Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Thursday, April 17, 2025

கூமுட்டையெல்லாம் ஆட்டுத்தாடியானால் ????

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி அநியாயமாக நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தமைக்கு கேரளாவின் புதிய ஆட்டுத்தாடி பொங்கியுள்ளது.

 


நீதிமன்றம் முடிவெடுத்தால் சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என்று அறிவிலித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளது.

 சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆட்டுத்தாடிகள் அயோக்கியத்தனமாக, அராஜகமாக இழுத்தடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.

 ஆக உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்தின் மாண்பைத்தான் காப்பாற்றி உள்ளதே தவிர சட்ட மன்றத்தின் பணியையோ, அதிகாரத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை.

 இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீதிமன்றம் செய்தது ஆட்டுத்தாடிகளின் வேலையைத்தான். அதை சொல்ல இந்த ஆட்டுத்தாடிக்கு தெரியவில்லை.

கூமுட்டைகளையெல்லாம் ஆட்டுத்தாடியாக்கினால் அவை இப்படித்தான் அபத்தமாக உளறும்.

 

Tuesday, April 8, 2025

மொட்டைச்சாமியார் ஆட்சியும் தலைமை நீதிபதியும்

 


சமீப காலமாக உச்ச நீதிமன்றம் மொட்டைச்சாமியாரின் ஆட்சியை தொடர்ந்து கண்டித்துக் கொண்டே இருக்கிறது. புல்டோசர் இடிப்புக்களுக்கு இழப்பீடு கொடுக்கச் சொன்னது.

இப்போது ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதை கண்டிக்கையில்


உத்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து விட்டதாக கண்டித்துள்ளார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவராக மொட்டைச்சாமியார் இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்து கோரக்நாதர் கோயிலுக்கு பூசாரியாகி இருப்பார்.

அதெல்லாம்  இல்லாததால் தலைமை நீதிபதிக்கு லோயா சிகிச்சை கொடுக்கலாமா  என்று சிந்தித்துக் கொண்டு இருப்பார்.



Friday, March 21, 2025

நேற்று நாக்பூர், இன்று அலகாபாத்


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை ஒரு நீதிபதி அளிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் சங்கியாக மட்டுமே இருக்க முடியும். பெண்களை வெறும் போகப் பொருளாக அவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள்.

இது போன்ற தீர்ப்பு இதற்கு முன்பாக வந்துள்ளது.

காவிகளின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ள பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ஒரு நீதிபதி இது போன்றதொரு தீர்ப்பை அளிக்க அதனை உச்ச நீதிமன்றம் அகற்றி விட்டது, அபத்தமான தீர்ப்பு என்று கண்டித்து அந்த நீதிபதி நிரந்தர நீதிபதியாவதையும் ரத்து செய்து விட்டது.

இந்த மனிதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

முந்தைய வழக்கு பற்றி அப்போது எழுதப்பட்ட பதிவு கீழே உள்ளது.


அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 19, நவம்பர், 2021


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான  தீர்ப்பை அளித்தது.

 ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

 அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல்  இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

 நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர  நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

 நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது  அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 "ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம்   இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

 என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

 குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது.  



Thursday, February 1, 2024

கவர்னரா காசி மாவட்ட நீதிபதி?

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்


உயர் நீதிமன்றம் அல்ல. வாரணாசி மாவட்ட நீதிமன்றம். மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா கொடுத்த கடைசி தீர்ப்பு இது.

கடைசி தீர்ப்பென்றால், இதை சொன்னதும் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக கற்பனை செய்யாதீர்கள். அவர் பணியின் இறுதி நாள் நேற்றுதான். 

ஆக பாஜக செயல்திட்டத்திற்கு உகந்த ஒரு தீர்ப்பைக் கொடுத்த அஜய் கிருஷ்ண விஸ்வேஷாவிற்கு நல்ல வெகுமதி வேண்டுமல்லவா! கவர்னர் பதவியைத்தவிர வேறு என்ன பொருத்தமாக இருக்க முடியும்!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அஜய் ...

