Thursday, August 31, 2017

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மோடி

ரிசர்வ் வங்கி அறிக்கை மிகத் தெளிவாக செல்லா நோட்டு விவகாரத்தால் மோடிதான் செல்லா நோட்டாகி விட்டார் என்பதை தோலுரித்து விட்டது.


மோடியின் வீர வசனங்கள் மேலே உள்ளது.

மோடி தன்னை உயிரோடு கொளுத்திக் கொள்ள வேண்டாம்.
தூக்கில் தொங்க வேண்டாம்,
உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்
எனது நடவடிக்கை தோற்றுப் போய் விட்டது என்ற உண்மையை
ஒப்புக் கொள்ளக் கூட வேண்டாம்.

இந்தியாவில் இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் ஊர், சாரி,
உலகம் சுற்றக் கிளம்பி விடவும்.

இந்தியாவில் இருந்து கொண்டு புதிய புதிய இந்தியாக்களை பிரசவம்
செய்து மக்களை சவமாக்குவதற்குப் பதிலாக 
ஜாலியாக செல்பி எடுத்துக் கொண்டு 
நீங்களும் நிம்மதியாக இருங்கள்,
எங்க்ளையும் நிம்மதியாய் இருக்க விடுங்கள்
 

Wednesday, August 30, 2017

இது, இதுதான் இந்தியா, புரியுதா சங்கிகளே!


இறைவனிடம் கையேந்துங்கள்!!!

இறை நம்பிக்கை இல்லாத போதும் நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சில வாரங்களுக்கு முன்பாக கீழே உள்ள காணொளி வாட்ஸப்பில் வந்தது. விட்டல்தாஸ் என்பவர் தனது பஜனையில் இப்பாடலைப் பாடியதாக காணொளியோடு வந்த செய்தி சொன்னது. 

நிஜமாகவே அது பஜனையில் பாடப்பட்டதா அல்லது நாகூர் ஹனீபா அவர்களின் பாடலை வைத்து மிக்ஸிங் செய்யப்பட்டதா என்று ஒரு சந்தேகம் கூட வந்தது. எனக்கு அனுப்பியவருக்கும் அதே சந்தேகம் இருந்தது. 

கொஞ்சம் மெனக்கெட்டு இணையத்தில் தேடிய போது திரு விட்டல்தாஸ் அவர்கள் பஜனையில் பாடிய பாடல்தான் என்பது தெரிய வந்தது. 

இஸ்லாமிய மேடைகளில் பிரபலமான ஒரு பாடலை ஒரு இந்து மத வழிபாட்டு மேடையில் பாடுவது ஒரு சிறப்பு. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அதை ரசித்து கேட்பது என்பது இன்னும் சிறப்பு. 

திரு விட்டல்தாஸ் அவர்களின் குரலும் திரு நாகூர் ஹனிபா அவர்களின் குரல் போலவே கம்பீரமாய் ஒலித்தது என்பதையும் சொல்லிட வேண்டும். ( முதலில் நான் இதை எழுதவில்லை என்பதையும் அனானி ஒருவர் சுட்டிக்காட்டிய பின்பு இணைத்தேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)

இதுதான் இந்தியாவின் சிறப்பு.
இதுதான் இந்தியா உயர்த்திப் பிடிக்கும் மத நல்லிணக்கம்.
ரம்ஜான் பிரியாணியும் தீபாவளி இனிப்புக்களும் பறிமாறப் படுவதும்
இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில்தான். 

இதனைத்தான் வினாயகர் சிலை ஊர்வலம் போன்றவற்றின் மூலமாக சிதைக்கப்பார்க்கிறார்கள் காவிகள். 
Tuesday, August 29, 2017

சாமியாரைக் கூட ஏமாத்திட்டீங்களே மோடி?
பாலியல் வன் கொடுமை வழக்கை வாபஸ் வாங்கி விடுகிறோம். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜக எங்களுக்கு உறுதி மொழி கொடுத்ததால்தான் அவர்களை ஆதரித்தோம். ஆனால் அப்படி செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள் என்று காமக் கொடூர, அழுவாச்சி சாமியாரின் மகள் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்குள் நுழையும் முன் உங்கள் மனைவியை ஏமாற்றினீர்கள்.

