Showing posts with label அணை. Show all posts
Showing posts with label அணை. Show all posts

Tuesday, September 15, 2015

2 இன் 1 விமர்சனம்



இரண்டு திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும். இது சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகங்களைப் பற்றிய விமர்சனம்.



சமீபத்தில் சேலம் சென்ற போது எடுத்துச் சென்ற மூன்று புத்தகங்களையும் அந்த பயணத்திலேயே முழுமையாக படித்து முடித்து விட்டேன் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு மிகப் பெரிய சாதனை. ஒன்று துப்பறியும் கதை. இன்னொன்று ஒரு மருத்துவரின் நகைச்சுவைக் கட்டுரைகள். மூன்றாவது இன்று மிகவும் தேவைப்படுகிற ஒரு வலிமையான கருத்தாயுதம். அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டுமென்பதால் நாளை பதிவு செய்கிறேன். இன்று இரண்டு நூல்கள் பற்றி மட்டும் பார்ப்போம்.
           
ஒவ்வொன்றாக பார்ப்போம்




நூல்                               நெப்போலியனின் கடிதம்
ஆசிரியர்                           சத்யஜித் ரே
தமிழில்                            வி.பா.கணேசன்
வெளியீடு                          புக்ஸ் பார் சில்ட்ரன்,
                                   சென்னை – 18
விலை                             ரூபாய் 50.00

சத்யஜித் ரே யின் ஃபெலூடா வரிசைக் கதைகளில் ஒன்று. சீரியஸான திரைப்பட இயக்குனர் என்றே கருதப் படுகிற திரு சத்யஜித் ரே அவர்களின் பன்முகப் பரிமாணங்கள் இந்த துப்பறியும் வரிசை நூல்களில் வெளிப்படுகிறது.

தான் வளர்த்து வந்த பஞ்சவர்ணக் கிளி காணவில்லை என்று வருத்தப்படும் சிறுவனுக்கு உதவ அவனது வீட்டிற்கு துப்பறியும் நிபுணர் பெலூடா வருகையில் அவனது தாத்தா கொல்லப்படுகிறார். பழம்பெரும் கலைப் பொருட்களை சேகரிப்பவரான அவர் தனது விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக கருதிய “நெப்போலியனின் கடிதம் காணாமல் போய் விடுகிறது.

வீட்டிலிருந்து யாரும் வெளியே போகவில்லை என்பதை உறுதி செய்து கொள்கிற பெலூடா தன் விசாரணையை துவக்குகிறார். நெப்போலியனின் கடித்த்தை கைப்பற்ற நினைக்கிற போட்டியாளர், பொறுப்பற்ற ஒரு மகன், வேறு வேலைக்கு போகப் போகிற தற்போதைய செயலாளர், மீண்டும் பணிக்கு வர விரும்புகிற முன்னாள் செயலாளர் என்று அவரது சந்தேகம் பலரின் மேல் விழுகிறது.

முன்னாள் செயலாளர்தான் கொலை செய்திருக்க வாய்ப்புண்டு என்று கருதினாலும் அவர் எப்படி வீட்டை விட்டு வெளியேறியிருப்பார் என்பதும் புரிபடவில்லை. இறுதியில் காணாமல் போன கிளி வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்த ரத்த்த் துளியிலிருந்து அவர் கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
தாடிமீசையோடு இருந்த முன்னாள் செயலாளர்தான் அதை அகற்றி சோடா புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய செயலாளராக இருந்திருக்கிறார் என்பதையும் ஒட்டு மீசை, தாடியோடு கொலை செய்து விட்டு பின்பு அதை அகற்றி விட்டு புதிய செயலாளராக வலம் வந்து விட்டார் என்று முடிக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வருகிறதல்லவா?

சின்னதாக மருவும் தலைப்பாகையும் கட்டினால் மாறு வேடம் என்று நம்மை நமபச் சொல்கிற திரையுலகத்தைச் சேர்ந்தவர்தானே சத்யஜித் ரே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.




நூல்                          நோயர் விருப்பம்
ஆசிரியர்                      டாக்டர் ஜி.ராமானுஜம்,  எம்.டி
வெளியீடு                     பாரதி புத்தகாலயம்,
                              சென்னை – 18
விலை                        ரூபாய் 50.00

மன நல மருத்துவரான டாக்டர் ஜி.ராமானுஜம், தனது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையோடு எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்புக்களே இதே நூல்.

நோய்களின் பெயர்கள் எவ்வளவு கடினமாக உள்ளது என்றும் அந்த பெயர்கள் எவ்வாறு வைக்கப்படுகிறது என்ற கட்டுரையோடு இந்த நூல் தொடங்குகிறது. பெயர்களை மறக்கும் நோய்க்கே ஒரு பெயர் உண்டு. அதன் பெயர் டிஸ்னாமியா என்று சொல்கிறார். இந்த பெயரை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்.

