கிஷோர் அவர்கள் எல்லா கட்சிகளுக்கும் அரசியல்ரீதியிலான பணிசெய்து தரக்கூடிய ஒரு intellectual consultant.
அதாவது அரசியல் தரகர் என்பதை எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார் பாருங்கள். தரகு வேலை செய்பவன் எல்லாம் அறிவுஜீவி ஆலோசகராம்.
இதை சொன்னவர் யார் தெரியுமா?
நம்ம ஆஜானோட பிரதம சிஷ்யை.
கடைந்தெடுத்த ஒரு பொறுக்கியோடு பிரச்சினை வந்த பிறகும் அவனுக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக நாகரீகமான அடைமொழி கொடுக்கிற அவர் என்ன இருந்தாலும் ஆஜானுடைய பிரதம சிஷ்யை அல்லவா! அதனால்தான் ஆஜான் போல வளவளவென்று எழுதிக் கொண்டே போகிறார்.
அறம் தனித்து நிற்பதாலேயே பேராற்றல் கொள்ளுமென வெண்முரசில் ஒரு சொல் உண்டு. இன்று நானும் என் குழுவும் அவ்வாறு தனித்து அறத்துடன் நிற்கிறோம்.
என்று கடைசியில் முடிக்கிறார்.
இங்கேதான் ஆஜானை கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
ஒரு அரசியல் தரகரை "அறிவுஜீவி ஆலோசகர்" என்று அழைக்கத்தான் உங்களுக்கு சீடர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளீர்களா?
இதுதான் உங்கள் பாணி அறமா?
பதில் சொல்லுங்கள் ஜெமோ. ஐம்பது பக்கத்துக்கு எழுதினாலும் படிக்கிறோம்.
இந்த சர்ச்சை பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். பாஜக வழங்கும் காசுக்கு ஆசைப்பட்டு அடுத்தவர்களை அபாண்டமாக அவதூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறுதியில் அசிங்கப் படுவார்கள்.
கூலிக்கு மாரடிக்கும் மாரிதாசுக்கும் இதே கதி விரைவில் நிகழும்.
No comments:
Post a Comment