவரையே பாகிஸ்தான் போகச் சொல்லிட்டாங்க . .

 


சங்கிகளின் அடியாளாக மட்டும் திகழும் அர்ஜூன் சம்பத்திற்கு இப்படி ஒரு அவமானம் நிகழ வேண்டாம்.




இம்ரான் கான் கூட தீபாவளி வாழ்த்து சொல்லி விட்டார். தமிழ்நாட்டின் முதல்வர் சொல்லவில்லை என்று புலம்ப அவரை பாகிஸ்தான் போகச் சொல்லி ஒருவர் சொல்லி விட்டாஎ. நிஜமாகவே சிரிப்பை வரவைத்த பதில் அது.


மேலே உள்ள இணைப்பு கடந்த மாதம் எழுதிய பதிவு அது.

கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட் மத்யமர் சங்கிகள் எழுதியது.




முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவசியமற்றதே. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் அற்ற மூடர்கள் சங்கிகள்.

Thursday, November 4, 2021

தீபாவளி - பன்முகத்தன்மையின் அடையாளம்

 


*நாளொரு கேள்வி: 04.11.2021*

தொடர் எண்: *522*

*தீபத் திருநாள் வாழ்த்துகள்*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*தீப ஒளியில் தீர்க்கமாய் பளிச்சிடும் பன்மைத்துவ அழகு*

கேள்வி: தீபாவளி வெகு சன விழாவாக மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிறைக்கிறதே! எப்படி அது கோடிக் கணக்கான மக்களின் கொண்டாட்டமாக திகழ்கிறது? 

*க.சுவாமிநாதன்*

திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியன *வரலாறு, பண்பாடு, நம்பிக்கைகள், வருமான உருவாக்கம்* ஆகிவற்றோடு பின்னிப் பிணைந்தது. 

தீபாவளி கோடிக் கணக்கான மக்களால் மகிழ்ச்சியோடும், பரவசத்தோடும் கொண்டாடப்படுகிற நாள். *வாழ்வின் துயரங்களை கடக்க முனைகிற ஏழை எளிய மக்களின் எத்தனிப்பும் விழாவின் உணர்ச்சி பூர்வமான பங்கேற்பை உந்தித் தள்ளுகிறது.*

தீபாவளியின் பெருமை அதன் *பன்மைத்துவ கொண்டாட்டமே.* அது இந்து, சமணம், பௌத்த மதம் சார்ந்து வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுவதும், இந்து மதத்திற்குள்ளே கூட காரணங்கள் மாறுபடுவதும், கொண்டாட்ட வடிவங்கள் வேறுபடுவதும் இதற்கு சாட்சியங்கள். *"ஒற்றை பண்பாடு"* என பன்மைத்துவ பாரம்பரியம் கேள்விக் குறியாக்கப்படும் சூழலில் அதற்கான பதிலாக தீபாவளி கொண்டாட்டங்கள் உள்ளன. இது குறித்து தேடினால் கிடைக்கிற தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது. ஒரு பண்டிகைக்கு  எத்தனை கதையாடல்கள்! 

இந்து மதத்திற்குள்ளேயே எத்தனை எத்தனை விதமான நம்பிக்கைகள்.   

* பிரபலமான கதை, வராக அவதாரம் எடுத்த திருமாலின் தீண்டலில் பூமா தேவிக்கு பிறந்த *நரகாசுரனின் வதம்தான்.* இது கிருஷ்ண லீலா.

* வனவாசம் முடிந்து *இராமன், சீதை, லட்சுமணன்* அயோத்திக்கு திரும்பிய நாள் இது என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படுவது  இன்னொரு கதை. 

வராக அவதாரம், கிருஷ்ணாவதாரம், இராமாவதாரம் என திருமாலின் மூன்று அவதாரங்களும் தீபாவளியோடு இணைந்திருக்கின்றன. 

* *விஷ்ணு புராணம்* தீபாவளியை மகாலட்சுமி பூஜை என்கிறது. 

* *ஸ்கந்த புராணம்* சக்தியின் 21 நாள் விரதம் முடிகிற நாள் என்கிறது. அன்றைய நாள்தான் சிவன் சக்தியை தன்னில் பாதியாக (அல்லது சக்தியில் பாதியாய் தன்னை) ஆக்கி அர்த்த நாரீஸ்வரர் ஆக (அல்லது அர்த்த நாரீஸ்வரியாக) உருவெடுத்த நாள் எனக் கூறுகிறது. 

* வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் ஒன்று *"யட்ஷ ராத்திரி"* என்று தீபாவளியை குறிப்பிடுகிறது.... *யமனும் சனியும்* தீபாவளி அன்று மட்டும் மக்களை மகிழ்விப்பார்கள்  என்று ஒரு நம்பிக்கை. 

