சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, February 2, 2026
மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .
Wednesday, January 14, 2026
தளபதிக்கே ஓட்டு கிடையாதா?
மேலே உள்ளது அமைதிப்படை படத்தில் வரும் ஒரு காட்சி. தன் மனைவியை அமாவாசை கொல்லச் சொல்லும் போது மணிவண்ணன் பேசும் வசனம் இது.
இன்றைக்கு யார் அது போல ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
கீழேயுள்ள படத்தை பாருங்கள்.
மேலேயுள்ள படத்தில் இருப்பவர் அட்மிரல் அருண் பிரகாஷ். இந்திய கப்பற்படையின் தளபதியாக 31.07.2004 முதல் 31.10.2006 வரை செயல்பட்டுள்ளார். இவரது மொத்த பணிக்காலம் நாற்பது ஆண்டுகள். எழுபதுகளில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நேரடியாக களத்தில் இருந்துள்ளர். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் "வீர் சக்ரா பதக்கம்"
அவர் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே உள்ளது.
இப்போது எதற்கு அந்த வயதான அதிகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?
பணி ஓய்வுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் கோவாவில் வசித்து வருகிறார்கள்.
ஒரு பொறுப்பான குடிமகனாக SIR க்கான படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுத்துள்ளார்.
அவருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.
என்னவென்று?
அவரும் அவரது மனைவியும் இந்திய குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களோடு 18 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வருமாறு அந்த கடிதம் சொன்னது.
இது ஏதோ ஒரு சின்ன கோளாறு. அதற்காக மோடியை அமாவாசை என்ற ரேஞ்சிற்கு பேச வேண்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள் !
இந்த பிரச்சினை என்றில்லை, எப்போதுமே மோடி அமாவாசைதான். அது வேறு விஷயம்.
கப்பற்படை தளபதியாக இருந்தவருக்கு வேண்டுமென்றே வாக்குரிமையை மறுப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களா?
ஆமாம்.
ஏன்? அதற்கென்ன அவசியம்?
ராணுவத்தில் பணி நியமன முறையை மாற்றி ராணுவ வீரர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் அக்னிபாத் முறையை திரு அருண்பிரகாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.
இது போதாதா மோடிக்கு?
கப்பற்படை தளபதியாக இருந்தாலும் அரசின் மூடத்தனத்தை சாடினால் அவர்களது குடியுரிமையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள்.
கேடு கெட்ட ஆட்சி இது.
Wednesday, January 8, 2025
அம்பலமாகி நிற்கும் போலிப் பேராசிரியன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடத்த பாலியல் கொடுமையில் “சார்” என்று யாராவது இருக்கிறாரா என்று தெரியாது. அந்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா தெரியாது என்று தெரியாது.
அதிமுகவும் பாஜகவும் செய்த “யார் அந்த சார்?” அரசியலில் சார் என்ற வார்த்தையே பாலியல் கொடூரனை குறிக்கும் வார்த்தையாக மாறி விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் போலிப் பேராசிரியன், பொய்யன் ராம.சீனிவாசன் ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறான்.
“அமரன்”
முகுந்த் வரதராஜனின் தந்தை திரு வரதராஜன் அவர்களுடன் அவன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை
போட்டு “என்னோடு படத்தில் இருக்கும் “யாரு இந்த சாரு?” என்று கேட்கிறான்.
“எல்லையில் ராணுவ வீரர்கள்” என்று அளந்து விடும் மோசடிப் பேர்வழிகள் ராணுவ வீரர்களை, அவர்களின் குடும்பத்தினரை இப்படித்தான் மதிக்கிறார்கள்.
இவனுக்கு மதுரையில் ஓட்டு போட்ட அப்பாவி மக்கள்தான் பாவம்!
Sunday, December 15, 2024
புது ராணுவ ஓவியம் – மத்யமர் சங்கிகளுக்கு தெரிந்தால்?
