இது என் சொந்த அனுபவம். சோக அனுபவம்.
ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத்தவிர வேறு எதற்கும் நான் இதுவரை டெபிட் கார்டை பயன்படுத்தியது கிடையாது.
வெண்மணி பயணத்தின் போது பெட்ரோல் போட முதல் முறையாக பயன்படுத்தினேன்.
கடந்த திங்கள் அன்று சென்னை போக வேண்டியிருந்தது. திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு டெபிட் கார்டை பயன்படுத்தினால் DECLINED என்று வந்து விட்டது. ஆனால் பணம் பிடிக்கப்பட்டு விட்டதாக வங்கியிலிருந்து குறுஞ்செய்தி என்னவோ வந்து விட்டது. எங்கள் கணக்கிற்கு வரவில்லை என்று சொல்லி அந்த உணவகத்தில் ரொக்கம் வாங்கிக் கொண்டார்கள்.
இதோடாவது நான் நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். காருக்கு பெட்ரோல் போட மீண்டும் பயன்படுத்தினால் மீண்டும் அதே கதை. DECLINE ஆனால் பணம் பிடிக்கப்பட்டு பேலன்ஸ் குறைந்த குறுஞ்செய்தி.
அங்கேயும் ரொக்கத்தை கொடுக்க வேண்டியிருந்தது.
உங்க அக்கவுண்டிற்கு பணம் மீண்டும் கிரெடிட் ஆகி விடும் என இரண்டு இடங்களிலும் சொன்னார்கள்.
செவ்வாய் முழுதும் காத்திருந்து விட்டு புதன் கிழமை வங்கிக்குச் சென்று புகார் செய்தால் அங்கே இருந்த அதிகாரி எல்லாவற்றையும் கேட்ட பின்பு
"வரும்" என்று இழுத்தார். "ஆனா வ்ராது" என்று சொல்லி விடுவாரா என்று அஞ்சினால் நான்கைந்து நாட்கள் ஆகி விடும் என்றார். இதோ இந்த நிமிடம் வரை அத்தொகை என் கணக்கிற்கு வரவில்லை.
கையில் ரொக்கம் இருந்ததால் பெரிய சிக்கல் இல்லாமல் தப்பித்தேன். ஆனால் டெபிட் கார்டை மட்டும் நம்பியிருந்தால் ?????
ஹோட்டலிலாவது மாவாட்டியோ, பாத்திரம் கழுவியோ சமாளிக்கலாம். பெட்ரோல் பங்கில் ???????
ஆகவே நண்பர்களே, மோடி சொன்னாரு, டிஜிட்டல் இந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றெல்லாம் டெபிட் கார்டை நம்பி அசிங்கப்படுவதை தவிர்த்திடுவீர்.
