Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

Sunday, March 22, 2015

பெருமாள் முருகன் வேண்டுமானால்

சமீபத்திய காலம் எழுத்தாளர்கள் தாக்கப்படும் காலமாக மாறி விட்டது. எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்து விட்டான் என்று அவர் விரக்தியில் ஒதுங்கி விட்டார்.

ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் பயந்து எங்கள் எழுத்துக்களை துறந்து விட மாட்டோம் என்று  ஆதிக்க சக்திகளால் (அது உறவினர்களாக, சொந்த சமுதாய்த்தின் முக்கியப் புள்ளிகள், மதவாதிகள் என அனைவரும்  அடங்குவார்கள்)  மிரட்டப்பட்டவர்கள்  கர்ஜித்த சம்பவம் நடந்தது.

 
அப்படி அவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டின் பகுதியாக நடந்த கருத்தரங்கில்.

மிகவும் பொருத்தமான தலைப்பை சூட்டியுள்ளார்கள்.

"எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"

எழுத்தாளர்களுக்கும் அவர்களின் எழுத்துக்களுக்கும் என்றும் மரணமில்லை.

தமுஎகச - பாராட்டுக்கள்