ராணுவ தலைமையகத்தில் மோடியால் வைக்கப்பட்டுள்ள புதிய் மொக்கை ஓவியத்தை வரைந்தது யார் என்று தெரிந்தால் சங்கிகள், அதிலும் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகளுக்கு தெரிந்தால் எப்படி ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்த வைரக்கற்கள் பதித்த மாணிக்கக் கிரீடத்திற்கு எதிராக பொங்கினார்களோ, அது போல பொங்கி எழுந்து எழுதித் தள்ளி விடுவார்கள்.
ஆம்
அதை வரைந்தவர்
சென்னை ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப்டிணன்ட் கர்னல் தாமஸ் ஜேக்கப்.
ஆமாம்,
சங்கிகளின் மொழியில் பாவாடை.
இந்த தகவல் மட்டும் தெரிந்தால் போதும் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் (பெண்களின் பெயரில் ஒளிந்து கொண்டுள்ள ஃபேக் ஐடிகள்) மோடியை விட்டு விட்டு இந்திய ராணுவத்தை ஒரு வழி செய்து விடுவார்கள்.
ஆமாம்.
அவர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள், மத வெறி விஷத்தை கக்குவதில் . .
Saturday, December 14, 2024
இந்திய ராணுவத்தை அவமதித்த மோடி
மேலே
உள்ள படம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தை குறிக்கிறது.
இந்திய
ராணுவத் தலைமையகத்து வரும் வெளி நாட்டு ராணுவ அதிகாரிகள் பலரும் அந்த புகைப்படத்தின்
பின்புலத்தில் புகைப்ப்டம் எடுத்துக் கொள்வது வாடிக்கை.
இப்போது
அந்த ஓவியத்தை மோடி அரசு நீக்கி விட்டது. அதற்கு பதிலாக வைத்துள்ள புதிய ஓவியம் இது.
பாண்டவர்கள்
நடத்திய அதர்ம யுத்தத்தின் போது “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற உபதேசக் காட்சி,
சாணக்கியர், கருடன், மற்றும் இந்திய ராணுவ ஆயுத உபகரணங்கள் (ஊழல் செய்து வாங்கிய ரபேல்
போர் விமானம் நீங்கலாக) உள்ளது. இந்த ஓவியம் வெறும் வண்ணத் தீற்றலாக உள்ளதே தவிர அழகும்
இல்லை, பொருளும் இல்லை.
பிகு
: யார் இந்த ஓவியத்தை வரைந்தது? அது நாளை தனி
பதிவாக …
Thursday, October 3, 2024
56 வருடங்களுக்கு முன்பே . . .சூப்பர்
நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி நெகிழ்ச்சியூட்டியது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் 7, பிப்ரவரி, 1968 அன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று ரோஹ்தாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 102 பேரும் இறந்து போய் விட்டனர். அந்த விபத்தில் சிக்கிய அனைவரும் இறந்து விட்டாலும் சிலரின் சடலங்கள் கிடைக்கவில்லை.
கடந்த வாரம் நான்கு சடலங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு சடலம் நாராயண் என்ற சிப்பாயினுடையது.
அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிறு புத்தகம் மூலம் விபரங்கள் அறிந்து சடலத்தை அவரது வீட்டில் சேர்த்துள்ளனர்.
பசந்திதேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட இரண்டு வருடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.
தன்னுடைய மருமகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நாராயணின் தாய் பசந்திதேவிக்கு தன் உறவுக்கார பையன் ஒருவரோடு மறுமணம் செய்து வைத்துள்ளார்.
பசந்திதேவி, அவருடைய இரண்டாவது கணவர் இரண்டு பேரும் காலமாகி விட்ட சூழலில் அவர்களுடைய மூத்த மகன் ஜெய்வீர்சிங் இறுதிச்சடங்குகளை செய்துள்ளார். தன் தாய்க்கு செய்யும் மரியாதை இது என்றும் தெரிவித்துள்ளார்.
56 வருடங்களுக்கு முன்பு தன் மருமகளுக்கு மறுமணம் பற்றி சிந்தித்து செயல்படுத்திய அந்த தாயின் செயல் பாராட்டுக்குரியது.
பிகு: தன் தாய்க்கு இந்திய ராணுவம் குடும்ப ஓய்வூதியமோ இல்லை வேறு எந்த இழப்பீடும் தரவில்லை என்று ஜெய்வீர்சிங் குற்றம் சுமத்தியுள்ளார். அதனை ராணுவம் ஆய்வு செய்து உண்மையறிந்து தவறை சரி செய்திட வேண்டும்.
Sunday, June 2, 2024
சிங்கம் 2 சீன், நிஜத்தில், காஷ்மீரில் . . .
Sunday, June 25, 2023
கூலிப்படை வைத்திருந்தால் , , ,
ரஷ்ய நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த கூலிப்படை அரசுக்கு எதிராக திரும்பியது.
உள்நாட்டுக் கலகம் உருவாகும், புதின் பதவி விலகி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவார் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது.
என்ன நடந்ததென்று தெரியாது.
கூலிப்படையின் முயற்சி நின்று போனது. கூலிப்படை நிறுவனர் வெளியேறி விட்டார்.
இந்த சம்பவம் என்ன சொல்கிறது!
அரசு செய்ய வேண்டிய பாதுகாப்பு கடமையை தனியாருக்குக் கொடுத்தால் அவர்கள் அரசுக்கு எதிராகவே திரும்புவார்கள். பாதிப்பு ஆட்சியாளர்களுக்கு அல்ல, மக்களுக்கே.
கூலிப்படை கலகம் கூட யாராவது கொடுத்த பணத்தின் அடிப்படையில் கூட நிகழ்ந்திருக்கலாம்.
ரஷ்யாவைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.
ராணுவத்தில் டிமோ கொண்டு வந்துள்ள ஒப்பந்த முறையான "அக்னிபாத்" திட்டத்தில் பணியிழப்பவர்களைக் கொண்டு கூலிப்படைகள் உருவாக்க முதலாளிகள் முன் வர வேண்டும் என்பது திட்டத்தின் ஒரு பகுதி.
அப்படி கூலிப்படைகள் உருவானால் அது ஜனநாயகத்திற்கு பேரழிவு.
Monday, November 28, 2022
அவ்ளோ வொர்த் இல்லையே மோடி!
காலையில் ஆங்கில இந்துவில் படித்த செய்தி . . .
மர்மமான ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பஞ்சலோகத்தில் சிலை செய்து அதை ராணுவ தலைமையகத்தில் வைக்கப் போகிறார்களாம்.
தங்கம், வெள்ளி, செப்பு, ஈயம் மற்றும் இரும்பின் கலவையே பஞ்சலோகம். கோயில் உற்சவர் சிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கலவை இது. அதன் மதிப்பு அதிகம் என்பதால்தான் சிலைக்கடத்தல் செய்பவர்கள் பஞ்சலோக சிலைகளையே குறி வைப்பார்கள்.
அவ்வளவு மதிப்பில் பஞ்சலோக சிலை வைக்கும் அளவிற்கு பிபின் ராவத் என்ன சாதித்து விட்டார்?
அகால மரணம் அவரை புனிதராக்கி விடுமா என்ன?
இந்திய் ராணுவத்தை காவிமயமாக்கியதும் உளவுத்துறை தகவல்களை அலட்சியம் செய்து ராணுவ வீரர்களை பலி கொடுத்ததும் போர் வந்தால் நடத்த ஆயுதங்களும் வெடி பொருட்களும் இல்லாத அளவிற்கு ராணுவத்தை பலவீனப்படுத்தியதும் காஷ்மீரில் பொய்யான தாக்குதல்களை ஊக்குவித்ததும்தான் அவர் சாதனைகள்.
அவருக்கு சிலை என்பதே ஓவர். பஞ்சலோக சிலை என்பது ரொம்பவே ஓவர்.
Tuesday, June 21, 2022
அக்னிபாத் – மனு தர்ம சதி
அக்னிபாத்
திட்டத்தினை கொண்டு வருவதில் மிகப் பெரிய மனு தர்ம சதி அடங்கியுள்ளது.
Monday, June 20, 2022
அதெல்லாம் முடியாதுடா தம்பி . . .
