Showing posts with label பாஸிசம். Show all posts
Showing posts with label பாஸிசம். Show all posts

Sunday, November 3, 2024

பாசிஸ எதிர்ப்பைக் கண்டு அஞ்சும் பாசிஸ மோடி அரசு

 



பொலிவாரிய எழுச்சியின் மண்ணான வெனிசுலாவில் அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்பாடு செய்த "பாசிஸ எதிர்ப்புக் கருத்தரங்க" நிகழ்வில் பங்கேற்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் வி.சிவதாஸன் (கேரளா)  அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ள வெனிசுலா செல்ல மோடி அரசு மறுத்து விட்டது.

பாசிஸத்திற்கு எதிரான நிகழ்வில் இந்தியர் ஒருவரின் குரல் ஒலிக்கக் கூடாது என்று மறுத்துள்ளது பாசிஸ மோடி அரசு.

பாசிஸத்திற்கு எதிராக இந்தியாவில்தான் குரல் கொடுக்க வேண்டும்.

Monday, July 5, 2021

ஒன்றிய அரசு செய்த கொலை . . .

 


பீமா கொரேகான் வழக்கு ஒரு பொய் வழக்கு. இந்த வழக்கின் அடிப்படையாகச் சொல்லப்பட்ட ஒரு மின்னஞ்சல் அரசு பயங்கரவாத அமைப்புக்கள் செய்தது என்பது நிரூபணமாகி விட்டது.

செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக போடப்பட்ட பொய் வழக்கு என்பதால்தான் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல் ஏமாற்றி வருகிறது.

திரு ஸ்டான் சாமி, உடல் நலக்குறைவால் இறக்கவில்லை. அவர் இறக்கும் சூழலை உருவாக்கியதால் இது ஒன்றிய அரசு செய்த படுகொலை என்று சொன்னால் அது பொருத்தமாகவே இருக்கும்.

மோடியின் ஆட்சி இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறதோ?