Thursday, August 31, 2023

தினமலரை விட கேவலமானவர்கள்

 



தமிழ்நாட்டு அரசு அமலாக்கியுள்ள காலை உணவுத் திட்டத்தையும் அதனால் பயன் பெறும் மாணவர்களையும் அசிங்கப்படுத்தி தின மனு இதழ் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை பகிர நான் விரும்பவில்லை.

மனசாட்சி உள்ள எவராலும் அதனை கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்த அசிங்கத்தை கண்டித்து தமிழ்நாட்டின் முதல்வர் வெளியிட்ட செய்தி முக்கியமானது. கண்டனத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பத்திரிக்கைக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது, நூலகங்களில் வாங்குவதை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ஒரு தோழர் சொன்னதன் அடிப்படையில் அந்த பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என்றாலும் கூட இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இச்செய்தி குறித்து ஏதாவது கருத்துக்களை தெரிவித்துள்ளனரா என்று மெனக்கெட்டு போய்ப் பார்த்தேன்.

அந்த அரிய முத்துக்களை நீங்களும் பாருங்கள்.












 

இதிலே பெண்ணின் பெயரில் வந்துள்ளதெல்லாம் ஃபேக் ஐ.டி. குழுவின் அட்மினோ, மாடரேட்டர்களோ யாரோ ஒருவர் பெண்ணின் பெயர்களில் ஒளிந்து கொண்டு தரக்குறைவாக எழுதி வருகிறார்கள். சிகண்டி என்ற திருநரை முன்வைத்து பீஷ்மரின்  வில்லை அமைதியாக்கிய அதே உத்தி.

 

தின மலர் வெளியிட்ட செய்தியை விட அதற்கு முட்டு கொடுத்த சங்கிகள் அனைவரும் தினமலரையும் விட கேவலமானவர்கள்.

 

இஸ்ரோவில் இண்டர்வியு . . .

 



சந்திராயன் 3 நிலவிற்கு சென்றுள்ள நேரத்தில் இதை எழுதாவிட்டால் குற்றமாகி விடுமல்லவா!

 1986 ம் வருட சம்பவம்தான் இது. எல்.ஐ.சி யில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் முன்பு இஸ்ரோவில் SCIENTIFIC ASSISTANT என்ற பெயரில் பல பணிகளுக்கு  வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருந்தது. அதில் ஒரு பணிக்கு BBA படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் இருந்ததால் நானும் விண்ணப்பித்திருந்தேன்.

 எல்.ஐ.சி நேர்முகத் தேர்வு முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு கடிதம் வந்தது. ஒரு வார அவகாசம் இருந்தது. இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் அளிக்கப்படும் என்று சொல்லியிருந்ததால் கொஞ்சம் தெம்பாகவே சென்றிருந்தேன். தமிழ்நாட்டைத் தாண்டிய முதல் பயணம் அதுதான். அதுவும் அபிமான சுஜாதாவின் கதைகளின் களமான பெங்களூருக்கு.

 நேர்முகத் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெங்களூர் போய் விட்டேன். என் அக்கா கணவரின் தம்பி பெங்களூரில் ஒரு தனியார் பொறியல் கல்லூரியில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கல்லூரி விடுதிக்குத்தான் போனேன்.

 அதனை கல்லூரி என்றே சொல்ல முடியாது. சில வகுப்புக்கள் மட்டும் காங்க்ரீட் கட்டிடத்தில் நடந்து கொண்டிருந்தது. மற்றபடி ஆசிரியர்களுக்கான விடுதி உட்பட மெஸ், அலுவலகம் என்று அனைத்துமே தகரக் கொட்டகையில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

 மறுநாள் கர்னாடகாவில் எதற்கோ பந்த் என்பதால் வேறெங்கும் செல்ல முடியாமல் தகரக் கொட்டகைக்குள்ளே பொழுது கழிந்தது.

 பத்து மணி நேர்முகத்தேர்வுக்கு ஒன்பது மணிக்கே இஸ்ரோவின் பிரம்மாண்டமான வளாகத்திற்குள் சென்று விட்டேன். வழி கேட்டு வழி கேட்டு நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்திற்கு சென்று விட்டேன். மொத்தமே பனிரெண்டு பேர்தான் இருந்தோம். என் கல்லூரி சீனியர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அனைவருமே தமிழ் நாட்டினர்தான். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்தான். ஆம் அப்போது தமிழ்நாட்டில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மட்டும்தான் பி.பி.ஏ இருந்தது.

 சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி முடிந்து ரயில் கட்டணத்தை கொடுப்பது போன்ற பணிகள் பதினோரு மணிக்கே முடிந்தாலும் நேர்முகத் தேர்வு தொடங்கவில்லை.  தேர்வுக்குழுவில் உள்ள இருவர் ஏதோ அவசரக் கூட்டத்திற்கு சென்றுள்ளதால் தாமதமாகும் என்று சொன்னார்கள். பனிரெண்டரை மணிக்கு அழைத்து ஒரு சீட்டு ஒன்றைக் கொடுத்து கீழேயுள்ள காண்டீனில் கொடுத்தால் ஒரு ரூபாய்க்கு சாப்பாட்டு டோக்கன் கொடுப்பார்கள். சாப்பிட்டு விட்டு இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுமாறு கூறினார்கள்.

 ஒரு ரூபாய்க்கு ஒரு குளோப் ஜாமூன், இரண்டு பூரி, ஒரு பொறியல், ஒரு கூட்டு, சாதம், சாம்பார், ரசம், மோர், அப்பளம் என்று உணவு மிகுந்த சுவையோடும் கூட இருந்தது.

 ஒன்றரை மணிக்கெல்லாம் எல்லோரும் போய் விட்டோம். முதலாக சென்றவருக்கு அரை மணி நேரம் நேர்முகத்தேர்வு. மற்றவர்களுக்கெல்லாம் திக், திக் என்றால் எனக்கு திக் திக் திக்.  ஆமாம் எனக்கு எட்டு மணிக்கு ட்ரெயின். இப்படியே போனால்  எட்டாவது ஆளான எனக்கு ட்ரெயின் போனால் என்ன செய்வது என்று கவலை. நல்ல வேளை அடுத்தவர்களுக்கான நேரம் இருபது நிமிடங்கள்தான் நடந்தது. நான்கரை மணிக்கு அழைத்தார்கள்.

 மொத்தம் ஏழு பேர் தேர்வுக்குழுவில். தேர்வுக்குழு தலைவர் மட்டும் தனியாக அமர்ந்திருக்க, இரு பக்கத்திலும் மூன்று மூன்று பேர். தலைவருக்கு நேர் எதிரில் எனக்கான நாற்காலி.

 திருவிளையாடல் நாகேஷ் போல தொடர்ச்சியாக கேள்விகள். சிவாஜி போல கம்பீரமாக சொல்லவில்லை என்றாலும் நம்பிக்கையோடு சொன்னேன். சில கேள்விகளுக்கு விளக்கமாகவும் சொல்ல வேண்டியிருந்தது. மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் பொருளாதாரத்தை ஸ்பூனில் வைத்து புகட்டிய முஸ்தபா சார், ஆடிட்டர் தொழிலில் பொய்க்கணக்கு எழுதும் பாவத்திற்கு பிராயச்சித்தமாகவே மாணவர்களுக்கு  அக்கவுண்டன்சி சொல்லித்தர வருகின்றேன்  என்று சொன்ன  பகுதி நேர விரிவுரையாளர் ஆடிட்டர் வெங்கட சுப்ரமணியன் சார் ஆகியோரை நன்றியுடன் மனதில் நினைத்துக் கொண்டே நேர்முகத்தேர்வு அறையிலிருந்து வெளியே வந்தேன்.

 தேர்வு முடிவுகள் வந்து விட்டதாம், உனக்கு கிடைத்ததா என்று கேட்டு கல்லூரி சீனியர் கடிதம் வந்த போது எல்.ஐ.சி பணியில் இணைந்து 15 நாட்கள் சென்னை பயிற்சி முடிந்து நெய்வேலி கிளையில் இணைந்தும் எட்டு நாட்கள் ஆகியிருந்தது.

 அவர் கடிதம்தான் வந்திருந்தது. இஸ்ரோவிலிருந்து எதுவும் வரவில்லை.

 அங்கே வேலை கிடைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்.

 ஆமாம்.

 உள்ளூரிலேயே எல்.ஐ.சி வேலை என்பதை விட இஸ்ரோ வேலையை விட நூற்றைம்பது ரூபாய் கூடுதல் சம்பளம் என்பதும்  கூட . . .

Wednesday, August 30, 2023

குஜராத்தியாமே! எதுக்கு வம்பு?

 


திரிவேதி என்ற ஒரு மோசடி பேர்வழி ஒரு குஜராத்தி என்ற செய்தியை படித்தேன்.


