Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Showing posts with label ஜனாதிபதி. Show all posts

Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Friday, July 26, 2024

முட்டாள்களே நம்புவார்கள்

 


மன்னராட்சியின்  அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தின் மையப் பகுதியில் எழுந்தருள வைத்து விட்டு


குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த ஆடம்பர அரங்கின் பெயரை "தர்பார் ஹால்" என்பதிலிருந்து "ஜன தந்திரிக் மண்டப்" என்று பெயர் மாற்றியதற்கு "மன்னராட்சியின் அடையாளமாக தர்பார் என்ற பெயர் இருப்பதுதான் காரணம் என்று சங்கி அரசு சொல்வதௌ முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்.


"அசோகா ஹால்"  என்ற இந்த அரங்கின் பெயரை "அசோகா மண்டப்" என்று மாற்றியதன் மூலம் மன்னராட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் உடாப்ஸ், இந்தித் திணிப்புக்கு இப்படி குடியரசு முலாம் பூசி விட்டார்கள் என்பது நன்றாக புரிகிறது.  

Wednesday, July 10, 2024

ஜனாதிபதியம்மா, தாங்காதம்மா . . .

 


மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களே,

எங்களால் ஒரு மோடியின் போட்டோ ஷூட்டுக்களையே தாங்க முடியவில்லை.

அதே வழியில் நீங்களுமா?

வேண்டாம் மேடம், நாடு தாங்காது.

பிகு: மோடியே தாங்க மாட்டார், தொடர விட மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.

Tuesday, April 2, 2024

அவமரியாதை ஸ்கெட்ச் அத்வானிக்கானது . . .

 


நேற்று முழுதும் சமூக வலைத்தளங்கள், கீழேயுள்ள படத்தை பகிர்ந்து மோடியை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.


குடியரசுத்தலைவர் நின்று கொண்டு அத்வானிக்கு விருது தருகையில் மோடி சொகுசாக உட்கார்ந்து கொண்டு ஜனாதிபதியை அசிங்கப்படுத்தி விட்டார் என்பதுதான் மோடி மீதான குற்றச்சாட்டு.

அது உண்மைதான்.

மோடி ஜனாதிபதியை அசிங்கப்படுத்துவது ஒன்றும் புதிதல்லை. பழங்குடி இனத்தவரைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கினேன் என்று சீன் போட்டாரே தவிர, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் ராமர் கோயிலுக்கெல்லாம் அழைக்கவே இல்லை.

ஆனால் நேற்று மோடி முக்கியமாய் அவமதித்தது அத்வானியை . . .

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அத்வானி அழைக்கப்படவில்லை. பாபர் மசூதியை இடித்தவருக்கே இந்நிலையா என்று அத்வானிக்கு அனுதாபம் ஏற்பட்டதை திசை திருப்ப கொடுக்கப்பட்டதே பாரத ரத்னா.

"சாமி" படத்தில் விவேக் சொல்வாரல்லவா" இந்த கழுதை கல்யாணத்துக்கு இந்த மந்திரம் போதும்" என்பது போல பாரத ரத்னா விருதே அத்வானிக்கு அதிகம், இதுல எழுந்து வேற நிக்கனுமா என்பதுதான் மோடியின் நிலை.

இதிலே பாவம் ஜனாதிபதியும் சேர்ந்து அசிங்கப்பட்டு விட்டார். 

Friday, January 26, 2024

ஜனாதிபதி - ரொம்பவுமே நல்லவங்க . . .

 


நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டது போலவே ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையிலும் புறக்கணிக்கப்பட்டார் இந்திய முதல் குடிமகள்.

ஆனாலும் அவர் தன் குடியரசு தின உரையில் ராமர் கோயிலை விதந்தோந்தி பேசினார். இந்திய நீதித்துறையின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் அடையாளம்தான் ராமர் கோயில் என்று வேறு காமெடியாக பேசினார். அதை எழுதிக் கொடுத்த ஆளுக்கே எழுதும் போது சிரிப்பு வந்திருக்கும்.

எவ்வளவுதான் அரசால் இழிவு படுத்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசை பாராட்டவே செய்கிறார்.

பாவம் ரொம்பவே நல்லவர்!

Wednesday, December 27, 2023

ஜனாதிபதியை கூப்டீங்களா டிமோ?


 சில கேலிக்கூத்துக்கள் டிமோவால் மட்டுமே சாத்தியம்.

 ஜனநாயகத்தின் இருப்பிடம் என்று நம்பப்பட்ட நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு சாமியார்களை அழைத்து அதனை ஒரு மத விழாவாக நடத்தினார்  டிமோ.

 இப்போதோ அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நிகழ்வாக நடத்துகிறார். திருமதி சோனியா காந்தி, தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் டி.ராஜா  ஆகியோருக்கு அழைப்பனுப்பி வரச் சொல்கிறார். அவர்களும் செல்லப் போவதில்லை  என்று அறிவித்து விட்டனர். அவர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அப்போதுதானே ஆவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்ய் முடியும்!

 எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பிய டிமோ, இந்தியாவின் முதல் பெண்மணிக்கு அழைப்பிதழ் அனுப்பினாரா?

 அப்படி அவர்களை அழைத்ததாக இதுவரையில் தகவல் இல்லை. எல்.கே.அத்வானிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்குமே தடை போட்ட டிமோ, புரோட்டாகால் படி தன்னை விட இரண்டு படி உயர்வாக இருக்கிற ஜனாதிபதிக்கு  அழைப்பிதழ் அனுப்ப இனியும் வாய்ப்பில்லை.

 ஏன்?

 காரணம் எளிது.

 நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத அதே காரணம்தான்.

 அவர், திருமதி திரவுபதி முர்மு

 பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்.

 சகுனம் பார்க்கும் சங்கிகள் அவரை நாடாளுமன்றத்துக்குள்ளோ, அயோத்தி ராமர் கோயிலுக்குள்ளோ எப்படி அனுமதிப்பார்கள்????

 சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்பட்டதே, அவரும் கைம்பெண்தானே என்று சில சங்கிகள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துகேள்வி கேட்பார்கள்.

 சோனியா காந்தி நிச்சயம் வர மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் போனது.

 ஜனாதிபதி நிச்சயம் வருவார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் செல்லவில்லை.

 அவ்வளவுதான் . . . 

Tuesday, May 23, 2023

தலையாட்டி பொம்மைகள் என்று தெரிந்தே

 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். டிமோ திறந்து வைப்பது சரியல்ல, குடியரசுத் தலைவரை இழிவு படுத்தி விட்டார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கொதித்துள்ளார்.

ஆனால் இந்த கொதிப்பு ஜனாதிபதிக்கு இருக்கவே இருக்காது. தாங்கள் வெறும் தலையாட்டி பொம்மை என்பதை அறிந்தே அந்த பொறுப்பிற்கு இப்போதுள்ளவரும் முன்பிருந்தவரும் வந்தனர்.

பட்டியலினத்தவரையும் பழங்குடியினத்தவரையும் கௌரவப்படுத்தி உள்ளோம் என்று டிமோ சொன்னதெல்லாம் அவருடைய வழக்கமான ஜூம்லா என்று புரிந்து கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே கிடையாது. 

Saturday, July 23, 2022

ஜனாதிபதி - வேறென்ன சொல்ல?

 


புதிய ஜனாதிபதி பற்றி என்ன சொல்ல?


கீழே உள்ள இரண்டு கார்ட்டூன் போதும். வேறொன்றும் சொல்ல அவசியமில்லை.




Monday, July 4, 2022

கொளுத்தப்பட்ட பழங்குடி இனப் பெண்

 


பழங்குடி இனப் பெண்ணை ஜனாதிபதியாக்கப் போகிறோம் என்று பெருமை பேசும் பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பழங்குடி இனப் பெண் கொளுத்தப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்த ஆதிக்க சக்திகள்தான் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

ராம்பியாரிபாய் என்ற அந்த பெண் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.

ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கினால் ஒட்டு மொத்த பழங்குடி இன மக்களுக்கும் விடியல் வந்து விடும் என்று நினைப்பது மூடத்தனம் என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

கலாம், கோவிந்த், முர்மு எல்லாருமே பாஜகவின் பாசிஸ முகத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட / பயன்படுகின்ற முகமுடிகள். 

முன்பு இருந்தவர்களாலும் எந்த பயனுமில்லை. இனி வருபவராலும் கூட. 

செல்லரித்துப் போன மனுதர்மத்தை நிலை நாட்ட உதவுவது கலாமாக இருந்தால் என்ன? முர்முவாக இருந்தால் என்ன? எல்லோருமே மக்கள் விரோதிகளின் பிரதிநிதிகள்தான்.

Tuesday, June 14, 2022

கோவிந்த் வேஸ்டா விஷ மூர்த்தி?

 


இந்த வார துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப்படம் இது. அதன் இணையப் பக்கத்திலிருந்து எடுத்தது.

புதிய ஜனாதிபதிக்கான தகுதி என்று அது சொல்வது இப்போதைய ஜனாதிபதியின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பார்த்தால்  மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் ஒரு வேஸ்ட் என்று விஷமூர்த்தி சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முதல் குடிமகனை விஷமூர்த்தி அவமதிக்கிறார். இவருக்கு எதிராக ஆட்டுக்காரர் வாய் திறப்பாரா?

இந்த அட்டைப்படத்தின் மூலம் விஷமூர்த்தி விதைப்பது அவரது ஜாதி மேலாதிக்க சிந்தனையைத்தான்.

முற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்ற வாசகத்திலிருந்தே பலவற்றை நாம் உணரலாம்.

முற்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற பிரிவினையை அவர் அங்கீகரிக்கிறார்.

முற்பட்டவர்கள் அப்படி ஒன்றும் வேஸ்டான வேலைகள் செய்பவர்கள் இல்லை என்ற பெருமிதம் தொனிக்கும் வாசகம் அது.

 

வாயைத் திறந்தாலே விஷம்தான் . . .