Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts

Monday, February 16, 2026

பொன்னியின் செல்வன் பாடல் சர்ச்சையும் வேறொரு அற்புதமும் . . .

 


இரண்டு நாட்களாக ஊடகங்களில் அடிப்பட்ட ஒரு செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியது. ஏற்கனவே உருவான சர்ச்சையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது ஏனோ கைவரவில்லை. அது அவசியம் எழுதப்பட வேண்டிய விஷயம். இரண்டு மூன்று நாட்களில் எழுதுவேன். 

இப்போதைய சர்ச்சையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "வீரா ராஜ வீரா" பாடல் டாகர் சகோதரர்களின் "சிவஸ்துதி" யை காப்பி அடித்த பாடல் என்ற  வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு முன்பாக ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

நன்றாக சிக்கிக் கொண்டார் என்று ரஹ்மான் என சங்கிகளும் சரி இளையராஜா வெறியர்களும் சரி  தீவிரமாக களமாடிக் கொண்டிருந்தனர். :இஸ்லாமியர் ரஹ்மான் காப்பியடித்தது இந்து மதக் கடவுள் மீதான பாட்டை " என்று சொல்லி வேறு குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். 

இந்த தகவல் உண்மையா என்பதை நேற்று முழுவதும் செலவழித்து ஆராய்ந்தேன்.

காப்பி அடித்ததாக சொல்லப்பட்ட பாடல் இது


சிவஸ்துதி என்று யூட்யூபில் தேடினால் முதலில் எஸ்.பி.பி பாடிய பாடல் வந்தது. அந்த பாடலுக்கும் பொன்னியின் செல்வன் பாடலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. 

கொஞ்சம் விரிவாக தேடிய போது கிடைத்த :சிவ ஸ்துதி" கீழே


இதனை கேட்கும் போது ஒரு விஷயம் தெளிவானது.

"வீர ராஜ வீரா" பாடலின் பல்லவியும் இந்த "சீவா சீவ சீவா" பாடலும் ஒன்றுதான். பொன்னியின் செல்வன் பாடலின் தொகையறாவும் சரணமும் வேறு. ஆனால் கண்டிப்பாக பல்லவி இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். 

ஆனால் இந்த காணொளியில் குண்டேச்சா சகோதரர்கள் என்று இருந்ததே தவிர டாகர் சகோதரர்கள் என்று இல்லை. அதனால் தேடல் தொடர்ந்தது.

டாகர் சகோதரர்கள் வழங்கிய "சிவ ஸ்துதி" யும் கிடைத்தது. 

அது கீழே . . .


யார் இந்த டாகர் சகோதரர்கள் என்று தேடிய போதுதான் சில அற்புதமான விஷயங்கள் தெரிய வந்தது. 

யார்  இந்த டாகர் சகோதரர்கள்? எந்த ஊர்க்காரர்கள்?

ஹிந்துஸ்தானி இசையில் த்ரூபத் என்ற பாரம்பரிய பாணியை பின்பற்றுபவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இருபது தலைமைமுறைகளாக இசைத்து வருபவர்கள். இவர்கள் தனியாக டாகர்வாணி என்ற தனியொரு பாணியை உருவாக்கியவர்கள்.

இந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற டாகர் சகோதரர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் நீங்கள் முதல் காணொளியில் கேட்ட சிவஸ்துதியை பாடிய டாகர் சகோதரர்களின் குருமார்கள். அப்பாக்கள்.

அவர்களின் முழு பெயர் என்ன தெரியுமா?

ஜியா ஃபரிதுதீன் டாகர்

ஜியா மொஹிதுதீன் டாகர்.

இவர்கள்தான் அந்த "சிவஸ்துதி"யை முதலில் உருவாக்கி பாடியவர்கள்.

அவர்களின் வாரிசுகள் பாடிய காணொளிதான் மேலே உள்ளது.

