மாநிலங்கள்
ஆனாலும் சரி மத்தியரசு ஆனாலும் சரி, ஒரு அமைச்சகத்தின் செயலாளர் பொறுப்பிற்கு வர வேண்டுமானால்
அவர் பல வருடங்கள் பணி செய்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தான் இருப்பார்கள், அப்படித்தான்
இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள்.
ஆனால்
“வெளியே போ” வைத்ய ராஜேஷ் கோச்சா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்ல.
ஆமாம்.
பிரிலிமினரி,
மெயின், நேர்முகத் தேர்வு என்று எந்த தேர்வு முறையை சந்திக்காதவர்.
மாநில
அரசுப் பணியில் க்ரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள், பணி மூப்பு, பணித் திறன், சில சந்தர்ப்பங்களில்
ஐ.ஏ.எஸ் அந்தஸ்து (Conferred IAS) பெறுவார்கள்.
கோச்சா
அப்படிப்பட்ட அந்தஸ்து பெற்றவரும் அல்ல.
பின்
எப்படி அவர் அமைச்சக செயலாளராக செயல்படுகிறார்?
அங்கேதான்
மோடி வருகிறார்.
நீதித்துறை,
தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், ரிசர்வ் வங்கி,
சி.பி.ஐ, ஊடகம் என அனைத்து அமைப்புக்களையும் சீரழித்து சின்னா பின்னமாக்கிய நாசகர பேர்வழி
அரசு நிர்வாகத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?
அரசுச்
செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பொறுப்பிற்கு நேரடியாக வெளிச் சந்தையில் உள்ளவர்களையும்
நியமிப்பது என்று முடிவெடுக்கிறார்.
அந்த
அடிப்படையில் வைத்ய ராஜேஷ் கோச்சா ஆயுஷ் அமைச்சக செயலாளராகிறார்.
அவருக்கு
என்ன தகுதி?
நம்
ஊர் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் வரும் டாக்டர் காளிமுத்து, டாக்டர் சேலம்
சிவராஜ் போல ஒரு வைத்தியர்.
அவர்
ஒரு லேகிய கம்பெனி ஒன்றை துவக்குகிறார். அந்த கம்பெனியை அப்போது ஆட்5சிப் பொறுப்பு
எதிலும் இல்லாது வெறும் கட்சிப் பொறுப்பில்
மட்டுமிருந்த ஒரு பிரபலம் துவக்கி வைக்கிறார்(அந்த பிரபலம் யார் என்பதை கடைசியில் சொல்கிறேன்).
அதன்
பின்பு அவருக்கு ஏறுமுகம்தான்.
அவரது
மாநிலத்தில் உள்ள அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஆயுர் வேத பல்கலைக் கழகத்தில் அவரை அந்த
பிரபலம் துணை வேந்தராக்குகிறார்.
அந்த
துணை வேந்தர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டே பின்பு ஆயுஷ் அமைச்சக செயலாளராகி விட்டார்.
முழுக்க
முழுக்க பிரபலத்தின் துணை கொண்டே மேலேறி வந்ததால் அவருக்கு ஆணவமும் திமிரும் வந்ததில்
வியப்பென்ன இருக்கிறது!
அந்த
பிரபலம் யார் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?
நீங்களே
அது மோடி என்று சரியாக ஊகித்திருப்பீர்களே!
சின்ன
வீடு திரைப்படத்தில் டிபன் காரியரில் மல்லிகைப் பூ வைத்து அனுப்பியதற்கு பாக்யராஜின்
அப்பாவாக நடித்த கே.கே.சௌந்தர் “எதை எடுத்தாலும் ஒரு திருட்டுத்தனம், ஒரு கேப்மாறித்தனம்" என்று திட்டுவார்.
இந்த சூழலுக்கு அது கச்சிதமாய் பொருந்துகிறது.
மேலும் இந்த கோச்சா மோடியின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார்.
ஆமாம், சர்ச்சை வந்த பிறகு "அவரது கூட்டத்தை சில போக்கிரிகள் (HOOLIGANS) திட்டமிட்டு சீர் குலைத்தனர் என்று சாடி திசை திருப்பியுள்ளார்.
"வெளியே போ" கோச்சா யார்? - நம் ஊர் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் வரும் டாக்டர் காளிமுத்து, டாக்டர் சேலம் சிவராஜ் போல ஒரு வைத்தியர்.
ReplyDeleteஅவர் ஒரு லேகிய கம்பெனி ஒன்றை துவக்குகிறார். அந்த கம்பெனியை அப்போது ஆட்5சிப் பொறுப்பு எதிலும் இல்லாது வெறும் கட்சிப் பொறுப்பில் மட்டுமிருந்த ஒரு பிரபலம் துவக்கி வைக்கிறார்(அந்த பிரபலம் யார் என்பதை கடைசியில் சொல்கிறேன்).
அதன் பின்பு அவருக்கு ஏறுமுகம்தான்.
அவரது மாநிலத்தில் உள்ள அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஆயுர் வேத பல்கலைக் கழகத்தில் அவரை அந்த பிரபலம் துணை வேந்தராக்குகிறார்.
அந்த துணை வேந்தர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டே பின்பு ஆயுஷ் அமைச்சக செயலாளராகி விட்டார். - எனது மதுரை நண்பர் ஒருவர் உங்கள் பதிவை பார்க்கச் சொன்னார். அருமை சார். எனது பக்கத்தில் ப்கிர்கிறேன். நன்றி சார் திரு S.Raman, Vellore - ஒரு ஊழியனின் குரல்