Showing posts with label யேசுதாஸ். Show all posts
Showing posts with label யேசுதாஸ். Show all posts

Thursday, April 21, 2022

அந்த திருவையாறு சம்பவம்.

 


இளையராஜா குறித்த பதிவில் திருவையாறு சம்பவம் என்று ஒன்றை குறிப்பிட்டிருந்தேன். அதென்ன சம்பவம் என்று பின்னூட்டத்திலும் நேரிலும் கேட்டவர்களுக்காக இந்த பதிவு.

புதிதாக டேப் ரிகார்டர் வாங்கி அதில் கர்னாடக இசையை வெறி பிடித்தது போல கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

எல்லா பெரிய வித்வான்களின் கச்சேரியையும் கேட்பதற்கான நல்ல வாய்ப்பு என்று திருவையாறு தியாக உற்சவத்திற்கு சில வருடங்கள் சென்றுள்ளேன்.  15, 20 நிமிட கச்சேரியில் அவ்வளவு பிரமாதன அனுபவம் கிடைக்காடு என்ற போதிலும் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சென்றுள்ளேன். அக்கா வீடு திருக்காட்டுப்பள்ளியில்  இருந்தது வசதியாக இருந்தது.

நான் சென்ற மூன்று வருடங்களிலும் தவறாமல்  பார்த்த காட்சி அது.

மணக்கால் ரங்கராஜன் என்றொரு முதியவர், அவர் மனைவி உடன்பாடுவார். மகள் வயலின், மகன் மிருதங்கம் என குடும்பமாக மேடைக்கு வருவார்கள். அவர் இளமைக்காலத்தில் எப்படி பாடினார் என்று தெரியாது. ஆனால் அந்த காலத்தில் அவர் குரலும் ஒத்துழைக்கவில்லை. முழுக்க முழுக்க சுருதி பேதம். அவர் பாட அவர் மகனும் மகளும் அவர்கள் பாட்டுக்கு ஏதோ வாசித்துக் கொண்டிருப்பார்கள். சுப்புடு இருந்தால் கிழி கிழி என்று கிழித்திருப்பார்.

அவர் பாடும் போது மடியில் நன்றாக தாளம் (அது பெரும்பாலும் தப்புத்தாளம்) போட்டு ரசிக்கும் ஒரு கும்பல், அவர் பாடி முடித்ததும் வேகமாக வேகமாக எழுந்து வெளியேறுவார்கள். அடுத்த கச்சேரியைக் கேட்டால் அவர்களை ஏதோ பேய்  வந்து பிடித்துக் கொள்ளும் என்பது போல வேகம் அவர்களின் நடையில் இருக்கும். அதே நேரம் அடுத்த கச்சேரிக்கு கூட்டம் குமியும்.

அப்படி வரும் கூட்டத்தை சபித்துக் கொண்டே, திட்டிக் கொண்டே இவர்கள் வெளியேறுவார்கள்.

அப்படி என்ன சொல்லி திட்டுவார்கள்?

“கிறிஸ்துவன் கச்சேரியை கேட்கறதுக்கு இப்படி வராங்களே என்பதோடு தஞ்சை மாவட்டத்து வசைச் சொற்களும் இணைந்தே வரும். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படி அவர்களை நோகடித்த அடுத்த கச்சேரி யாருடையது?

கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடையது.

அவர் மீதுதான் அவ்வளவு வெறுப்பு.

தியாகராஜரின் “ஷீர சாகர சயனா” என்றொரு கீர்த்தனை. பாற்கடலிலே உறங்குபவனே என்று அர்த்தம். அதிலே ஒரு இடத்தில் “தாரக ராமா” என்று அவர் உருகி பாடுவதைக் கேட்டு இதிகாச ராமன் சிலிர்த்துப் போவானா என்று தெரியாது, இந்த ராமன் சிலிர்த்துப் போவேன். அவரைத்தான் இவர்கள் கிறிஸ்துவன் என்று புறந்தள்ளிப் போவார்கள்.

ஐயப்பன் மீதும் குருவாயூரப்பன் மீதும்  அவரளவு பாடியவர்கள் கிடையாது. கிருஷ்ண லீலா தரங்கிணி என்றி இரண்டு பாகம் உள்ள காஸெட்டுகள் வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு இன்று வரை குருவாயூர் கோயிலில் அனுமதி கிடையாது.