பிகு: ஒரு எம்.பி பதவியை கொடுத்து உங்களை ஏமாத்திட்டாங்களே ரஞ்சன் கோகாய் அவர்களே!

Tuesday, October 17, 2023

குற்றவாளிகளை பாதுகாக்க விசாரணை?

 


       

புது டெல்லி நோய்டாவிற்குப் பக்கத்தில்  நித்தாரி என்றொரு சின்ன ஊர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. நோய்டாவே உத்தரப்பிரதேசம்தான்

 பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது.

 அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு பணக்காரன் வீட்டின் பின்னே இருந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது. அது காணாமல் போன ஒரு சிறுமியுடையது என்று தெரிய வருகிறது.

 அந்த செல்வந்தன் வீட்டை சோதனை செய்கையில் மேலும் பல எலும்புக் கூடுகள். அந்த பணக்காரன் மோனிந்தர் சிங் பாந்தர் என்பவனும் அவனது வேலையாள் சுரேந்தர் கோலி என்பவனும் கைது செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

 கொலை, பாலியல் வன் கொடுமை, ஆள் கடத்தல் ஆகியவை மட்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதையும் தாண்டி அதிர்ச்சிகரமான ஒன்றும் உண்டு.

 ஆம். அது நர மாமிசம் சாப்பிட்டதான குற்றச்சாட்டு.

 கடத்தி கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 இருவருக்கும்  மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களின் கருணை மனுக்கலை பரிசீலிக்க அநியாயமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக சொல்லி உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுகிறது.

 நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

 ஏன்?

 இவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணைக்குழு தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய தவறியுள்ளது. குற்றவாளி சுரேந்தர் கோலி சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்ற சாட்சியங்களை சேகரிக்க தவறி விட்டது. விசாரணைக்குழு படு அலட்சியமாக இந்த வழக்கை கையாண்டுள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்ய விசாரணைக்குழுவின் அலட்சியம்தான் காரணம்.

 மேலே சொன்னதுதான் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்.

 சி.பி.ஐ ஒரு பொறுப்பான அமைப்பு என்று கருதப்படுகிறது.

 ஆனால் அதன் செயல்பாடு அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக, குற்றவாளியை பாதுகாக்கவே அப்படி அலட்சியமாக செயல்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

 பாதிக்கப்பட்டவர்கள் நிலை?

 அவர்கள் கிடக்கிறார்கள் கழுதைகள், அவர்கள் பாதிக்கப்பட்டதோ, அவர்களின் வலியோ எல்லாம் முக்கியமில்லை.  அவர்கள் ஒன்றும் இந்த அமைப்பில் செல்வாக்கானவர்கள் கிடையாதே! குற்றவாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து என்ன கிடைக்கும்? ஐயா, எனக்கு நீதியே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி போக வைக்குமளவுதானே இன்று நீதி பரிபாலணம் மாறி இருக்கிறது.

 சாதாரண நடவடிக்கை தாமதமானாலே குற்றவாளிகள் திமிர்த்தனத்தோடு அலைவார்கள்! இப்படி அலட்சியமாக அவர்களை பாதுகாப்பது போல நடந்து கொண்டால் இன்னும் மோசமாகத்தான் போவார்கள். குழந்தையை கொன்றவன் பிணையில் வெளி வந்து தன் அம்மாவையே கொன்றானே, அது போலத்தான் நடக்கும். நாமும் இப்படி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டே.

 நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கில் அலட்சியம் காண்பித்த அந்த விசாரணை அதிகாரிகள், குற்றவாளிகளை விட கேடு கெட்டவர்கள். மொத்தத்தில் நீதி என்பதை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள்.

 ஒரே ஒரு விஷயம்தான் ஆறுதல்.

 அலகாபாத் நீதிமன்றம் இக்குற்றவாளிகளை பெண்களின் பாதுகாவலர்கள், குழந்தைகளின் பாதுகாவர்கள் என்றெல்லாம் அடைமொழி கொடுத்து எந்த பதவியும் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட கேலிக் கூத்துகள் எல்லாம் நடக்கும் நாடுதானே நம் இந்திய நாடு! சாத்வி பிராக்யா சிங் தாகூர் ஞாபகம் இருக்கிறதல்லவா!

