Thursday, September 30, 2021

ஜல சமாதிக்கு கூவம் போதும்ஜி

 


 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்காவிட்டால் தான் ஜல சமாதி அடையப் போவதாக ஒரு உபி சாமியார் சொல்லியுள்ளார்.

 


அந்த சம்பவம் சீக்கிரம் நடக்கட்டும் என்று எழுதியுள்ள பலரும்  எங்கே அந்த சம்பவம் நடக்கும் என்பதை தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நடக்கட்டும், கங்கை யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் நடக்கலாம் என்ற ஆலோசனைகளை வேறு பார்த்தேன். அதில் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

 

குமரி முனையோஈ அல்லது திரிவேணி சங்கமமோ. இது போன்ற சாக்கடை சாமியார்களின் சடலத்தின் மூலம் மாசுபடுவது சரியல்ல. சடலங்களை அப்படியே இழுத்து விடும்  வாரணாசி கங்கை கூட அவசியமில்லை.

 

கலீஜூ சாமியாருக்கு கலீஜா இருக்கும் கூவம் போதும்.

 

தமிழ்நாட்டில் எதற்கு இப்படி ஒரு சம்பவம் என்று நினைத்தீர்கள் என்றால் ஹைதராபாத் ஹூசைன்சாகர் ஏரியில் மூழ்கட்டும்.

 

முன்பொரு முறை ஏரியின் நடுவே உள்ள புத்தர் சிலையை பார்க்க படகில் சென்ற போது நாற்றம் தாங்க முடியவில்லை. இப்போதும் அந்த நிலை நீடித்தால் அந்த இடம் கூட மிகவும் பொருத்தமே!

பூட்ட கேஸாகிடுமோ காங்கிரஸ்?

 

அவசியமான முன் குறிப்பு:

 அடுத்த கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி எழுதுவதில்லை என்றொரு சுய கட்டுப்பாடு வைத்துள்ளேன். அதனால்தான் படேல் ஜாதி வாக்குகளை முன்வைத்து குஜராத்தில் நடந்த முதல்வர் மாற்றத்தைப் பற்றிக் கூட எதுவும் எழுதவில்லை. அதனால்தான் பத்து நாட்களுக்கு முன்பு எழுதிய பதிவை பிரசுரிக்கலாமா, வேண்டாமா என்ற குழுப்பத்திலேயே இருந்தேன்.

 எந்த சித்துவின் பேச்சைக் கேட்டு பஞ்சாப்பில் முதல்வரை மாற்றினார்களோ, அதே சித்து அடுத்த கட்சிக்கு தாவ தயாராக இருப்பதும் காங்கிரஸ் அடையாளத்தோடு முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்கும் பாஜகவிற்கு மாற தயாராக இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்குள்ளாக சீனியர் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளதும் அவர்கள் வீட்டிற்கு முன்னே தொண்டர்களை வைத்து தகராறு செய்துள்ளதும் இத்தனை நாள் வெளியிடாத பதிவை பிரசுரிக்க வைத்து விட்டது.

 


 

அடுத்த கட்சியின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி எழுதக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டையும் மீறி பஞ்சாப் மாற்றத்தினால்  காங்கிரஸ் கட்சியைப் பற்றி அதற்குள்ளே நடக்கும் குழப்பங்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அவர் மீதுள்ள “மீ டு” குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப் பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே முதல்வராய் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முடிவு சங்கிகளுக்குத்தான் பிரச்சாரம் செய்ய ஒரு பாயிண்ட் கொடுத்தது போல அமைந்து விட்டது.  அவர்களும் கேடி.ராகவனையும் சதானந்த கௌடாவையும் வசதியாக மறந்து விட்டு யோக்கியர்களாக நடிக்கும் கொடுமையை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 இந்தியாவில் இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி

 பஞ்சாப்,

சத்திஸ்கர்,

ராஜஸ்தான்

 ஆகிய மாநிலங்களில் மட்டுமே உள்ளது.

 உட்கட்சி மோதல் காரணமாகவே மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது.

 உட்கட்சி மோதல் காரணமாகவே பாண்டிச்சேரியில் பலவீனமாகியது.

 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது 52 இடங்களில்தான். அதிலே பாஜகவுடன் ரகசிய டீலிங் வைத்து சபரிமலை பிரச்சினையை உசுப்பேத்தி கேரளாவில் மட்டும் பெற்றது பதினைந்து இடங்கள். பஞ்சாபும் தமிழ்நாடும் தலா எட்டு இடங்களைக் கொடுத்தது.