அவர்களின் முழுப் பெயர்கள்

நசிர் ஜாஹிருதுதீன் டாகர்

நசிர் ஃபயாசுதின் டாகர்

இவர்களிடமிருந்து த்ரூபத் இசையை கற்றுக் கொள்ள வந்தவர்கள்தான் குண்டேச்சா சகோதரர்கள்.அவர்களின் முழு பெயர்

ராமகாந்த் குண்டேச்சா மற்றும் உமாந்த் குண்டேச்சா 

அவர்களிடமிருந்து டாகர் பரம்பரையைச் சேர்ந்த இளைஞர்கள் இப்போது த்ரூபத் பாணியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் யாரோ ஒருவர் டாகர் வாணி பாணியைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல, அது "வீரா ராஜ வீரா" பாடலாக உருவாகிவிட்டது.

ஏதோ அற்புதம்னு தலைப்பில் இருக்கே! அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.

இந்துக்களின் கடவுளான சிவனை வணங்குவதற்கான "சிவ ஸ்துதி"யை உருவாக்கி அதனை பல தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்கள் இஸ்லாமியர்கள். 

அந்த இஸ்லாமிய டாகர் சகோதரர்களை குருவாக தேடி வந்தவர்கள் இந்துக்களான குண்டேச்சா சகோதரர்கள்.

அவர்களிடம் மீண்டும் பயில வந்தது அதே டாகர் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்.

இது எவ்வளவு அழகாக இருக்கிறது!

இசைக்கு ஜாதி, மதம், இனம். மொழி என எதுவும் கிடையாது என்பதை நிரூபிக்கும் இந்த குரு சிஷ்ய பரம்பரை ஒரு அற்புதமில்லையா? இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு நல்லதொரு உதாரணமில்லையா!

இந்த பன்முகக் கலாச்சாரத்தை யாரும் சிதைக்காமல் பாதுகாப்போம்.



பிகு :அடிப்படையில் இந்த பாடல் "அடாணா" ராகத்தில் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த ஒரு அடாணா ராக திரைப்பாடல் கீழே. காபிரைட் சர்ச்சை வராது என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன், இரண்டு காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் எந்த லாப நோக்கமும் கிடையாது. இந்த பாடலை ஒரிஜினலாக எழுதியவர் காபிரைட் வழக்கு போட இப்போது இல்லை. அவர் தியாகராஜர். 




Tuesday, January 6, 2026

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு

 


ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இசையமைப்பில் உருவான பல பாடல்களை அவ்வப்போது என் மகன் வயலினில் வாசித்திருந்தான். 

அப்படி வாசித்தவற்றின் தொகுப்பை இப்பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.



Sunday, May 12, 2024

அனிருத் முதல் மெல்லிசை மன்னர்கள் வரை -100வது காணொளி

 


தனக்குப் பிடித்த பாடல்களை வயலினில் வாசித்து யூட்யூபில் பதிவு செய்வது எனது மகனின் ஆர்வம் நிறைந்த பொழுது போக்கு.

இன்று நான் பகிரவுள்ளது அவனது நூறாவது காணொளி.

பதிமூன்று இசையமைப்பாளர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த முயற்சி.

அம்மா, அம்மா - வி.ஐ.பி - அனிருத்

சண்டைக்காரா - இறுதிச்சுற்று - சந்தோஷ் நாராயண்

தெய்வத்திருமகள் தீம் இசை -ஜி.வி.பிரகாஷ்

அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும் (புது) - விஜய் ஆண்டனி

ஐய்யயோ ஆனந்தமே -  கும்கி-  டி.இமான்

கனா காணும் காலங்கள் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் சங்கர் ராஜா

தேரடி வீதியில் - ரன் - வித்யாசாகர்

காடு திறந்தே - வசூல்ராஜா, எம்.பி,பி.எஸ் - பரத்வாஜ்

மனம் விரும்புதே - நேருக்கு நேர் - தேவா

முதற்கனவே - மஜ்னு - ஹாரிஸ் ஜெயராஜ்

சிக்குபுக்கு ரயிலே - இடையிசை - ஜெண்டில்மேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை - இளையராஜா

செந்தமிழ் தேன்மொழியாள் - மாலையிட்ட மங்கை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Sunday, May 5, 2024

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் . . .

