Showing posts with label நீதிபதி. Show all posts
Showing posts with label நீதிபதி. Show all posts

Saturday, April 11, 2026

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.

Tuesday, March 10, 2026

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கிள்ளை ஹஸ்ரத் ரஹமத்துல்லா தர்காவில்

 


இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக ஆங்கில இந்து நாளிதழில் பார்த்து மன நிறைவு அடைந்த செய்தி இது.

சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீபூவராகவசுவாமியின் உற்சவர் விக்கிரகத்தை மாசி மக தீர்த்தவாரி விழாவின் ஒரு பகுதியாக பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளையில் உள்ள ஹஸ்ரத் ரஹமதுல்லா தர்காவிற்கு கொண்டு வந்துள்ளனர். 

அங்கே இஸ்லாமியர்கள் அரை மணி நேரம் வழிபாடு செய்து பொன்னாடை, பழங்கள், தேங்காய்கள், மூன்று கிலோ அரிசி, 501 ரூபாய் என்று வழக்கமான காணிக்கையை செய்துள்ளனர்.

கோயில் சார்பாக தர்கா அறங்காவலர்களுக்கு மாலைகள் அணிவித்து வெல்லத்தை பிரசாதமாக கொடுத்துள்ளனர்.

சையத் ஹஸ்ரத் ரஹமதுல்லா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு ஆற்காடு நவாப் அளித்த 600 ஏக்கர் நிலத்தை அளப்பதற்கு உப்பு வெங்கட் ராவ் என்று வருவாய் அதிகாரி உதவி செய்ய, அவருக்கு ஒரு சிறு பகுதி நிலத்தை (26 ஏக்கர்)  அளித்துள்ளார்.

அந்த நிலம் பின்பு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ஆலயத்தின் பராமரிப்பிற்கு வந்துள்ளது.

இதனால்தான் ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

எத்தனை ஆண்டுகளாக ?

அதிகம் இல்லை.

முன்னூறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியை படிக்கையில் உண்மையிலேயே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது போன்ற சடங்குகள், இந்தியா முழுதும் பல இடங்களில் மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இதுதான் உதாரணம்.

இதனைத்தான் சங் பரிவார அமைப்புக்கள் சதிகள் மூலம் சிதைக்க முயற்சிக்கிறார்கள், திருப்பரங்குன்றம் போல, அவர்களுக்கு சில தீர்ப்பாளர்களும் உடந்தையாக உள்ளனர். 

Tuesday, February 24, 2026

வம்புக்காக அலையும் திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர்

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை நீதிபதி பதவியிலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள முன்மொழிவு மிக மிக நியாயம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.


ஆன்மீக குருக்களை கடவுளின் அம்சமாக பார்ப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்,  மூடர்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்று அவர் சொல்லியுள்ளார்.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆச்சாராம் பாபு, ராம்ரஹீம் சிங், சீசீ.ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான போலிகளை ஆன்மீகக் குருக்களாகவும் கடவுளின் அம்சமமாக கருதினால்தான் புத்திசாலி, உத்தமன், நாகரீக மனிதன் என்று இவர் சொல்வாரானால் அதை விட மூடராகவோ காட்டுமிராண்டியாகவோ, அயோக்கியனாக இருப்பதே மேல்.

தமிழ்நாட்டு மக்களை வெறுப்பேற்றி இவர் மீது மோசமாக பேச வைத்து அனுதாபம் தேட நினைக்கிறார். கலவரத்தை தூண்டும் எண்ணம் கூட இருக்கலாம்.

உச்ச நீதிமன்றம் இவர் மீது தன்னியல்பாக (SOU MOTU) நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இல்லை என்பதால்தான் இவருக்கு தைரியம். 


பிகு: கடவுளின் அம்சமான ஆன்மீகக் குருக்கள் பற்றி கூடுதலாக அறிய, அவர்களின் நிழல் உலகம் பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் . .

Wednesday, February 4, 2026

தற்காலிக நீதிபதிகள் - அராஜகம்

 


நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (Collegium) மிக மிக மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகளை அலகாபாத் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதிகளாக இரண்டாண்டு காலத்திற்கு நியமித்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன?

புதிதாக நீதிபதிகளை தீர்ந்தெடுக்க உங்களுக்கு மனமில்லையா இல்லை புதிய நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி உள்ளவர்கள் மொட்டைச் சாமியாரின் உபி மாநிலத்தில் யாரும் இல்லையா?

