Showing posts with label செல்லாத நோட்டு. Show all posts
Showing posts with label செல்லாத நோட்டு. Show all posts

Wednesday, May 24, 2023

உன்னிடம் இருக்காதுதான் ஆட்டுக்காரா

 

ஆட்டுக்காரனின் ட்வீட் கீழே . . .



மாதச் செலவு எட்டு லட்ச ரூபாயை நண்பர்களிடம் வாங்கி பிழைப்பு நடத்தும் உன்னிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்க வாய்ப்பில்லை என்பது எங்களுக்கும் தெரியும் ஆட்டுக்காரன். உன்னைப் போன்ற தத்திக்கு மாதாமாதம் படியளக்கும் உன் பணக்கார தியாக  நண்பர்களை கேட்டுப்பார், அவர்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற உதவி செய். அதுதான் நீ அவர்களுக்கு செய்ய வேண்டிய செஞ்சொற்றுக் கடன். எப்படி மாற்றுவது என்ற கேடித்தனமெல்லாம் உனக்கே தெரியும். ஒருவேளை எக்ஸ்பர்ட் அட்வைஸ் தேவைப்பட்டால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை மாற்றிய பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் ஒருவரான அமித் ஷாவை கேட்டுக் கொள்.

 

Tuesday, May 23, 2023

டிஜிட்டலைஸேஷன் பவுசு இவ்வளவுதான் . . .

 


இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.  இதைப் படிக்கும் போது இன்னொரு கேள்வி மனதில் வந்தது. அது என்ன கேள்வி என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.


 
"On Friday, the RBI has said the total value of these banknotes in circulation has declined from Rs 6.73 lakh crore at its peak as on March 31, 2018 (37.3 per cent of Notes in Circulation) to Rs 3.62 lakh crore constituting only 10.8 per cent of Notes in Circulation on March 31, 2023." (இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 22, 2023)

 

மேலே உள்ள செய்தி கூறுவது இது தான்: 

 

1. 2018 மார்ச் 31 இல் புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டு களின் மொத்த மதிப்பு  ரூ 6.73  லட்சம் கோடி. இது அப்பொழுது புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 37.3 %. அப்படியானால், 2018 மார்ச் 31 இல் மொத்த பணப்புழக்கம் ரூ 6.73 x 100 / 37.3 = 17.96 லட்சம் கோடி ரூபாய்.

 

2.  2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ 3.62 லட்சம் கோடி. இது அன்றைய மொத்த பண புழக்கத்தில் 10.3 %. அப்படியானால் அந்த தேதியில் மொத்த பண புழக்கம் ரூ 3.62 x 100 /10.8 = 33.5 லட்சம் கோடி ரூபாய். 

 

3. அதாவது, 2018-2023 ஆகிய ஐந்து  ஆண்டுகளில்  பணப்புழக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ஆகியுள்ளது. 

 

ஆக, " எங்கள் ஆட்சியில் பொருளாதார பரிவர்த்தனைகள் அனைத்தும் அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகி வருகிறது, இனி ரூபாய் நோட்டுக்களே தேவை இல்லாமல் ஆகிவிடும்" என்ற சங்கி பிரச்சாரம் எவ்வளவு அபத்தமானது என்பதை இங்கே காணலாம்!

 

Monday, May 22, 2023

முட்டாள் சங்கிகளின் முட்டுக்களுக்கு

 



ரூபாய் 2000 நோட்டுக்கள் இனி செல்லாது என்ற அறிவிப்பிற்கு சங்கிகள் கொடுக்கிற முட்டுக்கள் இருக்கிறதே, முடியலை. தாங்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை ஒவ்வொரு முட்டிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சங்கிகளின் சில முட்டுக்களையும் அதற்கான என் எதிர்வினைகளையும் பார்ப்போம்.

முட்டு :  2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லவில்லை, அது புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுகிறது.