ஆரம்ப காலத்தில் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்த கேசுபாய் படேல் போன்றவர்களை ஏமாற்றினீர்கள் 

அரசியலில் உங்களை முன்னேற்றிய அத்வானி போன்றவர்களை ஏமாற்றினீர்கள்

வாக்களித்த மக்களை ஏமாற்றினீர்கள்.

நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கூட்டாளியாக இருந்த சாமியாரை ஏமாற்றியது இப்போது தெரிகிறது.

உங்களுக்காவது நீங்கள் உண்மையாக இருப்பீர்களா?

அமாவாசையை விட மோசமாக இருக்கிறீர்களே மோடி????

Monday, August 28, 2017

மொட்டைக் கடிதத்தினால் ஒளிந்து கொண்டவர்முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் பா.கார்த்தியாயணி உள்ளிட்ட சிலர் பாஜகவில் இணைந்தார்கள் என்று ஒரு செய்தியைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டிற்காக ஒரு வரவேற்புக்குழு அமைத்திருந்தோம்.

அப்போதுதான் வேலூர் நகரத்தின் மேயராக திருமதி கார்த்தியாயணி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  வரவேற்புக்குழுத் தலைவராக நகரின் முதல் பெண்மணி இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். வேறு சில கோட்டங்களில் மேயர்கள் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொண்டு அவரோடு பேசினோம்.

அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். எல்.ஐ.சி ஊழியர்கள் மத்தியில் வருவது தனக்கு ஒரு அங்கீகாரம் என்றும் பெருமையாகச் சொன்னார்.  வழக்கமாக வரவேற்புரையை மாநாட்டில் அச்சிட்டுக் கொடுப்போம். அச்சிடுவதற்கு முன்பு தயார் செய்து கொண்டு வந்து அவரிடம் காண்பிக்கிறோம் என்றோம்.

மாநாட்டிற்கு சில தினங்கள் முன்பு அழைப்பிதழோடு அவரைப் பார்க்கச் சென்ற போது அவரது அணுகுமுறையில் மிகுந்த மாற்றம் இருந்தது.

அவர் ஆற்ற வேண்டிய வரவேற்புரையைக் காண்பித்த போது அதிலே அவ்வளவு சுவாரஸ்யம்  அவரிடத்தில் இல்லை.  நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அதற்கு பிறகு அச்சிடுங்கள் என்றார். அப்போதே தெரிந்து விட்டது, இவர் மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்று.

அவரிடமிருந்து தொலைபேசியும் வரவில்லை. நாங்கள் அழைத்த போதும் எடுக்கவில்லை. அதற்காக கவலைப்படாமல் மாநாட்டுப் பணிகள் தொடர்ந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி வரவேற்புரை வழங்கினார். மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்தது.

மேயருக்கு நெருக்கமானவர்கள் மூலமாக பிறகு விசாரித்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. “அது ஒரு கம்யூனிஸ்டு சங்கம். அந்த மாநாட்டில் கலந்து கொண்டால் உங்கள் மேயர் பதவியை அம்மா பறித்து விடுவார்” என்று அவரை மிரட்டி ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் இவர் பயந்து போய் மாநாட்டுக்கு வராமல் ஒதுங்கி விட்டார்.

அந்த மொட்டைக் கடிதத்தை அனுப்பிய நல்லவர் யார் என்பதை கண்டு பிடித்து விட்டோம் என்பது வேறு விஷயம்.சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய் விடும் என்பது போன்றதொரு நம்பிக்கை. பாவம் !!!!