அக்னிபாத் எனும் அயோக்கியத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட இளைஞர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ஒவ்வொரு ஒன்றிய மந்தியும் சாரி மந்திரியும் தங்கள் துறையில் வேலை வாய்ப்பில் 10 % ஒதுக்கீடு அக்னி வீரர்களுக்கு தருவோம் என்று அறிவித்து வருகின்றனர்.
இது போன்ற இட ஒதுக்கீடெல்லாம் கொல்லைப்புற வழியில் வருவதாகும். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இரண்டு மாதம் முன்புதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக இந்த 10 % இட ஒதுக்கீடு என்பதே பெரிய டுபாக்கூர் வேலைதான். மோடியின் மந்திரிகள் மட்டும் மோடியைப் போலவே ஃப்ராடுகள்தானே என்ற உங்கள் மனதின் குரல் கேட்டு விட்டது.
மற்ற மந்திரிங்க அறிவிப்பை கேட்டதும் விமானத்துறை மந்திரியான ஓடுகாலித் தம்பி ஜோதிர் ஆதித்தியா சிந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு விமானத்துறையிலும் 10 % இட ஒதுக்கீட்டுன்னு சொல்லிட்டான்.
தம்பி சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா கிட்ட வித்துட்ட, ஏர்போர்ட்டை எல்லாம் அதானிகிட்ட கொடுத்திட்ட, இவங்கெல்லாம் அக்னிவீரனுக்கு வேலை கொடுப்பாங்களா? (கிழிப்பாங்க) நீ மந்திரியாக இருக்கறதே தண்டம்தான். இதுல விமானத்துறையில் 10 % இட ஒதுக்கீடுன்னு காமெடி செய்யறே!
பிகு: அக்னிபாத் என்பது சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய மனு தர்ம சதி. விரிவாக விரைவில் எழுதுவேன்
Saturday, June 18, 2022
புல்டோசர்கள் எங்கே மொட்டைச் சாமியார்??????
Friday, June 17, 2022
ஐயோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு
மேலே உள்ளது ஆர்.கே.செல்வமணி படத்தில் வரும் பாடல், புதிய விக்ரம் படத்தில் அந்த பாடல் வரிகள் ஒலித்ததிலிருந்து அதை அவ்வப்போது ஹம்மிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்.
"அக்னிபாத்" என்ற பெயரில் இந்திய இளைஞர்களை எதிர்கால கூலிப்படையாக மாற்ற நினைத்த மோடியின் சதிக்கு எதிராக வெகுண்டெழுந்த இந்திய இளைஞர் பட்டாளத்தின் எதிர்வினையை சொல்கிறேன் என்று யாரும் நினைக்கக் கூடாது.
சரி, சரி, நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். . .
மோடியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் கொதித்து எழுவது நல்லது, இந்திய நாட்டுக்கும் மக்களுக்கும்
Wednesday, June 15, 2022
ராணுவத்துக்கு ஆளெடுங்கள், கூலிப்படைக்கல்ல . . .
நேற்று முன் தினம் மோடி ஒன்றரை ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை என்று அறிவித்த போது அதை வழக்கமான ஜூம்லா என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் புதிய கொள்கையை படித்த பின்பு மோடியின் அறிவிப்பு ஜூம்லாவாக இருப்பதே மேல் என்று தோன்றியது.
நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பார்கள், வெறும் தொகுப்பூதியம்தான். நான்கு வருடத்திற்குப் பிறகு 75 % பேர் வீட்டுக்கு அனுப்பப்பட 25 % பேர் மட்டும் தொடர்வார்கள்.
வீட்டுக்கு வந்தவர்கள் நிலை ????
தொகுப்பூதியத்தில் பிடிக்கப்படும் தொகைக்கு இணையான தொகையை அரசு கொடுக்குமாம். அதை வைத்துக் கொண்டு தொழில் தொடங்க வேண்டுமாம்.
மாத தொகுப்பூதியம் 25,000 என்று ஒரு செய்தி படித்தேன். 10 % பிடித்து அரசும் அதே தொகையை கொடுத்தால் எவ்வளவு வரும்?
