Showing posts with label சுமந்து. Show all posts
Showing posts with label சுமந்து. Show all posts

Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Friday, December 13, 2024

சிவப்புக்கு அழிவில்லை சுமந்து வகையறாக்களே!

 


போராட்டப்பாதையில் சென்றால் இடதுசாரிகளை போல அழிவீர்கள் என்று காவித் தரகர் சுமந்து சொன்னதை வைத்து சில நாட்கள் முன்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

போராட்டத்தில் உண்மையாக இருந்தால் மக்கள் அப்போராட்டத்தை நடத்துபவர்களை ஆதரிப்பார்கள் என்பதற்கு வரலாறு முழுதிலும் உதாரணங்கள் உண்டு.

ஒரு புதிய உதாரணம் நேற்று படைக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இம்மாத துவக்கத்தில் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

சி.ஐ.டி.யு சங்கத்தோடு இணைக்கப்பட்ட DREU சங்கம் 26,151 வாக்குகள் பெற்று அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

 


முதலிடம் பெற்ற SRMU சங்கத்திற்கும் இரண்டாம் இடம் பெற்ற DREU சங்கத்திற்கும் வாக்கு வித்தியாசம்  107 மட்டுமே.

 முதலாளித்துவ கட்சிகள் போல ஓட்டுக்கு பணம், மது பானம், பிரியாணி கொடுத்து மோடி போல ஜூம்லா வாக்குறுதிகள் கொடுத்து மம்தா பானர்ஜி போல வாக்காளர்களை மிரட்டி, உருட்டி அச்சுறுத்தியும் அதனால் 26,258 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

 தங்களுக்காக உழைக்கும் வல்லமை கொண்டவர்கள் செங்கொடி சங்கத்தினர் மட்டுமே என்பதை ரயில்வே தொழிலாளர்கள் SRMU அங்கீகரிக்காப்பட்ட சங்கம் என்ற ஆணவத்துட்ன் ஆடியதை புரிந்து கொண்டதால்தான் FREU அமைப்பிற்கு வாக்களித்தார்கள்.

 அப்படிப்பட்ட நிலைமை இந்தியாமுழுவதற்கும் நாளை வரும். சுமந்து போன்ற தரகர்கள் அதை பார்க்கத்தான் போகின்றனர்.

 

Saturday, December 7, 2024

உமக்கு ஏன் எரியுது சுமந்து?

 


சங்கித் தரகர் சுமந்து ராமனின் ட்விட்டர் பதிவு கீழே.


 

போராட்டம் என்றாலே சங்கி சுமந்துக்கு அடி வயிறு எரிகிறது. ஐ.டி விங் போடும் எலும்புத்துண்டுகளாக பதிவுகள் போடும், ஏழு கழுதை வயசான சுமந்திற்கு போராட்டத்தின்  முக்கியத்துவம் குறித்தெல்லாம் உபதேசிப்பது நேர விரயம். எண்ணற்ற உயிரணுக்களில் ஒரு அணுவின் போராட்டத்தின் வெற்றிதான் சுமந்தின் பிறப்பிற்கு காரணமானது என்பது கூட தெரியாத டாக்டரா அவரா?

 அப்புறம் காம்ரேடுகளை நக்கலடித்துள்ள சுமந்துக்கு ஒன்று  சொல்ல வேண்டும்.

 நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வேண்டுமானால் இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் வலிமையோ என்றைக்கும் குறைந்ததில்லை. அவர்களின் போராட்ட உணர்வு எப்போதும் போல உறுதியாகவும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.

 காவிக்கண்ணாடி அணிந்ததால் சுமந்தின் மூளைத் திறன் குறைந்தது போல பார்வைத்திறனும் குறைந்து விட்டது போல. . . .

