Monday, August 3, 2020

கொரோனா தடுப்பூசி அவசியமே. ஆனால் . . .

கொரோனா தடுப்பூசி
அக்டோபர் மாதம்
மக்களுக்கு தரத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ, ஆக. 2 - ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகையில் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதம் ஒப்புதல் வழங்கும் என தகவல்கள் வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

ஆனால், “ரஷ்யாவும் சீனாவும் தாங்கள் தயாரித்துள்ள மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கு முன்பே, தடுப்பூசியை தயாரித்துவிட்டன” என்று தான் நம்புவதாகக் அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவுக்கு முன்பு யாரேனும் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள் என நம்ப வில்லை.

தடுப்பூசிக்காக நாம் அந்த நாடுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்படாது`` என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.

“மாஸ்கோவில் உள்ள கமலே இன்ஸ்டி டியூட் ஆஃப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோ பயாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டது. அதை பதிவு செய்வதற்கான பணிகளில் தற்போது ஈடு பட்டு வருகின்றனர்`` என சுகாதாரத்துறை அமைச்சர் மிகையில் முராஷ்கோ கூறியுள்ளார் என இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது.

“அக்டோபர் மாதம் அதிகளவிலான மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்த உள்ளோம். அதில் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்`` எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது எனவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது.

இந்தநிலையில், பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களை ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி), ஹேக்கர்கள் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவ தாகத் தெரிவித்தது, ``பிரிட்டனில் உள்ள மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை யார் ஹேக் செய்திருக்கலாம் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த முயற்சிகளுக்கும் ரஷ்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்களால் சொல்ல முடியும்” என்று ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் அப்போது தெரிவித்தார்.

மேலே உள்ள செய்தி இன்றைய தீக்கதிர் நாளிதழில் படித்தது. 

படித்தவுடன் சில வாரங்களுக்கு முன்பாக திரு சுரேந்திரா வரைந்த ஒரு கார்ட்டூனே நினைவுக்கு வந்தது. 


தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எந்த நாடு முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பதில் போட்டி அவசியமற்றது. அப்படிப்பட்ட போட்டிகள் சோதனைகளின் தரத்தை பாதிக்கும்.  முழுமையான சோதனைகள் முடியும் முன்பு வெளி வரும் தடுப்பூசிகள் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. 

அனைத்து நாட்டின் ஆட்சியாளர்களும் தாங்கள்தான் முதலில் தடுப்பூசியை பயன்படுத்தினோம் என்ற பெருமைக்கு ஆசைப்படுவத்ற்குப் பதிலாக அந்தப் பணியை அறிவியலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு  தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக நீங்கள்  என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் கவனியுங்கள் போதும்.


1 comment: