வழக்கறிஞர் தோழர் ராஜகோபால் சுப்ரமணியன் அவர்களின் முக நூல்
பதிவும் அவர் பகிர்ந்து கொண்ட மீம்களும்
கீழே உள்ளது.
#டகால்டி அண்ணாமலை
ஆட்டுக்ககார அண்ணாமலை பாஜகவில் காலை பதினோரு மணிக்கு இணைகிறார் என்ற செய்தி வந்தவுடன் பத்துமணிக்கு முன்னரே ட்விட்டரில் #டகால்டிஅண்ணாமலை ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஏன் இப்படி நடக்கிறது?
Breaking Bad- நாயகன் வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பிற்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு தனக்கு பிறகு குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்று தனது வேதியியல் அறிவைக் கொண்டு போதை மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு முதலில் சிறியளவில் விற்க தொடங்கி சரக்கின் மகிமையால் போதை மாஃபியாவுடன் தொடர்பு, பெரியளவில் தயாரிப்பு என்று வியாபாரம் விரிவடையும். மனைவிக்கு தெரிந்தவுடன் குடும்பத்திற்காகவே இதில் ஈடுபட்டேன் என்று ஒவ்வொரு முறையும் நியாயப்படுத்துவான். பிறகு, மாஃபியா கேங்க் வார், கொலைகள், திடுக்கிடும் திருப்பங்கள், என நீண்டு கொண்டே இருக்கும். இறுதிக்கட்டத்தில் தனது மனைவியை பார்த்துவிட்டு கடைசியாக குட்பை சொல்வதற்காக வரும் போது நடக்கும் உரையாடல் கிளாசிக்காக இருக்கும்.
"இதெல்லாம் நான் ஏன் செய்தேன் என்றால்...
"ப்ளீஸ் இன்னொரு தடவை குடும்பத்திற்காக என்று மட்டும் சொல்லிவிடாதே..."
"இல்லை...(போதை மருந்து தயாரிப்பது) எனக்கு பிடித்திருந்தது...நான் அதில் சிறந்தவனாக இருந்தேன்...அது என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது"
தமிழ்நாட்டில் 'பாசிச பாஜக வந்துடும்' னு தான் ஆரம்பத்தில் எதிர்க்க ஆரம்பித்தார்கள்..இப்போது அது மட்டும் காரணம் இல்லை. இப்போது அது பிடித்துப் போய் விட்டது. லயித்து செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பி ஜே பிக்கு எதிராக கன்டென்ட் கிடைத்தவுடன் குதூகலம் அடைந்து
மீம்ஸ், டிவிட்டர் ட்ரெண்டிங், பதிவுகள்னு அந்த நாளே திருவிழா மாதிரி ஆகி விடுகிறது. ஒரு வேலையை பிடிச்சு செய்யுற கூட்டத்தின் முன்பு கூலிக்கு கூவுற போர்டுதாஸ்களின் கன்டென்ட் நிற்க முடியாது. அவ்வளவு தான் மேட்டர்..
காமராஜர்
ஆன்மீக அரசியல் நடத்தினார் என்று சொன்னதன் மூலமும் தான் சேர்ந்த கட்சியை பாரதிராஜா கட்சி என்று சொன்னதன் மூலமும் தானும் ஒரு டிபிக்கல் சங்கி என்பதை நிரூபித்து
அனைத்து மீம்களுக்கும் நியாயம் சேர்த்தமைக்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment