Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Thursday, July 30, 2020

நிஜமல்ல . . .


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த படம் இது.



இந்தப் படத்தில் நீங்கள் காண்பது நிஜப் பெண்மணி அல்ல. சிலை. தலை முடி மட்டும் ஒரு பெண்ணுடையது. ஆடை நிஜமான துணி. மற்றபடி சிலிக்கானில் செய்யப்பட்ட சிலை தத்ரூபாக ஒரு மூதாட்டியைப் போலவே சுருக்கங்களோடும் அவ்வளவு கச்சிதமாக உள்ளது.

இதை உருவாக்கிய சாம் ஜின்க்ஸ் என்ற கலைஞனைப் பார்த்து பிரமித்துப் போயுள்ளேன்.


Friday, June 1, 2018

கா.ப.கா.க.ப. நல்ல செய்தி

காஷ்மீர் பற்றி காலையில் கண்ணில் பட்ட நல்ல செய்தி



(எவ்வளவு பெரிய தலைப்பு?)

ஆம். இன்றைய ஹிந்து இதழில் காலையில் முதலில் கண்ணில் பட்டதே அந்த செய்திதான்.

முன்பொரு காலத்தில், காஷ்மீரில் அமைதி நிலவிய காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் எழுதிய    பாடல்களை இப்போதைய இஸ்லாமிய கலைஞர்கள் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடியுள்ளனர்.

ரம்ஜான் நோம்பிலிருந்த பார்வையாளர்கள் மெய் மறந்து போயுள்ளார்கள். பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அற்புதமான கலைப் பொக்கிஷங்களை இழந்துள்ளோம் என்றும் பலரும் மனமாற வருந்தியுள்ளார்கள். இப்போதைய நிலை மாற வேண்டும் பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்று உளப்பூர்வமான விருப்பத்தை தெரிவித்து உள்ளார்கள்.

இந்த நிலை தொடர வேண்டும்.

இந்த மன நிலையை சீர் குலைக்க இரு தரப்பிலும் முயலாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக  இந்திய ராணுவம்  அமைதியாக இருக்க வேண்டும். 

Thursday, November 2, 2017

பேனர்கள் . நிறைவும் துயரமும்

கடந்த மாதம் ஆரணியில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்கத்தின் முப்பதாவது பொது மாநாட்டிற்காக ஆரணி நகரத்தில் எட்டு பேனர்கள் வைத்திருந்தோம்.  முறையாக அனுமதி வாங்கி, நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மட்டுமே வைத்திருந்தோம். 

ஆரணி நகரத்து மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விதத்தில் பேனர்களின் வடிவமைப்பும் சொல்லப்பட்ட செய்தியும் அமைந்திருந்தது மனதிற்கு நிறைவளித்தது.










மாநாட்டின் பின்னணியில் அமைந்திருந்த பேனர் நன்றாக வந்திருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் துயரத்தை அளித்துக் கொண்டே இருந்தது.



மூன்று முக்கியமான தோழர்களை கடந்த ஆண்டில் இழந்துள்ளோம் என்ற வேதனையை அந்த பின்னணி அளித்துக் கொண்டே இருந்தது.

Monday, October 30, 2017

பென்சில் முனையில் . . .

வாட்ஸப்பில் வந்த படம் இது.

பென்சில் முனையில் கலை.

இதை செய்த கலைஞன் யார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

 

Monday, March 20, 2017

சிலையல்ல – உயிர். நிஜமாகவே



கீழே உள்ள படத்தைப் பாருங்கள். சிற்பி செதுக்கிய சிலை அல்ல. மாறுவேடப் போட்டிக்காக ஒரு பெண் – கர்னாடகாவில் ஏதோ ஒரு பள்ளியில்.. அந்தப் பெண்ணிற்கும் ஒப்பனைக் கலைஞருக்கும் அதற்கான ஆலோசனை சொன்னவருக்கும்.



(வாட்ஸப்பில் வந்ததுங்க. அதனால வேற விபரம் எதுவும் தெரியவில்லை)






ஒரு சந்தேகம் கேட்க நினைத்தேன். இருக்கிற சர்ச்சை போதுமென்பதால் கேட்கவில்லை.  

இந்த பதிவை பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு எங்கள் விழுப்புரம் தோழர் குணசேகரன், மேலே உள்ள ஒப்பனைக்கு அடிப்படையான கர்னாடக மாநிலம் பேளூரில் உள்ள சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி சொல்லி அதனையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

Friday, February 10, 2017

மணல் கோட்டை - கின்னஸ் - நோ அரசியல்

கண்டிப்பாக இது அரசியல் பதிவல்ல. தமிழகத்தில் உள்ளவர்கள் மனதில் கட்டியுள்ள மணல் கோட்டைகளுக்கு கொஞ்சமும் தொடர்பு கிடையாது.

மணல் சிற்பக் கலைஞரான  ஒடிசா மாநிலத்தின்  சுதர்ஸன் பட்னாயக் உலகிலேயே மிகவும் உயரமான மணல் கோட்டையை பூரி கடற்கரையில் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்





 

Friday, January 20, 2017

நிஜத்திற்கும் மேலாக

வாட்ஸப்பில் வந்த படங்கள். இந்த சிலைகளை செய்தவர் யார் என்று தெரியாது. அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. மேட்ம் துஸாத் மெழுகு மியூசியம் எல்லாம் இதன் கிட்டே நெருங்க முடியாது.

