Showing posts with label ஆளுனர். Show all posts
Showing posts with label ஆளுனர். Show all posts

Sunday, February 12, 2023

தீர்ப்பல்ல, ஆளுனர் நுழைவுத் தேர்வு

 


சில வருடங்கள் முன்பாக படித்ததை ஆளுனர் நியமன அறிவிப்பு நினைவு படுத்தி விட்டது.

"இப்போதெல்லாம் சில நீதிபதிகள் தீர்ப்பெழுதுவதில்லை. ஆளுனர்,எம்.பி, தூதர் போன்ற அடுத்த பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்"

இதெல்லாம் 2014 முதல் வந்த கொடுமை.

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் எழுதிய முகநூல் பதிவை படியுங்கள் .வலி புரியும்.

யாரென்று தெரிகிறதா?

உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டதில் ஆச்சரியமில்லை.

அவர் பாபர் மசூதி வழக்கிலும், செல்லாப் பண நடவடிக்கை வழக்கிலும் ‘அவர்களுக்கு’ சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் அமர்வில் (bench) அங்கம் வகித்தவர்.

மேலும் இந்துத்வத்திற்கு ஆதரவாகப் பேசி வருபவர். டிசம்பர் 26, 2021 அன்று ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான அகில் பாரதீய அதிவக்ட பரிஷத் இந்திய நீதித் துறையை பாரதீய கலாச்சார்த்திற்கு உகந்த வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் வழக்கறிஞர்களுக்கானது) தன் தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. அதில் பேசிய நசீர், “இந்திய நீதித் துறை மனு, சாணக்கியர், காத்தாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவாக்கியர். போன்றவர்கள் உருவாக்கிய சட்டப் மரபை புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது.”

அவருடய உரை குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் கட்டுரை வெளியிட்டோம். Live.law என்கிற இணைய இதழிலும் விவரங்கள் வெளியாயின.

Wednesday, April 13, 2022

நீயும் வேணாம். உன் விருந்தும் வேணாம்

 


ஆட்டுத்தாடி அளிக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

கீழே உள்ள அறிக்கை காரணங்களை விளக்குகிறது.


தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான ஆளுனர் இங்கே அவசியமில்லை, அப்படிப்பட்ட ஒரு நபரை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெளிவாக சொல்லி விட்டது.

மற்ற கட்சிகளும் புறக்கணித்தால் நன்றாக இருக்கும்.

அப்படி அனைவரும் புறக்கணித்தால் கூட அவருக்கு ரோஷமெல்லாம் வராது என்[பது வேறு விஷயம்.


Friday, February 4, 2022

ஆட்டுத் தாடியின் ஆணவம் . . .

 


உங்களால் ஒரு போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று ராகுல் காந்தி மக்களவையில் முழங்கிய போதே நீட் மசோதா தொடர்பாக ஒரு அராஜகம் நிகழும் என்று எதிர்பார்த்தேன்.

அது போலவே நடந்து விட்டது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

ஏழை எளிய மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப் படுகின்றனர் என்பதுதான் நீட் எதிர்ப்பிற்கான அடிப்படை. அதை காரணமாக சொல்லி திருப்பி அனுப்பியதுதான் ஆட்டுத்தாடியின் கொழுப்பு.

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா! இது நாகாலாந்து இல்லை" என்றெல்லாம் முரசொலியில் எழுதியது திமுகவும் அரசும் ஆட்டுத்தாடிக்கு உணர்த்தி மாநிலத்தை விட்டே ஓட வைக்க வேண்டும்.

ராகுல் காந்தியை பப்பு என்று மோடி வகையறாக்கள் கிண்டல் செய்தாலும் அவருக்கு பயப்படுகின்றார்கள் என்பதை செய்கையால் காண்பித்து விட்டார்கள். சங்கிகள் மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

ராகுல் காந்தி சபித்தது போல தமிழ்நாட்டை எந்நாளும் ஆள முடியாது என்பதை உணர்ந்த காரணத்தால்தான் வஞ்சிக்க தொடங்கி விட்டார்கள்.

Tuesday, January 4, 2022

அன்னிக்கே தூக்கியிருக்கனும் மோடி

 



இன்றைக்கும் ஒரு கவர்னர் பற்றி எழுத வேண்டியுள்ளது. முந்தைய பீகார், ஒடிஷா, காஷ்மீர் மற்றும் இப்போதைய சத்யபால் மாலிக்கும் ஆரிப் முகமது கான் போல பல கட்சிகளைப் பார்த்து பாஜக வில் செட்டிலானவர்.

நல்லவரா இல்லை கெட்டவரா என்று முடிவு செய்ய முடியாத ஒரு குழப்பவாதி. 

அம்பானியின் கம்பெனிக்கு லாபம் வருவது போல கொண்டு வந்த ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை  நிராகரித்தவர்.