என்னத்தான் கடவுள் பக்தியில் ஊறிப் போனவராக இருந்தாலும் அவர்களை ஜாதிய வெறி மேலோங்கியவர்கள் தங்கள் கோட்டைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.  மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிடத்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதுவே இளையராஜா அவராகவே மோடியை ஆதி சங்கரரோடோ, ஏன் அவர் கூட அவசியமில்லை, ஜயேந்திர சரஸ்வதியோடோ ஒப்பிட்டிருந்தால் அப்போது அவர்களின் சுயரூபம் தெரிந்திருக்கும்.

இளையராஜா இந்த யதார்த்ததை உணரவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.

Sunday, June 6, 2021

மூவருமில்லை, யேசுதாஸ் மற்றும் சித்ரா



வலைப்பக்கத்தில் என்ன எழுதுவது என்றொரு யோசனை.

இலக்கியமாமணி விருது குறித்து புளிச்சமாவு ஆஜான் உளறியது பற்றியா?

முகநூலை பூட்டி வைக்கும் முன்பு மாலன் திமிர்த்தனமாக அளித்த ஒரு பதில் குறித்தா?

சீமான் பற்றி படித்த தகவலா?

நாளை நிதானமாக எழுதிக் கொள்வோம். இன்றைய நாள் இசை நாளாகவே இருக்கட்டும் என்று ஒரு தோழர் அனுப்பிய இரு காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இரண்டும் ஒரே பாடல்தான். பாடியதும் அதே பாடகர்கள்தான். ஆனால் வருடங்கள் வேறு. உருவங்கள் மாறினாலும் அந்த கந்தர்வ குரலிலோ, தேன் குரலிலோ எந்த மாற்றமும் இல்லை.

நீங்களும் அவசியம் பார்த்து மகிழுங்கள்.

அன்று




இன்று



 

Sunday, January 10, 2021

மாறுதலுக்காக மலையாளத்திலிருந்து

 


இன்று என் அபிமான பாடகர் திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 81 வது பிறந்த நாள்.

அவருடைய மிகச் சிறப்பான பத்து பாடல்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஒரு மாறுதலுக்காக இன்று பகிர்ந்து கொண்டுள்ளவை அவர் மலையாளத்தில் பாடிய பாடல்கள்.

இதில் முதல் ஐந்து பாடல்கள் அவர் தேசிய விருது வென்ற பாடல்கள்.

ஒன்பதாவது பாடலை யேசுதாஸூம் இசையமைப்பாளர் ரவீந்திரன் மாஸ்டரும் பாடியிருப்பார்கள். என்னுடைய அலைபேசியின் ரிங் டோன் இப்போதைக்கு இந்த பாடல்தான்.

பத்தாவது பாடல் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுடன் யேசுதாஸ் இணைந்து பாடியது. "பரதம்" எனும் சிறந்த படத்தை "சீனு" என்று தமிழில் படுகொலை செய்திருந்தார்கள்















Sunday, October 18, 2020

எஸ்.பி.பி - நிறைவாக . . .


 

எஸ்.பி.பி க்கான இசையஞ்சலியின் நிறைவுப் பகுதி இது. 

இதற்கு முன்பாக ஒன்பது பதிவுகளில் அவர் பாடிய 151 பாடல்களின் காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவர் பாடல்களில் பதினொன்றை பாடும் நிலாவிற்கு வயலினில் அஞ்சலி

என்று என் மகன் வயலின் வாசித்ததையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இப்பதிவில் நடிகராகவும் முத்திரை பதித்த எஸ்.பி,பி அவருக்கே பாடிய பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மண்ணில் இந்த காதலன்றி



சின்ன கண்மணிக்குள்ளே



வழி விடு, வழி விடு, என் தேவி வருகிறாள்



காதலிக்கும் பெண்ணின்



வண்ணம் கொண்ட வெண்ணிலவே



மிதுனம் என்ற தெலுங்குத் திரைப்பாடல் (என்னைப் போன்ற உணவுப் பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)



நாற்பதாயிரம் பாடல்களில் வெறும் 158 பாடல்கள்தானா என்று எனக்குள்ளே ஒரு கேள்வி வந்தது. பதிலும் உடனே மனதில் தோன்றியது. 

