Showing posts with label மோசடிப் பேர்வழி. Show all posts
Showing posts with label மோசடிப் பேர்வழி. Show all posts

Thursday, October 16, 2025

வேஷம் போட்ட "ரஸ்தோகி" கைது

 


நேற்று ஆங்கில இந்து இதழில் வெளியான செய்தி இது.



பீகாரைச் சேர்ந்த "ஹேமந்த் ரஸ்தோகி" என்ற நபர், டி.டி.இ போல வேஷம் போட்டு அஸ்ஸாமைச் சேர்ந்த அலி என்ற நபரிடம் டிக்கெட் வாங்கித் தருவதாகச் சொல்லி 7500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். 

பணம் கொடுத்து விட்டு அலி டிக்கெட்டுக்காக காத்த்த்த்த்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  ரஸ்தோகியும் வரவில்லை, டிக்கெட்டும் வரவில்லை. 

ஏமாந்து விட்டோம் என்று தெரிந்து போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் அந்த மோசடிப் பேர்வழியை கண்டு பிடித்து பணத்தை மீட்டுக் கொடுத்து விட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்தது காட்பாடி ரயில் நிலையத்தில். . . .

பீகாரைச் சேர்ந்த ஒருவன் அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டில் வைத்து ஏமாற்றியுள்ளான்.

பிகு: தலைப்பில் பெயரைப் பார்த்து வேறு யாரோ என்றுதானே நினைத்தீர்கள் 😛😛😛😛😛

Monday, February 17, 2025

மஹா கும்பமேளா என்பதும் மோசடியா மோடி?

 


இப்போது அலகாபாத்தில் நடந்து கொண்டிருக்கும் கும்ப மேளாவை 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் “மஹா கும்பமேளா” என்றுதான் மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நிஜமாகவே இந்த வருட கும்பமேளாதான் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளாவா?

இல்லை.

நிச்சயமாக இல்லை.

 அதற்கு என்ன ஆதாரம்?

 வயர் இணைய தள இதழ் ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

 2023 ம் வருடம் மொட்டைச்சாமியார் அரசு பெரும் திரள் கூடல்களின் போது விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே 2013 ம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்றது 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளா என்று குறிப்பிட்டுள்ளது.

 


பின் எப்படி இப்போது நடைபெறுவதை மஹா கும்பமேளா என்று சொல்கிறார்கள்?

 எங்கள் ஆட்சிக்காலத்தில்தான் மஹா கும்பமேளா நடைபெற்றது என்று வெட்டிப் பெருமை பேசிக் கொல்ல (எழுத்துப் பிழை அல்ல, 144 வருடங்கள் என்ற பில்ட் அப் கொடுத்ததன் விளைவாகத்தான் மக்கள் அங்கே அதிகமாக சென்று நெரிசலில் சிக்கி இறக்கிறார்கள்) பொய் சொல்கிறார்கள்.

எதையெடுத்தாலும் பொய்,  எதற்கெடுத்தாலும் பொய்.

 பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மானங்கெட்டவர்கள். இதிலே கார்ட்டூன் போட்டால் மானம் போய் விட்டது என்று கூச்சல் வேறு,

Saturday, November 2, 2024

மோசடிப்பேர்வழிகளின் சதுரங்க வேட்டை ஓயாது.

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

மண்ணுளிப் பாம்பை நான்கு கோடி ரூபாய்க்கு விற்கும் வேளையில் ஐவரை காவல்துறை கைது செய்துள்ளது. இது நேற்று வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவார கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மண்ணுளி பாம்பு விற்பனை என்ற மோசடி பற்றிய செய்திகள் சமீப காலமாக வரவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படம் கொடுத்த விழிப்புணர்வு என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் ஒரு மண்ணும் உருவாகவில்லை என்பது இந்த செய்தி உணர்த்துகிறது.

ஆமாம். உண்மைதான்.