 

பிகு: எழுதி நாளான பதிவுதான் . . . இன்று, நாளை, நாளை மறுநாள் என  மூன்று நாட்கள் சென்னையில் எங்கள் சங்கத்தின்  அகில இந்திய செயற்குழுக் கூட்டம். அதனால்  ஏற்கனவே எழுதி பிரசுரிக்காமல் இருந்த பதிவுகளுக்கு இப்போது விமோசனம் கிடைக்கும்.

Tuesday, November 5, 2024

அப்பாடக்கரா சுமந்து?

 


சுமந்து போட்ட ஒரு ட்வீட்டை பார்த்து சிரிப்பு வந்தது.



என்ன நெனப்புடா இந்த மனுசனுக்கு!

என்னமோ இதுவரை இவர் கலந்து கொண்ட விவாதமெல்லாம் ரொம்ப பயனுள்ளதாகவும் அதில் இவர் ஏதோ அரிய, புதிய, அர்த்தமுள்ள கருத்துக்களை வாரி வழங்கினதாக ஒரு நெனப்பு.

அய்யா சுமந்து, இது வரைக்கும் எல்லா விவாதத்திலும் நீங்க தேவையில்லாத ஆணியைத்தான் .........................................

மோடிக்காக காசுக்கு கூவுற நீரெல்லாம் பெரிய அப்பாடக்கர் மாதிரி பேசக்கூடாது.

Monday, October 28, 2024

விஜய் – சுமந்தின் புது முதலாளி

 


சில முக்கியமான பணிகள் இருந்ததால் விஜய் பேசியதை நான் பார்க்கவில்லை./கேட்கவில்லை. ஆனால் அரசியல் கற்றறிந்த பல பொறுப்பானவர்களின் பதிவு, அந்த உரையை சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக்குகளாகவும்  அரசியல் தெளிவற்ற அவியலாகவும் இருந்தது என்றும் பதிவிட்டிருந்தனர்.

 அந்த உரையை சக்தி மிக்க ஒன்றாகவும் எழுச்சி மிக்கதாகவும் வர்ணித்துள்ளார் புதிதாக பூமர் அடையாளம் பெற்றுள்ள ட்விட்டர் தரகர் சுமந்த்ராமன். பவண் கல்யாண் உரையும் அப்படித்தான் இருந்தது என்ற பின்னூட்டத்திற்கு ஆமாம், அவர் இப்போது துணை முதல்வர் என்று பூரிப்புடன் சொல்லியுள்ளார்.

 


இதன் மூலம் சுமந்து உலகிற்கு தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான்.

 

“இனி எண்டே முதலாளி விஜய்”

 

Thursday, October 17, 2024

சுமந்து பூமர் விங்கா?

 


சென்னையில் மழை நின்று போனதில் மக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் சங்கிகளுக்கோ வருத்தமோ வருத்தம்.

 


மழை தொடங்கும் முன்பே “மழை கடுமையாக பெய்தால் பலருடைய பெருமை கெட்டுப் போகும்” என்று திருவாய் மலர்ந்தவர் சுமந்து. மழை நீர் வெள்ளமாக மாறி மக்கள் அவதிப்பட வேண்டும், அதனால் தமிழக அரசின் பெயர் கெட்டுப் போகும் என்று ஆசைப்பட்டவர் அவர்.  சங்கிகளும் அதே மன நிலையில்தான் இருந்தார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அத்தனை பேரும் மழையை விட அதிகமான பதிவுகளை எழுதித்தள்ளினர். “கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் போவது போல போஸ் கொடுத்த” ஆட்டுக்காரன் வந்தால்தான் இந்த  சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதால் இந்தியன் 2 படத்தில் “கம் பேக் இந்தியன் தாத்தா” என்று சமூக ஊடகத்தில் இயக்கம் நடத்தியது போல “கம் பேக் அண்ணாமலை” என்று இயக்கம் நடத்த வேண்டும் என்றொரு காமெடி பதிவு கூட பார்த்தேன்.

 மழை நின்று போனது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. மழையும் நின்றது, பதிவுகளும் நின்றது.