இரண்டே இரண்டு எம்.எல்.ஏ கொண்ட கட்சிக்காரரை முதலமைச்சராக்க பாஜக கொடுத்த நிர்ப்பந்தத்தை ஏற்காமல் சட்டசபையை கலைத்தவர்.

370 சட்ட நீக்கத்திற்கான பின்புலத்தை தயாரித்துக் கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுச்சிறையில் அடைத்த மகானுபாவனும் இந்த மனிதனே!

இவர்தான் மோடியைப் பற்றி நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.

"மோடி மிகவும் அராஜகமானவர்.  நம்முடைய  500 விவசாயிகள் இறந்துள்ளனரே என்று சொன்னதற்கு "எனக்காகவா இறந்தார்கள்?" என்று கிண்டலாகக் கேட்டார். நீதானே ராஜா! உன்னால்தான் இறந்தார்கள் என்று சொன்னேன். எங்களுக்குள் வாக்குவாதம் வந்து விட்டது"

அன்னிக்கு அம்பானி திட்டத்தை நிராகரிச்ச போதே போஸ்டிலிருந்தோ அல்லது உலகத்திலிருந்தோ தூக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா பில்லா-ரங்கா கிரிமினல் கூட்டாளிகளே?

Monday, January 3, 2022

உங்கள் கையில்தான் உள்ளது கவர்னர் . . .



 "ஜனாதிபதியும் ஆளுனரும் அரசியல் சாசன நிறுவனங்கள். அவர்களை விவாதப் பொருளாக்கக் கூடாது"

என்று வெடித்துள்ளவர் கேரள மாநில ஆளுனர் ஆரிப் மொஹமது கான். 

ஏராளமான கட்சிகளில் இருந்து விட்டு பாஜகவில் செட்டிலாகி கவர்னரான பெருமைக்குரியவர்.

இப்போது ஏன் அவர் சீறுகிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் தரச் சொல்லி வற்புறுத்துகிறார். பல்கலைக்கழகங்களின் சுயேட்சையான செயல்பாட்டில் தலையிடாதீர்கள் என்று கேரள மாநில அரசு சொல்கிறது.

காங்கிரஸூம் பாஜகவும் கை கோர்த்துக் கொண்டுள்ள கேரளாவின் அதிசயமாக மாநில காங்கிரஸ் தலைவர் சதீஷன் கவர்னரைக் கண்டிக்க அவருக்கு கோபம் வந்து விட்டது.

அரசியல் சாசன நிறுவனங்களான ஜனாதிபதியையும் ஆளுனரையும் விவாதப் பொருட்களாக மாற்றக் கூடாது என்றால் அந்த பதவிகளுக்கேற்ற பொறுப்புணர்வோடு, ஒன்றிய அரசின் ஜால்ராவாக அல்லாமல். மலிவான அரசியல் செய்யாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அவருக்கு யாராவது சொல்லுங்களேன் . . .

Tuesday, October 9, 2018

கவர்னர் தாத்தா குதிருக்குள் இல்லையாம்




நக்கீரன் ஆசிரியர் திரு கோபால் அவர்கள் ஆளுனர் மாளிகையின் புகாரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. 

இதன் மூலம் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி மீதான பாலியல் சர்ச்சை விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதையும் அந்த சர்ச்சையை மறைக்க மிரட்டல் ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் அவர்களே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.

ஆனால் திரு கோபாலை விடுவித்ததன் மூலம் நீதிமன்றம் புரோஹித்துக்கும் எடுபிடி அரசுக்கும் சரியான அடி கொடுத்துள்ளது.

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஜென்மம் என்றால் புரோஹித் தாத்தா, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு  மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டை விட்டே ஒட வேண்டும்.

ஆனால் காவிக் கயவர்களுக்கு அதெல்லாம் கிடையாது என்ற உண்மையை நாம் மறக்க முடியாதல்லவா!



Wednesday, July 4, 2018

ஆட்டுத் தாடிகள் அடங்குமா?




மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் முக்கியம் என்றும் அவர்கள் முடிவுப்படியே ஆளுனர்கள் செயல்பட வேண்டும் என்ற அபூர்வமான தீர்ப்பொன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு எதிராக புதுடெல்லி துணை நிலை ஆட்டுத்தாடி நடத்திக் கொண்டிருந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தீர்ப்பு இது.

நான்கு மாநில முதல்வர்களை சந்திக்க முடியாது என்று திமிர்த்தனத்தோடு நடந்து கொண்ட ஆணவ மனிதனின் கன்னத்தில் பளீரென்று அறைந்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இது அந்த மனிதனுக்கு மட்டும் பொருந்துவது அல்ல.