Sunday, June 4, 2023

வலி(மை)யான வரிகள் . . .

 


“இந்த வழக்கு மனிதர்களின் நடத்தையின் இருண்ட பக்கத்தை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஜாதிய அமைப்பு முறை, மத வெறி, விளிம்பு நிலை மக்கள் மீதான மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் என்று நம் சமூகத்தின் அசிங்கமான உண்மைகளின் மீது நமது கவனத்தை முன்னிறுத்துகிறது.

 

சாட்சிகளை நொடிப் பொழுதில் தடம் மாற வைப்பதன் மூலம் நம் நீதி அமைப்பை எப்படி மோசமாக கையாள முடியும் என்பதற்கான சான்று இது போன்ற வழக்குகளே”

மேலே உள்ள வலி மிகுந்த வலிமையான வரிகள், கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் எனும் ஜாதி வெறியனுக்கான சாகும் வரை சிறைத்தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் சொல்லப்பட்டவை.

இதனை சமூகம் உணர்ந்துள்ளதா?
எல்லா நீதிபதிகளும் இது போன்ற நியாய உணர்வுள்ளவர்கள்தானா?

நாளை பார்ப்போம்.

Friday, May 20, 2022

இப்படியாகி விட்டதே சித்து


 கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முன்பு சாலையில் நடந்த ஒரு பிரச்சினையில் நவ்ஜோத்சிங் சித்து ஒருவரை அடிக்க அவர் அங்கேயே இறந்து போகிறார்.

இந்த வழக்கில் பஞ்சாப் நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று முடிவு செய்து ஒரு வருடம் சிறைத் தண்டனை அளிக்கிறது.

அதனை உச்ச நீதிமன்றம் முதலில் மாற்றி ஆயிரம் ரூபாய் அபராதத்தோடு விடுவிக்கிறது.

இறந்து போனவரின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் சித்து பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறார். அங்கே என்னென்ன குழப்பங்கள் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்து அமரிந்தர்சிங்கை முதலைமைச்சர் பதவியில் இருந்து நீக்க வைத்து அவரை கட்சியிலிருந்தும் வெளியேற வைத்து விட்டார். பெரும்பாலான காங்கிரஸ் கட்சிக் காரர்களை வெறுப்பேற்றி கடைசியில் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கவும் வைத்து விட்டார்.

பாவம்! ஒரு ஸ்லீப்பர் செல்லாக இத்தனை சிரமங்களை மேற்கொண்டும் அந்த ராஜ தந்திரங்களுக்கு பலன் இல்லாமல் போய் விட்டது.

உச்ச நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை அளித்து விட்டது.

Friday, May 6, 2022

டைமிங் உதைக்குதே ஜட்ஜய்யா . .

 




ஜிக்னேஷ் மேவானி, குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளாரும் ஆவார். மோடியை விமர்சித்து ட்வீட் போட்டதற்காக அஸ்ஸாம் போலீஸ் கைது செய்தது. பிணை கிடைத்தது, வேனில் செல்கையில் பெண் போலீஸை பாலியல் வன் கொடுமை செய்தார் என்று மீண்டும் கைது செய்து உயர்நீதி மன்றத்தில் அசிங்கப்பட்டு நின்றது அஸ்ஸாமின் பாஜக போலீஸ்.

அவர் வீடு திரும்பிய உடன் ஐந்து வருடத்துக்கு முந்தைய வழக்கில் அனுமதி இல்லாமல் பேரணி சென்றார் என்று மூன்று மாத சிறைத் தண்டனை கொடுத்துள்ளது ஒரு குஜராத் நீதிமன்றம்.

ஐந்து வருடமாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு வழக்கிற்கு அஸ்ஸாம் பாஜக ஆட்சி அசிங்கப்பட்ட பின்பு  தீர்ப்பு வருகிறது.

உபியில் பாஜகவிலிருந்து ஒரு அமைச்சர் கட்சி மாறிய பின்பு எட்டு வருஷத்துக்கு முந்தைய வழக்கில் அவர் கைது செய்யப்படுகிறார்,

A 2 அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நியமிக்குமாறு கடிதம் கொடுத்த மூன்றாவது நாளில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது.