எதிர்வினை:  இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதால்தானே திரும்பப் பெறப்படுகிறது. வங்கிகளில் 30.09.2023 க்குள் செலுத்தி மாற்றிக் கொள்ளச் சொன்ன ரிசர்வ் வங்கி அதுவரை மக்கள்  மற்ற இடங்களில் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏன் சொல்லவில்லை? 30.09.2023 க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டை யாராவது வைத்திருந்தால் அந்த நோட்டிற்கு ஏதாவது மதிப்புண்டா? ஆக அது வெறும் செல்லாத நோட்டுதான்.எதற்கு வெட்டித்தனமான வார்த்தை விளையாட்டு?

முட்டு : ; CLEAN NOTE POLICY என்று அழுக்கு நோட்டுக்களின் சுழற்சியை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

எதிர்வினை : அடப்பாவிகளா! 2000 ரூபாய் நோட்டுக்களில் மட்டுமா அழுக்கு நோட்டு இருக்கிறது! டிமோ கலர் கலராக வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுக்களும்தான் அழுக்கோ அழுக்கு என்றுள்ளது. பிறகு ஏன் அதையெல்லாம் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறவில்லை. அழுக்கு நோட்டுக்களை திரும்பக் கொடுத்து விட்டு வேறு புதிய நோட்டுக்களையோ அல்லது வேறு மதிப்பிலான நோட்டுக்களை கொடுக்கலாமா! ஒட்டு மொத்தமாக 2000 ரூபாய் நோட்டுக்களையே திரும்பப் பெற வேண்டாமே!

முட்டு : கள்ள நோட்டுக்களை அச்சிடுவது எளிதாக உள்ளது என்பதாலும் இந்த முடிவு

எதிர்வினை :  கள்ள நோட்டு அடிக்க முடியாத என்றுதானே  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணம் சொன்னார்கள். ஒரு  ரூபாய் போட்டை கூட ஒழுங்காக அச்சடிக்க லாயக்கில்லாதவர்களுக்கு ஏன் ஆட்சி?

முட்டு : கறுப்புப் பணத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை. 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இப்போது சிக்கிக் கொள்வார்கள். 2000 நோட்டை அறிமுகப்படுத்தியதே கறுப்புப் பணம் உள்ளவர்களை தூண்டி அவர்களை பதுக்க வைத்து இப்போது வெளியில் கொண்டு வரத்தான்.

எதிர்வினை :  கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து சூரியனின் சூட்டில் அந்த வெண்ணை உருகி நெய்யாக வழியும் போது கொக்கின் கண்களை அந்த நெய் மூடும் போது கொக்கை பிடித்து விடலாம் என்று கொக்கை பிடிக்க யோசனை சொன்ன ஆளுக்கு டிமோ வை விட அறிவு அதிகம்.

முட்டு : முதல்வர் குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ள 30,000 கோடி ரூபாய்க்கு ஆப்பு வைக்கத்தான் இந்த முடிவே.

எதிர்வினை : ஆட்டுக்காரன் வெளியிட்ட தரகர் சங்கர் கொடுத்ததாக சொல்லப்பட்ட  ஆடியோ போலியானது என்று பிடிஆர் தியாகராஜன் சொன்னாலும் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கட்டும், அது உண்மையாகவே இருந்தாலும்  அந்த 30,000 கோடி ரூபாயை 2000 ரூபாய் நோட்டுக்களாகவே பதுக்கி வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதே! அது முட்டாள் டிமோவின் முட்டாள் தொண்டர்கள் என்பதற்கான சான்று.

முட்டு : கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இந்த நடவடிக்கைக்காக கதறுகிறார்கள். அரசின் முடிவை விமர்சிக்கிறார்கள்.

எதிர்வினை : 2000 ரூபாய் நோட்டுக்களாக கறுப்புப் பணம் உள்ள பெரும் பண முதலைகள் யாரும் கதறவில்லை. அதை  மாற்றும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். முன்பு கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததை புதிய வித பொருளியல் நடவடிக்கை என்று புளிச்ச  மாவு  ஆஜான் சொன்னது நினைவில் உள்ளது. நானெல்லாம் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது.  ஆனாலும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.