இப்படி பல நம்பிக்கைகள் இந்து மதத்திற்குள்ளேயே... இந்து அல்லாதவர்களும் இதே நாளை கொண்டாடுகிறார்கள். 

* *சீக்கியர்கள்* 1577 ஆம் ஆண்டு பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கிய நாள் என்று தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இது அவர்கள் மத்தியில் உள்ள 450 ஆண்டு கால கதையாடல். 

* *சமணர்கள்* மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபங்களை ஏற்றி கொண்டாடுகிறார்கள். 

* உஜ்ஜயினி அரசன் *விக்ரமாதித்தன்* பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. 

* நேபாளத்தில் நாய்களுக்கு தீபாவளி அன்று மரியாதை செய்கிறார்கள். காரணம் நாய்கள், யமராஜனின் தூதர்கள் என்பது நம்பிக்கை. மகாபாரதத்தில் *தர்மர் உடன் நாய் சொர்க்கத்திற்கு பயணம்* செய்தது. நாய்கள் இறந்த பிறகும் எசமானர்களை பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. 

வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் துவிதியை அன்று *சகோதரிகள் சகோதரர்களை விருந்து அளித்து உபசரிப்பார்கள்* என்ற பாசக் கதையும் தீபாவளியின் உணர்ச்சிமிக்க அங்கம். 

அயல் நாடுகளில் வணிகம் செய்ய இந்தியர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் தீபாவளி பரவியுள்ளதால் *சர்வதேச திருவிழாவாக* மாறி இருக்கிறது. 

*சிவகாசி* பட்டாசு தொழில் சார்ந்தவர்கள் தீபாவளி அன்று அவர்களால் கொண்டாட முடியாததால் இன்னொரு நாளை பின்னர் தெரிவு செய்து கொண்டாடுவார்கள் என்பது வணிகம் சார்ந்த நடைமுறை. 

இப்படி வெவ்வேறு மதங்கள், மதத்திற்குளேயே வேறுபடும் நம்பிக்கைகள், வடிவங்கள், பகுதிகள் என பன்முக கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துகிற உண்மை ஒன்றுதான். 

*ஒற்றை பண்பாடு* என்பது பன்மைத்துவ பாரம்பரியத்தை மறுதலிப்பது என்பதே.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல் எல்லோரையும் ஈர்க்கிற பண்டிகை ஆக தீபாவளி இருக்கிறது. அதன் அழகே உள்ளார்ந்த பன்மைத்துவம்தான். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. ஆனால் நானும் நீயும் ஒன்றாய்க் கொண்டாடுவோம் என்பது எவ்வளவு பெரிய பக்குவம். கோடிக் கணக்கான மக்களின் கொண்டாட்டமாக தீபாவளி திகழ்வதற்கும் இதுவே காரணம். 

எல்லோருக்கும்
தீபத் திருநாள் வாழ்த்துக்கள். 

*செவ்வானம்*

Saturday, October 23, 2021

முதல்வர் வாழ்த்தினால் மட்டும்?

 


மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்ற கதறல் மத்யமர் குழுவில் அதிகமாகவே கேட்கிறது.

 “”மத்த மதப் பண்டிகைககளுக்கு வாழ்த்து சொல்லாதீங்கன்னு சொல்ல மாட்டோம், எங்களுக்கும் சொல்லுங்கன்னுதான் கேட்கிறோம்” என்று தசாவதாரம் கமலஹாசன் போல கேட்பவர்களும் உண்டு.

 இவர்கள் வாழ்த்துக்களை விரும்பும் பண்டிகைகளில்  பலதும்  லாஜிக் இல்லாதவை, ஒடுக்குமுறையை கொண்டாடுபவை, ஜாதியச் சாயமுடையது போன்ற விவாதங்களுக்குள் நுழைய நான் விரும்பவில்லை.

கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லி உள்ளார். ஸ்டாலினும் நிச்சயம் சொல்வார்.  இவர்களும் கொண்டாடும் பண்டிகைதானே பொங்கல்! அந்த வாழ்த்து போதாதா?

 சரி, பாவம், ஏதோ ஆசைப்படுகிறார்களே என்று ஒரு மரியாதைக்காக வாழ்த்து சொன்னால் மட்டும் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் உண்டா அவர்களுக்கு?

 “எங்களுக்கு அடி பணிந்து விட்டார் சுடலை. (ஸ்டாலின் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர்கள் பெரிய மனிதர்களாம்) அஞ்சி நடுங்கி விட்டார். இனிமேல் தமிழ்நாட்டில் தாமரைதான். “  என்று பில்ட் அப்பை தொடங்கி விடுவார்கள்.