ஏன் எல்.ஐ.சி யில் கூட பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு தற்காலிக ஊழியர்கள் வழக்கிற்குக் கூட  நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பு, பங்கு விற்பனை தொடங்குவதற்கு ஒரு வார காலம் முன்பு வருகிறது.

இந்த டைமிங் எல்லாம் நெருடலா இருக்கே ஜட்ஜய்யா.

Tuesday, March 8, 2022

இதுதான்யா தீர்ப்பு

 


இன்று வந்த நல்ல செய்தி இது.

ஆணவக் கொலையும் செய்து விட்டு எவ்வளவு திமிராக காவல்துறைக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த புகைப்படத்திலேயே அவனின் ஆணவம் தெரிகிறது.

"எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டான்" என்று வெறுத்துப் போய் அறிக்கை கொடுத்ததிலும் இவனுக்கு முக்கிய பங்கு உண்டாம்.

ஆணவம் பிடித்தவர்கள் தலையில் சம்மட்டி அடியாக விழுந்துள்ள இத்தீர்ப்பு வாழ்க!

இத்தீர்ப்பிற்காக கடுமையாக சட்டப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இத்தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் நீர்த்துப்போகாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வழக்கை கையாண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவை தற்கொலைக்கு தூண்டிய அயோக்கியர்களையும் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். 

Saturday, January 8, 2022

வெண்மணியில் இறந்தவர் 45 பேர்

 



 மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முகநூலில் படித்தது. இப்போது அவர் அந்த பதிவை எடுத்து விட்டதால், நினைவிலிருந்து எழுதுகிறேன்.

 


வெண்மணியில் இறந்தவர்கள் 44 பேர் மட்டுமல்ல. கோபால கிருஷ்ண நாயுடு போன்ற செல்வந்தர்கள் எல்லாம் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்ட போது தலை துண்டாகி ரத்தம் கொப்பளிக்க  நீதி தேவதையும் மண்ணில் விழுந்து இறந்து போனது.

 

Friday, November 19, 2021

அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான தீர்ப்பை அளித்தது.

ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம் இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது. 

Saturday, September 25, 2021

பலவீனமானோர் படிக்காதீர் . . .

 தமிழகத்தை அதிர வைத்த ஒரு ஜாதி ஆணவக் கொலைக்கு ஒரு வழியாக தீர்ப்பு வந்துள்ளது. மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் அந்த இரக்கமற்ற வெறியர்களுக்கு வழங்கப்பட்டது சரியே என்பதை கீழே உள்ள பதிவை படித்தால் நீங்களும் உணர்வீர்கள். கொடூரத்தை மூடி மறைக்க துணை நின்ற காக்கிச்சட்டைகளும் ஆயுள் தண்டனைப் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியே. . .

இப்பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்ட தோழர் வெண்புறா சரவணனுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

உடுமலைப் பேட்டை சங்கர் வழக்கில் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தடுமாறியது போல இந்த வழக்கில் நடக்காமல் தமிழ்நாட்டு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.




சாதிவெறியர்களின் பிடியில்

சிக்கிச் சிதைந்த முருகேசன், கண்ணகி
ஆணவப் படுகொலையின் துயரக்கதை!
*
சாமிக்கண்ணு (முருகேசன் அப்பா) :

"பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து, உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவ வூட்டுக்கு (வண்ணான்குடிகாடு - குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்"

வேல்முருகன் (முருகேசன் தம்பி) :

"அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழி மறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன்.

ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்… என்னை அவுத்து விடுங்கன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யாசாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்து வுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க".

அய்யாச்சாமி (முருகேசன் சித்தப்பா - குப்பநத்தம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்) :

"நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடிகாட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம்.

மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருத பாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்ககிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேற இடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன். என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்கலன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனு போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது.

பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க. என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சு வச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்… எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி.

எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந்தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருதுபாண்டியோட தங்கச்சி.

அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்தேகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்".

சின்னப்பிள்ளை (முருகேசன் அம்மா) :

"பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி… என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்… எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரியாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத்தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனை கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப்பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண்டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்".