 
அதெப்படி நரேந்திர டிமோ, அமித்து, நீரவ் டிமோ, லலித் டிமோ, மெகுல் சோஸ்கி என்று இந்தியாவின் பெரிய மோசடிப் பேர்வழிகள் எல்லோரும் குஜராத்தியாகவே இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு அச்சம்.

 இந்த குறிப்பிட்ட மோசடிப் பேர்வழிகளைப் பற்றி நான் எழுத எல்லா குஜராத்திகளையும் பொதுமைப்படுத்தி எழுதியதாக எவனாவது சங்கி கோர்ட்டுக்கு போனால் என்ன ஆகும் என் நிலை?

 அதனால் என் பதிவின் இரண்டாவது பத்தியை நான் எழுதவே இல்லை. ஆமாம்.

மணிப்பூர் – 48 நிமிடங்கள்

  


மணிப்பூர் சட்டப்பேரவை நேற்று கூடியுள்ளது.  ஒரே ஒரு நாள் கூட்டத் தொடர் என்று அறிவித்திருந்தது அரசு.

 கலவரத்தில் இறந்து போனவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி அனுசரித்ததும் காங்கிரஸ் கட்சி எம்.ஏ.க்கள் குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அரசு மறுக்க குழப்பம் … அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது.

 மீண்டும் கூடுகிறது. மீண்டும் அதே கோரிக்கை. மீண்டும் மீண்டும் குழப்பம், கூச்சல்.

 இம்முறை சபாநாயகர் சட்டமன்றத்தை காலவரையறை இன்றி ஒத்தி வைக்கிறார்.

 சிக்கல் நிறைந்த சூழலில் அதைப் பற்றி விவாதிக்க மனமில்லாத, தைரியமில்லாத பாஜக 48 நிமிடங்களில் ஒரு சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்துள்ளது.

 ஏன் இந்த கூட்டத்தொடர் நடக்க பாஜக விரும்பவில்லை?

 ஏன்?

 இக்கூட்டத்தொடரை குக்கி இனத்தைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ க்களும் புறக்கணித்திருந்தனர்.

 அதில் ஏழு பேர் பாஜக கட்சிக்காரர்கள்தான்.

Tuesday, August 29, 2023

பயந்துட்டீரா டிமோ?

 


டிமோவின் தேர்தல் பயம் கீழேயுள்ள அறிவிப்பில் தெரிகிறது.


சரி, பெட்ரோல், டீசல் விலையை எப்போ குறைக்கப் போறீர் ????

நிலாவுக்கே போயிடுங்க டிமோ . . .

 


ஆமாம்.

நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கச் சொல்லி ஒரு சங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உண்மையிலேயே இது ஒரு நல்ல ஆலோசனை . .

டிமோ அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்க வேண்டும். அது மட்டுமல்ல அவரும் மற்ற சங்கிகளும் இந்து ராஷ்டிரமான நிலாவுக்கே சென்று விட வேண்டும்.

ஒரு இந்து கோளில் வாழும் நிறைவு அவர்களுக்கும் கிடைக்கும். இந்தியாவும் மிகவும் நிம்மதியாக இருக்கும். . .


Monday, August 28, 2023

சாமியாரை கேட்டுச் சொல்லுங்க ரஜினி . . .

 


காலில் விழுந்து உங்கள் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டதால் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டியுள்ளது ரஜினிகாந்த்.

நீங்கள் காலில் விழுந்தீர்களே மொட்டைச்சாமியார், அந்த யோகியார் பரிபாலனம் செய்யும் உபி யில் ஒரு சம்பவம்.



அங்கே ஒரு ஆசிரியை தன்னிடம் பயிலும் ஒரு மாணவன் வாய்ப்பாடு மறந்த காரணத்தால் மற்ற மாணவர்களை வைத்து அடித்திருக்கிறார். 

இஸ்லாமிய மாணவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும் என்று விஷத்தை வேறு கக்கியுள்ளார்.

PIZZA வை விட வேகமாக உடனடியாக குற்றவாளிகள் என்று அவர்கள் நினைப்பவர்களின் வீடுகளை இடிக்க புல்டோசரை அனுப்பும் மொட்டைச் சாமியார் அந்த ஆசிரியையின் வீட்டை இடிக்கவும் புல்டோசரை அனுப்பினாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் ர்ஜினிகாந்த்.

இல்லையென்றால்

இஸ்லாமியர்கள் வீடுகளை மட்டும் அவரின் புல்டோசர்கள் இடிக்குமா என்ற விபரத்தையாவது கேட்டுச் சொல்லுங்கள் மாணிக் பாஷா ....

நல்லா மதிக்கிறார்யா பெண்களை . . .