 ஆனால் சுமந்துவால் முடியவில்லை. மழை வராது என்று வெதர்மேன் பிரதீப் சொன்னது போல நடப்பதை அவரால் சகிக்க முடியவில்லை.

 சில கட்சிகளில் டாக்டர்கள் அணி, வக்கீல்கள் அணி  என்று இருப்பது போல

இப்போதெல்லாம் “வெதர்மேன்” அணி கூட  வைத்துள்ளார்கள் என்று ட்வீட்ட,

வெதர் மேன் பிரதீப் சுமந்துக்கு செவுட்டுலயே ஒன்று கொடுத்தார்

  “நீங்க எந்த அணி சார்? பூமர் அணியா? எல்லாம் தெரிஞ்ச எக்ஸ்பெர்ட் அணியா? சும்மா நொய் நொய்ன்னுட்டு”

 


மழை நின்று போன சோகத்தில் இருக்கும் சுமந்து இப்படிப்பட்ட அசிங்கம் வேறு. பேசாமல் அவர் டாக்டர் வேலையை ஒழுங்காகப் பார்க்கலாம்.

Monday, February 26, 2024

இறைச்சின்னா எல்லாமும்தான் சுமந்து

 


மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று குற்றம் சொல்லி கொலை செய்வது சங்கி ஸ்டைல். மாட்டிறைச்சி வைத்திருப்பார் என்று கருதி ஒரு முதிய பெண்மணியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுனரையும் நடத்துனரையும் இடை நீக்கம் செய்தது. தமிழ்நாட்டு அரசு.

பேருந்தில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்ததும் நம்ம சுமந்திற்கு சந்தேகம் கொப்புளித்துக் கொண்டு வந்து வந்து விட்டது.

இறைச்சின்னா அதில் மாட்டுக்கறி எடுத்துக்கிட்டு போகலாமா, பன்றிக் கறி எடுத்துச் செல்லலாமா? மீனுக்கும் இடமுண்டா என்று கேள்விகளை அடுக்குகிறார்.



ஐயா சுமந்து இறைச்சி கோழி, ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் மட்டுமல்ல, முயல், காடை,கௌதாரி எல்லாமும்தான் உண்டு. இது கூட தெரியாம நீ எப்படி வினாடி வினா நிகழ்ச்சியெல்லாம் நடத்தின? பேருந்தில் அதெல்லாம் எடுத்துக்கிட்டு போனா   உமக்கு ஏன் நோகுது?

 

Wednesday, December 6, 2023

சுஷ்மாவையே அசிங்கப்படுத்தியவர்கள் சுமந்தை மட்டும்

 சுமந்து சங்கிகளால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிறகு பகிர்கிறேன் என்று நேற்று எழுதியிருந்தேன். அந்த பதிவு இங்கே. நடுநிலை வேடம் போடுவதை நிறுத்தி விட்டு ஒழுங்காக சங்கியாக மட்டும் நடந்து கொண்டால் அவருக்கு கூலியாவது சரியாக கிடைக்கும். ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே அடி கிடைக்கும்.     

 


அலைபேசி செட்டுகள் 99 % இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற மத்திய அமைச்சரின் ட்வீட்டிற்கு இந்தியாவில் இணைக்கப்படுகிற (ASSEMBLING) என்று சுமந்து சொல்லி விட சங்கிகள் அவரும் நம் சக சங்கிதானே என்றெல்லாம் பார்க்காமல் அநியாயத்துக்கு அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

 




சங்கிகள் அவ்வாறு செய்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. டிமோவைத் தவிர மற்ற  அனைவரையும் அப்படித்தான் தாக்குவார்கள்.

 

என்ன பிரச்சினை   என்று சட்டென்று நினைவுக்கு     வரவில்லை. ஏதோ ஒரு தனிப்பட்ட இஸ்லாமியக் குடும்பத்திற்கு விசாவா பாஸ்போர்ட்டோ கொடுக்க அனுமதி வழங்கினார் என்று நினைவு.