அய்யாச்சாமி :

"எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லிமாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித் தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு.

முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான் - இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே… வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு.

ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்கதான் (எங்க சொந்தக்காரங்கதான்) ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க".

அமராவதி (முருகேசனின் அத்தை) :

"நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்… வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல.

அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடி செத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா"…

சாமிக்கண்ணு:

"எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டு மாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே… அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு.
*
- The Times Tamil நேர்காணலில் இருந்து... 

Saturday, August 21, 2021

எம்.பிக்கள் பாராட்டும் எம்.பி

 

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு வெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் ஒன்றிய அரசின் தலையில் தட்டி சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதனை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



இப்போதாவது ஒன்றிய அரசு அடங்குமா? அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வைக்குமா?

Wednesday, February 24, 2021

அசிங்கமா போச்சா அமித்து?

 


அமித்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் நேற்று அசிங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தில் சர்வதேச சதி உள்ளது என்று போலியாக சித்தரிக்க சூழலியல் செயற்பாட்டாளர் டில்ஷா ரவி கைது செய்யப்பட்டார்.

சதி அம்பலமாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள்

அவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட டூல் கிட் தீங்கற்றது (INNOCUOUS என்ற வார்த்தை நீதிபதியால் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அதிலே வன்முறைக்கோ கலவரத்திற்கோ அழைப்பு விடுப்பது போல ஏதுமில்லை. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்கான சிறு முகாந்திரம் கூட இல்லை. ஜனவரி 26 அன்று நடைபெற்ற செங்கோட்டை நிகழ்வுகளுக்கும் அவரது அமைப்பிற்கும் சிறு துளி அளவு கூட தொடர்பில்லை என்றெல்லாம் நீதிபதி பதிவு செய்துள்ளார்.

அவர் மீது சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டிற்கும் சிறு ஆதாரம் கூட கிடையாது என்றும் சொல்லியுள்ளார்.

அவர் ஒரு தேச விரோதி, ஆன்டி இந்தியன், தூக்கில் தொங்க விட வேண்டும் என்றெல்லாம் பல "மத்யமர்கள்" கொந்தளித்தார்கள். அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

Wednesday, September 30, 2020

ஜட்ஜய்யா அது ரொம்ப தப்புங்க

 


காலையில் எழுதிய பதிவிலேயே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வருமே தவிர நீதி கிடைக்காது என்று எழுதியிருந்தேன்.

 ஆகவே இன்றைய தீர்ப்பு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ கொஞ்சமும் அளிக்கவில்லை.

 சதாசிவம், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொபட், அருண் மிஷ்ரா போன்றவர்கள்  நீதித்துறையில் நிரம்பியுள்ள  இன்றைய சூழலில், அத்வானிக்கும் உமா பாரதிக்கும் தண்டனை கொடுத்திருந்தால் அதுதான் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்திருக்கும்.

 அதே நேரம் “பாஜக தலைவர்கள்  மசூதி இடிப்பை தடுக்க முயன்றார்கள்” என்று ஜட்ஜய்யா சொல்லியதைத்தான் ஏற்க முடியவில்லை.

 இந்த தீர்ப்பிற்கே நிச்சயம் பணி ஓய்வுக்குப் பின்பு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கிற போது  தேவையில்லாத பிட்டுக்கள் அவசியமே இல்லையே!

 காலை எழுதியிருந்த பதிவைப் படித்த பின்பு ஒரு தோழர் அலைபேசியில் அழைத்து 99 % நீதித்துறை கறை படிந்ததாகி விட்டது. மிச்சம் இருக்கிற 1 % ம்தான் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார்.

 அந்த 1 % நம்பிக்கை கூட இனி அவசியமில்லை என்று இன்று சொல்லி உள்ளார்கள். அவ்வளவுதான் . . .

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்பதும் உண்மையே . . .

 

Tuesday, September 29, 2020

அயோத்தியில பாபர் மசூதி இருந்ததா?

 


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச் செயலுக்கான வழக்கில் இன்று தீர்ப்பு வரப் போகிறது.