பெயர் தெரியாத அந்த கலைஞருக்கு பாராட்டுக்கள்




 

Thursday, October 27, 2016

இவன்தான்யா கலைஞன் . . .




கீழே உள்ள காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

பதிவின் தலைப்பை  நீங்களும் சொல்வீர்கள். 

வாட்சப்பில் அனுப்பியவருக்கு நன்றி. 



Sunday, April 10, 2016

உங்கள் பார்வைக்காகவும்



வாட்ஸப்பில் வந்த ஒரு படம். நீங்கள் ரசிக்க உங்களின் பார்வைக்காகவும் 



Saturday, March 26, 2016

களிமண் குழந்தைகள் - அழகு

வாட்ஸப்பில் வந்த படங்கள் இவை








தத்ரூபமான இந்த சின்னஞ்ச்சிறு சிலைகள் களி மண்ணால் செய்யப் பட்டவை. 

இந்த சிலைகளை செய்தவர் கேமிலி ஏலன் என்ற கலைஞர். 




இவர்தான் அவர்

Friday, February 12, 2016

தமிழகத்திலும் முயன்றால் என்ன?



கேரளப் பயண அனுபம்தான் இது.

மூணாற்றில் ஒரு இடத்தில் கண்ணில் பட்டது. கேரள கலாச்சார மையம் என்று போர்ட் போட்டு “கதகளி, களறிப் பயிட்டு” காணலாம் என்று நான்கு மொழிகளில் அறிவிப்பு செய்திருந்தார்கள். எங்கள் வாகன ஓட்டுனரிடம் கேட்கையில் நான் உங்களை தேக்கடியில் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னார்.

தேக்கடியில் இது போல ஒரு நான்கு இடங்களாவது இருக்கும். அதிலே ஒரு இடத்திற்குச் சென்றோம்.

ஒரு மணி நேரம் கதகளி நிகழ்ச்சி. அதற்கு ஒருவருக்கு கட்டணம் இருநூறு ரூபாய். அது போல களறிப் பயிட்டு ஒரு மணி நேர நிகழ்ச்சி. அதற்கு தனியாக இன்னொரு இருநூறு ரூபாய் கட்டணம். இரண்டிற்கும் தனித்தனி அரங்கங்கள்.

கதகளி நிகழ்ச்சிக்கான ஒப்பனை தொடங்கி, அதன் பெருமை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லி நிகழ்ச்சி நடந்தது. உண்மையிலேயே பாராட்டக் கூடிய விதத்தில்தான் நிகழ்ச்சி இருந்தது.

அடுத்து களறிப் பயிட்டு நிகழ்ச்சி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் அடுத்தடுத்து பல சாகசங்களை செய்தார்கள். 





கொடுத்த பணத்திற்கு முழுமையான நிறைவளித்த நிகழ்ச்சி. ஒவ்வொரு அரங்கத்திலும் இருநூறு இருக்கைகள். அனைத்தும் நிரம்பி இருந்தன.  

இந்த நிகழ்ச்சியின் மூலமாக கதகளி, களறிப்பயிட்டு கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சி கிடைக்கிறது. எந்த கலைக்கு வாய்ப்பு கிடைக்குமோ, அந்த கலைதான் தொடர்ந்து ஜீவிக்கும் என்பது யதார்த்தம். கேரள சுற்றுலாத் தளங்களில் கேரளக் கலைகளை மற்ற மாநிலத்தவர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் சிறப்பு,

தமிழகத்திலும் ஏன் இது போன்ற முயற்சிகளை எடுக்கக் கூடாது?

தெருக்கூத்து அரிதான கலையாக மாறியிருக்கிறது. கரகத்தில் கவர்ச்சியை சேர்க்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது. வீர விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் களறிப்பயிட்டுக்கு நிகரானது சிலம்பம். சிலம்பம், சுருள், மான் கொம்பு என்று எத்தனையோ வித்தை தெரிந்தவர்கள் உள்ளார்கள். 

எங்கள் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது சிலம்பம், புலியாட்டம், தெருக்கூத்து, கெக்கலிக்கட்டை ஆட்டம் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் தோழர்களும் பொது மக்களும் அவ்வளவு ஆர்வமாக ரசித்தார்கள். தெருக்கூத்து கலைஞர்களில் மிக முக்கியமான வேஷம் கட்டிய இருவர் எண்பது வயதைக் கடந்தவர்கள். அந்த குழுவில் ஐம்பது வயதிற்கு கீழ் யாருமே இல்லை. 





இந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மேலும் பலர் கற்றுக்கொள்ள வருவார்கள் அல்லவா?

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களான ஊட்டி, கொடைக்கானல், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அரசு முயற்சிக்கலாமே?

Saturday, January 9, 2016

பனிச் சிற்பங்கள் பார்த்துள்ளீர்களா?

சீனாவில் நடைபெற்ற பனிச் சிற்ப விழாவில் பார்வைக்கு வைக்கப்பட்ட கலைப் படைப்புக்கள் நீங்கள் ரசித்து மகிழ இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.