2500*2*48 = 2,40,000
இதை வைத்துக் கொண்டு பக்கோடா கடை போடலாம். விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேகத்தில் அதையும் சீக்கிரமே மூட வேண்டி வரும்.
பிறகு என்ன செய்வார்கள்?
"வீதிகளிலே வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்"
என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
நான்காண்டுகளில் கற்றுக் கொண்ட வித்தையை இறக்கினால் என்ன ஆகும்? இவர்கள் நாளை சங்கிகளின் கூலிப்படையாக மாறுவார்கள்.
அது மட்டுமல்ல . . .
மோடி அரசு இன்னொரு கொள்கையையும் அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
பல நாடுகளில் தனியார் ராணுவம் உள்ளது. அது போன்ற அனுமதியை அதானி, அம்பானிக்கு கொடுத்தால் அவர்கள் இந்த 75 % ஒப்பந்த வீரர்களை பணிக்கு எடுத்துக் கொள்வார்கள். தனியார் ராணுவம் என்பதும் அடிப்படையில் கூலிப்படைதான். உக்ரைன் போருக்குக் கூட சில கூலிப்படைகள் சென்று பிரச்சினையை சமாளிக்க முடியாமல் ஓடிப் போன செய்தியை படித்திருப்பீர்கள்.
அது போன்ற நிலைமை இந்திய இளைஞர்களுக்கு வர வேண்டுமா?
ஆகவே மிஸ்டர் மோடி, ஆணிகள் அப்படியே இருக்கட்டும். ராணுவத்துக்கு ஆளெடுங்கள், தனியார் கூலிப்படைகளுக்கல்ல.
பிகு: எதுக்கு படத்துல ஆட்டுக்காரன் என்ற கேள்வி வந்ததல்லவா? மோடியின் அறிவிப்பை மிகப் பெரிய புத்திசாலித்தனம் என்று அந்த முட்டாள் வர்ணிக்கும் முன் அடித்து விடத்தான் . . . .
Sunday, June 12, 2022
போலீஸ் Vs ராணுவம். என்னாகும் ?????
ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் பனிரெண்டு சுரங்கத் தொழிலாளர்களை நாகாலாந்தில் சுட்டுக் கொன்றது நினைவில் உள்ளதா?
நாகாலாந்து போலீஸ் ராணுவத்தினர் முப்பது பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ராணுவம் எதிர் போலீஸ் என்ற நிலையில் ஒன்றிய அரசும் நீதிமன்றமும் யார் பக்கம் நிற்கும்?
அப்பாவித் தொழிலாளர்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற ராணுவத்தினருக்கு தண்டனை கிடைக்குமா/
கண்டிப்பாக கிடைக்காது.
அங்கே ராணுவத்தினருக்கு ஒரு சிறப்புக் கவசம் இருக்கிறது. அந்த கவசம் அவர்களை காப்பாற்றும்.
ARMED FORCES SPECIAL POWERS ACT எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கே நடைமுறையில் உள்ளது. இந்த கொடூரத்திற்குப் பின்பும் அது நீட்டிக்கப்பட்டது.
அதனால் யாரும் கேள்வி கேட்க முடியாத, எல்லையற்ற அதிகாரத்தை அளிக்கும் அராஜகச் சட்டம் உள்ளவரை அந்த அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்கவே கிடைக்காது.
Saturday, January 22, 2022
அடுத்த அராஜகமென்ன மோடி?
காட்டிக் கொடுத்த கருங்காலிகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ள துரோகிகளின் வாரிசுகளான மோடி வகையறாக்கள் இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை சீர்குலைத்துள்ளனர்.
வங்க தேச விடுதலைப் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கான நினைவுச் சின்னமாக டெல்லி இந்தியா கேட் அருகில் அமர் ஜவான் ஜோதி என்னும் அணையா ஜோதி உள்ளது.
அந்த ஜோதி நேற்று அணைக்கப்பட்டு விட்டது.
அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை. புதிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியோடு ஐக்கியமாகி விட்டது என்று ஒரு விளக்கம் தருகிறது அரசு.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த நந்தனாரை எரித்துக் கொன்று விட்டு அவர் சிவனோடு ஜோதி வடிவில் ஐக்கியமாகி விட்டார் என்று கதை விட்டு நந்தன் வந்த தெற்கு வாசலை இன்னமும் மூடி வைத்திருக்கிற அராஜகத்திற்கு கொஞ்சமும் குறையாத அராஜகம் இது.
வங்க தேசப் போரை வென்றது இந்திரா காந்தி என்பதை நினைவு படுத்துவதால்தான் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டுள்ளது.
இவர்களால் அப்படி ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா?
கார்கில் போர் வெற்றி என்று சொன்னாலும்
ஊடுறுவலை தடுக்க முடியாத, ஊடுறுவல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத வாஜ்பாய் காலத்து உளவுத்துறையின் கையாலாகத தனத்தையும் இறந்து போன வீரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப் பெட்டியில் கூட ஊழல் செய்ததும்தானே இணைந்தே நினைவுக்கு வருகிறது!
"எல்லையிலே வீரர்கள்" என்று வஜனம் பேசியவர்கள் ஆட்சியில்தான் இறந்து போன வீரர்கள் நினைவுச் சின்னம் அழிக்கப்படுகிறது.
அடுத்து என்ன அராஜம் என்பதை சொல்லி விடுங்கள்.
உங்களுக்கு ஓட்டு போட்ட மூடர்கள் செய்த தவறால் ஒட்டு மொத்த தேசமும் அழிந்து கொண்டிருக்கிறது.
Friday, December 31, 2021
படுகொலைகள் பழக்கமானதால்தானோ?
இம்மாத துவக்கத்தில் இந்திய ராணுவம் நாகாலாந்தில் 12 அப்பாவி மக்களை படு கொலை செய்து ராணுவ அதிகார சிறப்புச் சட்டத்தினால் நடவடிக்கை இல்லாமல் தப்பித்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.
AFSPA ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் அங்கே ஒலித்தது. மாநில முதலமைச்சர் கூட வலியுறுத்தினார்.
ஆனால் அச்சட்டம் நாகாலாந்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசே ஆணை பிறப்பித்துள்ளது.
இதை இரட்டை வேடம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?
போராடும் மக்களை ஒடுக்க ராணுவ சிறப்புச்சட்டம் இருப்பது நல்லது என்று மாநில அரசு முடிவெடுத்ததா?
அல்லது
படுகொலைகள் அங்கே பழக்கமாகி விட்டதா?
Monday, December 6, 2021
நாகாலாந்து கொலைகள் - சில கேள்விகள்
நேற்று நாகாலாந்தில் ராணுவம் 12 பொது மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. அவர்கள் தீவிரவாதிகள் என்று நினைத்ததால் கொன்று விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளது ராணுவம்.
அதெப்படி நிலக்கரி சுரங்க ஊழியர்கள் அணியும் உடை போலவே, அவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் போலவே தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று உளவு சொன்னது யார்?
AFSPA எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் இல்லையென்றால் இப்படி பொறுப்பில்லாமல் செயல்பட முடியுமா?
அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதாவது புரிகிறதா?
நாகாலாந்தில் எல்லா குழுக்களுடனும் விவாதித்து அமைதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் (அந்த உடன்பாடு, ஒப்பந்தம் எல்லாம் இன்று வரை ரகசியமே) பீற்றிக் கொள்ளப்பட்டதே, பிறகு எப்படி அங்கே தீவிரவாதிகள் வந்தார்கள் என்று அந்த சாதனைக்காகவே தமிழ்நாடு ஆளுனராக்கப்பட்டார், அவர் இங்கே திராவிட இயக்கங்களை வீழ்த்தி விடுவார் என்று சொல்கிறார்களே, அவர் இதற்கு பதில் சொல்வாரா?
நாகாலாந்தில் நடந்தது போலத்தான் காஷ்மீரிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
நாகாலாந்து சம்பவத்திற்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளாரே, வட கிழக்கு மாநிலங்களில் எங்காவது தேர்தல் வருகிறதா?




