 


ஷங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால், சின்ன தகரம் கூட தங்கமாகும்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Sunday, March 10, 2024

நறுமுகையே, நறுமுகையே, நீ ஒரு நாழிகை நில்லாய் . ..

 


மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "இருவர்" படத்தில் வரும் "நறுமுகையே, நறுமுகையே,  நீ ஒரு நாழிகை நில்லாய் . .." பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே

Sunday, December 17, 2023

உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு

 


"பம்பாய்" படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு" பாடலின் வயலின் வடிவம்

என் மகனின் முயற்சியில்

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Tuesday, September 12, 2023

ரஹ்மான் - லாபம், சொதப்பல், வன்மம்

 


சென்னையில் ஞாயிறு அன்று நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்?" என்ற நேரடி இசை நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிய யாராலும் மறக்க முடியாத அளவிற்கு சொதப்பலோடும் பார்வையாளர்களுக்கு அவஸ்தையோடும் முடிந்துள்ளது.

இதற்கு யார் பொறுப்பு?

நிச்சயமாக ஏ.ஆர்.ரஹ்மான் தான்,

பார்வையாளர்களுக்கு எப்படிப்பட்ட இசை அனுபவத்தை அளிப்பது என்ற சிந்தனையில் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டை அதற்கான நிறுவனத்திடம் விட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார்.

அப்படி அவர் கை கழுவி விட முடியாது.

நிகழ்ச்சி அமைப்பு, கட்டமைப்பு வசதிகள் பற்றியெல்லாம் அவர் விவாதித்து பலவீனங்கள் இருந்தால் போக்கியிருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியது ரஹ்மானுக்காகத்தானே தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல. 

அந்த நிறுவனம், லாபம், அதிக லாபம், மேலும் லாபம் என்று செயல்பட்ட காரணத்தால்தான் இந்த சொதப்பல். லாபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. ரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டுவேன் என்று சொன்னதை ரஹ்மான் செய்து காண்பிக்கட்டும். இந்த பாடத்திலிருந்து அவர் இனி கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.

நல்ல ஒரு CONTENT  கிடைத்தது என்று ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் மோசமாக தாக்கப்படுகிறார்.

இரண்டு பிரிவினரால் அவர் தாக்கப்படுகின்றனர்.

ஒரு பிரிவு சங்கிகள். ரஹ்மானின் மதத்தை வைத்து அவரை தாக்குவதற்கு உதாரணம் மேலேயே உள்ளது.

இன்னொரு பிரிவு  இளையராஜாவின் DIE HARD விசிறிகள். அவரின் அரசியலை விமர்சித்தாலே கோபம் கொண்டு எழுகிற  இடதுசாரிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள். 

இவற்றையெல்லாம் பார்க்கையில் லாப வெறிக்கு பலியான ரஹ்மானிடம் கோபத்தைத் தாண்டியும்  சொல்ல வேண்டியுள்ளது. WE ARE WITH YOU. 

Saturday, August 26, 2023

நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது . . .

 


இந்திரா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான "நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது"  பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் ...

யூட்யூப் இணைப்பு இங்கே

Sunday, August 29, 2021

புது வெள்ளை மழை இன்று . . .

 


ரோஜா திரைப்படத்தின் "புது வெள்ளை மழை இன்று பொழிகின்றது" பாடலின் வயலின் வடிவம்

என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

Wednesday, January 6, 2021

கடந்த வருடம் இதே நாளில்

 மீள் பதிவு 

ரஹ்மான்-ஜீன்ஸ்-வயலின்




ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய இசையில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தின் 

"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்"

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்


பிகு: இந்த வருடத்திற்கு ஒரு புதிய பாடலை வாசிக்க அவன் தயாராக இருந்தாலும் என்னுடைய பணிகள் காரணமாக இயலாமல் போனதால் இந்த மீள்பதிவு