 


மணிப்பூரில்  பெண்களின் ஆடைகளை அகற்றி ஊர்வலம் விட்டார்கள்.
பாலியல் வங்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சடலத்தை பெற்றோருக்கும் தெரியாமல் எரித்தார்கள் உபி யில் . . .
எதிர்கட்சித்தலைவரை இழிவாக பேசியவர் அவர்தான்.
அவர் வழியில்தான் அவர் கட்சி ஆட்களும் பெண்களை ஆபாசமாக பேசுவார்கள்.

ஆனாலும் அந்த பொய் மனிதர் சொல்கிறார் . . .

"பெண்களுக்கு மரியாதை கொடுக்கத்தான் சந்திராயன் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்தோம்" என . .

பெரும்பான்மை மதத்து மக்களின் உணர்வுகளை உசுப்பேத்திட வைத்திட்ட பெயர் என்று சொல்லும் நேர்மை கூட இல்லாத 

அவரை, 56 இஞ்ச் மார்பரை

600 கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்று சந்திராயன் 4 தயாரித்து அவரை அங்கேயே அனுப்பி விடுங்கள்.

சிவசக்தி முனையில் பெண்களுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டே இருக்கட்டும் . .

Saturday, August 26, 2023

நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது . . .

 


இந்திரா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான "நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது"  பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் ...

யூட்யூப் இணைப்பு இங்கே

மாட்டு மூளைக்காரர்கள்

 


திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜை சங்கிகள் நாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள். கர்னாடகாவில் போலீஸில் புகார் கொடுத்து வழக்கு பதிந்துள்ளார்கள்.

அதற்கு என்ன காரணம்?

ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்ட படமும் செய்தியும்.

என்ன அது?

இதுதான்


வாவ், நிலவிலிருந்து சந்திராயன் அனுப்பப்போகும் முதல் புகைப்படம் இதுவாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார். 

இதற்குத்தான் சங்கிகள் குதி குதி என்று குதித்தார்கள்.

அந்த மூடர்கள் அறியாத ஜோக் ஒன்று உண்டு,

ஆர்ம்ஸ்டிராங்கும் ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்த போது ஒரு கேரள டீக்கடைக்காரர் கையில் டீ க்ளாஸுடன் அவர்களை வரவேற்றார் என்பது அந்த ஜோக்.

இதே ஜோக்கை டென்சிங்கும் ஹில்லாரியும் எவரெஸ்டை அடைந்த போது நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள்.

எனக்கு பெயர் மறந்து போன ஒரு திரைப்படத்தில் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பாதாள சாக்கடை வழியாக பயணிக்கும் விவேக் கையில் டீ க்ளாஸோடு வருவார். உள்ளே ஒரு நாயர் டீக்கடை போட்டுள்ளதாகவும் சொல்வார்.

இந்த ஜோக்கை புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்களால், சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தவுடன் எடுத்த முதல் புகைப்படம் என்பதில் சந்திராயனின் வெற்றி  சொல்லப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 

டீ விற்பவர் படம் போட்டவுடன் டிமோ வை குறிப்பதாக நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல .  .

அடேய்களா, டீ விற்றதாக அந்தாள்தானய்யா கதை விட்டான்! அதை கூட புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்கள்தானே நீங்கள்!

Thursday, August 24, 2023

நர்கிஸ் விருதுக்கு மன்னிப்பு கிடையாது

 


ஒரு மூன்றாம் தர பிரச்சாரப் படம், வெறுப்பரசியலை ஊக்குவிக்கும் படம் என்று சர்வ தேச திரைப்பட விழாவில் வெளி நாட்டு விமர்சகர்களால் காரி உமிழப்பட்ட படம்,

டிமோ கூவி கூவி அழைத்தாலும் யாரும் வராத படம்,

வரி விலக்கு, படம் பார்க்க விடுமுறை என்றெல்லாம் அறிவித்தும் போணியாகாத படம்.

அரைகுறை உண்மைகளையும் ஏராளமான பொய்களையும் இணைத்து டிமோவின் அரசியல் ஆதாயத்துக்காக, மத மோதலை தூண்டுகிற படம் 

அதுதான் 

அந்த 

எழவெடுத்த

"காஷ்மீர் ஃபைல்ஸ்"

அதற்கு தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கிஸ் தத் விருது கொடுக்கப்பட்டது 

என்பது

டிமோ அரசின் அயோக்கியத்தனங்களில் இன்னும் ஒன்று.

இந்த அரசை வீழ்த்தாவிடில் நமக்கு எதிர்காலமே கிடையாது. 

எதிர்காலம் உனக்குத்தான் தம்பி

 


இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தால் என்ன! இத்தனை சிறிய வயதில் இவ்வளவு உயரத்துக்கு வந்ததும், உயரத்தில் இருந்தவரை தடுமாற வைத்ததும் சாதாரணமான விஷயமா என்ன !

எதிர்காலம் உனதுதான் தம்பி. சதுரங்க உலகை ஆளப் போகும் நாளைய வாகையாளன் நீதான். .. 

இந்தியா உன்னால் பெருமையடைகிறது, நாளை இன்னும் அதிகமாய் . . .

வாழ்த்துக்கள் தம்பி பிரஞ்ஞானந்தா. 

டிமோவை அங்கேயும் மதிக்கலையாம் . . .

 


தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் “டெய்லி மாவெரிக்” என்ற இணைய தள பத்திரிக்கை இணைய ஹேக்கர்களால் இந்தியாவில் தெரியாத வண்ணம் முடக்கப்படிருந்தது.

யார் அப்படி செய்தது?

எதற்காக?

செய்தவர்கள் பாஜகவின் இணையக்கூலிகள். அந்த பத்திரிக்கை வெளியிட்ட ஒரு செய்தியை இந்திய மக்கள் அறியக்கூடாது என்பதற்காக.

அப்படி  என்ன செய்தி?

BRICS உச்சி மாநாட்டிற்காக டிமோ தென் ஆப்பிரிக்கா போன போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி செல்லாமல் ஒரு காபினட் அமைச்சர் சென்றுள்ளார்.

சீன ஜனாதிபதியை வரவேற்க தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியே சென்றார் என்று அறிந்த டிமோ கடுப்பாகி என்னை வரவேற்க வெறும் காபினட் மந்திரியா என்று வெகுண்டு, விமானத்தை விட்டு இறங்க மறுத்து விட்டார். பின்னர் துணை ஜனாதிபதியை அனுப்பிய பிறகுதான் கீழே இறங்கி வந்துள்ளார்.

இந்த செய்தியை இந்தியாவில் இருட்டடிப்பு செய்யத்தான் அந்த பத்திரிக்கையின் இணைய தளத்தை முடக்கியிருக்கிறார்கள்.

(தகவல் உதவி : தோழர் ஆர்.விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்)

நல்ல வேளை அந்த பத்திரிக்கையின் அலுவலகம் உபி யில் இல்லை. இருந்திருந்தால், காலில் விழுந்த ரஜினிகாந்திற்கு ஆசிகள் வழங்கிய மொட்டைச்சாமியார் புல்டோசர் கொண்டு அந்த அலுவலகத்தை இடித்திருப்பார்.


 
மோடிக்கு இவ்வளவுதான் மரியாதை! அதுவும் இந்தியாவின் பிரதமர் என்ற ஒரே காரணத்தால்..

 இந்த உண்மை கூட புரியாத சங்கிகள் உருட்டுகிற உருட்டு இருக்கே!

 அது என்னங்க உருட்டு?

 மாலை பார்ப்போம். . .

 

Wednesday, August 23, 2023

அனைவரையும் வாழ்த்துவோம் . . .

 




சந்திராயன்  3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி விட்டது.

இச்சாதனைக்கு காரணமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)  வின் அறிவியலாளர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், திட்டப் பணியில்   ஈடுபட்டோர், உதவிகளைச் செய்தோர் என அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . . .

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் சாராபாய்,

இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்த சோஷலிச சோவியத் யூனியன்

ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். அவர்கள் போட்ட விதை இன்று ஆல மரமாகியுள்ளது. 

பிகு : ROSCOSMOS என்பது சோவியத் யூனியனின் விண்வெளி அமைப்பின் பெயர்..

சிவப்பால் மிரளும் எருமைகள்

 


புது டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுர்ஜித் பவன் கட்டிடத்தில் நுழைந்த கிரிமினல் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் அங்கே நடந்து கொண்டிருந்த கருத்தரங்கு ஒன்றை தடுத்துள்ளது.

நேற்று மீண்டும் அத்து மீறி நடந்து கொண்டிருந்த கட்சி  உறுப்பினர்களுக்கான வகுப்புக்கு இடையூறு செய்துள்ளது.

அனுமதி வாங்காமல் நடத்தப்பட்டது என்று சால்ஜாப்பு வேறு சொல்கிறது.

ஒரு கட்சி அலுவலகத்திற்குள் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் எவனின் அனுமதியும் அவசியமில்லை. சட்டத்தில் இல்லாத ஒன்றை சொல்கிறது கிரிமினல் அமித் ஷாவின் போலீஸ்.