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த மல்ஹோத்ரா குழு அறிக்கையை அமலாக்கக்கூடாது என்று 1994 ல் கையெழுத்து நடத்துகிறோம்.  நாடெங்கிலுமாக ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள் கையெழுத்திடுகின்றனர். 25.08.1994 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி  அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அப்போது நரசிம்மராவ் "100 கோடி மக்கட்தொகையில் ஐம்பத்தி ஐந்து லட்சமா?" என்று நக்கலாக கேட்கிறார். 

அன்று ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்களோடு துவங்கிய இயக்கம்தான் இன்று வரை எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வருகிறது. இத்தனை பாடல்களையும் நான் வேகமாக தரவிறக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொரு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆப்டிகல் பைபர் இணைப்பே காரணம்.

ஆக இந்த 158 பாடல்கள் என்பது அவரது பாடல்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு.  அதன் ருசி அதிகம்தான்.

மற்ற கலைஞர்களை விட ஏன் எஸ்.பி.பி மீது மக்கள் அதிகமான நேசத்தைக் காண்பித்தார்கள். தங்கள் இல்லத்து இழப்பாக ஏன் இன்னும் வருந்துகிறார்கள்?

குரலினிமைக்கா?

பாடும் திறனுக்கா?

அவர் பாடல்கள் அன்றாட வாழ்வின் அங்கமான காரணத்தாலா?

இவை அனைத்தும் உண்மை. இதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதை சொல்வதற்கு முன்பாக இன்னொரு காணொளியையும் பார்த்து விடுங்கள்.





இரண்டு இசை விற்பன்னர்களும் கொஞ்சம் கூட அகந்தை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கு இருக்கிறதே, இதிலே கொஞ்சம் கூட நடிப்பில்லை. உண்மையான உணர்வன்றி வேறெதுவும் இல்லை.

தன் கலையை, சக கலைஞர்களை, மனிதர்களை நேசிக்கிற ஒரு முழுமையான மனிதராக எஸ்.பி.பி வாழ்ந்தார். 

அவர் நினைவு என்றும் நம் மனதில் வாழும். 

.... இசையஞ்சலி நிறைவுற்றது




Friday, January 11, 2019

பத்து + இரண்டு

என் அபிமான கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே பதிவிட நினைத்த பதிவிது.



அவரது மிகவும் பிரபலமான பாடல்களைத் தவிர்த்து வேறு சில பாடல்களின் இணைப்பை பகிர்ந்து கொண்டுள்ளேன்











பத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனாலும் இன்னும் இரண்டு



Thursday, January 10, 2019

கலைவாணியே, உனைத்தானே



எனக்கு எப்பவும் பிடித்தமான திரு கே.ஜே.யேசுதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் மறக்க முடியாத பாடலான கலைவாணியே பாடலை என் மகன் வயலினில் வாசித்ததின் 


https://www.youtube.com/watch?v=-PdHt1XiJrc

பார்த்து கேட்டு ரசியுங்கள் . . .

Saturday, August 9, 2014

கொட்டும் மழையில் நானும் யேசுதாசும்

திருவண்ணாமலையில் சங்க செயற்குழுக் கூட்டம் முடிந்து வேலூர் திரும்பி  கோட்ட அலுவலக வாசலில் இரவு 9.30 மணிக்கு இறங்கும் போது சரியாக மழையும் பிடித்துக் கொண்டது.

இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான மழை. மற்றவர்கள் ஆட்டோவில் போய் விட்டார்கள்.

செல் பேசியில் இருந்த திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் சில பாடல்களைக் கேட்ட படி மழையைப் பார்த்து ரசித்து குளிரை அனுபவித்தது சுகமாக இருந்தது. அந்த இனிய பாடல்களை நீங்களும் ரசியுங்கள்.

 






நீங்களும் இவற்றை கேட்டு ரசியுங்கள். எனக்கு மழையும் இனித்தது. பாடலகளும் இனித்தது. மழை கொஞ்சம் குறைந்ததும் நனைந்து கொண்டே வீடு திரும்பினேன்.

இயற்கை மழையை விட நான் இன்று அதிகம் ரசித்தது யேசுதாஸின் இசை மழையைத்தான்.