சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, April 14, 2025
அண்ணல் அம்பேத்கரும் அடுத்த தேர்தலும்
Thursday, January 30, 2025
தமிழ் இந்து வெட்டிய "தகப்பன்சாமி"
எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.
சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.
*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*
Sunday, December 22, 2024
நல்லா மதிக்கிறீங்கடா அண்ணல் அம்பேத்கரை!
பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.
அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.
கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி
Wednesday, December 18, 2024
மோடி, மோடி என்றால் எங்கே போவார்கள் அமித்து?
அசுத்தத்தை நீண்ட நாட்கள் ஒளித்து வைக்க முடியாது. நாற்றம் ஒரு நாள் வெளியே வந்து காட்டிக் கொடுத்து விடும். அண்ணல் அம்பேத்கரையும் தங்களவராக கைப்பற்றிக் கொள்ள சங்கிகள் நாடகமாடினாலும் அவர் மீது அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது உலகறிந்த உண்மை.
பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் ஆறை தேர்ந்தெடுத்தது,
அண்ணல் அம்பேத்கர் புத்த மத்திற்கு தழுவுகையில் அறிவித்த 22 பிரகடனங்களை அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் பாடப்புத்தகங்ககளில் இருந்து நீக்கியது.
“பொய்யான கடவுள்களை வழிபடுவது” (Worshipping of false gods) என்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி அருண் ஷோரி எழுதிய நூலை வெளியிட்டது, பின் அவரையே மத்திய மந்திரியாக்கியது.
ஆகியவை அவர் மீதான வெறுப்பிற்கு உதாரணம்.
உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெறுப்பை அமித்ஷா இப்போது வெளிப்படுத்தி விட்டார். அண்ணல் அம்பேத்கர் மீதான வெறுப்பும் எரிச்சலும்தான் அவரை அப்படி பேச வைத்துள்ளது.
சங்கிகள் அண்ணல் அம்பேகரை மதிக்கிறார்கள் என்று சொல்லி வந்த கட்டுக்கதை அம்பலமானது நல்லதுதான்.
அது சரி அமித்து, அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் ஏழு ஜன்மத்துக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொன்னீர்களே, கடவுளுக்கு பதிலாக மோடி, மோடி என்று உச்சரித்தால் இந்த ஜென்மத்தில் எங்கே போகலாம்?
அதற்கான பதிலை நானே சொல்கிறேன்.
மோடி, மோடி என ஜால்ரா அடித்தால் நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாடாளுமன்றம், சட்டமன்றம், ராஜ்பவன் என இப்படி இங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.
ஆனால் ஆட்சி போன பின் அத்தனை பேருக்குமான இடம் சிறைச்சாலைதான்.
ஆமாம். நீங்கள் அத்தனை பேரும் அவ்வளவு பெரிய கிரிமினல்கள்.
பிகு: நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று சொன்ன மோடி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவும் போது அறிவித்த 22 பிரகடனங்களில் எத்தனை பிரகடனங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிப்பாரா?
மேலே உள்ளவைதான் அந்த பிரகடனங்கள்.
Friday, December 6, 2024
வாரணாசி, சம்பல், அடுத்து ஆஜ்மீர் தர்கா
வாரணாசி
ஞானவாபி மசூதிக்குள் கோயில் ஒளிந்து உள்ளது,
ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷ்ணு சர்மா என்ற ஒருவர் வழக்கு தொடுக்க, பணி ஓய்வுக்குப்
பிந்தைய பணிக்காக காத்திருந்த மாவட்ட நீதிபதி ஒருவர் “அப்படியே ஆகட்டும்” என்று தீர்ப்பு எழுதி ஓய்வு பெற்ற மறுநாளே புதிய பதவியில்
போய் ஒட்டிக் கொண்டா.
அதே
உ.பி யில் சம்பல் என்ற நகரத்தில் அதே நபர் அங்கேயுள்ள 700 ஆண்டு பழமையான மசூதிக்குக்
கீழே கோயில் உள்ளது என்று வழக்கு தொடுக்க அங்கேயும் ஒரு நீதிபதி “ஆஹா, அவர் சொன்னபடியே செய்து விடுங்கள்” என்று
ஆணையிட அதன் பின் நடந்த நிகழ்வுகள், எதிர்ப்புக்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு என நான்கு
இஸ்லாமிய வாலிபர்கள் உயிரிழந்தனர்.
இப்போது
அதே விஷ்ணு சர்மா இன்னொரு வழக்கை தொடுத்துள்ளார்.
மன நிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக் கொள்கிற வடிவேலு, “இதே வேலையாதான் அலையறானா?”
என்பதைப் போல இதே வேலையாகத்தான் அந்த மனிதன்
செயல்படுகிறான் அல்லது செயல்பட வைக்கிறார்கள்.
இந்தியாவில்
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத்தலம் ஆஜ்மீர் தர்கா. க்வாஜா மொய்னுதீன் ஹசன்
சிஸ்டி என்ற இஸ்லாமிய குருவை கடக்கம் செய்த இடம் இது. கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட
தர்கா அது.
அன்றைய
அரசர்கள் தொடங்கி இன்றைய அமைச்சர்கள் வரை இந்த தர்காவிற்கு வந்து காணிக்கை செய்யாத
தலைவர்கள் கிடையாது. இதனை விரிவு படுத்த நிதியளித்தது பரோடாவின் மன்னர், இவர் ஒரு இந்து.
