Showing posts with label விஸ்வரூபம். Show all posts
Showing posts with label விஸ்வரூபம். Show all posts

Saturday, February 2, 2013

விஸ்வரூபம் தீர்வு - யாருக்கு மிகப் பெரிய இழப்பு?

விஸ்வரூபம் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து
விட்டது.

இதனால் யாருக்கு மிகப் பெரிய இழப்பு?

ஏழு காட்சிகளை வெட்டியதால் கமலஹாசனுக்கா?

இல்லை இஸ்லாமிய அமைப்புக்களுக்கா?

தான் நினைத்தது நடக்காமல் போனதால் ஜெ விற்கா?

குழம்பிய குட்டையை மேலும் குழப்ப நினைத்த கலைஞருக்கா?

இஸ்லாமியர்கள் மீது துவேஷத்தை உருவாக்க நினைத்த
பரிவாரப் படைக்கா?

இல்லை, இல்லை, இவர்கள் யாருக்குமே இல்லை.

கடந்த பத்து நாட்களாக விஸ்வரூபம் பிரச்சினையை
முன் வைத்து ப்ளாக்கில் எழுதி வந்த பதிவர்களுக்கும்
முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு வந்தவர்களுக்கும்தான்.

அடுத்து இது போல சூடான பிரச்சினை எப்போது வருமோ?

பின் குறிப்பு : ஹி ஹி ; நான் கூட விஸ்வரூபம் பிரச்சினை
பற்றி மூன்று பதிவு எழுதினேன்.

வேறு மேட்டர் இல்லாததால் இதையே பதிவாக்கி விட்டேன்

Thursday, January 31, 2013

ஜெ வைப் பேச வைத்த கலைஞர் ஒரு கில்லாடிதான்



விஸ்வரூபம் பிரச்சினையில் வாய் திறக்காது செயலில்
மட்டும் டார்ச்சர் செய்து வந்திருந்த ஜெயலலிதாவை
பேச வைத்த கில்லாடி கலைஞர்.

விக்ரம் படத்தின் போது எம்.ஜி.ஆருக்கு ஜெ எழுதிய
கடிதத்தை வெளியிட்டு ஏதோ கமலஹாசனுக்கும்
ஜெயலலிதாவிற்கும் பூர்வ ஜென்ம பகை உள்ளது
என்ற தோற்றத்தை உருவாக்கிய அவரது சாமர்த்தியம்
கண்டு உண்மையிலேயே அசந்து போனேன்.

ஆனால் இத்தனை சாதுர்யத்தையும் தமிழக மக்கள்
நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும்.

சரி இந்த கடிதம் எப்படி கிடைத்தது?

எம்.நடராஜன் வீட்டில் சோதனை செய்த போது 
ஜெ வின் ராஜினாமா கடிதம் கிடைத்து அதை
சபாநாயகர் தமிழ்க்குடிமகன் ஏற்றுக் கொண்டு
பின்பு அது சட்டசபைக் கலவரம் வரை பிரச்சினை
ஆனதே, அப்போது கிடைத்த பொக்கிஷமா இது?

அதை இத்தனை நாள் பத்திரமாய் வைத்து இன்று
தக்க சமயத்தில் வெளியிட்டது உண்மையிலேயே
சாமர்த்தியம்தான்.

இக்கடிதம் ஜெ வின் ஆணவத்தை  நன்றாகவே
அம்பலப் படுத்தியிருக்கிறது. தமிழக மக்கள்
மனதில் அவரை மேலும் அசிங்கப்படுத்தியுள்ளது.

இன்று அவர் கொடுத்துள்ள விளக்கம் எல்லாம்
சிறு பிள்ளைகளால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பற்றி இப்போதுதான்
கவலை வந்துள்ளது. விஸ்வரூப கமலை விட
மிகச் சிறந்த நடிப்பு. ஆனால் இதை ரசிக்கத்தான்
தமிழக மக்கள் தயாராக இல்லை.

பின் குறிப்பு : 1980 ம் வருட சம்பவம் என்று ஜெ 
சொல்கிறார். ஆனால் விக்ரம் படம் வெளி வந்தது
1986 ம் வருடத்தில்தான். எனக்கு எப்படி நினைவில்
உள்ளது என்றால் அந்த வருடம்தான் நான் எல்.ஐ.சி யில்
பணியில் சேர்ந்தேன். முதல் மாத சம்பளம் வாங்கி
பார்த்த படம் விக்ரம்
 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை - அம்மா, அம்மாதான் பிரச்சினை

உயர்நீதி மன்றம் தடை நீக்கிய பின்பும்
மேல் முறையீடு செய்ய வேண்டும்,
காலை பத்து முப்பது வரை தீர்ப்பை
நிறுத்தி வையுங்கள் என்று அரசுத்
தரப்பு கோரியதிலிருந்து தெளிவாகத்
தெரிகிறது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
பின்னணியில் இருப்பது அம்மா, அம்மா,
அம்மா மட்டுமே. அம்மாவின் சூட்சுமக்
கயிற்றுக்கு ஆடிய பொம்மைகளை இனி
யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்.

வில்லைக் கையிலேந்தி தாக்குதலைத்
தொடுத்தவரை விட்டு விட்டு வீணாய்ப் 
போன அம்புகள் மீது இனியும் ஏன்
கோபம்?