 அஸ்ஸாம். தெலுங்கானா மாநிலங்கள் தலா மூன்று எம்.பிக்களையும் சத்திஸ்கரும் மேற்கு வங்கமும் தலா இருவரைத் தர

 பீஹார், கோவா, கர்னாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிர, ஒடிஷா, உத்திரப் பிரதேசம் (சோனியா காந்தி மட்டுமே வென்றார். அமேதியில் ஸ்ம்ர்தி இராணியிடம் தோற்றுப் போன ராகுல் காந்தி வயநாட்டால் பிழைத்தார்) , மணிப்பூர் ஆகிய 9 மாநிலங்களில் ஒரே ஒரு இடம் மட்டுமே பெற்றனர். இவற்றைத்தவிர அந்தமான், புதுவை ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை வென்றனர்.

 ஆக இந்தியாவில் உள்ள  29 மாநிலங்களில்

 அருணாச்சல பிரதேசம்,

ஆந்திரா,

ஹரியானா,

ஜம்மு காஷ்மீர்,(யூனியன் பிரதேசம் என்று சொல்ல மனம் வரவில்லை)

டெல்லி,

இமாச்சல் பிரதேசம்,

குஜராத்,

உத்தர்கண்ட்,

திரிபுரா,

நாகாலாந்து,

சிக்கிம்,

மேகாலயா,

மிசோரம்

 ஆகிய 13 மாநிலங்களில் இந்தியாவை நேரடியாக 45 ஆண்டுகளும் கூட்டணியுடன் பத்து  ஆண்டுகளும் ஆண்ட அக்கட்சிக்கு ஒரு எம்.பி கூட கிடையாது.

 இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

 மாநிலங்களில் வலுவான தலைவர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் காங்கிரஸ் கட்சி தலைமையின் குணாம்சமாக இருக்கிறது. இந்திரா காந்தி துவக்கிய பாரம்பரியம் பேரன் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்கிறது.

 முதல்வர்களை பொம்மை போல மாற்றிக் கொண்டு இருந்ததால் அது பலமிழந்த மாநிலங்கள் பல.

 பிரச்சினைகள் துவங்கும் போதே சரி செய்யாமல் முற்ற விடுவதுதான் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணமாக உள்ளது.  அதனால்தான் மபி ஆட்சியை கவிழ்த்து விட்டு ஜோதிர்யாதித்யா சிந்தியா பாஜகவிற்கு தாவினார். ராஜஸ்தானில் அதனை சச்சின் பைலட் எப்போது வேண்டுமானாலும் தாவலாம். சத்திஸ்கர் நிலையும் நித்திய கண்டம் பூர்ணாயுசுதான்.

 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் அக்கறை கிடையாது. போராட்டங்கள் நடத்தி அவர்களை அணி திரட்டும் முனைப்பும் கிடையாது. கட்சியை கட்டுக் கோப்பாக பாதுகாக்கவும் தெரியாது.

 இப்படியே போனால் நாளை காங்கிரஸ் முற்றிலுமாக மூழ்கிப்போகும் . . .

 இதைப்பற்றி உனக்கென்ன கவலை என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுபவர்களால் கம்யூனிஸ்ட் கட்சிகளோ அல்லது வேறு மாநிலக் கட்சிகளோ பயனடைந்தால் பரவாயில்லை. பாஜகதானே ஆதாயம் அடைகிறது. அதுதான் கவலை அளிக்கிறது.

 காங்கிரஸ் கட்சிக்கு உடனடியான தேவை மக்கள் நம்பக் கூடிய ஒரு தலைமை, அத்தலைமை நேரு குடும்பத்திற்கு வெளியேயிருந்து வருவது மிகவும் நல்லது.

 

 

 

 

Wednesday, September 29, 2021

ஸ்பெல்லிங் தெரியாமல் அசிங்கப்பட்ட சங்கிகள்

 

மோடியின் அமெரிக்க விஜயம் கிட்டத்தட்ட ஒரு கேலிக்கூத்து. ட்ரம்பின் நண்பனை இன்றைய அமெரிக்க ஆட்சியாளர்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அமெரிக்க ஊடகங்களும் கூட மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

 அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா? ஐ.டி செல்லும் போட்டோஷாப்பும் எதற்கு உள்ளது!

 நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மோடியை வரவேற்று செய்தி வெளியிட்டதாய் ஒரு போட்டோஷாப் செய்தார்கள்.



 ஆனால் பாவம்!

 செப்டம்பர் மாதத்தின் ஸ்பெல்லிங்கை தவறாக போட்டு அசிங்கப்பட்டு விட்டார்கள்.