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துப் போகக் கூடிய நீதிபதிகளை புதிதாக கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக பழையவர்களே வசதி என்று நினைத்தார்களோ!

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது என்பது அரசுத் துறையோ இல்லை  வேறு நிறுவனமோ  மிக மிக மோசமானது. இளைஞர்களுடைய வாய்ப்பை பறிக்கிற அராஜகம்.

இது மிக மிக மோசமான உதாரணம். . . .


Friday, January 30, 2026

பொறுப்பில்லாமல்,வெறுப்பில் பேசலாமா யுவர் ஆனர்?

 


தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதி விட்டார் போல. வெறுமனே அரசை மட்டும் நம்பாமல் வெரும் வெளி வேண்டும் என்பதற்காக முதலாளிகளின் மனம் குளிரும் படி பேசியுள்ளார்.


மிக மிக அபத்தமாகவும் வன்மமாகவும் உளறியுள்ளார்.  இவர் சொன்ன அபத்தத்தை  சங்கிகள் பலர் வாந்தியெடுப்பார்கள். அப்படிப்பட்ட சுரண்டல்வாதிகள் சாம்சங் போராட்டத்தின் போதும் வாந்தி எடுத்தனர். அந்த மூடர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்காக அப்போது எழுதிய மூன்று பதிவுகளின் இணைப்புக்கள் கீழே உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் - சங்கிகளின் பொய்க்கணக்கு . . .

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

தொழிற்சங்கம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை காலம் உடனடியாகவே உரக்கச் சொன்னது.

அது என்ன?

கீழேயுள்ள இணைப்பை பாருங்கள்.

தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால் ??? சங்கிகளே சொல்லுங்கள்

தலைமை நீதிபதி அவர்களே, தொழிற்சங்கப் போராட்டங்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? உங்களிடம் விபரம் உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா? சங்கிகள் போல வாய்க்கு வந்ததை உளறக்கூடாது.

எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை அழிக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அதனை இன்று வரை பாதுகாத்து வருவது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பல நிறுவனங்களுக்கும் காவல் அரண்  தொழிற்சங்கங்கள்தான். 

வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படக்கூடாதா? அப்படி நிர்ணயிக்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு வேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஊதியம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு கிடையாதா? அரசு நிர்ணயிக்கும் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை கோர்ட்டுக்கு இழுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

மோடி போல, ஆட்டுக்காரன் போல நீங்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 

நீங்கள்  படித்தவர். சுயேட்சையான அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இனியாவது உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தை காத்திடுங்கள். 

Thursday, January 29, 2026

அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டீங்களா ஜட்ஜய்யா?

 


நம்ம திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் உதிர்த்த லேட்டஸ்ட் அரிய முத்து கீழே உள்ளது.


பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் கற்பிக்கிற, பெண்களை ஒடுக்குகிற, ஜாதிய சிந்தனையை ஊக்குவிக்கிற, அறிவியல் சிந்தனைக்கு எதிரான சனாதன தர்மம், அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவேன் என்று வெளிப்படையாகவே சொல்கிற திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், நீதிபதி பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்.

கார் விபத்து வழக்கில் தன் சகோதரிக்காக ஆள் மாறாட்டம் செய்த குற்றவாளியை, அவர் வேதம் அறிந்தவர் என்பதால் விடுதலைக்கு வழி வகுத்தேன் என்று சொன்னவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Friday, January 23, 2026

நீதிபதியிடம் சில கேள்விகள்

 


சனாதன ஒழிப்பு என்றால் சனாதனத்தை பின்பற்றும் அனைவரையும் கொன்று விடுவது என்று புதிய அர்த்தம் சொல்லியுள்ள நீதியரசியால் என்னுடைய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

"காங்கிரஸ் முக்த் பாரத்" என்பதை பாஜக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இலக்கு என்று சொல்கிறது. அப்படியென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் கொன்று விட திட்டமிட்டுள்ளது என்று சொல்லலாமா?

கழகங்கள் அற்ற தமிழகம் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டு பாஜக சொல்லிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால் திமுக மற்றும் இப்போது பாஜகவின் அடிமையாக மாறியுள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களையும் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக சொன்னதா?

