Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Wednesday, November 4, 2020

அர்ணாபு, கொலைகாரனா நீ?

 


மோடியின் செல்லப் பிராணி அர்ணாபு கோசுவமி கைது செய்யப்பட்டது நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது.

ஊடக வியாபாரிகளின் தலைவனுக்கு நேர்ந்தது போல தமிழக வியாபாரிகள் மாலன் போன்றவர்களுக்கும் நிகழ வேண்டும்.

கொடுக்க வேண்டிய காசை கொடுக்காம ஏமாத்தின ஃப்ராடு எப்படியெல்லாம் கத்துவான்!

ஆனாலும் மகாராஷ்டிரா போலீசுக்கு சாமர்த்தியம் போதாது. வெள்ளிக்கிழமை இரவு தூக்கியிருந்தா பெயில் கிடைக்க இரண்டு நாளாகி களி தின்னிருக்கலாம். களி தின்பதைப் பற்றி நக்கலடித்த மாலனும் களி திங்கனும். அதுதான் என் ஆசை.

Wednesday, June 13, 2018

சாமியார்களும் சாமானியர்களே - தற்கொலை உட்பட . .



ம.பி முதல்வரால் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்ட "பாயு மஹராஜ்" என்ற சாமியார் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். எந்த ஒரு மரணமும் துயரமானதே.

தன் தற்கொலைக்கான காரணமாக "தாங்க முடியாத மன அழுத்தம்"  என்று தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார். 

இன்று சாமியார்களை நாடிச் செல்கிற பலரும் அதற்கான காரணமாக முக்கியமாக சொல்லும் விஷயம்

"அந்த சாமியாரிடம் சென்றால் மன அழுத்தம் குறைகிறது. அவர் பேசுவதைக் கேட்டாலே போதும், மனம் தெளிவடைகிறது, etc, etc"

"ஆனால் சாமியார்கள் ஒன்றும் சர்வ சக்தி படைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாமானிய மனிதர்களே. மோடியைப் போல அவர்களும் நாவன்மை படைத்தவர்கள், அவ்வளவுதான்"

என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு சாமியார்களிடம் இல்லை.  நீங்கள் நிதானமாக சிந்தித்தாலே அதன் காரணம் தெரியும். 

அரசியல், பொருளாதார, சமூகம் என்று பின்னணியில் இருப்பவற்றை அறிந்து கொண்டால் தீர்வு காணும் வழியும் கிடைக்கும்.

சாமியார்களும் சாமானிய மனிதர்களே என்பதை பாய்யு மஹராஜ் கற்றுக் கொடுத்துள்ளார்.

Tuesday, March 14, 2017

இன்னும் எத்தனை பேரை தற்கொலை செய்வீர்?



           


ரயிலை மோதவைத்து
இளவரசனை தற்கொலை செய்தீர்,

படிப்பை தடுத்து கயிற்றைக் கொடுத்து
ரோஹித் வெமுலாவை தற்கொலை செய்தீர்!

மர்ம வழக்கை முடித்து வைக்க
ராம்குமாரை  மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்தீர்!

இப்போது சேலம் முத்துகிருஷ்ணனை
டெல்லி ஜே.என்.யு வில்
கால்களை தரையில் படவைத்தே
தற்கொலை செய்துள்ளீர்!

இன்னும் எத்தனை தற்கொலை செய்த பின்
உங்களின் ஜாதி வெறி அடங்கும்?

இன்னும் எத்தனை உயிர் குடித்தால்
உங்கள் ரத்த தாகம் தணியும்? 

தற்கொலைகள் செய்திடும்
உங்கள் ஆணவத்திற்கென்று தற்கொலை?