வாயை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் மோசடிப் பேர்வழிகள் உலகெங்கும் பரவியுள்ளனர். அவர்கள் மோடி போல பிரதமராகவும் இருக்கலாம், உங்களை ஏமாற்றிய/ஏமாற்றிக் கொண்டிருக்கிற நண்பனாக உலாவிய துரோகியாகவும் இருக்கலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் சதுரங்க வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.


மேலே உள்ளதுதான் நான்கு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட மண்ணுளி பாம்பு. இதற்கு என்ன பெயர் வைத்திருந்தார்களோ? 

விஜய்/ரஜினி/கமல்/அஜித்/சூர்யா/விக்ரம்/சிவ கார்த்திகேயன்/தனுஷ்/சிம்பு?

Monday, August 19, 2024

சங்கிகளின் மோசடிகள் ஓயாது.

 


இன்றைய ஸ்பெஷல் கவனிப்பு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு.

அந்தாள் போட்ட ட்விட்டர் பதிவு கீழே . . .


இந்த புகைப்படம் இதே வாசகத்துடன் சில வருடங்கள் முன்பாக வெளி வந்தது. எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதிச் சடங்கு என்பதை சங்கிகள் மோசடியாக சித்தரிக்கிறார்கள் என்பது அப்போதே அம்பலமாகி சங்கிகள் அசிங்கப்பட்டார்கள்.

அதே பழைய பொய்யை இந்த நாலு கால் ஜந்து பகிர்ந்து கொள்கிறது. 

இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலும் எரியூட்டலும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. எல்லா திரையரங்குகளிலும்  காண்பிக்கப்பட்டது.

அதையே மாற்றுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது!

பிகு: பதிவு இன்னும் ஓயவில்லை.

Saturday, July 6, 2024

கடைசியில் என் பெயரிலேயும் . . .

 


முகநூலில் பல சமயம் நமக்கு ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களிடமிருந்து நட்பழைப்பு வருகிற போது அது போலி என்று தெரிந்து அவர்களை கலாய்த்து அவர்கள் பணம் கேட்பதற்கு முன்பே நான் பணம் கேட்டு வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.

இன்று என் பெயரிலேயே ஒரு திருடன் போலிக்கணக்கு ஆரம்பித்து பல நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நட்பழைப்பு அனுப்பியிருக்கிறான்.


புதிதாக ஏதாவது முகநூல் கணக்கு துவக்கி இருக்கிறாயா என்று என் மகன் தொலைபேசியில் கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் அவன் எனக்கே நட்பழைப்பு அனுப்பி உள்ளான். அந்த நட்பழைப்பை இப்போது காணவில்லை.

எனவே இதனால் நான் அளிக்கும் எச்சரிக்கை என்னவென்றால்

என் பெயரில் வரும் நட்பழைப்பை ஏற்க வேண்டாம். பணம் கேட்டால் ஒரு பைசா கூட அனுப்ப வேண்டாம். முடிந்தால் அந்த போலியை பணம் கேட்டு வெறுப்பேற்றவும்.


Saturday, March 16, 2024

5000 டாலர் கேட்டது தப்பாங்க?

 


போலி முகநூல் ஐ.டி களுடன் உரையாடுவது எனக்கு ஒரு பொழுது போக்கு. இரண்டு நாட்கள் முன்பாக எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்க மூத்த தலைவரும் என்னுடைய சின்ன மாமனாருமான தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது.

 அது போலிக் கணக்கு என்று தெரிந்தும் தோழர் எஸ்.ஆர்.கே அவர்களை ஒரு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

 பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.

 நட்பழைப்பை ஏற்று நானே இன்பாக்ஸில் தகவல் அனுப்பினேன். குசலம் எல்லாம் விசாரித்த பின்பு எனக்கு உதவ முடியுமா என்ற கேள்வியை நானே முதலில்  கேட்டு விட்டேன். சொல்லுங்கள் என்று அந்த போலி பெரிய மனதோடு சொல்ல, கூகிள் நிறுவன பங்குகளை வாங்க 5000 டாலர் வேண்டும் என்று கேட்க, என் டோக்கியோ வங்கி எண்ணை அனுப்புகிறேன் என்று சீனும் போட அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது.