சனாதனம் என்பது ஒரு கருத்தியல்.  பிறப்பில் வேற்றுமை கற்பிக்கிற பிற்போக்குக் கருத்தியல், பெண்களை அடிமைகளாக அடக்கியாள துடிக்கும் கருத்தியல், மாற்று மதங்களுக்கு எதிரான கருத்தியல்.

சனாதனம் என்ற கருத்தியலை ஒழிப்போம் என்றால் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்ற புனிதமான புரிதல் உங்களுக்கு எந்த போதிமரம் கொடுத்தது?

உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கரின் படி திரிசூலத்தின் மூன்று முனைகள் அழிக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எழுதியே வைத்துள்ளார் என்று.

அவரது சடலத்தை தோண்டி எடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா? 

நீதிபதிக்கு மாறுதல் மட்டுமே என்று மகிழுங்கள்

 


நவம்பர் 2024 ல் உத்திர பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் ஒரு கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தது.

ஐநூறு ஆண்டு பழமையான ஒரு மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சங்கிகள் சர்ச்சை எழுப்ப, ஆதித்ய சிங் மாவட்ட நீதிபதி அந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

அந்த ஆய்வு செய்ய மசூதி நிர்வாகத்தினர் எதிர்த்த போது, சங்கிகள் கலவரம் செய்தனர். போலீஸ் மசூதியை பாதுகாக்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமானவர்கள் காயப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் தந்தை தொடுத்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி, போலீஸாரின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய அனுஜ் சவுத்ரி என்ற ஏசிபி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி மாவட்ட நீதிபதி சுதீர் என்பவர் உத்தரவிடுகிறார்.

காவல்துறை அதை ஏற்க முடியாது என்ற நிலை எடுக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பாளருக்காக ஒப்பாரி வைத்த சங்கிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?

நீதிபதி சுதீரை இட மாற்றம் செய்து விட்டார்கள்.

நீதிபதி லோயாவிற்கு நிகழ்ந்தது இவருக்கு நடக்காதது மகிழ்ச்சியே.

மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் உண்மையை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் போல கொல்லப்படாமல் மாறுதலோடு நிறுத்திக் கொண்டது மொட்டைச்சாமியார் ஆட்சி.

இன்னொரு செய்தி தெரியுமா?

சுதீர் இடத்திற்கு வந்தது யார் தெரியுமா?

மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட  அதே ஆதித்ய சிங் தான் . . .



Thursday, January 22, 2026

தீர்ப்பு அபத்தமானது.

 

சனாதன ஒழிப்பு தொடர்பான் தீர்ப்பின் விபரங்களை படிக்கும் போதே மிகவும் அபத்தமாக இருப்பதாக தோன்றியது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இத்தீர்ப்பை அபத்தமானது என்ற வார்த்தையை பயன்படுத்தி எதிர்வினை ஆற்றிய போது மனதுக்குள் கொஞ்சம் நிறைவாகவே இருந்தது.

நீதிபதி அவர்களிடன் நானும் கொஞ்சம் கேள்விகளை கேட்க வேண்டும்.

அவை நாளை . . .




சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!


பாஜக BJP Tamilnadu தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

"சனாதன ஒழிப்பு" பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் முற்போக்கு மற்றும் எழுத்தாளர் சங்க தமுஎகச மாநிலக்குழு மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா 80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா? என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி அத்தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லையென்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

“முழு வழக்கும் ‘ஒழிப்பு’ (ozhippu) என்ற சொல்லைச் சுற்றியே அமைகிறது; அந்தச் சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்கிற்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது” என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது.

ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "சாதி ஒழிப்பு" பேசினார். அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற, பாகுபடுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது. சனாதன தர்மத்திற்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPIM Tamilnadu கேட்டுக் கொள்கிறது.



(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.

Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Monday, December 8, 2025

நீதிபதி பதவி நீக்கம் - சரியான முடிவு

 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு  காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.

அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.

ஆனால்

உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது. 

சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .

Saturday, December 6, 2025

ஜட்ஜய்யா சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ????

 


நம்ம திருப்பரங்குன்றம் புகழாளர் மட்டும் சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ???

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கல்தூண் திரைப்படத்தின் பெயரை மேலே உள்ளது போல மாற்றி அமைக்க உத்தரவிட்டிருப்பார்.

அணிந்துள்ளது காவிக்கண்ணாடி அல்லவா!