டாக்டர்களின் புரியாத கையெழுத்து, செல்லும் இடங்களில் எல்லாம் ஆலோசனை கேட்கும் நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் விசிட்டர்கள் செய்யும் குழப்படி ஆலோசனைகள், மாற்று மருத்துவம், கை வைத்திய ஆலோசனைகள் என்று மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் சிரிக்க வைக்கும்.

அலைபேசியை தொலைப்பது, ரயில் பயண அவஸ்தை, நேர நிர்வாகம் தொடர்பாக கூட்ட்த்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று வேறு யாரும் வராமல் அவதிப்பட்ட்து, புத்தகத்தை கடன் கொடுத்து வராமல் இருப்பது, பல இடங்களில் நாம் வெறும் எண்களாகவே அறியப்படுவது, உலகம் அழிவது என்று எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகளும் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

பெயர் தெரியாத நோயின் பெயர் டிஸ்னாமியா என்றால் முகங்களை மறந்து போகும் நோயின் பெயர் ப்ரோசோபேக்னோஷியா என்று சொல்கிற டாக்டர் மேலும் எழுதுவதைப் படியுங்கள்

“மனைவி எதிரில் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு அசௌகர்யம் இருக்கிறது. முகத்தைத்தான் அடையாளம் காண முடியாதே தவிர குரலை அடையாளம் காண முடியும். எனவே என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று திட்ட ஆரம்பித்து விட்டால் மனைவிதான் என்று தெரிந்து விடும்

குறும்புக்கார டாக்டர். புத்தகத்தை வாங்கிப் படித்து சிரியுங்கள். சுண்டல் வினியோகிக்க பயன்படுத்த வேண்டாம். அப்படி நடக்க வாய்ப்புள்ளதாக கருதும் டாக்டரின் அச்சத்தை நாம் போக்கிடலாமே.












Monday, December 12, 2011

மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு



புதிய அணை கட்டினால் நிலநடுக்கம் வராதா?  கேரள அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி! தேனி, டிச. 11 -

முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டினால் நிலநடுக்கம் வந்து உடைத்துவிடாதா என கேரள அரசுக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

யும், தமி ழக-கேரள எல்லையில் பதற் றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் விவசாயத் தொழி லாளர் சங்கமும் இணைந்து நடத்திய மாபெரும் உண் ணாவிரதப்போராட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.

சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இப்போராட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ, விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ ஆகியோர் தலை மை வகித்தனர்.

போராட்டத்திற்கு தலை மை வகித்து கே.பாலகிருஷ் ணன் பேசியதாவது:-

கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் சிறப்புக்கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றியுள் ளது. வரலாற்றை மறந்து விட்டு, வாதங்களை எழுப்பு வது கேரள, தமிழக நலன் களுக்கு உகந்ததல்ல. 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக் கால தீர்ப்பு வழங்கியபடி, 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற உத்தரவை மதிக்காமல் சிறப்பு சட்டத் தை நிறைவேற்றினார் காங் கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி. அதனைத் தொடர்ந்து தமிழக, கேரள முதலமைச்சர்கள், பாசனத் துறை அமைச் சர்கள், அரசு அதிகாரிகள் என 15 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித உடன்பாடும் ஏற் படவில்லை.

இந்நிலையில் கேரள அரசு புதிய தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக மக்க ளை வேதனையில் ஆழ்த்தி யுள்ளது. அதோடு நீதிமன் றத்திற்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கேரள அரசு சொல் லியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, 15 முறை நடந்த பேச்சுவார்த்தை பய னளிக்காத நிலையில் கேர ளமே உச்சநீதிமன்ற தீர்ப் பை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி, நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் தலைமை யிலான ஐவர் குழு அமைக் கப்பட்டு பிப்ரவரி மாதம் அறிக்கையை தாக்கல் செய் கிற வேளையில் கேரளம் நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஏற்றுக்கொள் ளாது.

மத்திய அரசு கூட்டி யுள்ள கூட்டத்தில் இருமா நில ஒற்றுமை, பதற்றத்தை தணித்து, சுமூக நிலையை உருவாக்குவது, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது சம் பந்தமாக மட்டுமே பேச்சு வார்த்தையில் இடம் பெற வேண்டும். இதில் தமிழக அரசு கலந்து கொண்டு தமி ழகத்தின் நிலையை எடுத் துச் சொல்ல வேண்டும். புதிய அணை கட்டுவது, நீர் மட்டத்தை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறக்கூடாது.