தீர்ப்பு வரும். ஆனால் நீதி வருமா?

பாபர் மசூதி இடத்தை கோயில் கட்ட தாரை வார்த்துக் கொடுத்த தீர்ப்பில் மசூதியை இடித்தது குற்றச் செயல். கிரிமினல் நடவடிக்கை என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றச் செயல் செய்தவர்களிடமே இடத்தை ஒப்படைத்தது நீதிமன்றம்.

இன்றுள்ள சூழலில் அத்வானிக்கு எதிராக தண்டனை வரும் என்ற எதிர்பார்ப்பு சிறிதும் இல்லை. 

"அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததா என்ன?"

என்று கேட்காமலும்

"பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் கிராஃபிக் வேலை" 

என்று சொல்லாமலும் 

இருந்தாலே அதுவே பெரிய விஷயம்.

சேகர் ரெட்டி போன்ற சின்ன லெவல் களவாணிகளே தப்பிக்கையில் அத்வானி மட்டும் மாட்டிக் கொள்வாரா என்ன!


Monday, August 31, 2020

அவமதிப்பின் மதிப்பு ஒரு ரூபாய்!!!!!

 


உச்ச நீதிமன்றத்தை இரு ட்விட்டர் பதிவுகள் மூலமாக பிரஷாந்த் பூஷன் இழிவு படுத்தினார் என்று உச்ச நீதிமன்றம் பதிவு செய்த செல்ஃபி அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்து விட்டார்கள்.

பிரஷாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டார்கள்.

ஆம்,

வெறும் ஒரு ரூபாய் தான்.

ஒரு கோடி ரூபாய் என்று முதலில் புளகாங்கிதம் அடைந்த தினமலர் பின்பு சத்தமில்லாமல் பழைய செய்தியை நீக்கி விட்டது.

தீர்ப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்றமே தனது மதிப்பை வெறும் ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்துக் கொண்ட பின்பு நாம் சொல்ல என்ன இருக்கிறது!

காழ்ப்புணர்வின் காரணமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் இப்படிப்பட்ட பரிதாபமான நிலைதான் வரும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். 

Thursday, August 20, 2020

அடி ராகுலுக்கு இல்லை நட்டா!

 

இன்று காலை நாளிதழ் வர கால தாமதம் ஆனதால் நேற்றைய நாள்தழை படித்துக் கொண்டிருந்தேன். 

மோடியின் மர்ம நிதி குறித்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பற்றி கூறிய பாஜக தலைவர் நட்டா "இத்தீர்ப்பு ராகுல் காந்திக்கு பலத்த அடி" என்று சொல்லியிருந்தார்.

அந்த மனிதனிடம் சிலவற்றை பேச வேண்டியுள்ளது.

முதலில் அந்த தீர்ப்பு அபத்தமானது, உண்மைக்கு மாறானது. அதிகார துஷ்பிரயோகத்தை காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, ஆட்சியாளர்களின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப அளிக்கப்பட்ட தீர்ப்பு. 

தீர்ப்பு கண்டு கொள்ளாத உண்மைகள் பற்றி நேற்றே எழுதினேன். மீண்டும் அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

பொது அறக்கட்டளை நிதி என்றால் அதற்கு ஏன் பி.எம்.கேர்ஸ் நிதி என்று பெயர் வைத்து அரசு நிதி போலவே தோற்றம் தர வேண்டும்?

பொது அறக்கட்டளை நிதிக்கு ஏன் அரசு அடையாளங்களாக அசோகச் சின்னம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்?

நிதி வழங்குவது தனி நபர் விருப்பம் என்றால் மத்தியரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து கட்டாயமாக பிடித்து பி.எம் கேர்ஸ் நிதிக்கு அனுப்ப வேண்டும்?

ரயில்வேஸ், எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நன்கொடையை மர்ம நிதிக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்?

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டியாக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பணம் அனுப்பினால் போதும் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இவை மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டாண்டுகளுக்கான தொகையும் மர்ம நிதிக்கு மடை மாற்றப் பட்டுள்ளது. 