 சங்கிகள் தாங்கள் மூடர்கள், அறிவில்லா தற்குறிகள் என்பதை அவர்களே அவ்வப்போது நிரூபித்துக் கொள்வார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

 அவர்கள் போட்டோஷாப் செய்த நாளன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் ஒரிஜினல் முகப்பு கீழே உள்ளது.


பிகு : பதிவு முடியவில்லை. அசிங்கம்
தொடர்கிறது.

 

“வலிமை” புரிந்திருக்குமா?

 



 

எங்கள் ஊர் ஆதரிக்கவில்லை என்று மூடச்சங்கிகள் போட்டோஷாப் செய்தது ஒன்று போதும் நேற்று முன் தினம் நடைபெற்ற பாரத் பந்த் மகத்தான் வெற்றி என்று சொல்ல.

 

பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.  போக்குவரத்து இல்லை. கடைகள் இல்லை. மறியல் செய்து கைதானார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

தீக்கதிர் தொகுப்பு  பாரத் பந்த் எந்த அளவிற்கு எழுச்சியாக நடந்தது என்பதை சொல்லும்.

 

 

விலகிச் செல்லுங்கள்... இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் மூடப்படுகிறது. என்னை மட்டும் தடுத்து நிறுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்” 

தில்லி நோக்கி செல்லும் ஹரியானா வின் நெடுஞ்சாலை ஒன்றில் அரிவாள் சுத்தியல் சின்னம் பொறித்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கொடி யை ஏந்தியவாறு ஒரு மூதாட்டி கம்பீர மாக நடக்கத் துவங்கினார். போலீசார் வழிமறித்தனர். ஆவேசமடைந்த மூதாட்டி, போலீசாரை பார்த்து கூறி யது தான் இந்த வார்த்தைகள். மூதாட்டி கூறியது சத்தியமான வார்த்தைகள். ஆம், ஒட்டுமொத்த இந்தியாவும் செப்டம்பர் 27 அன்று விவ சாயிகளின் ஆவேசமிக்க எழுச்சியை  கண்டது.

 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்தது. அநேகமாக வட இந்தியா முழுவதும் போக்குவரத்து முற்றாக முடங்கிப் போனது. நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தில்லி யை நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் கூடாரமடித்து தங்கினர். தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக் கூடாது என்ற எண்ணத்துடன் இயந்திர கதி யில் போலீசார் சாலைகளை தடுப் பரண்கள் கொண்டு மூடியதால் ஒட்டுமொத்த தில்லியும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கித் திணறி யது.

 

பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் தில்லி மாநகருக்குள் நுழைய  முடியாமல் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19 அரசியல் கட்சிகள், 500க்கும்  மேற்பட்ட விவசாயிகளின் கூட்ட மைப்பானசம்யுத்த கிஷான் மோர்ச்சா  அழைப்பின் பேரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க செப்டம்பர் 27 பாரத் பந்த் பேரெழுச்சிநடைபெற்றது. மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களையும், விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மின்சார சட்டத்தையும் முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியை முற்றுகை யிட்டு விவசாயிகள் நடத்தி வரும் பிரம் மாண்டமான போராட்டம் மிகச் சரியாக பத்தாவது மாதத்தை எட்டியுள்ள செப்டம்பர் 27 (திங்களன்று) மோடி அரசு  இனியும் விவசாயிகளையும், மக்களை யும் வஞ்சிக்க முடியாது என எச்ச ரிக்கை விடும் விதமாக பாரத் பந்த் -  முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிர தேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ் தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் முற்றாக முடங்கின.

 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையிலான விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  சார்பிலும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), திமுக, ஆர்ஜேடி,  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகளின் சார்பிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு மறியல், சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட ஆவேசமிக்க போராட்டங் கள் நடைபெற்றன. இந்த மாபெரும் பாரத் பந்த் போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள், அனைத்து ஒன்றிய தர வர்க்க ஊழியர் அமைப்புகள் பங்கேற்று மறியல் போராட்டங்களில் ஈடுபட்டன. தலைநகர் தில்லி ஜந்தர்மந்த ரில் பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் அணிதிரண்ட போராட்ட பேரணி நடைபெற்றது. அகில இந்திய விவ சாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட விவசாயி கள் இயக்கங்களின் தலைவர்கள் தலைமையேற்றனர்.