அனைத்து அம்சங்களிலும் மிகச் சிறப்பான மாநாடு அது. கீழே உள்ள புகைப்படங்கள் அதை உணர்த்தும். அதில் கலந்து கொள்ளாததால் பாவம் மேயருக்குத்தான் இழப்பு. 
மொட்டைக்கடிதத்திற்கு பயந்து ஒப்புக்கொண்ட பொறுப்பிலிருந்து ஒளிந்து கொண்டவர் இப்போது பதவிக்காக பாஜக பக்கம் போயிருக்கிறார். ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனக்கு சரியான அங்கீகாரம் அதிமுகவில் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர் போய்ச் சேர்ந்துள்ள இடத்தில் அவருக்கு என்ன அங்கீகாரம் கிடைக்கப் போகிறதோ:?


உடைக்கப்பட்ட பிள்ளையார் . .ஒளிந்து கொண்ட எச்.ராசா கூட்டம்ஒடுக்கப்பட்ட மக்களை தங்களின் கோயில்களில் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 
நாங்களே தனியாக வழிபட்டுக் கொள்கிறோம் என்று தனியாக ஒரு கோயில் என்று அமைத்தால் அதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

முன்பு விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்ததுதான் இப்போது காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நல்லூரிலும் நடந்துள்ளது.

வினாயகர் சதுர்த்தி என்று போதையில் சாலையில் வேகமாகப் போன இரு வாலிபர்களை "பொறுமையாக போங்க தம்பிங்களா" என்று சொன்ன காரணத்துக்காக 

பாமக கட்சிக்காரர்கள் கூட்டமாக திரண்டு வந்து அந்த காலனி மக்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதைத்தவிர

தலித் மக்கள் அங்கே நிறுவியிருந்த

வினாயகர் சிலையையும் 

சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கம் போல விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோரே களம் இறங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இந்துக்கள்தானே!
உடைக்கப்பட்டது இந்துக் கடவுள் வினாயகர்தானே!

எச்.ராசா, தமிழிசை வகையறாக்கள் அமைதியாக இருப்பது ஏனோ?
ஊர் ஊராய் போய் வினாயகர் விழாவில் கலந்து கொள்ளும் வீரத்துறவி கண்ணில் இது படவில்லையா?

அவர்கள் சர்வ அங்கங்களையும் மூடிக் கொண்டு எப்போதும் போல அமைதியாய்த்தான் இருப்ப்பார்கள்.

ஏனென்றால் தாக்கப்பட்டவர்கள் தலித்கள்.
பாமக வோடு கூட்டணி வைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

Sunday, August 27, 2017

பார்க்கத்தான் . . .சாப்பிட அல்ல . . .

கீழே உள்ளவை வாட்ஸப்பில் வந்த படங்கள்.மெல்லிய வெள்ளி ஜரிகை போர்த்தப்பட்ட உணவுப் பண்டங்களோ என்று நினைத்தால் நிஜமாகவே வெள்ளியில் செய்யப்பட்டதுதானாம்.

அவற்றை நீங்கள் பார்க்க மட்டும்தான் முடியும்.
சாப்பிட முடியாது.

மோடி துடைத்துப் போட்டு . . . .மோடி ஒன்றும் பாஜகவிற்கான பிரதமர் அல்ல, இந்தியாவிற்கான பிரதமர் என்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் நேற்று காரி உமிழ்ந்திருக்கிறது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப் பட மாட்டார். கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் இல்லாத மனிதர்கள்தானே மோடியும் அவரது கூட்டமும்!!!

வழக்கம் போல இதையும் துடைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல போய்க் கொண்டே இருப்பார்கள். 

நீதிமன்றம் சொன்னதில் ஒரு மாற்றுக் கருத்து எனக்கிருக்கிறது.

மோடி பாஜகவிற்கான பிரதமர் மட்டுமல்ல

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள்
ஊரை ஏமாற்றும் எல்லாவிதமான சாமியார்களுக்குமான

பிரதமரும் கூட . . . .

Saturday, August 26, 2017

இந்தியக் கலாச்சாரம் நாசமாய் போகட்டும்

சாமியார் என்ற போர்வையில் பாலியல் வன் கொடுமை செய்வதும் அப்படிப் பட்ட காமக் கொடூரக் குற்றவாளிகளை பாதுகாப்பதும்தான் இந்தியக் கலாச்சாரம் என்றால் அந்த  நாற்றமடிக்கும் இந்தியக் கலாச்சாரம் நாசமாய் போகட்டும்.

இந்த கேடு கெட்ட கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அயோக்கியர்கள்தான் தேச பக்தர்கள் என்றால் தேசத் துரோகியாக இருப்பதே பெருமை.


Friday, August 25, 2017

வன் கொடுமை சாமியாரும் வன்முறை சீடர்களும்ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களும் டெல்லியும் வன்முறையின் பிடியில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

பதினேழு பேர் இது வரை இறந்து போனதாக கிடைத்துள்ள தகவல் வந்துள்ளது. 

கலவரங்கள் குறித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றம், தானே விசாரிக்கப் போகிறது.

துணை ராணுவப்படைகள் நிலைமையை கட்டுப்படுத்த சென்று கொண்டிருக்கின்றன,

எதற்காக? எல்லாம் எதற்காக?

பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட குர்மீத்ராம் ரஹீம் சிங் என்ற சாமியார் (போலிச்சாமியார் என்ற அடைமொழி அவசியமில்லை என்று நினைக்கிறேன். சாமியார் என்றாலே போலி என்பதுதான் யதார்த்தம்) குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. 

தண்டனை என்ன என்பதை திங்கள் கிழமை அன்று அறிவிக்கப் போகிறார்கள். குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டி இருக்குமாம்.

தீர்ப்பின் விளைவாக அவரது சீடர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்த சாமியார் குற்றவாளி என்றால் "ஏண்டா என்னை ஏமாற்றினாய்?" என்று அவரை கொளுத்தினால்கூட அது நியாயம் என்று சொல்லலாம். 

ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரயில்களையும் பேருந்துகளையும் கடைகளையும் எரிப்பது என்ன நியாயம்?

"ஒழுங்காக தண்டனையை குறைத்திடு"

என்று நீதிமன்றத்தை மிரட்டுகிறார்களா அந்த சாமியாரின் சீடர்கள்?

வன் கொடுமையில் ஈடுபடுகிற அயோக்கியனாக சாமியார் இருக்கையில் அவனது சீடர்கள் மட்டுமென்ன உத்தமர்களாகவா இருக்கப் போகிறார்களா என்ன? 

எல்லா சாமியார்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதுதான் காலம் கற்றுத் தருகிற பாடம். 

அந்த பாடத்தை மக்கள் சரியாக படிக்காவிட்டால்

ஏமாற்றுப் பேர்வழிகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள்.

பின் குறிப்பு

இந்த சாமியாரை பாராட்டுகிறார் ஒருவர். 
அதிலிருந்தே அவரது தரமும் எளிதில் விளங்கும்


Thursday, August 24, 2017

இன்னிக்கே இப்டின்னா?

சற்று முன்

அனேகமாக நடமாட்டங்கள் எல்லாம் அடங்கி பகுதியே அமைதியாக இருந்தது. மும்முரமாக புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென பெரும் ஓசை. ஓவராய் விசில் சத்தம். அஜித்தின் படத்தைத்தான் தெருவில் போடுகிறார்களோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவிற்கு ஆரவாரம். நாய்களின் குரைப்பும் இணைந்து கொள்ள சில நிமிடங்கள் முன்பிருந்த அமைதி அப்படியே காணாமல் போயிருந்தது.

என்னவென்று தெரிந்து கொள்ள வாசலுக்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு ஒரு ஐம்பதடி தள்ளி  போடப்பட்டிருந்த பந்தலில் வினாயகர் சிலையை இறக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே இருந்த பத்து பதினைந்து இளைஞர்களும் டாஸ்மாக்கின் ஆக்கிரமிப்பில் இருந்தார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது.

இன்றே இப்படி என்றால்

சிலைகளை கரைக்கும் நாளன்று எப்படி இருக்கும்?
போதாக்குறைக்கு வீர(!)த்துறவியார் வேறு வரப் போகிறாராம்.

சாராய போதையை ஊட்டி மத போதையை வளர்க்கிறார்கள்.
கவலையாக இருக்கிறது.
தடம் புரண்டு செல்லும் இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து.

 

கலெக்டர் எச்சரிக்கை காற்றோடு போகுமா?


கீழே உள்ள செய்தி இரு வாரங்களுக்கு முன்பு வெளியானது.வேலூர் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் பிள்ளையார் சிலையை கரைக்கலாம் என்ற பட்டியலோடு களி மண்ணோ, கிழங்கோ இல்லாமல்  இதர பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட, இரசாயண வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை அங்கே கரைக்க அனுமதிக்க முடியாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

நாளைய பண்டிகைக்காக, இன்று பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் குட்டி யானை வண்டிகளில் "ஜெய் காளி, ஓம் காளி" முழக்கத்தோடு சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அநேகமாக எல்லா பிள்ளையார்களும் பளிச்சென்று ரசாயன வண்ணம் பூசப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை சிலை வைக்கும் அமைப்புக்கள் மதிக்கவில்லை. ஆட்சியராவது சிலை கரைக்கும் இடங்களில் ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தடுப்பாரா?

அல்லது 

அவரது எச்சரிக்கையை அவரே காற்றில் பறக்க விட்டு விடுவாரா?
 

Wednesday, August 23, 2017

மோடி போலவே அந்த லேடியும் . . . .
மோடியைப் போலவே, சொல்லப்போனால் சில சமயம் மோடியை விட அதிகமே ஸ்டண்ட் அடிப்பவர், மோடியால் புதுவை துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்ட  முன்னாள் ஊழல் எதிர்ப்புப் போராளி (அப்படி வேடம் போட்ட) கிரண் பேடி அவர்கள்.

அவர்கள் நள்ளிரவில் நகர் உலா போன காணொளிக் காட்சி இங்கே.நகர் உலா போவதை புகைப்படம் எடுக்கவும் காணொளி எடுக்கவும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அம்மணி ராஜ் நிவாஸை விட்டு புறப்பட்டுள்ளார்.

சரியாக புகைப்படம் எடுக்கிறார்களா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார்.

ஆனால் பாவம் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது மட்டுமல்ல

அவர் போட்ட ஹெல்மெட் உத்தரவை அவரே பின்பற்றவில்லை என்ற விமர்சனம்தான் வந்தது.

விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு விஷயம் ஏனோ புரியவில்லை.

ஹெல்மெட் போட்டால் புகைப்படத்தில் முகம் எப்படி நன்றாகத் தெரியும்?
புகைப்படத்தில் முகம் தெரியாவிட்டால் பின் என்ன எழவிற்கு நகர் உலா போவது?
 

Tuesday, August 22, 2017

கார்ட்டூனிஸ்டுகள் கலாய்க்கிறார்கள் . . .

ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும்  ஒட்டிக் கொண்டதையும் அவர்கள் ஒட்டிக் கொள்ள கோந்தாய் செயல்பட்ட மோடி வகையறாக்களையும் கார்ட்டூனிஸ்டுகள் பலர் சூப்பராக கலாய்த்துள்ளார்.

தி ஹிந்து நாளிதழின் திரு சுரேந்திராவின் கார்ட்டூன் கீழேகீழே  உள்ளவை எல்லாம் திரு சுரேந்திரா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள இதர கார்ட்டூனிஸ்டுகளின் படைப்புக்கள்.
கீழே உள்ள  படம் தோழர் வெண்புறா சரவணனின் கைவண்ணம்


Monday, August 21, 2017

எரித்திருந்தால் ஆன்மா ??????

 
 
தமிழகத்தில் நடப்பது எல்லாம் அப்பட்டமான சந்தர்ப்பவாதம், கொள்ளையடிப்பதற்கும் கொள்ளையடித்ததை காப்பாற்றுவதற்குமான ஏற்பாடு, அடிமைகளுக்கு எப்போதுமே ஒரு  பாஸ் தேவை. அந்த பாஸ் இப்போது லேடிக்கு பதிலாக மோடி. அவ்வளவுதான்.
 