 




கேட்கறதுதான் கேக்கறோம், கொஞ்சம் பெரிசா கேப்போம்னு ஐயாயிரம் டாலர் கேட்டா அது ஒரு குத்தமாங்க? அதுக்கு போய் கோபிச்சிக்கிட்டு ப்ளாக் செஞ்சிட்டாரு                        

 பிகு : இந்த சம்பவம் நடந்தும் நாலு நாளாச்சு. எழுதியும் இரண்டு நாளாச்சி. காலையில் சொன்ன அதே காரணம்தான். நெடும் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியாததால் பகிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, December 27, 2023

இறந்தவர் வருவார் முகநூலில், பணம் கேட்க

 



 

தோழர் சுப்பராயன், நெய்வேலியில் பணியில் சேர்ந்த என்னை தொழிற்சங்க இயக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்பு அதிகாரியாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கே முதுநிலை கோட்ட மேலாளராக வந்தவர். 

 


கடந்த ஆண்டு இறந்து போன அவரது பெயரில் முகநூல் நட்பழைப்பு வந்தது. உள் பெட்டியில் உரையாடலும் தொடங்கியது.

 

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சொர்க்கத்திலா? நரகத்திலா? “  என்று நான் கேட்க

 

மோசடிப் பேர்வழியோ

 

“நான் நலம், நீங்கள் நலமா?

 

என்று நலம் விசாரிக்க

 

அடுத்த கேள்வியை இன்னும் காட்டமாக

 

“போன வருடம்தான் இறந்து போனீர்கள். எப்படி மறுபடியும் வந்தீர்கள்?” என்று கேட்க

 

அந்தாளோ தன் பணிதான் முக்கியம் என்பது போல

 

“கூகிள் பே இருக்கிறதா?”

 

என்று கேட்க

 

“ஹ்லோ ஃபிராடு”

 

என்று அழைத்த பின்பு ப்ளாக்கி விட்டு போய் விட்டான்.

 

இப்படி ஃபேக் அக்கவுண்ட் தொடங்கி  யாராவது ஏமாறுவார்களா என்பதையே வேலையாகக் கொண்டு அலைகிறார்கள் போல.

 

இந்த மாதம் மட்டும் இது போல நான்கு போலிக் கணக்குகளின் அழைப்பு.

 

நம்ம பெயரில் என்றைக்கு ஃபேக் அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போகிறானோ தெரியவில்லை.

 

அப்படி யாராவது பணம் கேட்டால் தராதீர்கள். எனக்கு தேவையென்றால் நானே நேரடியாக தொலை பேசியில் அழைத்து கேட்பேன்.

 

 

Wednesday, December 20, 2023

ஆட்டுக்காரன் போட்டு, நயினாரு ????

 


அவரு போட்டு, இவரு ஜேசிபி

 


மக்கள் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்த சாலையில் படகில் பயணம் சென்று பல்பு வாங்கினான் ஆட்டுக்காரன்.

 


ஆட்டுக்காரன் கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஜே.சி.பி யில் பயணம் போய் சீன் போடுகிறார். இதுல ராஜ்கிரண் மாதிரி வேட்டிக்கட்டு வேற . . .


காலி அண்டாவில் சமையல் செய்வது   போன்ற காட்சிகள் இன்னும் வரவில்லை.

 

அதுவும் வரும்.

பிகு: மாரி செல்வராஜூம் மறை கழண்ட சங்கிகளும் - மாலை

Sunday, December 10, 2023

சூர்யாவின் மானத்தை வாங்கும் . . .

 


நடிகர் சூர்யா தொடர்பான பதிவென்று ஆவலோடு வரும் சங்கிகளே, ஸாரி. இது சங்கி எஸ்.ஜி.சூர்யாவின் மானத்தை வாங்கிய பதிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் அந்தாளை புரட்டியெடுத்துள்ளார். அவனுக்கு வெட்கம் மானம் ரோஷம் இருக்குமானால் கயிற்றையோ, தண்டவாளத்தையோ நாட வேண்டும். 


இதோ தோழரின் பதிவுகள்.

கால்ரூபாய்க்கு வேலைசெய்து லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் பாஜக!