இத்தனைக்குப் பிறகும் பி.எம் கேர்ஸ் என்பது ஒரு தனியார் அறக்கட்டளை நிதி என்று சொல்லுமானால்

அது 

நீதிக்கு விழுந்த அடி

நேர்மைக்கு விழுந்த அடி,

வெளிப்படை நிர்வாகத்திற்கு விழுந்த அடி

உண்மைக்கு விழுந்த அடி

மக்கள் மீது விழுந்த அடி.

முன்பெல்லாம் அரசு என்ன விரும்புகிறதோ, அதை அப்படியே பரிந்துரையாக கொடுக்க கமிட்டிகள் நியமிப்பார்கள்.

இப்போதெல்லாம் அர்சு என்ன விரும்புகிறதோ அதையே . . . .

எனக்கேன் வம்பு, அவமதிப்பு வழக்குக்கு நான் தயாராக இல்லை. 

Wednesday, August 19, 2020

கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள்!!!!

 

மோடி திரட்டி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மர்ம நிதி பற்றி நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது.

அந்த நிதி ஒரு பொது அறக்கட்டளை நிதி, அதற்கு பணம் வழங்குவது தனி நபர் விருப்பம். இது ஒன்றும் அரசு நிதி கிடையாது, ஆகவே அதனை அரசு தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டியது அவசியமில்லை. தேசிய பேரிடர் நிதிக்கு பிஎம் கேர்ஸ் நிதியை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் அந்த தீர்ப்பு சொல்கிறது.

நமக்கு சில கேள்விகள் உள்ளது.

பொது அறக்கட்டளை நிதி என்றால் அதற்கு ஏன் பி.எம்.கேர்ஸ் நிதி என்று பெயர் வைத்து அரசு நிதி போலவே தோற்றம் தர வேண்டும்?

பொது அறக்கட்டளை நிதிக்கு ஏன் அரசு அடையாளங்களாக அசோகச் சின்னம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்?

நிதி வழங்குவது தனி நபர் விருப்பம் என்றால் மத்தியரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து கட்டாயமாக பிடித்து பி.எம் கேர்ஸ் நிதிக்கு அனுப்ப வேண்டும்?

ரயில்வேஸ், எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நன்கொடையை மர்ம நிதிக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்?

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டியாக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பணம் அனுப்பினால் போதும் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இந்த கேள்விகளைப் பற்றியெல்லாம் ஏன் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்காமல் கள்ள மௌனம் சாதித்தது என்று நாம் கேட்கலாம்.

ஆனால் யார் வாயைத் திறந்தாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் மூடில் உச்ச நீதிமன்றம் உள்ளதால் நமக்கேன் வம்பு? நான் எதுவும் கேட்கலைங்க!

Friday, July 24, 2020

தீர்ப்பும் நெகிழ்ந்த நினைவும்


தியாகி தோழர். வேலுச்சாமி கொலையாளிகளுக்கு 34 ஆண்டு சிறை!
******************************************
கந்துவட்டிக்காக இளம்பெண்ணைக் கடத்தி
பாலியல் வல்லுறவு செய்து வீடியோ எடுத்த
விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிக்கு 34 ஆண்டு சிறை
பள்ளிப்பாளையம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நாமக்கல், ஜூலை 23-
பள்ளிப்பாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாவட்ட இணை அமைப்பாளர் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்து வட்டிக் கும்பல் வட்டியைக் கட்ட முடியாத ஏழை இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு செய்தனர். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு ரசித்தனர். இந்த கொடூரத்தைத் தட்டி கேட்ட சிபிஎம் பள்ளிப்பாளையம் கிளைச்செயலாளர் வேலுச்சாமியை இந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு வழக்கை விசாரித்து வந்த பள்ளிப்பாளையம் நீதிமன்றம் விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகி தலசிவா உள்ளிட்ட கும்பலுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது. அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வட்டி வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த ஒருவரைக் கட்டாய பாலியல் வல்லுறவில் ஈடுபடச் செய்து தலசிவா ரசித்து இருக்கிறான்.