 

பாஜக சகாப்தம் முடிகிறது

 

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ் வாதிக் கட்சி, இடதுசாரிகள் மற்றும்  விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எழுச்சிமிகு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்காத ஆளும் பாஜக ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. இத்தோடு பாஜகவின் சகாப்தம் முடி கிறதுஎன்று கூறினார். ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர், பிகானிர், ஹனுமன்கர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்றன. ஜெய்ப்பூரில் பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இங்கு பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பல்வால் புனியா பங்கேற்று உரையாற்றினார்.  பீகாரில் ஆர்ஜேடி, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி களின் சார்பிலும், விவசாயிகள் சங்கங்களின் சார்பிலும் அனைத்து நெடுஞ்சாலைகளும், இருப்புப் பாதை களும் மறிக்கப்பட்டன. பாட்னா, போஜ்பூர், பெகுசராய், ஜகனாபாத், கிழக்கு சம்பரன், மாதேவ்புரா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சிமிகு போராட்டங்கள் நடை பெற்றன. மேற்குவங்கத்தில் இடதுமுன் னணி சார்பில் ஆவேசமிக்க ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடந் தன. ஹவுரா ரயில்நிலையத்திலிருந்து எந்த ரயிலும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை.

 

கொல்கத்தா உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்திருந்தது. திரிபுராவில் பாஜக அரசின் அச்சுறுத்தலையும் மீறி விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றிபெற்றது. தலைநகர் அகர்தலா  உட்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதி களிலும் கடைகள், வணிக நிறு வனங்கள் முற்றாக மூடப்பட்டிருந்தன. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இடதுமுன்னணி சார்பில்  மாபெரும் பேரணிகளும் நடைபெற்றன.

 

 மகாராஷ்டிராவில் அனைத்துப் பகுதிகளிலும் எழுச்சிமிகு போராட்டம் நடந்தது. தலைநகர் மும்பை உள்பட அனைத்து நகரங்களிலும் சாலை  மறியல், ரயில் மறியல் போராட்டங் களில் விவசாயிகள் ஈடுபட்டனர். தெலுங்கானா, ஆந்திராவில் கன மழை பெய்த போதிலும் ஐக்கிய  விவசாயிகள் முன்னணி மற்றும் இடதுசாரி  இயக்கங்கள் சார்பில் போராட்டம்  எழுச்சியுடன் நடந்தது.

 

 ஹைதரா பாத்தில் நடைபெற்ற பேரணியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஆந்திராவின் விஜயவாடாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.மது தலைமை யில் ஆவேசமிக்க மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

நாடு முழுவதும் நடைபெற்ற இந்தப் பேரெழுச்சியில் ஜம்மு-காஷ்மீர்  விவசாயிகளும் கரம் கோர்த்தனர். ஜம்முவில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப் ப்பாட்டத்தில் குப்கர் கூட்டணியின் கன்வீனரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினருமான முகமது யூசுப் தாரி காமி உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து நடத்திய போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். தலைநகர் ராஞ்சியில் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டி ருந்தன.  

 

ஒடிசாவில் மாநிலம் முழுவதும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி யினர் மறியலில் ஈடுபட்டனர். பொது  போக்குவரத்து கணிசமாக ஸ்தம்பித்தது. புவனேஸ்வரம், பாலா சோர், ரூர்கேலா, சம்பல்பூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் விவசாயி களின் மறியல் போராட்டம் நடந்தது.  புவனேஸ்வரம் ரயில்நிலையம், மறி யல் போராட்டத்தால் ஸ்தம்பித்தது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்கள் அனைத்தி லும் ரயில் போக்குவரத்து முற்றாக  ஸ்தம்பித்தது. பஞ்சாப் தலைநகர்  சண்டிகர் உட்பட அனைத்து நகரங் களிலும் பல பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் அணிதிரண்டுமோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்என முழக்கமிட்டனர். ஒட்டுமொத்தத்தில் செப்டம்பர் 27 விவசாயிகள் தலைமையேற்று நடத்திய பாரத் பந்த் போராட்டம், இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றது மோடி ஆட்சிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

 

முந்நூறு நாட்களையும் கடந்து உறுதியோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுதிலும் உள்ள உழைக்கும் மக்களை ஈர்த்துள்ளது. அவர்களை போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.

 

விவசாயிகளின் கோபம், உறுதி, நியாயம், வலிமை ஆகியவற்றை இப்போதாவது மோடி உணர்ந்து கொண்டு செயல்பட்டால் கொஞ்ச நஞ்ச மரியாதையாவது மிஞ்சும்.

 

அவர்கள் உருவாக்கும் போட்டோஷாப் பொய்களுக்கு அவரே மயங்கினால் கேவலப்பட்டுத்தான் நிற்பார்.