Showing posts with label தேர்தல் பத்திர ஊழல். Show all posts
Showing posts with label தேர்தல் பத்திர ஊழல். Show all posts

Saturday, April 18, 2026

76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


ஏன் மிஸ்டர் மோடி,

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.

இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?

Monday, March 18, 2024

அசிங்கப்படுத்தாதீங்கய்யா - ஜேம்ஸ் பாண்ட்

 


கீழேயுள்ள மீமைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர்கள் மனது என்ன கஷ்டப்படும்! பாவம் எனக்குப் பிடித்த சீன் கானரி, ரோஜர் மூர்  ஆகியோருக்காக வருத்தப்பட்டாலும்  000 எலக்டோரல் பாண்ட் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.


 

மார்ட்டின் 868 கோடி கொடுத்தது யாருக்கு?

 


இன்று சங்கிகளின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் மார்ட்டின் திமுகவிற்கு கொடுத்த  500 கோடி ரூபாய் பற்றியே கூறியிருந்தது.

ஆம், திமுக 500 கோடி ரூபாய் வாங்கியிருந்தது உண்மைதான். அது எதற்காக என்பதை அந்த கட்சிதான் விளக்க வேண்டும்.

நிற்க மார்ட்டினிடமிருந்து திமுக பணம் பெற்ற விஷயத்தை புலனாய்வுப் புலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற, நேர்மையின் பிம்பங்கள் என்று தங்களை கருதிக் கொண்டிருக்கிற சங்கிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திர விபரங்களை திமுக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதை வைத்துத்தான் சங்கிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக தொகைக்கு, அதாவது 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியது மார்ட்டின்தான்.

அதில் திமுகவிற்கு கிடைத்தது 500 கோடி ரூபாய் என்றால் மீதமுள்ள 868  கோடி ரூபாய் போனது யாருக்கு?

பாஜக ஏன் தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறக்கவேயில்லை?

மார்ட்டினிடம் நாங்கள் பத்து லட்ச ரூபாய் கூட (தேர்தல் பத்திரம் வாங்க குறைந்த பட்ச தொகை பத்து லட்ச ரூபாய்) வாங்கவில்லை என்று ஏன் பாஜகவால் சொல்ல முடியவில்லை.

அந்த 868 கோடி ரூபாய் அவர்களுக்குத்தான் சென்றதால்தான் பாஜக கள்ள மௌனம் சாதிக்கிறதா?

 

Sunday, March 17, 2024

முத்தூட் விளம்பரம் இனி இப்படி????

 


முத்தூட் பைனான்ஸ் கம்பெனி ஏதோ மிகப் பெரிய கம்பெனி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு பெரிய கம்பெனி இல்லை போல, ஆமாம். வெறும் மூன்று கோடி ரூபாய்தான் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளார்கள்.


ஆகவே இனி அக்கம்பெனியின் விளம்பரம் கீழே உள்ளது போல இனி வருமோ?



யானையை பிச்சையெடுக்க் வைப்பது போல ED

 


வலிமையான, கம்பீரமான, பிரம்மாண்ட உருவம் படைத்த யானைகளை எப்படி பிச்சையெடுக்க வைத்தார்களோ, 


அது போல, சுயேட்சையாக, நேர்மையாக செயல்பட வேண்டிய அமலாக்கப் பிரிவை தேர்தல் பத்திரங்களுக்காக பிச்சைக்காரர்கள் போல ரெய்ட் அனுப்பிய பெரிய பிச்சைக்காரர்கள் பாஜக ஆட்சியாளர்கள். 

ஏன் மோடி என்னென்னமோ கெட் அப் போட்டீங்க, கொள்ளைக்காரன் மாதிரியும் பிச்சைக்காரன் மாதிரியும் ஏன் கெட் அப் போடலை? அதுதானே உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்!


Friday, March 15, 2024

பத்து கோடி கொடுத்தது அவங்கதானா?

 


தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையம் தன் இணைய தளத்தில் வெளியிட்டு விட்டது. கில்லாடித்தனமான ஒரு வேலையை செய்துள்ளது. இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. கொடுத்தது ஒன்று, பெற்றது இன்னொன்று. யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரம் கிடையாது. ரொம்பவும் மெனக்கெடாமல் அதை அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது.

அந்த பட்டியல் குறித்து எழுத நிறைய உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.

பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் ப்ட்ட ஒரு விபரம் உருவாக்கிய சந்தேகத்தை இங்கே எழுதியுள்ளேன்.


 

PEGASUS PROPERTIES LIMITED என்ற நிறுவனம் பத்து கோடி  ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

 இந்தப் பெயர் நினைவில் உள்ளதா?

 ஆமாம்.

 இந்திய மக்களை மோடி அரசு உளவு பார்க்க மென் பொருள் கொடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் பெயரும் பெகாஸஸ் தான்.

 


இரண்டும் ஒன்றா என்று உறுதிப்படுத்திக் கொள்ள இணையத்தில் தேடினால் போதுமான விபரங்கள் கிடைக்கவில்லை. சந்தேகத்தை அதிகப்படுத்தும் ஒரு முக்கியத்தகவலைத் தவிர.

 ஆம்.

 

PEGASUS PROPERTIES LIMITED நிறுவனம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற தகவல்தான் அது.

 அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் அதற்கு மேல் செல்ல முடியவில்லை.

 அதனால் இரண்டும் ஒன்று என்றே தோன்றுகிறது. மேலதிக விபரம் தெரிந்தவர்கள் இருப்பின் விளக்கவும்.