மிஸ்டர் விளம்பர மோகி BJP Tamilnadu Dr.SG Suryah பீற்றிக்கொண்டு அலைவது உங்கள் இயல்பு,மரபு.
கொடுக்கிற பொருளுளைப்போல லட்சம் மடங்கு விளம்பரம் செய்து ஏமாற்றுவது உங்கள் வாடிக்கை.
கம்யூனிஸ்டுகளின் இயல்பானகுணம் மக்களோடு நிற்பது.
இரண்டு தலைவர்கள் நோகாமல் போஸ்கொடுத்து பந்தா செய்கிற உங்களோடு கம்யூனிஸ்டுகள் போட்டி போடவே முடியாது.
இதோ எமது தோழர்கள் களத்தில் மக்களுக்கு தங்கள் கடமையைச் செய்யும் சில காட்சிகள்.அதுவும் ஒரு விளம்பர மோகிக்கு காட்டுவதற்காக.கொஞ்சமாவது நேர்மையோடு சேவைசெய்ய கற்றுக்கொள்ளுங்கள்.


















இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் இரண்டு செய்திகள் சங்கிகளின் போலித்தனத்தை தோலுரிக்கிறது.

ஹலோ மிஸ்டர் ஃபேக் சேவக் Dr.SG Suryah !
சேவை மட்டுமல்ல; உங்க ஆட்கள் நன்கொடை கொடுத்ததா சொன்னதும் ஃபேக்காம்!





ஹாஹாஹா! மிஸ்டர் Dr.SG Suryah !
உங்க ஆளுங்க அதாவது பாஜக்கூட இல்லை; சுத்தம் சுயம்பிரகாச @RSSorg நேபாள பூகம்பத்திற்கு
" சேவை" செய்யப்போனதாகவும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் 'வருத்தப்பட்டு' பின்பு உலகமே சிரிப்பாய் சிரித்த கதை இது.



Friday, December 8, 2023

போலியோடு மீண்டும் ஜாலியாய் . . .

 


நம்முடைய நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி நம்மிடம் பணம் கேட்கும் மோசடிப்பேர்வழிகளோடு உரையாடுவது ஒரு ஜாலியான பொழுது போக்கு,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளம் (BEFI) யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கிருஷ்ணன் பெயரில் அப்படி ஒரு போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.

அந்த போலியிடமிருந்து நேற்று நட்பழைப்பு வந்திருந்தது. சரி கொஞ்சம் விளையாடுவோம் என்று அதை ஏற்றுக் கொண்டேன்.

உடனடியாக இன் பாக்ஸில் உரையாடலை தொடங்கி விட்டது அந்த போலி. தான் யாருடைய பெயரில் கணக்கு தொடங்கியுள்ளோம் என்று ஏதாவது ஆராய்ந்து துவக்கியதா என்று அறிய வங்கி ஒப்பந்தம் தொடர்பாக

“ஐந்து நாள் வாரம் என்ன ஆனது?” என்று முதல் கேள்வியை கேட்க அந்த போலியோ “நன்று” என்று பதிலளித்தது.

“எப்போது கையெழுத்திடுவீர்கள்” என்ற கேள்விக்கோ “ஓகே” என்றது.

“உங்கள் மாநாடு எப்போது?” என்று நான் கேட்க

அந்த போலி  “ஜிபே உள்ளதா?” என்று கேட்டது.

“நான் இருக்கு ஆனா இல்லை” என்று சொல்ல

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல

“என் நண்பருக்கு பணம் அனுப்ப வேண்டும். உதவ முடியுமா?” என்று தன் வேலையில் கவனமாக இருந்தது.

“உன் அப்பா பெயரை சொல்லவும்” என்று கேட்டேன். 

தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்களின் தந்தை தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முக்கியத் தலைவர். வேலூர் நகரத்தில் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்கியவர். அவர் பெயரைச் சொன்னாலே எங்களின் மூத்த தலைவர்கள் நெகிழ்ந்து போவார்கள்.

 இந்த கேள்விக்கு பதில் இல்லை.