 

அதற்கு என்னவெல்லாம் பேசினார்கள்!

 

பாகிஸ்தானுக்கு போ!

முஸ்லீமிடம் கிட்னி வாங்கியதால் முஸ்லீமாகிவிட்டார்.

முஸ்லீம் கிட்னி என்பதால் இதயமும் முஸ்லீம் கிட்னி.

லவ் ஜிஹாத்தை ஆதரிக்கிறார்.

இப்படியே ஏராளமாய். இதில் முஸ்லீம் என்ற வார்த்தையை நான்தான் பயன்படுத்தினேனே தவிர அவர்கள் கொச்சையாகத்தான் எழுதியிருந்தனர்.

 

இத்தனைக்கும் சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று கூடாது என்று கூச்சல் எழுப்பி அவர் பிரதமரானால் நாள் வெள்ளைப்புடவை கட்டுவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தி சோனியா காந்திக்கு பிரேக் போட்டவர்.

 

அவரையே சங்கிகள் அசிங்கப்படுத்தினார்கள் என்றால் கூலிக்கு மாரடிக்கும் சுமந்து  நடுநிலை நாடகம் போட்டால் மட்டும் விடுவார்களா என்ன?

Tuesday, December 5, 2023

என்ன சுமந்து மாட்டினியா?

 


தன்னை நடுநிலை மனிதனாக காட்டிக்கொள்ள முயலும் சங்கி சுமந்து அசிங்கப்பட்டு நிற்கும் தரமான சம்பவம் கீழே . .


என் வீட்டின் தரை தளத்திலிருந்து பல நூறு பக்கெட் தண்ணீரை வெளியேற்ற வேண்டியிருந்தது என்று 2015 ல் பதிவு போட்ட சுமந்து,

அதை மறந்து

என் வீட்டில் கணுக்கால் அளவு தண்ணீர் வந்து விட்டது. 2015ல் கூட இப்படி நடக்கவில்லை

என்று 

இன்னொரு பதிவு போட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்.

எனக்கு அம்னீசியா என்று சொல்லி சுமந்து தன் மானத்தை காத்துக் கொள்ளலாம்.

பிகு: இப்படியெல்லாம் விசுவாசம் காண்பித்தாலும் நடுநிலை நாடகம் போடும் சமயங்களில் சுமந்தை சங்கிகளும் புரட்டி எடுத்து விடுகின்றனர். இது தொடர்பான பதிவொன்று ட்ராப்டிலேயே நீண்ட காலமாக உள்ளது. வேறு சூடான செய்தி எதுவுமில்லையென்றால் மாலை பகிர்கிறேன் . .

Friday, October 6, 2023

ஆட்டுக்காரனை சுமந்து கரடியே ...

 


ஜலதோஷத்திற்கு இரண்டு வாரம் பெட் ரெஸ்ட் கேட்ட ஆட்டுக்காரனை சக சங்கியும் மருத்துவருமான சுமந்து கலாய்த்து போட்ட ட்வீட் கீழே. டாக்டர் ஏன் கையெழுத்துப் போடவில்லை என்பதற்கான காரணமும் அதில் உள்ளது.


இத்தோடு நிற்கவில்லை.

மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு வந்ததையும் கலாய்த்து ஆட்டுக்காரன் பெட் ரெஸ்ட் கலைந்ததையும் போட்டு தள்ளி விட்டார்.



என்ன ஆட்டுக்காரா, சங்கிகளே உன்னை மதிக்க மாட்டேங்கறாங்களே!

Sunday, April 9, 2023

சுமந்தை தாக்கும் சங்கிகள்

 


"வெறும் நரேந்திரா" சென்னை வந்த போது ஆட்டுக்காரனை எங்கே காணும் என்று வலதுசாரி சுமந்து கேட்க, சங்கிகள் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். 




இது சும்மா சேம்பிள்தான்.  சங்கிகளுக்கே உரித்தான மொழியில் இன்னும் பல ட்வீட்டுகள் உள்ளன.

இங்க பாரு சுமந்து, இந்த நடுநிலை வேஷம் போடாம, வாங்கற காசுக்கு விசுவாசமா, ஒழுங்கா சங்கியா லட்சணமா இரு என்பதுதான் சங்கிகள் தெரிவிக்கும் செய்தி.

இது சுமந்திற்கு புரிந்திருக்குமா?


Wednesday, March 29, 2023

அற்பத்தனம் "வெறும் நரேந்திரா"

 


தீர்ப்பு வந்த மறுநாள் எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. எம்.பி பதவி பறிக்கப் பட்ட மறுநாளே, அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் படுகிறது.

இந்த வேகமே சொல்கிறது பாஜக அரசின் பழி வாங்கும் குணாம்சத்தையும் "வெறும் நரேந்திரா"வின் அற்பத்தனத்தையும்.

தலைவன் போலவே தொண்டர்களும் கேடு கெட்ட அற்பர்கள் என்பதற்கு "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு பதிவு ஒன்று மாதிரிக்காக.


ஆனாலும் ஒரு அதிசயம்.

அவர்கள் தரப்பிலேயே ஒருவர் இச்செயலை அற்பத்தனம் என்று ட்வீட்டியுள்ளார்.



ஆமாம், சுமந்துதான். அவராலேயே பொறுக்க முடியவில்லை. 

Thursday, March 9, 2023

சுமந்து நல்லவரா? கெட்டவரா?

 


வலதுசாரி சுமந்து போட்ட ட்வீட் கீழே உள்ளது.



ஏகப்பட்ட ரொக்கத்தோடு சிக்கிய பாஜக எம்.எல்.ஏ விற்கு பிணை கொடுக்கும் போது, அப்படி எதுவும் இல்லாத டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏன் ஜெயிலில் இருக்க வேண்டும்? 

இதுதான் சுமந்து கேட்ட கேள்வி.

போன வாரம் கூட பத்து வழிச்சாலை என்று கர்னாடக முதல்வர் பத்து வழிச்சாலை என்ற போது ஆறு வழிச்சாலைதான் உள்ளது. மீதமுள்ள நான்கு வழி உங்கள் நாற்பது சதவிகிததில் போய் விட்டதா என்று கேட்டார்.

அதான் ஒரு கேள்வி

இவரு நல்லவரா? கெட்டவரா? 

Tuesday, February 28, 2023

மோடியை கலாய்க்கும் சுமந்து

 


காலையில் போட்ட பதிவு ஆட்டுக்காரனை சிப்பு சேகர் கலாய்த்தது தொடர்பாக. 

இப்போது ஆயுஷ்மான் திட்டத்தில் 25 கோடி பேரை இணைத்துள்ளது பற்றி அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கே தெரியாதே என்று வலதுசாரி சுமந்து மோடியை கலாய்த்தது.

ஏன் இப்படி சேம் சைட் கோல் அடிக்கிறார்கள்?

மாயைகள் தகர்கின்றதா?

Wednesday, December 7, 2022

சுமந்துக்கு என்னதான் ஆச்சு?

 


நேற்று ட்விட்டரில் பார்த்த நான்கு பதிவுகள். நான்கும் சுமந்து போட்டதுதான்.

 தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஆம்புலன்ஸிற்கு வழி விடும் நாடகத்தை இன்னும் எத்தனை முறை நடத்துவீர்கள்?

 


சுழற்சி முறையில் கிடைக்கும் ஜி20 நாடுகளின் தலைமையில் என்ன பெருமை இருக்கிறது?

 


அண்ணாமலை அவர்களே,அனைத்து மதத் தலைவர்களையும் பார்ப்பது என்பது “ஜனநாயகத்தில் ஒரு பகுதிதான்”. இது ஏன் மோடிக்கு புரியவில்லை. நாடகம் என்றால் அதை செய்பவர் வேறு ஒருவர்.