ஏன்?

1000 ரூபாய் நோட்டை செல்லாத  நோட்டாக்கி விட்டு 2000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தது ஒரு தேவையில்லாத ஆணி என்று அன்றே சொன்னேன். அந்த தேவையில்லாத ஆணியை இப்போது பிடுங்கும் போது “ நாங்கதான் அப்பவே சொன்னோம் கேட்டியா?” என்று இந்தியாவுக்கே தேவையில்லாத பெரிய ஆணியான டிமோவை கேட்கும் வாய்ப்பை எப்படி நழுவ விட முடியும்!

 

Saturday, May 20, 2023

டிமோ சொல்லாதாததால் செல்லாது

 


இந்தியப் பொருளாதாரத்தின் கறுப்பு நாளான 8, நவம்பர், 2016 அன்று தொலைக்காட்சியில் தோன்றி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பணம் ஒழிந்து புதிய இந்தியா பிறந்து விட்டது என்று அறிவித்து ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், கங்கனா ரணாவத் போன்ற பொருளாதார மேதைகளின் வரவேற்பு இல்லாமல்

ரிசர்வ் வங்கி அறிவித்த 2000 ரூபாய் செல்லாது 

என்ற அறிவிப்பு

செல்லாது.

வந்தே பாரத் ட்ரெயினுக்கு கொடியசைக்கச் செல்லும் டிமோ, இன்னொரு புதிய இந்தியாவின் பிரசவச் செய்தியை மட்டும் சொல்லாமல் இருப்பாரா என்ன!

ஆகவே 2000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு

செல்லாது, செல்லாது, செல்லாது 

பிகு: இதற்கும் முட்டாள் சங்கிகள் கொடுக்கும் முட்டுக்கள் இருக்கே, அது தனி. பிறகு எழுதுகிறேன்.

Tuesday, November 8, 2022

தேசமே முட்டாளான நாள் இன்று

 


இந்திய வரலாற்றின் கருப்பு தினம். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த நாள்.

 

1)     இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலையச் செய்த நாள்.

2)     வங்கிகள் வாசலில் மக்களை கால் கடுக்க நிற்க வைத்த நாள்,

3)     கையில் மை வைத்து இந்தியர்களை அசிங்கப்படுத்திய நாள்.

4)     ரஜினிகாந்த், புளிச்ச மாவு ஆஜான் போன்ற பொருளாதார மேதைகளை உருவாக்கிய நாள்.

5)     ஆளும்கட்சிக்காரர்கள் முன் கூட்டியே தகவல் தெரிந்து தங்கள் கையில் இருந்த நோட்டுக்களை முன்பே மாற்றிய மோசடிக்கு வழி வகுத்த நாள்,

6)     ஊழல் பேர்வழிகள் பதுக்குவதற்கு வசதியாக 1000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டு வந்த நாள்.

7)     மக்கள் அவதிப்பட்ட நேரத்தில் பாஜககாரர்களுக்கும் சேகர் ரெட்டி போன்ற முதலாளிகளுக்கும் பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்த நாள்.

8)     சிப்பு வைத்த நோட்டு. அதனால் பதுக்க முடியாது என்று எஸ்.வி.சேகர்களும் விஷமூர்த்திகளும் காமெடி செய்த நாள்.

9)     கருப்புப் பணமும் ஒழியாமல் கள்ள நோட்டும் ஒழியாமல் புழக்கத்தில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கே வந்து சேர்ந்து அரசின் வாதம் அனைத்தும் ஜூம்லாவான நாள்.

 

மொத்தத்தில் மோடி எனும் முட்டாள், இந்தியர்கள் அனைவரையும் முட்டாளாக்கிய நாள்.

Saturday, December 25, 2021

இதுவும் போச்சா மோடி?