தமிழகத்தில் கேரள மக் களை தாக்குவது, கேரளத் தில் தமிழக மக்களை தாக் குவது போன்ற சம்பவங்கள் கவலையளிக்கத்தக்கதாகும். அந்தந்த மாநிலங்களில் சட்ட-ஒழுங்கை காப்பாற் றுவது மாநில அரசுகளின் கடமையாகும். காவல்துறை யினர் கலவரக்காரர்களை அடக்கி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக முதல்வர் முல் லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து, சட்ட சபை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள் ளார். இதனை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வர வேற்கிறது. 


தமிழக விவசாயிகளின் பாசன உரிமையை  ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது  தேனி உண்ணாவிரதத்தில் பெ.சண்முகம் பேச்சு
தேனி, டிச.11-

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தேனியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து, பெ.சண்முகம் பேசியதாவது :

முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்திலும் கேரளத்தி லும் இனவெறியை கிளப்பி, மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் ஆளும் காங்கிரஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பை முடமாக்கியதன் விளைவாக, விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின் றன. கேரளத்தில் முல்லை பெரியாறு அணையில் 120 அடி தண்ணீர் தான் தேக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள் ளது. 120 அடி தேக்கினால், தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்கிற நோக்கமே கேரள அர சின் தீர்மானம் என தெரிகிறது.

தமிழக அரசு முல்லை பெரியாறு அணை பிரச்ச்னையில் நியாயமாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டு வரு கிறது. நாளிதழ்களில் தமிழக முதல்வர் முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக தெளிவான விளக்கத்தை தெரிவித்திருக் கிறார். பொறியியல் வல்லுநர்கள் அணை வலுவாக உள்ளது, 142 அடி தேக்கலாம் என தெரிவித்த பிறகும், கேரள அரசு நியாயத்தை உணர்ந்து நடந்து கொள் ளாமல் பிடிவாதமாக இருக்கிறது. தமிழகத் தின் பாசன உரிமையை எந்த காரணத் தைக் கொண்டும் விவசாயிகள் சங்கம் விட்டுக்கொடுக்காது.

இந்த அணை தொடர்பான வழக் கிற்கு எந்த பாதகமும் ஏற்படாமல், இரு மாநிலங்களின் மக்களும் அமைதியாக வாழ, ஒரு சுமூக தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு வருகிற 16ம் தேதி கூட்டியுள்ள பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென தமிழக அரசை விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.

இரா.அண்ணாத்துரை எம்எல்ஏ

போராட்டத்தை வாழ்த்தி இரா.அண் ணாதுரை எம்எல்ஏ பேசியதாவது :

முல்லை பெரியாறு அணை பலவீன மாக உள்ளது என கேரளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசி பதற்றத்தை ஏற்படுத்தி வரு கின்றன. 1980 முதல் 1994ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு ஏராளமான நிதியை செலவழித்து அணைக்கு வலு சேர்த்துள்ளது. 2006ம் ஆண்டு 142 அடி தேக்கலாம் என உச்சநீதிமன்றம் இடைக் காலத் தீர்ப்பு வழங்கியதை காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ளாமல், புதிய சட்டத்தை இயற்றி நிலைமையை சிக்கலாக்கியது. தற்போது பதற்றமான சூழ்நிலையில் காங் கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பும், பாஜகவும் அணையை இடிக்கப்போவ தாக சொல்லி ஆயுதங்களை தூக்கிச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து கேரளத்தில் தமிழ் மக்களை தாக்குவதும், தமிழகத்தில், கேரள மக்களை தாக்குவது மான சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறைச்சம்பவங்களால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடாது.

எனவே, அணையை பாதுகாக்க, மத்திய தொழில் பாதுகாப்புப்படையை மத்திய அரசு அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டும். இரு மாநில முத லமைச்சர்களை அழைத்து இந்த பகுதி களில் சுமூகநிலை ஏற்பட உதவ வேண் டும். இரு மாநில அரசு அதிகாரிகள் மட் டத்திலான பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும். இவ்வாறு இரா.அண்ணாத்துரை பேசினார்.
முல்லைப் பெரியாறு  142 அடி நீர் தேக்கக்கோரி 2 ஆயிரம் விவசாயிகள் உண்ணாவிரதம்
தேனி, டிச. 11 -

உச்சநீதிமன்ற இடைக் காலத் தீர்ப்பின்படி முல் லைப்பெரியாறு அணை யில் 142 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தியும், தமிழக கேரள எல்லையில் பதற்றத்தை தணிக்க நட வடிக்கை எடுக்கக்கோரியும் தேனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது

முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ள நிலையில் மாற்று அணை தேவையில்லை. அணை யின் பாதுகாப்பு கருதி மத் திய அரசு தனது தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும். எல்லை யோரங்களில் வாழும் மக் களின் வாழ்க்கையை பாது காக்க மத்திய அரசு சுமூக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம், விவசாயத் தொழிலா ளர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதத் போராட் டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, விதொச மாநில தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ ஆகியோர் தலை மை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உண்ணாவிரதப் போராட் டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் ஆர். சச்சிதானந்தம் (திண் டுக்கல்), டி.செல்லக்கண்ணு (மதுரை), எம்.முத்துராம் (இராமநாதபுரம்), மாணிக் கம் (சிவகங்கை), விஜயமுரு கன் (விருதுநகர்), என்.சுருளி நாதன் (தேனி), ஆதிமூலம் (சிவகங்கை மாவட்டத் தலைவர்), விதொச சார்பில் மாநில உதவித்தலைவர் எஸ். மொக்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சி.குண சேகரன் (திண்டுக்கல்), பா. ரவி (மதுரை), ஆர்.கே.தண் டியப்பன் (சிவகங்கை), ஏ.வி. அண்ணாமலை (தேனி), கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறி ஞர் என்.பழனிச்சாமி, தமு எகச மாநிலக்குழு உறுப்பி னர் தேனி சீருடையான், மாதர் சங்க மாவட்டத்தலை வர் எம்.விஜயா, சிஐடியு மாவட்டத்தலைவர் சி.முரு கன், மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்டத்தலைவர் பி. முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் டி.கண்ணன் நன்றி கூறினார். முதுபெரும் தலைவர் எஸ். ஏ.ரஜாக், விவசாயிகள் சங் கத்தலைவர் கே.பாலகிருஷ் ணனுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத் தை நிறைவு செய்து வைத் தார்.

பங்கேற்ற அமைப்புகள்

தேனி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். சின்ன மனூர் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள் ஏராளமா னோர் வந்திருந்து தலைவர் களுக்கு வாழ்த்து தெரிவித் தனர்.

உண்ணாவிரதப்போராட் டத்தில் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கம், தேனி மாவட்ட மொசைக் தொழி லாளர் சங்கம், வாரச்சந்தை காய்கறி ஏற்றுவோர்-இறக்கு வோர் சங்கம், ஒயிட்ரோஸ் ஆண்கள் சுயஉதவிக் குழு, ஆண்டிபட்டி சாலையோர வியாபாரிகள் சங்கம், மாற் றுத் திறனாளிகள் சங்கம், சிஐடியு தேனி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம், தனியார் மோட் டார் தொழிலாளர்கள் சங் கம், கரும்பு விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மின்ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரதத்தில் ஏராள மானோர் பங்கேற் றனர்.
நன்றி - தீக்கதிர்

Thursday, December 8, 2011

பாதுகாப்பான அணையை பார்த்து வந்தேன்!




இல்லை. இது முல்லைப் பெரியார் அணை பற்றிய பதிவு
இல்லை. நேற்று  நான் எழுதிய பதிவிற்கு எதிர்பார்த்தது
போலவே  கடுமையான கண்டனங்கள். தனியாக ஒரு
பதிவு போட வேண்டிய அளவிற்கு. நாளை மீண்டும் 
அது பற்றி. 


இப்போது  நேற்று  நான் போய் வந்த கல்லணை பற்றி.


பள்ளி நாட்களிலிருந்தே  என்னை வசீகரித்து வந்தது
கல்லணை. நான்  பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த
திருக்காட்டுப்பள்ளி க்கு பதினைந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள கல்லணை  முன்பு போல 
இப்போது  இல்லை என்பது வருத்தமான ஒன்று. 


காவிரியில் இப்போது தண்ணீர்  இருந்தாலும் அங்கிருந்து
கொள்ளிடத்திற்கோ  , கல்லனைக் கால்வாயிலோ, 
அல்லது  காவிரியிலோ  அதிகமான அளவில் திறந்து
விடப்படவில்லை. நதிக்கரைகள் மட்டுமல்ல, 
நதிக்குள்ளேயே  புற்கள் மண்டிக்கிடக்கிறது. 


மறு புறத்தில் ஜேசிபி  கொண்டு மணல் தாராளமாக
லாரிகளில் சென்று கொண்டே  இருக்கிறது. 


கல்லணைக்கு, கொள்ளிடத்திற்கு  அருகில் இரு 
அறிவிப்புப் பலகைகள். 


1961  ல்  காவிரி உடைப்பு ஏற்பட்ட இடம் என்று 
ஒரு பலகை. 


1961 ல் கொள்ளிடத்தில் உடைப்பு ஏற்பட்ட இடம் 
என்று  ஒரு பலகை. 


இப்போது  உள்ள நிலையைப் பார்த்தால் புற்கள்
மண்டியிருக்கும் காவிரியில்  எதிர்காலத்தில் 
உடைப்புக்கு வழியில்லாமல்  கல்லணை 
பாதுகாப்பாகவே  உள்ளது போலவே 
தோன்றுகின்றது. 


இதோ  படங்கள் கீழே.