தமிழகத்தில் ஆஆஆஆஆஆஆஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் புரோஹித்துக்கள்

புதுவையில் அடாவடி செய்து கொண்டிருக்கும் பேடி அம்மையார்

ஆகியோருக்கும் பொருந்தும்.

ஆட்டுத்தாடிகள் இனியாவது அடங்கிட வேண்டும்.


Saturday, May 19, 2018

ஆளுனரை நீக்கு, அவைக்குறிப்பை நீக்கு . .


யெட்டி ராஜினாமா நல்ல விஷயம். 

நீண்ட  நாட்களுக்குப் பிறகு நடந்த நல்ல தரமான சம்பவம்.

பதினைந்து நாள் அவகாசம் இருபத்தி நான்கு மணி நேரமாக குறைக்கப்பட்டதால் குதிரை பேர டீலிங்கிற்கு வாய்ப்பில்லாமல் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவம்.

"அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்"

என்பது இப்போது யெட்டியை விட மோடியை விட

கர்னாடக ஆட்டுத்தாடிக்குத்தான் மிகவும் அசிங்கம்.

தன் விசுவாசத்தைக் காண்பிக்க யெட்டியை பதவியேற்க அழைத்த,

தன்னைப் போலவே இன்னொரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகரை நியமித்த

ஆளுனர், வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் அவரே ராஜினாமா செய்ய வேண்டும்.

அதெல்லாம் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

ராஜினாமா செய்வது என்று முடிவெடுத்த பின்பு எதற்கு உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்த வேண்டும்? அது எல்லாமே பொய், பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.

அவசியமற்ற அந்த உரை கர்னாடக சட்டப்பேரவை ஆவணங்களில் பதிவாக வேண்டிய அவசியமில்லை.

அதையும் நீக்கிட வேண்டும்.

இறுதியாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு ஒரு வார்த்தை.

உங்களுக்கான உண்மையான சோதனை இப்போதுதான் தொடங்குகிறது. அடிபட்ட நரி மூர்க்கத்துடன் திருப்பித் தாக்கும். உங்களின் ஒற்றுமை மூலமும் மக்களுக்கான நல்லாட்சி மூலமும்தான் இப்போது கிடைத்துள்ள வெற்றிக்கனியை தக்க வைத்துக் கொள்ள முடியும். 

அதை மட்டும் மறந்து விடாதீர்கள்.




Tuesday, April 17, 2018

ராசாவே சொல்லியாச்சா...ரைட்டூடூடூ




“அலுவலகப்பணிக்கு அனுப்புவது தொடர்பாகத்தான் பேராசிரியர் நிர்மலா மாணவிகளோடு பேசினாரே தவிர பாலியல் நோக்கம் அல்ல”

எப்போ எச்.ராசா இப்படி சொன்னாரோ

அப்போதே உறுதியாகி விட்டது.

அந்த மிகப் பெரிய ஆபாச வளையத்தில் ஆளுனர் உட்பட காவிப் பெருந்தலைகள் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளார்கள் என்பது தெளிவாகி விட்டது.

நீயாகவே வந்து ஏனய்யா இப்படி மாட்டிக் கொள்கிறாய்?

பின் குறிப்பு :

அவசரம் அவசரமாக ஆட்டுத்தாடி விசாரணைக் கமிஷன் அமைத்ததும் இன்னொரு சான்று. ஒரு பிரச்சினையை ஊத்தி மூட காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரே வழி விசாரணைக் கமிஷன் அமைப்பதுதானே!


Monday, April 16, 2018

என்.டி.திவாரி, சண்முகநாதன், பன்வாரிலால் . . .



அருப்புக்கோட்டை பேராசிரியையின் ஆடியோ உரையாடலை கேட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

மாணவிகளை வலை வீசுவதில் அவரிடம் ஒரு தொழில்முறை அணுகுமுறை (Professional Approach) தெரிகிறது. மாணவிகள் எங்களுக்கு விருப்பமில்லை, இனி இது தொடர்பாக பேச வேண்டாம் என்று சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை.

அந்த உரையாடலைக் கேட்ட எவருக்கும் தெளிவாகத் தெரிகிற ஒரு விஷயம் என்னவென்றால் 

இவர் வெறும் கீழ்நிலையில் உள்ளவர்தான். தொடர்ச்சியாக இதையே முக்கியமான பணியாக கொண்டவர் என்பதும் தெரிகிறது.

அவர் சார்ந்த கல்லூரி தாண்டி இந்த ஆபாச வளையாத்தில் யாரெல்லாம் உள்ளார்களோ, அவர்கள் அனைவரும் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பேராசிரியை தவிர இதிலே முக்கியமானவராக நாம் அறிவது தமிழகத்தின் ஆட்டுத்தாடி பன்வாரிலால் புரோஹித்.

