Wednesday, August 19, 2020

கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள்!!!!

 

மோடி திரட்டி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மர்ம நிதி பற்றி நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது.

அந்த நிதி ஒரு பொது அறக்கட்டளை நிதி, அதற்கு பணம் வழங்குவது தனி நபர் விருப்பம். இது ஒன்றும் அரசு நிதி கிடையாது, ஆகவே அதனை அரசு தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டியது அவசியமில்லை. தேசிய பேரிடர் நிதிக்கு பிஎம் கேர்ஸ் நிதியை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் அந்த தீர்ப்பு சொல்கிறது.

நமக்கு சில கேள்விகள் உள்ளது.

பொது அறக்கட்டளை நிதி என்றால் அதற்கு ஏன் பி.எம்.கேர்ஸ் நிதி என்று பெயர் வைத்து அரசு நிதி போலவே தோற்றம் தர வேண்டும்?

பொது அறக்கட்டளை நிதிக்கு ஏன் அரசு அடையாளங்களாக அசோகச் சின்னம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்?

நிதி வழங்குவது தனி நபர் விருப்பம் என்றால் மத்தியரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து கட்டாயமாக பிடித்து பி.எம் கேர்ஸ் நிதிக்கு அனுப்ப வேண்டும்?

ரயில்வேஸ், எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நன்கொடையை மர்ம நிதிக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்?

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டியாக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பணம் அனுப்பினால் போதும் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இந்த கேள்விகளைப் பற்றியெல்லாம் ஏன் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்காமல் கள்ள மௌனம் சாதித்தது என்று நாம் கேட்கலாம்.

ஆனால் யார் வாயைத் திறந்தாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் மூடில் உச்ச நீதிமன்றம் உள்ளதால் நமக்கேன் வம்பு? நான் எதுவும் கேட்கலைங்க!

No comments:

Post a Comment