 


செல்லா நோட்டு விவகாரத்தின் போது அதற்குக் காரணமாக மோடி முக்கியமாக சொன்னது இரண்டு காரணங்கள்.

கறுப்புப் பணம் முடங்கிப் போகும். மீட்கப்படும்.

கள்ள நோட்டு அடிக்க முடியாது.

செல்லா நோட்டு அறிவித்த போது புழக்கத்தில் இருந்த நோட்டுக்களில் ஏறக்குறைய 99 % வங்கிகளுக்கு வந்து விட்டது. அதில் முதல் காரணம் அப்போதே அடி பட்டு விட்டது.

இப்போது தேசிய குற்ற ஆவண ஆணையத்தின் அறிக்கை படி 2019 ல் ரூபாய்  25,39,09,130   மதிப்புள்ள 2,87,404  கள்ள நோட்டுக்கள் பிடி பட்டுள்ளது.

அதுவே 2020 ல்   ரூபாய்  92,17,80.480  மதிப்புள்ள 8,34,947  கள்ள நோட்டுக்கள் பிடி பட்டுள்ளது. 

அதாவது இந்த குறிப்பிட்ட குற்றம் மட்டும் 190.5 % உயர்ந்துள்ளது.

ஆக கள்ள நோட்டு அடிக்க முடியாது என்ற காரணமும் அடிபட்டு விட்டது. சமீப காலமாக 2,000 நோட்டுக்களை பார்க்கவே முடிவதில்லை. “ஈசலின் இறகை விட மெல்லியதானது” என்று தோழர் பாலபாரதியால் வர்ணிக்கப்பட்ட 2,000 நோட்டை பதுக்குவது எளிது.

ம்ம்ம்ம்ம். எஸ்.வி.சேகர் சொன்னது போல் சிப்பு வைத்திருந்தாலாவது எங்கே பதுக்கியுள்ளார்கள் என்பதையாது கண்டுபிடித்திருக்கலாம்!

சரிதானே விஷமூர்த்தி?

Monday, November 8, 2021

மோடி எனும் முட்டாளின் நாள்

 






ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே நாள், கிட்டத்தட்ட இதே நேரம், அரக்கோணம் சென்று திரும்புகிறேன். வாகன ஓட்டுனருக்கு 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்த போது தொலைக்காட்சியில் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கற்றுக் கொடுத்து கொஞ்சமாக நான் புரிந்து கொண்ட பொருளாதார அறிவிலிருந்து அப்போது சுடச் சுட எழுதிய பதிவு இங்கே.

மோடி பின் துக்ளக்




முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி. 

என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை. 

கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.

ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை. 

கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.

கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது. 

கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும். 

வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை,  நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை  எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?

இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. 

பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார். 

ஐந்தாண்டுகளுக்குப் பின்பு என்ன நிலைமை? 
கால்கடுக்க வரிசையில் நின்றோம். கைவிரலில் மை வைக்கப்பட்டோம்.
வரிசையில் நின்றவர் இறந்தாலும் வருத்தப்பட்டோமோ தவிர, அவரை கவனிக்கப் போய் நம் இடத்தை இழக்க விரும்பவில்லை.
சேகர் ரெட்டிகளுக்கு புதிய நோட்டுகள் பெட்டி பெட்டியாக கிடைத்தது.
பாஜக மட்டும் தன் வசமிருந்த பணத்தை முதல் நாளே வங்கியில் கட்டியிருந்தது.
ஈசலின் இறகினும் மெல்லிய தாள் என்று தோழர் பாலபாரதியால் வர்ணிக்கப்பட்ட நோட்டில் சிப்பு இருப்பதாஉ கதை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

நோட்டுக்களை புதிதாக அச்சடிக்க ஆன செலவளவிற்குக் கூட கறுப்புப் பணம் முடங்கவில்லை.
அடுத்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட கூட்டத்தில் கையில் கத்து கத்தாய் புது நோட்டுக்கள்.
முந்தைய நோட்டுக்களை விட இப்போது கள்ள நோட்டுக்கள் அதிகம் வருவதென்பது காசாளர்களின் அனுபவம்.