அந்த மனிதன் ஒரு மோசமான குணாம்சம் கொண்டவன் என்பது கடலூரில் குளியறையில் எட்டிப்பார்த்த போதே தெரிந்ததுதான். இந்த பிரச்சினையில் தொடர்புள்ள திமிலங்கள் யார் என்பது தெரிய வேண்டுமென்றால் எடுக்கப்பட வேண்டிய முதல் நடவடிக்கை ஆளுனரை பதவி நீக்கம் செய்வதுதான்.

ஆளுனர் மாளிகைகளை கேளிக்கை விடுதிகளாக்கிய பெருமை என்.டி.திவாரிக்கும் சண்முகநாதனுக்கும் உண்டு. அந்த ஞான மரபு முடிந்து போகாமல் தமிழக கவர்னர் தாத்தா பார்த்துக் கொள்கிறார் போல . . . 




Saturday, December 16, 2017

ஆளுனருக்கு ஏனய்யா இந்த ஆய்வு?



கடலூருக்கு ஆய்வு என்ற பெயரில் சென்ற ஆட்டுத்தாடி ஆளுனர் மிகவும் அற்பத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். 

பாரதீய ஜனதா கட்சியை  பாரதீய ஜொள்ளு கட்சி என்று சிலர் அழைப்பார்கள். அது பொருத்தமானது என்பதை மேகாலயாவிற்கு ஆளுனராய்ப் போன சண்முகநாதன் போல அவ்வப்போது பலர் நிரூபித்து விடுகிறார்கள்,  இப்போது பன்வாரிலால். 

இவ்வளவு அசிங்கப்பட்ட பின்பும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது இன்னும் அசிங்கம்.

"இஞ்சினியரை வேவு பார்த்தது",  "சட்டசபையில் பலான படம் பார்த்தது" 
"அடுத்தவர் தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு கூட்டிப்போனது" என்று அசிங்கப்படுவதெல்லாம் எங்களுக்கு புதுசா என்ன என்று காவிகளின் மைண்ட் வாய்ஸ் ஒலிப்பது நன்றாகக் கேட்கிறது. 

Wednesday, August 23, 2017

மோடி போலவே அந்த லேடியும் . . . .




மோடியைப் போலவே, சொல்லப்போனால் சில சமயம் மோடியை விட அதிகமே ஸ்டண்ட் அடிப்பவர், மோடியால் புதுவை துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்ட  முன்னாள் ஊழல் எதிர்ப்புப் போராளி (அப்படி வேடம் போட்ட) கிரண் பேடி அவர்கள்.

அவர்கள் நள்ளிரவில் நகர் உலா போன காணொளிக் காட்சி இங்கே.



நகர் உலா போவதை புகைப்படம் எடுக்கவும் காணொளி எடுக்கவும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அம்மணி ராஜ் நிவாஸை விட்டு புறப்பட்டுள்ளார்.

சரியாக புகைப்படம் எடுக்கிறார்களா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார்.

ஆனால் பாவம் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது மட்டுமல்ல

அவர் போட்ட ஹெல்மெட் உத்தரவை அவரே பின்பற்றவில்லை என்ற விமர்சனம்தான் வந்தது.

விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு விஷயம் ஏனோ புரியவில்லை.

ஹெல்மெட் போட்டால் புகைப்படத்தில் முகம் எப்படி நன்றாகத் தெரியும்?
புகைப்படத்தில் முகம் தெரியாவிட்டால் பின் என்ன எழவிற்கு நகர் உலா போவது?
 

Tuesday, July 15, 2014

அமைச்சரென்றால் கூடாது, ஆட்டுத்தாடி ஆளுனரென்றால் பரவாயில்லை



எழுபத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கிடையாது என்று முடிவு செய்த மோடி அரசு இப்போது நியமித்துள்ள ஐந்து ஆளுனர்களில் குறைவான வயதுடையவரே எழுபத்தி எட்டு வயது தாத்தாதான்.அமைச்சர்களை நியமிப்பதற்கான உரிமை முழுக்க முழுக்க பிரதமருடையது என்றாலும் மோடியின் லாஜிக் என்னவென்று புரியவே இல்லை.

எழுபத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவரால் அமைச்சராக செயல்பட முடியாது என்றால் ஆளுனராக மட்டும் செயல்பட முடியுமா?

அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்ட சில தாத்தாக்களை கழட்டி விட எழுபத்தி ஐந்து வயது என்று தேவைப்பட்டது. கட்சியில் இருந்து குடைச்சல் கொடுக்க வாய்ப்புள்ள தாத்தாக்களை ஆளுனராக அனுப்பியாகி விட்டது.

ஆட்டின் தாடிதானே கறுப்பாய் இருந்தால் என்ன? நரைத்துப் போனால் என்ன? என்பது மோடியின் எண்ணம் போலும்!