தொடர்ந்து அந்த அலங்கோலங்களை வீடியோவில் பதிவு செய்து, அதனை ஒரு இணையதளத்திற்கு விலைபேசி விற்றிருக்கின்றனர். இணையதளத்திலும், செல்போன்களிலும் இந்த காட்சி பரவியதை அறிந்து அந்த குடும்பத்தினர் இந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். ஆனாலும் கந்துவட்டி கும்பலின் செல்வாக்கின் காரணமாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து கந்துவட்டி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியின் சிபிஎம் கிளைச்செயலாளரான வேலுச்சாமி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு உரிய நீதி வேண்டியும், அந்த கும்பலைக் கைது செய்து சட்டப்படி தண்டிக்கவும் காவல்நிலையத்திற்குச் சென்று வழக்கு பதிவு செய்யுமாறு பெரும் முயற்சி மேற்கொண்டார். இதனால் பெரும் ஆத்திரமடைந்த அந்த கந்துவட்டி கும்பல் வேலுச்சாமிக்குத் தொடர் மிரட்டல் விடுத்து. அதோடு நிற்காமல் வெலுச்சாமியின் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டல் தொடர்பாகவும் வேலுச்சாமி மீண்டும் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார். புகார் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் வழிமறித்த தலசிவா தலைமையிலான கந்துவட்டி கும்பல் வேலுச்சாமியைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகள் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்ட வழக்கில் இன்றும் பள்ளிப்பாளையம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அந்த தீர்ப்பில் தலசிவா உள்ளிட்ட கும்பல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. குற்றத்திற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடத்தல், பாலியல் வல்லுறவு, இணையதளத்தில் பாலியல் வீடியோவை பதிவேற்றிய குற்றத்திற்காக தனித்தனியா 3 பத்தாண்டுகள் மற்றும் 3 ஆணடு மற்றும் ஒரு ஆண்டு சிறை என்ற வகையில் மொத்தம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி இன்னும் பத்தாண்டுகள் குற்றவாளிகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குக் குற்றவாளிகள் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


இத்தீர்ப்பு எட்டு வருடத்திற்கு முந்தைய நெகிழ்ந்து போன நினைவுகளை கிளறி விட்டது. 

28.12.2012 அன்று எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


அவன் சிரித்தான், நாங்கள் அழுதோம்.

நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் அமர்வில்  நெகிழ்ச்சியூட்டிய இரு நிகழ்வுகள்  பற்றி பகிர்ந்து கொள்ளவே  இப்பதிவு.

கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு  எதிராக போராடியதால் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தோழர் நாவலன்  வெட்டிக் கொல்லப்பட்டார். மாநாடு அவரது குடும்பத்தினரை கௌரவித்தது. நாவலனின்  தந்தை தோழர் ஜகன்னாதனும்  ஒரு கட்சி உறுப்பினர்தான் என்றும்  என் மகன் இப்போது கொல்லப்பட்டாலும் எங்கள் குடும்பம் எப்போதும் போல் கட்சியில் உறுதியாக நிற்போம் என அவர் கூறினார் என்று  தோழர்  ஜி.ஆர்  சொன்ன போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.

தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு சால்வை போர்த்துகையில் உடைந்து போய் கதறத் தொடங்கினார்கள். அப்போது அவையிலிருந்து “தோழர் நாவலனுக்கு வீர வணக்கம், வீண் போகாது, வீண் போகாது நீங்கள் செய்த தியாகம்  வீண் போகாது” என்ற முழக்கங்கள் இயல்பாகவே ஒலிக்கத் தொடங்கியது. அந்த முழக்கங்களைக் கேட்ட தோழர் நாவலனின் மனைவி கண்ணில் வழியும் நீரோடு கையை உயர்த்தி செங்கொடிக்கு ஜே என்ற போது அந்த முழக்கத்திலே முதிய தாயும் தந்தையும் இணைந்து கொண்ட போது எழுந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.




அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டி அராஜகக் கும்பலை எதிர்த்து போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமியின் சகோதரனும் மகனும் மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். அந்த ஐந்து வயது பச்சிளம் பாலகன்  அனைவரையும் பார்த்து புன்னகைச் சிரிப்பை உதிர்த்த போது அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள்.


மனதை இளக வைத்தது இவ்விரு நிகழ்வுகளும்.