 ஏதோ அண்ணாமலைக்கு பயந்து போய் கோயில்கள் சனி, ஞாயிறன்றும் திறக்கப்பட்டது போல வாய் கிழிய பேசிய ஜந்துக்கள்தானே இவர்கள்!

 அந்த வெற்றுப் பீற்றலைக் கேட்பதற்குப் பதில்,  வாழ்த்து சொல்லாமல் இருந்து சங்கிகளின் கதறலைக் கேட்பதே  மேல்.

 

Saturday, March 13, 2021

வெற்றி பெற வாழ்த்துக்கள்

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்


Friday, January 1, 2021

2020 லிருந்து 2021 - நம்பிக்கையோடு

 


2020 நிறைவடைந்து விட்டது. 2021 துவங்கி விட்டது.

2020 எப்படிப்பட்ட ஆண்டு.

துயரங்களின் ஆண்டா?

கொரோனா எனும் பெறுந்தொற்று உலகை உலுக்கிய துயரமான ஆண்டுதான் இது. எத்தனையோ நல்ல உள்ளங்களை கொரோனா நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஆண்டு இது. செல், இனி இது போல வராதே என்று அனைவரும் வாய் விட்டே கூற வைத்த ஆண்டு.

தாக்குதல்களின் ஆண்டா?

ஆம். நிச்சயமாக தாக்குதல்களின் ஆண்டுதான். கொரோனா கிருமியை விட மோசமான கிருமியாக மோடி வகையறாக்கள் செயல்பட்ட ஆண்டு இதுதான். வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைத்தல், ஊதாரித்தனமான செலவுகள், கார்ப்பரேட்டுகளுக்கு நம்மிடம் உள்ள சொற்பத்தையும் பறித்து அளித்தல், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தல் என்று தொடர் தாக்குதல்களை ஆட்சியாளர்கள் தொடுத்துக் கொண்டே இருந்த ஆண்டு இதுதான்.

நம்பிக்கையான ஆண்டா?

ஆம். 

ஊரடங்கு, இயக்கங்களை முடக்கினாலும் இணைய வழி இயக்கங்கள் என்ற புதிய வாசல் திறந்தது.

வெறுப்பரசியலுக்கு முடிவு கட்ட முடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க தேர்தல் அளித்தது.

மக்கள் பிரச்சினைகளை தேர்தலின் விவாதப் பொருளாக்க முடியும் என்ற நம்பிக்கையை பீகார் தேர்தல் அளித்தது.

அனைத்தையும் விட மிக முக்கியமாக

ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போராட முடியும், தாக்குதல்களை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆண்டு துவக்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் நடந்த போராட்டங்களும் அதிலும் குறிப்பாக மாணவர்கள், இஸ்லாமியப் பெண்கள் ஆகியோரின் பங்கேற்பு நம்பிக்கையை விதைத்தது.

26 நவம்பர் 2020 அன்று பத்து கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஒரு நாள் வேலை நிறுத்தம் மிகச் சிறப்பானது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல

இன்று முப்பத்தி ஏழாவது நாளாக உறுதியோடு தொடரும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் தருகிற நம்பிக்கையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இந்த நம்பிக்கையுடன் புத்தாண்டை துவக்குவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Saturday, November 14, 2020

பாதாம் பால் கேக்

 


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.



என்னுடைய புதிய முயற்சி பாதாம் பால் கேக்.



முதல் நாள் இரவு ஊற வைத்த பாதாம் பருப்புக்களின் தோலை நீக்கி மீண்டும் ஒரு அரை மணி நேரம் சுடு நீரில் ஊற வைத்தேன். பிறகு காய்ச்சிய பாலோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டேன்.

இந்த கலவை அளவிற்கு ஒன்றரை மடங்கு போல (அதாங்க, உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு அளவு கொள்முதல் விலை நிர்ணயிப்பதாக விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்து ஒருவர் ஏமாற்றினாரே, அந்த அளவு) சர்க்கரையை வாணலியில் போட்டு இந்த கலவையோடு கிளறிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே தயாராக இருந்த சர்க்கரை சேர்க்காத பால் கோவையையும் போடு கிளறுவதை தொடர வேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக இறுகி வரும் நேரத்தில் ஒரு தட்டில் கொட்டி வில்லை போட்டு எடுத்தால் பாதாம் பால் கேக் ரெடி . . .

பிகு: இதை அப்படியே முடித்தால் நான் மனசாட்சியற்றவன் ஆகி விடுவேன். வில்லை போடவே வரவில்லை. பிறகு இன்னும் கொஞ்ச நேரம் என் மனைவி அடுப்பிலேற்றி கிளறிய பின்புதான் கேக் வடிவம் கிடைத்தது.

இல்லையென்றால்  அது அல்வாதான்.

நான் இனிப்பின் வடிவத்தைச் சொன்னேன்.