ரா.கி.ரங்கராஜன்
எழுதிய வாளின் முத்தம் (என்றுதான் நினைக்கிறேன்) நாவலில் க்வாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டியின்
பெருமைகளை நன்றாக விவரித்திருப்பார்.
பெனாசிர்
பூட்டோ, நவாஸ் ஷெரீப், ஜெனரல் முஷரப் போன்ற பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பாரக்
ஒபாமா கூட வந்துள்ளார். ஏன் இஸ்லாமிய வெறுப்பின் அடையாளமான மோடி கூட இங்கே வந்து காணிக்கை
செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
ஆஜ்மீர்
தர்காவை வைத்து அரசியல் செய்வது, ஆய்வு, கீய்வு என்றெல்லாம் செல்வது போண்ற வேலைகளால்
இந்தியாவின் மானம் உலக அரங்கில் கப்பலேறும்.
டிசம்பர்
21 அன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அந்த நீதிபதி என்ன செய்வார் என்று பார்ப்போம்.
முக்கியமான பின் குறிப்பு : இந்த பதிவை இன்றுதான் எழுத வேண்டும் என்று காத்திருந்தேன். இன்றைய நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். ஆனால் டிசம்பர் ஆறு என்றால் மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாள் என்பதுதான். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை பின்னுக்குத் தள்ளவே சங்கிகள் மசூதியை இடிக்க இந்நாளை தீர்மானித்தார்கள். ஒரு மசூதியை இடிக்கத் துணிந்தவர்கள் மற்ற மசூதிகளையும் இடிக்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களின் அரசியல். இந்தியாவின் மானம் கப்பலேறுவதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
Tuesday, November 26, 2024
இந்தியா “மதச்சார்பற்ற, சோஷலிச” க்குடியரசுதான்.
நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” என்பதை அகற்ற வேண்டும் என்று சுனா சாமி தொடுத்த வழக்கில் “அதெல்லாம் முடியாது போடா” என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது.
அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும் என்பதால் மதச்சார்பு என்பது பொருத்தமானதே என்று விளக்கமளித்து விட்டார்கள்.
சோஷலிசம் என்றால் அது இடதுசாரி பொருளாதரமோ இல்லை வலதுசாரி பொருளாதாரமோ கிடையாது. மக்கள் நல அரசு என்று பொருள்.
அதனால் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் “மதச்சார்பற்ற, சோஷலிஸ” என்ற வார்த்தைகள் தொடரும் என்று சொன்ன நீதிபதிகள் நாற்பத்தி ஐந்துவ் வருடங்களுக்கு பிறகு வழக்கு தொடுப்பதே உள் நோக்கம் கொண்டது என சுனாசாமியையும் கண்டித்துள்ளனர்.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு, அரசியலமைப்பு தினம் எனும் நாடகம் நடத்தும் மோடி வகையறாக்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.
Friday, June 23, 2023
இதை செய்து விட்டு உள்ளே போ
1) பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்
2) ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.
3) கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.
4) கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.
5) புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.
6) திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.
7) புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.
8) பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.
9) அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.
10) சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.
11) புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்
12) புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.
13) அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.
14) நான் திருட மாட்டேன்.
15) நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்
16) நான் பொய் சொல்ல மாட்டேன்.
17) எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்
18) புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.
19) மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.
20) இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.
Tuesday, December 13, 2022
அண்ணல் பிரகடனங்களை சங்கிகள் ஏற்பார்களா?
நாக்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சில வருடங்கள் முன்பாக நடைபெற்ற போது அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீட்சா பூமிக்கு சென்றிருந்தேன்.
அப்போது அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட பிரகடனங்களை ஒரு தூணில் பொறித்துள்ளார்கள்.
அவை இங்கே . . .
1) பிரம்மா,
சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்
2) ராமனையோ
கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.
3) கௌரி,
கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.
4) கடவுள்
அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.
5) புத்தர்
விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.
6) திதி
போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.
7) புத்த
தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.
8) பிராம்மணர்கள்
மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.
9) அனைத்து
மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.
10) சமத்துவத்தை
உருவாக்க நான் பாடுபடுவேன்.
11) புத்தரின்
உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்
12) புத்தரின்
பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.
13) அனைத்து
ஜீவராசிகளையும் நேசிப்பேன்.
14) நான்
திருட மாட்டேன்.
15) நான்
தகாத உறவில் ஈடுபட மாட்டேன்
16) நான்
பொய் சொல்ல மாட்டேன்.
17) எந்த
போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்
18) புத்த
தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.
19) மனிதகுல
வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து
தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.
20) இனி
புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.
இப்போது அண்ணலுக்கு காவிச்சட்டை போட்ட அர்ஜுன் சம்பத் வகையறாக்களும் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை என்று சொல்லும் சங்கிகளும் அண்ணல் அம்பேத்கரின் பிரகடனங்களில் ஒன்றையாவது ஏற்பார்களா?
பிகு: அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து
கொள்கிறேன். சும்மா ஒரு விளம்பரம்தான் . . .