டிமோ கொஞ்ச நாள் முன்பாக போட்டிக்கு பிள்ளை பெற என்.டி.ஏ கூட்டத்தை நடத்தினாரே, அதற்கு போலீஸ் அனுமதி உண்டா?

மார்க்சிஸ்டுகளை கண்டு உள்ளுக்குள் அஞ்சுவதால்தான் இப்படி அயோக்கியத்தனம் செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் இரண்டு நாட்களாக ஒரு குழு பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மணிப்பூர் சென்று பல்வேறு தரப்பு மக்களோடு உரையாடி ஆய்வு செய்கின்றனர்.

மணிப்பூர் பக்கம் தலை கூட வைத்துப் படுக்காத 56 இஞ்ச் மார்பனின் கோழைத்தனம் மக்களுக்கு நினைவுக்கு வருமல்லவா?

அதனால்தான் இந்த கேவலமான நடவடிக்கை.

கவிஞர் தோழர் நந்தலாலா, ஒரு கலை இரவில் பேசுகிற போது சொன்னார்.

"சிவப்பைக் கண்டு மனிதர்கள் மிரள மாட்டார்கள், மாடுகள்தான் மிரளும்"

இவர்களோ தடித்தோல் கொண்ட எருமை மாடுகள். அதனால்தான் இவைகள் எசிவப்பைப் பார்த்து மிரள்கின்றன. 

Tuesday, August 22, 2023

என்ன நடக்குது குஜராத் ஹைகோர்ட்டில்?

 


குஜராத்தில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான ஒரு பெண், அக்கொடுமை மூலம் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரிய வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. கருவின் தன்மை குறித்தும் கருக்கலைப்பு பாதுகாப்பானதா என்று அறியவும் மருத்துவ சோதனைக்கும் ஆணையிட்டது. 

அப்பெண்ணின் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட்டு பின்பு நிராகரிக்கவும் செய்திருந்தது குஜராத் உயர் நீதிமன்றம்.

அதனால்தான் பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு வந்ததும் குஜராத் உயர் நீதிமன்றம் தானாகவே அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை "குழந்தை பிறந்ததும் அதை நீ வளர்க்கிறாயா அல்லது அரசின் பொறுப்பில் கொடுக்கிறாயா? " என்று கேட்டுள்ளது.

"பாலியல் வங்கொடுமைக்கு ஆளான பெண் அந்த கர்ப்பத்தை சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா! என்னதான் நடக்குது குஜராத் உயர் நீதிமன்றத்தில்?"

என்று உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்தை சாடியுள்ளது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் மாநிலம் பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்!

அதிமுக :அடிமைக்கூட்டம்தான் இது . .

 


முக நூலில் பரவிக் கொண்டிருப்பது கீழே உள்ளது.



அதிமுக தனியாக நிற்பது பற்றியோ ஊரறிந்த தரகரை தேர்தல் குழு ஆலோசகராக நியமித்துள்ளது பற்றியோ நான் எழுதப் போவதில்லை. அது அந்த கட்சி உறுப்பினர்களின் பிரச்சினை.

இக்கடிதத்தின் ஒரு வார்த்தைதான் அதிமுகவின் அடிமை மனப்பான்மையை காண்பிக்கிறது.

தேர்தல் குழு ஆலோசகருக்கு அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் சொல்கிறேன்.

தேர்தல் குழு ஆலோசகருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

தேர்தல் குழு ஆலோசகரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம்.

தேர்தல் குழு ஆலோசகரின் ஆலோசனைகளை அமலாக்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கலாம்.

“அடி பணியச் சொல்வது” என்பது அக்கட்சியின் டி.என்.ஏ வில் ஊறிய அடிமைத்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது!

Monday, August 21, 2023

சுய புத்தி கிடையாதா ஆட்டுக்காரா?

 


செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தது உதயநிதி ஸ்டாலின். இது அவர் பயன்படுத்திய ஒரு டெக்னிக்.அது பிரபலமும் ஆனது.


மூன்று வருடம்  கழித்து அதே செங்கல் வியூகத்தை காப்பியடிக்கிறயே ஆட்டுக்காரா? உனக்கு சுய புத்தியே கிடையாதா? 



Sunday, August 20, 2023

டைமில்லை ரஜினி , பிஸி . . .

 


கீழேயுள்ள படத்தை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். ஏன் இன்னும் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று வேறு கேட்டிருந்தார்.