 அடுத்து “நான் யாருன்னாவது சொல்லுய்யா” என்று கேட்க

 





அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது. ஃப்ராடு என்றெல்லாம் திட்டும் முன்பே அப்படி ப்ளாக் செய்து ஓடி விட்டது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.

 

பார்ப்போம். மீண்டும் ஒரு போலிக்கணக்கோடு வராமலா இருக்கப் போகிறது!

Wednesday, August 30, 2023

குஜராத்தியாமே! எதுக்கு வம்பு?

 


திரிவேதி என்ற ஒரு மோசடி பேர்வழி ஒரு குஜராத்தி என்ற செய்தியை படித்தேன்.


 
அதெப்படி நரேந்திர டிமோ, அமித்து, நீரவ் டிமோ, லலித் டிமோ, மெகுல் சோஸ்கி என்று இந்தியாவின் பெரிய மோசடிப் பேர்வழிகள் எல்லோரும் குஜராத்தியாகவே இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு அச்சம்.

 இந்த குறிப்பிட்ட மோசடிப் பேர்வழிகளைப் பற்றி நான் எழுத எல்லா குஜராத்திகளையும் பொதுமைப்படுத்தி எழுதியதாக எவனாவது சங்கி கோர்ட்டுக்கு போனால் என்ன ஆகும் என் நிலை?

 அதனால் என் பதிவின் இரண்டாவது பத்தியை நான் எழுதவே இல்லை. ஆமாம்.

Wednesday, November 2, 2022

எல்லா கூமுட்டைகளும் அங்கேதான்

 


கீழே  உள்ளது ஆட்டுக்காரன் போன வருடம் போட்ட சீன்


இப்போது நீங்கள் பார்க்கப் போவது பால விபத்து நடந்த மோர்பியில் மற்ற அனைவரும் நடந்து போகையில் பாஜக எம்.எல்.ஏ மட்டும் நீந்திப் போகும் அரிய காட்சி.


சமூக வலைத்தளக் காலத்தில் அம்பலப்பட்டு அசிங்கப்படுவோம் என்ற நிலை இருந்தும் நாடகம் போடுகிற கூமுட்டைகள் எல்லாமே பாஜகவில்தான் இருக்கிறது.

மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை, நாம் செய்கிற மோசடியை செய்தே தீர்வோம் என்று திமிரோடு நடப்பவர்களை கூமுட்டை என்றா சொல்வது! அயோக்கியர்கள் என்றல்லவா கூற வேண்டும் என்று நீங்கள் சொல்வதும் எனக்கு புரிகிறது.

அதுவும் சரிதான்.

பாஜகவில் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் அயோக்கியன்தானே!

Wednesday, September 7, 2022

அமிதாப் புகைப்படத்தோடு ஒரு . . . . .

 


இன்று அதிகாலையில் வாட்ஸப்பில் ஒரு படமும் கூடவே ஒரு வாய்ஸ் மெஸேஜூம் 9049952908 (சாகர் தங்கர், மும்பை என்று ட்ரூ காலர் சொன்னது0 என்ற எண்ணிலிருந்து வந்திருந்தது.

25 லட்ச ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்திருப்பதாக சொன்னது அந்த செய்தி. அதை பெறுவதற்கு வாட்ஸப் கால் மட்டுமே செய்ய வேண்டும் என்று அந்த ஹிந்தி வாய்ஸ் மெஸேஜிலிருந்து புரிந்து கொண்டேன்.

கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்வின் லோகோ, அமிதாப் பச்சன் புகைப்படம், இந்திய அரசுச் சின்னம், வங்கிகளின் லோகோ என்று ஏராளமாக உள்ளதை நம்பி யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காகவே இப்பதிவு.


Friday, July 8, 2022

ராசியா? மோடியின் ராசியா?

 


இதுவரை மூன்று பேர் இந்த படத்தை அனுப்பியுள்ளார்கள்.

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனும் பதவி விலகியதால் "மோடி ராசியில்லாத மனிதன்" என்று சமூக ஊடகங்களில் ஒரு கருத்து வேகமாக உலா வருகிறது.