இவர்களின் இந்த நாடகங்களில் மிகவும் எரிச்சலூட்டுகிற விஷயமே இந்த "ஆன்மா" மேட்டர்தான்.
 
பிரிஞ்சாலும் ஆன்மா வழிகாட்டுதாம்.
சண்டை போட்டாலும் ஆன்மா வழிகாட்டுதாம்.
மறுபடியும் கூடி குலாவவும் ஆன்மா வழிகாட்டுதாம்.
 
அந்தம்மாவின் சடலத்தை புதைத்ததற்கு பதிலாக ஒரு வேளை எரித்திருந்தால் "ஆன்மா"  இவர்களுக்கு வழி காட்டாமல் இருந்திருக்குமோ?
 
யார் நீ படத்தில் வருவது போல "நானே வருவேன்" 
 
ஆமாம்.
 
இந்த சினிமாக்களில் "ஆவி" என்று காண்பிக்கிறார்களே,
அதற்கு இன்னொரு பெயர்தானே" ஆன்மா" ?

புதிய பாகுபலி - யாரென்று தெரிகிறதா?
கீழே உள்ள வீடியோவை முதலில் பார்த்து விடுங்கள். வாட்ஸப்பில் வந்தது.
ராஜ மவுலி பார்த்தால் கண்டிப்பாக நொந்து போவார்.

யார் இந்த புதிய பாகுபலி என்று வீடியோவில் தெரிந்த பேனரை வைத்து இணையத்தில்  கொஞ்சம்  தேடிப்பார்த்தேன்.

கோவையில் ரியல் எஸ்டேட் நடத்துகிறவராம். பெயரை அறிய முடியவில்லை.

இவ்வளவு வெளிப்படையாக செய்தால் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்காதே என்று மீண்டும் வீடியோவைப் பார்த்தால் கையில் உள்ள தாமரைக்கனி ஸ்டைல் மோதிரத்தில் பதில் கிடைத்தது.
இது போன்ற நபர்களுக்காகத்தான் இணைப்பே!!!!!

Sunday, August 20, 2017

நேற்று காலை தேநீர் . . . .மேலே உள்ள படத்தில் இருப்பது 

புதுவையில் உள்ள 

ஹோட்டல் "லீ ராயல் பார்க்"

நேற்று  காலை 

நான் தேநீர் சாப்பிட்டது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இந்த ஹோட்டல்
.
 லீ ராயல் பார்க்கில் அல்ல..
.
.
.
.
.
.
.
.

அதற்கு எதிரில் இருந்த . . . .

லிங்கம் டீக்கடையில்

ஜி.எஸ்.டி இல்லாமல் பத்தே   ரூபாயில்

Friday, August 18, 2017

மோடி வகையறா - வாயில் வருவதெல்லாம் ??????

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவின் தமிழாக்கம் கீழே

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி செலுத்துபவர்கள்
எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தது தெரியுமா?

நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி சொன்னது 91 லட்சம்

பொருளாதார ஆலோசாகர் அரவிந்த் சுப்ரமணியன் சொன்னது 5 லட்சம் 

அரசு  அறிவிப்பு 32 லட்சம்

செங்கோட்டை கொத்தளத்தில் நின்று மோடி சொன்னது 56 லட்சம் 

(அவரோட பனியன் சைஸ் 56 இஞ்ச்)

ஒரு பொய்யைக் கூட ஒரே மாதிரியா சொல்ல மாட்டீங்களாடா?

கால் ஒடிந்த வேதாளம்

நம்ம கண்ணுலதான் இந்த எழுத்துப்பிழையெல்லாம் தெரியும்.


பாவம் வேதாளத்தின் காலை ஒடித்து விட்டார்கள்

பாண்டி மடத்து பச்சை உடைக் காவிகள்
 மிகவும் துயரமான வேளையில் கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வியை எழுப்பியதற்காகவும் மோடியின் ஜனவரி 2018 அபாய அறிவிப்பு பற்றி எழுதியதற்காகவும் ஒரு சங்கி வந்து ஆபாசமாக பேசி விட்டு போயிருக்கிறார்.