ரஜினி முருகன் படத்தில் சூரி டைமில்லை என்று சொல்லும் காட்சியின் படத்தை அனுப்பினேன்.

ஆமாம் மொட்டைச்சாமியார் காலில் ரஜினி விழ்ந்ததில் அதிர்ச்சியடையவோ இல்லை ஆச்சர்யப்படவோ என்ன இருக்கிறது!

காரியமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழத் தயங்காத சந்தர்ப்பவாதிதானே இவர்! இப்போது என்ன தேவையோ?

ரஜினி திரையில் கொலைகளை செய்பவர், பெண்களை இழிவாகப் பேசுபவர்.

மொட்டைச்சாமியார் நிஜத்தில் செய்பவர், புதைக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் சடலங்களை தோண்டி எடுத்து வன் புணர்ச்சி செய்யச் சொன்னவர்.

இதிலென்ன அதிர்ச்சியும்  விரிவான பதிவும் தேவைப்படுகிறது.


பிறை தேடும் இரவிலே, உயிரே . . .

 


தனுஷ் நடித்த "மயக்கம் என்ன? " திரைப்படத்தில் வரும் "பிறை தேடும் இரவிலே உயிரே, எதை தேடி அலைகிறாய்?"  என்ற பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, August 19, 2023

பொருத்தமா இருக்கு டிமோ

 


கருப்பு போர்வையுடன் கொடூரமான பார்வையுடனான டிமோவின் படத்தை பார்த்தவுடன் இதே போன்று கருப்புப் போர்வையுடன் கொடூரமான பார்வையுடனான வேறு யாரையோ பார்த்துள்ளோமே என்று தோன்றியது.

ரொம்பவும் மெனக்கெட  வேண்டிய தேவை ஏற்படவில்லை.

தீரம் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இரக்கமற்ற வில்லனான கொள்ளையனும் கொலைகாரனுமான பவாரியா கும்பல் ஓமாதான்.

கிட்டத்தட்ட இரண்டு கேரக்டருக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறதல்லவா!!!!!

Friday, August 18, 2023

நீ பேசலாமா ஆட்டுக்காரா?

 


150 கோடியில் நூலகமும் 80 கோடியில் கலைஞருக்கு நினைவுச் சின்னமும் அவசியமா என்று கேட்டுள்ள ஆட்டுக்காரனை என்ன செய்வது?

 


மூவாயிரம் கோடி ரூபாயில் சீன இறக்குமதியில் படேலுக்கு சிலை வைத்த கட்சிக்காரன் நீயெல்லாம் 80 கோடி ரூபாய் செலவைப் பற்றியெல்லாம் பேசலாமா? அதற்கெல்லாம் அருகதை உனக்கு இருக்கிறதா?

 

உங்கட்சியோட டிமோ உள்ளிட்ட படிக்காத தற்குறிகளுக்கு புத்தகங்களோட பெருமையோ, நூலகத்தோட அருமையோ புரியாது. நூலகம் திறந்த போதே முட்டாள்தனமா குரைச்சுட்டு போயிட்டாங்க.

 

நீதான் இருபதாயிரம் புக் படிச்ச மேதாவியாசே! நூலகம் அவசியமான்னு நீ கேள்வி கேட்கறது முட்டாள்தனமா இல்லையா? அப்ப்டி இருபதாயிரம் புக் படிச்சும் கொஞ்சம் கூட அறிவே வளரலியே!

 

இருபதாயிரம் புக்கையும் கூட உன் நண்பர்கள் உனக்கு இலவசமா வாங்கிக் கொடுத்திருக்கலாம். அப்படிப்பட்ட இளிச்சவாய் நண்பர்கள் எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்களே! நாங்க எங்க அவசியத்துக்கு நூலகம்தானே போகனும்!

 

அப்படியிருக்க நூலகம் அவசியமான்னு கேட்கறியே! உன்னை மாதிரி அடிமுட்டாளை வச்சுக்கிட்டா தமிழ்நாட்டில  தாமரை கண்டிப்பா அழுகிடும்.

 

 

 

 

டிமோ, குரங்கு பொம்மையல்ல, கண்ணாடி

 



 

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 

 

இறந்தவர்களுக்கு சிகிச்சையும் பணமும் அளிக்கும் விஸ்வகுரு

 

பாஜகவினர் அடிக்கடி பெருமையுடன் பேசும் திட்டம் ஆயுஷ்மான் பாரத். இதற்கு மகுடம் 

 

சூட்டும்’ வகையில் இந்தியாவின் தலைமைக் கணக்காயர் திட்டத்தில் நடக்கும் மாபெரும் தில்லுமுல்லுகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். 

