Showing posts with label சண்டை. Show all posts
Showing posts with label சண்டை. Show all posts

Tuesday, May 12, 2026

அதிமுக சண்டை புரியலை

 


எடப்பாடி கோஷ்டியும் சரி, வேலுமணி சரி ரெண்டு பேருமே கொள்கைக் குன்றுகள் கிடையாது. மோடியின் கட்டளைகளை நிறைவேற்ற தயங்காதவர்கள். பிறகு ஏன் அவர்களுக்குள் மோதல்?

மோடிக்கு எடப்பாடியையோ அல்லது வேலுமணியை பிடிக்காமல் போயிருக்கிறது. 

அதனால் அவர்கள் சண்டை செய்கிறார்கள்.

மோடியின் செல்லப்பிள்ளை யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.


Thursday, September 26, 2024

சங்கிகளுக்குள் சண்டை - காமெடி

 


எல்.முருகன் – போலிப் பேரா ராம.சீனு – சண்டை போடாதீங்க.

 அதை மட்டும் ஏற்க முடியாது எல்.முருகன்  என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

 பாஜக கட்சியின் பொதுச்செயலாளர் போலிப் பேராசிரியர் ராம.சீனிவாசன் போட்ட பதிவு கீழே உள்ளது.

 


வதந்தியை பரப்பக் கூடாது என்று எர்ல்.முருகனுக்கு சொல்கிறார் ராம்.சீனு.

 ஆட்டுக்காரன் இடத்தை பிடிக்க கடுமையான குடுமிபிடி சண்டை பாஜகவிற்குள் நடப்பதற்கான அறிகுறி இதெல்லாம்.

பிகு: பேய்க்கும் பேய்க்கும் சண்டை டெம்ப்ளேட்டைத்தான் பயன்படுத்த நினைத்தேன். இவர்கள் இருவருமே அந்த அளவிற்கு வொர்த் இல்லை என்பதால் புதிய டெம்ப்ளேட்டை உருவாக்கி விட்டேன்.

 

Tuesday, August 20, 2024

சண்டைகள் ஓய்வதில்லை

 


நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி என்று கூட இதை சொல்லலாம். எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதி நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்திரா காந்தியின் இறுதி நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படம் என்று கதை கட்டி ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் இஸ்லாமியர்கள் என்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் போட்டிருந்த அயோக்கியத்தனத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

நாக்கை பிடுங்கிக் கொண்டு சாவது போல அந்தாளுக்கு ஒரு கமெண்டு போட்டு விட்டு மாலை முகநூல் வந்தால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு அயோக்கிய சங்கி  அதே படத்தைப் போட்டிருந்தது.

ஏன் இப்படி பொய்யான செய்திகளை அனுமதிக்கிறீர்கள் என்று  குழுவின் மாடரேட்டர் சங்கியை கேட்டால் அந்த செய்தி தவறென்றால் அதற்கான ஆதாரத்தை கொடு என்று தெனாவெட்டாக பதில் சொன்னார்.



 அதே குழுவின் இன்னொரு உறுப்பினர், அது தவறான செய்தி என்பதற்கான லிங்கை கொடுத்து விட்டு, உங்களுடைய எதிர்க்கட்சி தொடர்பான செய்தி என்றால் கண்டபடி உளறினாலும் அனுமதிப்பீர்களா என்று அவர் கேட்டிருந்தார். அது கான் அப்துல் கபார் கானின் சவப்பெட்டி என்று உளற உனக்கு உரிமை உண்டு என்றால் அது இந்திராவின் சவப்பெட்டி என்று சொல்ல அவருக்கும் உரிமை உண்டு என்று இன்னும் திமிராய் எழுதினார்.



 அந்த இன்னொரு உறுப்பினர்தான் ஆதாரம் கொடுத்து விட்டாரே, இனியாவது அந்த தவறான பதிவை நீக்குவீர்களா என்று கேட்டு, நீங்கள் நடுநிலை கிடையாது என்றாலும் அது போன்ற தோற்றத்தை காண்பிக்க நடியுங்களேன் என்றேன்.

 


அப்போதும் அவர் எங்கே ஆதாரம் என்றே கேட்டார்.

 அந்த இன்னொரு உறுப்பினர் காண்பித்த ஆதாரத்தை அவருக்கு tag செய்து இது போதுமா என்று கேட்டேன்.

 அதன் பின்பு சப்தமில்லாமல் அந்த பதிவை அகற்றி விட்டார்கள்.

 நேற்று இரவு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அந்த சங்கியின் பக்கத்திற்கு சென்றால் . . .

 இதோ இந்த பதிவு . . .

 


என் சண்டையும் தொடங்கி விட்டது.

 சமரசமில்லாத சண்டை உறுதியோடு தொடரும் . . .

Wednesday, January 25, 2023

செம சண்டைப்பா!

 


மோடியின் குரங்குக் குட்டி சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜுவிற்கும் உச்ச நீதிமன்றத்துக்குமான சண்டை களை கட்டியுள்ளது.

கொலோஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில் மூவரை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

ஒன்றிய அரசு சொன்ன காரணங்கள் என்ன?

ஒருவர் தன் பால் ஈர்ப்பாளர்.

அதை காரணமாக ஏற்க முடியாது.. 

தன் பால் ஈர்ப்பாளர் என்பதை பதவிக்கான அளவுகோலாக வைத்தால் பாஜகவிலேயே எத்தனை விக்கெட் விழும்?

சமூக வலைத்தளங்களில் ஒன்றிய அரசை விமர்சித்து மற்ற இருவர் பதிவு போடுகின்றனர்.

அவர்களின் கருத்துரிமையை நிராகரிப்பிற்கான காரணமாக சொல்வதை ஏற்க முடியாது.

அதானே பாஜகவுக்கு ஆதரவாக பதிவு போடும் மகளிர் அணிச்செயலாளர் விக்டோரியா கௌரி நீதிபதியாகும் போது விமர்சிப்பவர்கள் ஆகக் கூடாதா?

உளவுத்துறை அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் பொது வெளியில் வெளியிடுவது ஆபத்தான போக்கு, அறிக்கை அளிப்பவர்களுக்கு அச்சத்தை உருவாக்கும்.

ஆமாம். அறிக்கை பொது வெளிக்கு வருமென்றால் ஆட்சியாளர்கள் விருப்பப்படி கதை கட்டி எழுத முடியாதல்லவா?

பிகு 1: நீல நிறத்தில் இருப்பது அரசு சொன்னது.

சிவப்பு நிறத்தில் உள்ளது உச்ச நீதிமன்றம் சொன்னது. 

மற்றவை என்னுடைய கருத்து.

பிகு 2 : இவர்கள் சண்டை எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு என்னமோ வழக்காடிகளுக்குத்தான்