Sunday, August 23, 2020

டெல்லி மயில்களும் மீட்கப்படுமா?



 2017 ம் வருடம் நடந்த சம்பவம் இது. 

பூனாவில் உள்ள ஆதி நாத் ஹவுசிங் சோஸைட்டி என்ற குடியிருப்பில் மயில் ஒன்று வளர்க்கப்படுவதாக அறிந்து மஹாராஷ்டிர மாநில வனத்துறை அதிகாரிகள் அந்த மயிலை விடுவித்து காட்டில் விட்டு விட்டனர்.


மயில் இந்தியாவின் தேசியப் பறவை என்பதாலும் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள், பறவைகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரனம் என்பதால் மயிலை வீட்டில் செல்லப் பறவையாக வளர்ப்பது சட்ட விரோதம் என்பதாலும் அந்த நடவடிக்கை என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பூனாவில் நடந்தது போல டெல்லியில் ஒரு பெரிய மனிதர் போஸ் கொடுத்த போட்டோவில் உள்ள மயில்களும் மீட்கப்படுமா? அவர் மீது வழக்கு பதியப் படுமா?


அதெப்படி அவர் கையிலெடுக்கும் அனைத்துமே தேவையில்லாத ஆணிகளாகவே இருக்கிறது?

பிகு: ஒரு மாறுதலுக்காக 16 வயதினிலே மயிலின் படத்தை முகப்பில் பகிர்ந்து கொண்டேன். 

2 comments:

  1. கடைசிப் பத்திதான் நகைச்சுவை!

    ReplyDelete
  2. அனிமல் பார்மின் ஆல் அனிமல்ஸ் ஆர் ஈகுவல் என்கிற வசனம் நினைவில்

    ReplyDelete