 

திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 88760 நோயாளிகள் சிகிச்சை நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஆனால் இவர்களுக்கு புதிய சிகிச்சை அளிக்கப் படுவதாகக் கூறி  2,14,923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் வந்திருக்கின்றன. அதற்கான பணமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. 

 

இது மட்டுமல்ல. ஒரே செல் பேசி எண்ணில் திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7.5 லட்சம் மட்டுமே. ஏழு ஆதார் எண்களின் அடிப்படையில் 4761 பேர்கள் பதிவு செய்திருப்பதாகவும் ஒரு கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.  மொத்தத்தில். 1.24 கோடி போலிப் பயனாளிகள். இவர்களின் பெயர்கள் 1,86,855 செல் பேசி எண்களுடன் இணைக்க பட்டுள்ளன. 

 

இது போன்ற ஊழல் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

 

ஊழல்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறது என்று அடிக்கடி பேசுகிறார் பிரதமர். 

 

ஆனால் ஊழல்தான் உங்கள் கட்சியினரை ஒன்றாக வைத்திருப்பது போல் தெரிகிறது.

 

சார் அது குரங்கு பொம்மையில்லை. 

கண்ணாடி!

 

மற்ற ஊழல் பற்றியெல்லாமும் அவசியம் எழுதனும்.

சங்கி அக்கறைக்குப் பின்னே . . .

 


கீழே உள்ளது சங்கி எஸ்.ஆர்.சேகர் போட்ட ட்வீட் (பத்து நாள் பழசு).


மன்மோகன்சிங் மீதான அக்கறையின் வெளிப்பாடா இந்த ட்வீட்?

நெவர் . . .

நாடாளுமன்றத்துக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் பொறுப்பற்ற டிமோ வைப் பார்த்து "உடம்பு முடியாத அவரே வராரு. உனக்கென்னய்யா கேடு?" என்று யாரும் கேட்பதற்கு முன்பு முந்திக் கொள்கிறாராம் . . .

சங்கி என்றாலே வெட்கம் கெட்டவன் என்றுதானே அர்த்தம்!


Thursday, August 17, 2023

என்னது ஸ்ரீ சரோஜ் இல்லமா?

 


மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக எங்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றி அதனை அவருக்கு அனுப்பி வைத்தோம்.

 அதற்கு பதில் வந்தது.

 தீர்மானம் சங்க லெட்டர் பேடில்தான் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. லெட்டர் பேட்டில் எங்கள் சங்கத்தின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரிதாக இருக்கும். அதன் கீழே விலாசம் இருக்கும். ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட  தீர்மானத்தில்  தலைவர் கையெழுத்திட்டிருந்தார்.

 குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் யாருக்கு அனுப்பப் பட்டிருந்தது என்று பாருங்கள்.

 


தீர்மானத்தில் கையெழுத்திட்ட தலைவருக்கும் அனுப்பப்படவில்லை.

சங்கத்தின் பெயரிலும் அனுப்பப்படவில்லை.

 மாறாக எங்கள் சங்க அலுவலகக் கட்டிடமான சரோஜ் இல்லம் பெயரையே அனுப்புனராகக் கருதி அனுப்பப்பட்டுள்ளது.

 குடியரசுத் தலைவர்தான் தன் பொறுப்பை மறந்து விட்டார் என்றால்

குடியரசுத் தலைவர் அலுவலகம் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் செயல்படுகிறது.

 இதில் ஒரு அண்டர் செகரட்டரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அநேகமாக அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கக் கூடும்.

 கொடுமை!

 பிகு : முகப்பில் உள்ளதுதான் எங்கள் சங்கக் கட்டிடம் “சரோஜ் இல்லம்”

Wednesday, August 16, 2023

ஆட்டுக்காரனும் கரகாட்டக்காரன் நாதஸ்ஸும்

 


கரகாட்டக்காரனில் ஒரு காட்சி வரும். நாதஸ்வரம் வாசிக்கும் செந்திலையும் நடனமாடும் கோவை சரளாவையும் பார்த்து “ஆஹா இவரு வாசிக்கறதையும் அவங்க ஆடறதையும் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினியை பார்த்த மாதிரியே இருக்கு” என்று சொல்ல கடுப்பான கவுண்டமணி, நீ தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கியா என்று கேட்க செந்தில்தான் பணம் கொடுத்து அப்படி பேசச்சொன்னார் என்ற உண்மை வெளிவரும்.

 கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.

 


புதிய நாதஸ் தெரிந்தாரா