இப்போதெல்லாம் சங்கிகள் தாங்கள் ஏதோ மிகப்பெரிய தேசபக்தர்கள் போல கதை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். ஏதோ அவர்கள்தான் இந்தியாவின் பாதுகாவலர்கள் போல ஓவர் பில்ட் அப். இவர்களைப் பார்த்தால், இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

சுதந்திரத்திற்கும் காவிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பெருமிதம் கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.  காங்கிரஸ்காரர்களுக்கும் உண்டு.

கம்யூனிஸ்டுகளை எடுத்துக் கொண்டால் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு என்று மிகப் பெரிய பட்டியலைச் சொல்ல முடியும். அகில இந்திய அளவிலோ, மாநில அளவிலோ மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் எண்ணற்ற தியாகிகள் உண்டு. வேலூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் வரலாறாகவே வாழ்ந்த தோழர் கே.ஆர்.சுந்தரம் உடனடியாக மக்களின் நினைவுக்கு வருவார்.

இப்படி பெருமையாக ஒரு பெயர், ஒரே ஒரு பெயரை காவிகளால் சொல்ல முடியுமா?

ஓட்டைச் சட்டியில் எத்தனை அகப்பை போட்டாலும் என்ன கிடைக்கும்?

ஆனால் காவிகளுக்கு வேறு ஒரு பெருமை உண்டு.

சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த வரலாறு உண்டு.

வீர (!) சவர்க்கார், வாஜ்பாயி ஆகியோரின் துரோக வரலாறு அனைவரும் அறிந்ததுதான். சுதந்திரப்போராட்டத்தின் முன்னணித் தலைவரான அண்ணல் காந்தியைக் கொன்ற ரத்தக்கறை தோய்ந்த உடைகள் இன்றும் நாற்றமடிக்கிறதே.

விடுதலை பெற்ற பின்பு பல்லாண்டுகள் தேசியக் கொடியை ஏற்றாதவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,

இந்திய விடுதலை அளித்த அரசியல் சாசனத்தை மறுத்து “மனு தர்மமே” உயர்ந்தது என்றவர்கள்,

இந்திய அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பின்மையை இன்று வரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

இதுதான் காவிகளின் உண்மையான நிலை.

ஆனால் இந்த காட்டிக் கொடுத்த களவாணிகள், ஏதோ இவர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தை முன் நின்று நடத்தியது போலவும் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பது போலவும் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் சரி, இன்றைய மோடி ஆட்சிக்காலத்திலும் சரி, பெற்ற சுதந்திரத்தை அமெரிக்காவிடமும் பன்னாட்டுக் கம்பெனிகளிட,மும் உள்நாட்டு பெரு முதலாளிகளிடமும் அடகு வைக்கிற, விற்கிற வேலையைத்தான்  செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பது வெறும் மண்ணல்ல. மனிதர்களால் ஆனது. அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு உறுதி செய்வதுதான் சுதந்திரத்தின் நோக்கம். அதுதான் அனைத்துக்குமான அடிப்படை.

அதனை கேள்விக்குறியாக மாற்றியுள்ள மோடி வகையறாக்களுக்கு மூவர்ணக் கொடியை தொடுவதற்கான அருகதை கூட கிடையாது.

காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தால்தான் இந்திய சுதந்திரம் என்பதே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்களிடமிருந்து விடுவிப்பதே, தேசத்தின் உடனடித்தேவை.

யப்பா, களவாணிக் கூட்டமே, திருப்பி திருப்பி பொய் பேசிப் பேசி அதையே உண்மைன்னு நம்ப ஆரம்பிச்சுட்டீங்க. இப்படியே முத்திப் போச்சுன்னா உங்களை மன நல மருத்துவமனையில் கூட சேத்துக்க மாட்டாங்க!

பாண்டி மடத்துல, பச்சைத்துணி போட்டு சங்கிலில கட்டி வைக்கும் முன்னாடி திருந்திடுங்க ப்ளீஸ்.

பின் குறிப்பு :

பாண்டி மடம்  = விக்ரம் நடித்த சேது படத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்