“கான மயிலாட கண்டிருந்த வான் கோழி போல” பாவம் யாரோ ஒரு பையன்
மோடி போல போட்டோவுக்கு போஸ் கொடுக்க முயற்சி செய்துள்ளான்.
தம்பி, உன்னால் நன்றாக
தேசத்தை நிர்வாகம் செய்யக் கூட முடியலாம். உன்னால் வேலை வாய்ப்புக்களை கூட
உருவாக்க இயலாம், இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க இயலாம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை
ஏற்படுத்த இயலாம். கல்வியை அனைவருக்கும் அளிக்க இயலாம். அண்டை நாடுகளோடு நட்புறவை
ஏற்படுத்த இயலாம். பொய் சொல்லாமல் உண்மையாகக் கூட உன்னால் முடியலாம். இந்தியாவின்
செல்வங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்காமல் பாதுகாக்க இயலாம். கொரானாவை
ஒழிக்கலாம். கறுப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில்
பதினைந்து லட்ச ரூபாய் போடலாம். ஜனநாயகத்தை பாதுகாக்கலாம், சிபிஐ, உச்ச நீதி
மன்றம், தேர்தல் ஆணையம், ஊடகம் இவை அனைத்தையும் சுயேட்சையாக செயல்படவைக்கலாம்,
மர்ம நிதி கணக்கைக் காண்பிக்கலாம்
இவற்றில் எல்லாம் நீ கொஞ்சமாக ஏதாவது செய்தால் கூட மோடியை நீ சுலபமாக முந்தலாம். ஏனென்றால் இவை அனைத்திலும் அவர் பூஜ்ஜியம்.
ஆனால்
ஆனால்
ஆனால்
ஆனால்
ஆனால்
போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் மட்டும் உன்னால் அல்ல,
ராசுக்குட்டி பாக்யராஜால் கூட அவருடன் மோத
முடியாது.
ஒரு போட்டோ எடுக்க வேண்டுமென்றால்
என்ன ஆங்கிளில் எப்படி தெரிவது?
பின்னணி என்ன?
செட் பிராப்பர்டி என்ன? (பெத்த தாயையே செட் ப்ராப்பர்டி ஆக்கிய
பெருமை உண்டய்யா அவருக்கு)
காஸ்ட்யூம் என்ன?
என்று துல்லியமாக திட்டமிட்டு கச்சிதமாக போட்டோ எடுத்து அதை பிரம்மாண்டமாக விளம்பரப்
படுத்தக் கூடிய வல்லுனர் உலகிலேயே அவர் போல கிடையாது.
அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் எல்லாம் உன்னால் மோத
முடியுமா?
போப்பா, போ, நீயாவது வெட்டித்தனமாக பொழுதைக் கழிக்காமல் உருப்படியாக ஏதாவது செய் . . . .
பிகு: மோடியிடம் உள்ள ஒரு சிறப்பம்சத்தை முதல் முறையாக
பாராட்டி உள்ளேன். அதற்காக நீங்களும் என்னை பாராட்டுங்கள் சங்கிஸ்
No comments:
Post a Comment