முன்பே சொன்னோம். அன்றே சொன்னோம்.
இப்போதும் சொல்வோம். எப்போதும் சொல்வோம்.

செல்லா நோட்டு விவகாரம் என்பது
மோடி எனும் முட்டாளின் நடவடிக்கை.
அந்த முட்டாள்தனத்தை ஆதரித்து முட்டு கொடுத்தவர்களும்
முட்டாள்களே அன்றி வேறில்லை. 

Sunday, November 8, 2020

இந்தியர்கள் எரித்திருக்க வேண்டும்

 


அந்த நாளை மறக்கவே முடியாது. அரக்கோணத்தில் ஒரு கூட்டம் முடிந்து எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறேன். அலைபேசியில் சார்ஜ் இல்லாததால் இணையத்திற்குள் செல்லவில்லை. வாகன ஓட்டுனருக்கு 500 ரூபாய் அளித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொஞ்சம் இளைப்பாறி விட்டு அலைபேசிக்கும் தெம்பேற்றிய பின்னர் தொலைக்காட்சியை போட்ட பிறகே அந்த அதிர்ச்சி செய்தியை அறிந்து கொண்டேன். நோட்டுக்களை செல்லாது என்று சொல்லி மனிதர்களை செல்லாதாவர்களாக்கிய ஒரு மூடனின் மூடச்செயல் நிகழ்ந்த நாளை மறக்க முடியுமா?

அப்போதே எழுதிய பதிவு இங்கே உள்ளது.

மோடி பின் துக்ளக்




முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி. 

என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை. 

கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.

ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை. 

கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.

கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது. 

கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும். 

வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை,  நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை  எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?

இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. 

பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார். 

நான்கு வருடங்கள் கடந்து விட்டது. செல்லா நோட்டு விவகாரம் என்பது மகத்தான தோலி என்பது மட்டுமல்ல, அன்று நிலை குலைந்த இந்தியப் பொருளாதாரம் இன்று வ்ரை நிமிரவில்லை. 

வங்கி வரிசைகளில் நின்றவர்கள் இறந்து போனார்கள், பணிச்சுமையின் அழுத்தத்தில் வங்கி ஊழியர்கள் இறந்து போனார்கள்.

கறுப்புப் பணம் என்று பத்து பைசா கூட வரவில்லை. ஆனால் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரை வீதியாக வீதியாக பணத்திற்கு அலைந்தோம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அடையாள மை வைக்கப்பட்டு அசிங்கப் படுத்தப்பட்டனர்.  

காப்பீட்டுப் பிரிமியம் கட்ட முடியாமல் காலாவதியான பாலிசிகள் மூலம் எத்தனை பேர் அந்த பாதுகாப்பை இழந்தனரோ?

திருமணம் வைத்து விட்டு சிரமப்பட்டவர்கள் எத்தனை பேர்!

நாம் பிச்சைக்காரர்களாய் பரிதவித்த போது சேகர் ரெட்டிகளுக்கு பெட்டிகளில் புதிய நோட்டு போனது.

நாம் துன்பத்தில் உழன்ற போது "எல்லையில் நிற்பவர்களை பார்க்கச்"  சொன்னார்கள். எல்லையில் நிற்பவர்கள் தாக்கப்படும் வாய்ப்புள்ளது என்ற உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்து புலாவாமா மரணத்திற்கு காரணமாகி அந்த கொடூரனை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார்கள்.

நீங்கள் பிச்சைக்காரர்களாகவே அலைய சபிக்கப்பட்டவர்கள் என்று அந்த கொடூரன் நம்மை மீண்டும் அலைய விட்ட அவலம் நிகழ்ந்திருக்காது,

ஐம்பது நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்" என்று அந்த கொடுங்கோலன் கொடுத்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்தியிருந்தால்.