சங்கிகளின் விஷமம் மோடிக்கு எதிராகவே திரும்பி விட்டது. வைகோவை ராசியில்லாதவர் என்று கட்டமைத்தார்கள். ராகுல் காந்தியை பப்பு என்று ஸ்தாபித்தார்கள். மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று பரப்பினார்கள். 

இப்போது அதே செண்டிமெண்ட் மோடியை நோக்கி திரும்பியுள்ளது.

ட்ரம்போ, ராஜபக்சேவோ, போரீஸ் ஜான்சனோ, இ.ஒ.பி.எஸ் களோ இன்று பதவியில் இல்லை என்றால் அதற்கு மோடியின் ராசி காரணம் என்று சொல்லிப் போவது கூட அரசியல் புரிதலின்மைதான்.

மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் உணர்வுகளை உசுப்பேத்தியே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் இவர்களின் இன்றைய நிலைமைக்குக் காரணம். இவர்களின் உண்மை முகங்களை புரிந்து கொண்டு மக்கள் வீதிக்கு (போராட, வாக்களிக்க) வந்ததால் இவர்கள் இன்று மகுடமிழந்து மண்ணில் விழுந்தனர்.

இவர்கள் அனைவரும் மோடியின் நண்பர்கள். அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள்தான்.

மற்றவர்களின் வீழ்ச்சிக்கு மோடியின் ராசி காரணமா என்று ஆராய்வதை விட மோடியின் அரசியல் வீழ்ச்சிக்கு என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திப்பது மிகவும் முக்கியம். 

Tuesday, July 5, 2022

மோடி கம்மிங். தியாகிகள் உஷார்

 


காலையில் கண்ணில் பட்ட படம் முதலில் உள்ளது. ஆந்திராவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை மோடி வணங்குகிறாராம்.

விடுதலைப் போரைக் காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தின் வாரிசு, விடுதலை வரலாற்றை மாற்றி எழுதும் மோசடிப் பேர்வழி, சுதந்திரத்தின் விழுமியங்களை சிதைக்கும் கொலைகாரன், இந்திய செல்வத்தை விற்கும் தரகன் மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது!

தியாகிகளே எச்சரிக்கையாக இருப்பீர்!

நாடாளுமன்ற கட்டிடத்தை முத்தமிட்ட மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் சீரழித்த குற்றவாளி.

உங்களை வணங்கும் கரங்களுக்குள் கொலை வாள் ஒளிந்திருக்கும். எச்சரிக்கையாக இருப்பீர். உங்கள் பென்ஷனைக் கூட அந்த படுபாவி பறிக்கலாம். உங்களை காட்டிக் கொடுத்த கருங்காலி எவனாவது இருந்தால் அவனுக்கும் தியாகி அடையாளி கொடுக்கலாம்.

எலிசபெத் ராணியின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த துரோகி கோழை சாவர்க்கரை வீரன் என்று அழைப்பவர்கள் அல்லவா இவர்கள்!

Saturday, April 9, 2022

நம்ப நான் சங்கியா?

 


நேற்று முன் தினம் ஒரு குறுஞ்செய்தி.

பேன் கார்டை இணைக்காவிட்டால் என் ஸ்டேட் வங்கி கணக்கு காலாவதி ஆகி விடும் என்று சொன்னது அச்செய்தி.

எனக்கு அங்கே அக்கவுண்டே இல்லைடா என்று திட்டி ஒரு பதில் அனுப்பினேன். 





மறுபடியும் நேற்று அதே செய்தி இன்னொரு எண்ணிலிருந்து வந்தது.

ஒருவேளை தமிழ் தெரியாத மோசடிப் பேர்வழிக் கூட்டம் போல என்று நினைத்து ஆங்கிலத்தில் திட்டி செய்தி அனுப்பினேன்.





பாஜக ஐ.டி விங் எதை பதிவு செய்தாலும் நம்பி அதை பின்பற்றி பகிர்கிற முட்டாள் சங்கி போல நம்மையும் நினைக்கிறாங்களோ?