 


மாறு வேடப் போட்டி என்றால் எனக்கு நினைவுக்கு வருபவர் வேறு ஒருவர். ராகுல் காந்தி அல்ல.

 


“சுமந்து கரடியே காரி துப்பிடுச்சு” மொமண்ட் இது.

 இப்படியெல்லாம் ட்வீட்டியாவது தான் ஒரு வலதுசாரி அல்ல என்று காண்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் சுமந்துக்கு ஏன் வந்தது. ஐ.டி விங் ஒழுங்காக பேமெண்ட் அனுப்பவில்லையோ!!!!

 

Wednesday, November 30, 2022

மாத்தியாவது சொல்லுங்கடா !!!

 


கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் மோடி விளம்பரம் செய்த “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றியதற்கு சங்கிகள் தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதரும் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள்.

தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டின் இயக்குனர் என்பதால் எல்லா எதிர்வினைகளும் “ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட இன்னல்களை வெளிப்படுத்திய ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்துக்கு இணையானதல்லவா காஷ்மீர் ஃபைல்ஸ்! இதைப் போய் விமர்சிக்கலாமா” என்ற ரீதியில்தான் அமைந்துள்ளது.  தூதரும் அதைத்தான் சொல்கிறார்.

இதைக் கேள்விப்பட்டால் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தற்கொலை செய்வார் என்பது வேறு விஷயம்.

சங்கிகளுக்கும் சரி, தூதருக்கும் சரி, சுய புத்தியே கிடையாதா? பாஜக ஐ.டி விங் எழுதித் தருவதை அப்படியே ட்வீட்டுவார்களா? சின்ன மாற்றம் கூட செய்ய மாட்டார்களா! ஒரே ஸ்க்ரிப்டை எத்தனை முறை படிப்பது!

அனுபம் கேர் கொஞ்சம் பரவாயில்லை. கூடுதலாக, சித்தி வினாயகர் அவரை தண்டிப்பார் என்று சபித்துள்ளார். சித்தி வினாயகருக்கு வேறு வேலையே கிடையாதா! பண்டிட்டுகளை வெளியேற்ற முயற்சிகள் நடந்த போதே அதற்கு காரணமாக இருந்தவர்களை அப்போதே தண்டித்திருந்தால் “காஷ்மீர் ஃபைல்ஸ்” ப்டத்துக்கே அவசியம் வந்திருக்காதே. அப்பட இயக்குனர் 18 கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்க முடியாதே!

பிகு : ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தை இயக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஊதியமே பெறவில்லை என்றும் இந்த இயக்குனர் அக்னிஹோத்ரி 18 கோடி ரூபாயில் மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கினார் என்ற தகவலை சொன்னது யார் தெரியுமா?

 நீங்கள் நம்பாவிட்டாலும் சொல்கிறேன்.

 .

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

.

.

.

.

சுமந்து . . .

 

 

Tuesday, October 4, 2022

சுமந்தின் அற்பத்தனம்

 

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் (ஓய்வு) தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவை சுட்டு பகிர்கிறேன்.

நேற்று சன் டிவியில் வெற்றி மாறனின் கருத்தையொட்டி நடந்த விவாதத்தில் தோழர்கள் Subagunarajan V M S, Surya Xavier நடத்திய தாக்குதலில் திணறிய மருத்துவர் சுமந்த் ராமன் இத்தகைய விவாதங்களினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என ட்விட்டரில் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார். விவாதத் தலைப்புத் தெரிந்த பிறகும் பங்கேற்க ஒப்புக் கொண்டு பின்னர் கிண்டலடிப்பது அற்பத்தனம்.

அவர் அப்படிச் செய்வதில் ஆச்சரியம் இல்லை. அவருக்கு நான் அளித்த பதில்:

‘ஆம். புரிகிறது சார். பிரார்த்தனை, பஜனை, ஹோமம், கதாகாலட்சேபம் எல்லாம் செய்து விட்டு மசூதிகளை இடிப்பதாலும், முஸ்லிம்களைக் கொல்வதாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.”


மேலே உள்ள பதிவை காபி, பேஸ்ட் செய்த போது இன்னொரு பதிவையும் பார்த்தேன். அது கீழே .நெத்தியடி.


டாக்டர் சுமந்திடம் நோயாளி வந்தால் சனாதனக் கருத்தியலின் படி இது உனது கர்மா. இதற்கு அறிவியலில் மருந்தோ வேறு தீர்வோ இல்லன்னு சொல்லிட்டு ஃபீஸ் மட்டும் கொடுத்துவிட்டுப் போயிடுங்கன்னு சொல்வாராமே?

மெய்யாலுமா?

இதை படித்தால் சுமந்து இனிமே வாயே திறக்கக் கூடாது. ஆனாலும் வழக்கமான வன்மத்தை வெளிப்படுத்துவார்.

ஏனென்றால் சங்கிகளுக்கு எப்போதுமே வெ.மா.ரோ.சூ.சொ எதுவுமே கிடையாது.

Saturday, September 17, 2022

சுமந்து திருந்திட்டாரா??

 


சில நாட்களுக்கு முன்பு  ட்விட்டரில் பார்த்தது கீழே உள்ளது.

 


என்னதான் ஆச்சு சுமந்துக்கு? தமிழக அரசை பாராட்டுகிறார். பெண்களின் கல்விக்கு உதவும் திட்டம் என்று பாஜக கொள்கைக்கு எதிராக வேறு பேசுகிறார்.

 

ஒரு வேளை சுமந்து திருந்திட்டாரோ?

Thursday, April 7, 2022

கட்சி தாவுகிறாரா சுமந்து?

 



“சுமந்து கரடியே காரி உமிழ”  என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

அப்படி என்ன அதிர்ச்சியைத் தந்தார் சுமந்து?

தமிழக முதல்வர் துபாய் போனதை முதலில் நக்கலடித்த சுமந்து லூலு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வரவேற்றதே கொஞ்சம் நெருடலாக இருந்தது.

எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றது என்று ஆட்டுக்காரருக்கு பதில் சொன்ன சுமந்து இன்னொரு பதிவில் இன்னும் காட்டமாக ஒரு பாஜக சங்கியை தாக்கியுள்ளார்.

நவராத்திரி காலத்தில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயரைக் கண்டித்துள்ளார். அது மட்டுமா இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோம்பிருக்கும் காலத்தில் உணவு விடுதிகள் செயல்பட்டால் அவர்களின் மத உணர்வு புண்படும் என்று மாலை வரை உணவு விடுதிகளை மூடவும் உத்தரவிடுவாரா என்றும் கேட்டுள்ளார்.


 
இதையெல்லாம் பார்த்தால் சுமந்து கூடிய சீக்கிரம் கட்சி மாறி விடுவார் என்றே தோன்றுகிறது.

 

 

Wednesday, April 6, 2022

சுமந்து கரடியே காரி உமிழ

 


சங்கிகளின் வாடகைப் பேச்சாளர் சுமந்து கரடியே ஆட்டுக்காரரை காரி உமிழ்ந்து எரிபொருள் விலை உயர்வை கண்டித்துள்ளார்.

ஆமாம்.

நிஜமாகத்தான்.

சுமந்துவின் ட்விட்டர் பதிவு நானே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தேன்.


 

ஆனாலும் இவர்களை எல்லாம் நம்ப முடியாது.

 ஆம் சுமந்து எப்போது வேண்டுமானாலும் சாவர்க்கர் ஆகி விடுவார்.

 அதாங்க மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து விடுவார்.

 பிகு  : மேலே உள்ள ட்வீட்டை நேற்று மாலை சேமித்தேன். இது வரை அதை நீக்காமல் வைத்துள்ளாரா என்று சுமந்தின் ட்விட்டர் பக்கம் போனால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

 அது என்ன?

 நாளை வரை காத்திருங்கள்.