Thursday, December 4, 2025

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால் ????


 தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.

இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?

சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.

அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.

அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான்  விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை. 

"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள். 

அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்

144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.

உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .



Tuesday, November 25, 2025

கோர்ட்டால் அசிங்கப்படுத்தப்பட்ட தவெக நிர்வாகி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு ஓடி ஒளிந்து கொண்ட விஜய் கட்சியின் கொ.ப.செ ஆதவ் அர்ஜூனா, உசுப்பேத்தும்படி ஒரு ட்வீட் போட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை பயந்து நடுங்கி நீக்கியது நினைவில் உள்ளதல்லவா?

அந்த ட்வீட்டிற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்ன காரணம் தெரியுமா?



எஸ்,வி.சேகர் பல வருட அனுபவம் கொண்ட, மாநிலம் முழுதும் அறியப் பட்ட ஒரு கலைஞர். அவரது பதிவுகள் தாக்கத்தை உருவாக்கும்.

ஆனால் இந்த ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு புதியவர். அவர் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே வழக்கெல்லாம் தொடுக்க (வேண்டிய அளவு வொர்த்தில்லாத டம்மி பீஸ்) வேண்டாம் என்று காரணமும் சொல்லி விட்டார். (அடைப்புக்குள் இருந்தது மட்டும் என் வார்த்தைகள்). 

"ஆதவ் அர்ஜூனா ஒரு கத்துக்குட்டி, அந்தாள் பேச்சையெல்லாம் எவனும் மதிக்க மாட்டான்"  என்பதுதான் நீதிபதி சொன்னது.

Friday, November 21, 2025

குற்ற உணர்ச்சியா நீதி(அற்ற) அரசர்களே!


 
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனர்களுக்கோ எந்த காலவரையும் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்து ஆரெஸெஸ் ரெவி போன்ற ஆட்டுத்தாடிகள் தங்கள் அயோக்கியத்தனத்தை தொடர ஊக்க டானிக் கொடுத்த தீர்ப்பை எழுதிய நீதியரசர் யார்?

தெரியாது.

யார் எழுதியது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

ஒருவருக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வென்றால் அத்தீர்ப்பை எழுதிய ஜட்ஜ் யார் என்பது அதிலே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் அந்த விபரம் சொல்லப்படவில்லை.

ஏன்?

ஜனநாயகத்திற்கு எதிராக, ஆட்டுத்தாடிகளின் அராஜகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறோம் என்ற குற்ற உணர்வா?

இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதியை இடித்த கிரிமினல் குற்றவாளிகளிடமே பாபர் மசூதி நிலத்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைத்த அந்த ஐவர் அமர்வு தீர்ப்பிலும் யார் எழுதியது என்பது சொல்லப்படவில்லை.

இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத்தான்.

"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்" என்ற ரஜினி பட பஞ்ச் வஜனம் போல கடவுளைக்கேட்டேன், அவர் உத்தரவிட்டதை எழுதினேன் என்று மோடியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய வைத்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்  பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. . . .

Tuesday, November 4, 2025

ராகேஷ் கிஷோரை விட கேவலமாக மோடி அரசு

 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற சனாதன வக்கீல் செருப்பை வீசியதும் தான் செய்த அயோக்கியத்தனமான செயலுக்கு கொஞ்சமும் வருந்தாததும் அந்த சனாதன வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று சனாதன அடிப்படையில் உச்ச நீதிமன்ற இதர நீதிபதிகள் முடிவெடுத்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.

ராகேஷ் கிஷோர் செயலை விட கேவலமான செயலை மோடி அரசு செய்துள்ளது.

அது என்ன?


ஒரு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்கான நாளும் குறிப்பிடப்பட்ட நிலையில் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மனு கொடுப்பதன்  நோக்கம் என்ன?

பல நாட்களாக வழக்கு நடந்து கொண்டிருந்த போது அரசுக்கு ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? 

கடைசி நிமிடத்தில் மனு கொடுப்பதல் நோக்கம் ஒன்றுதான்.

வழக்கை தாமதம் செய்தால் தலைமை நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டிய அவசியம்  இருக்காது. அதனால்தான் வழக்கு விசாரணை முழுமையாக முடிந்த பின்பு நள்ளிரவில் மனு கொடுத்துள்ளனர்.

இதுவும் ஒரு விதமான தீண்டாமைதான்.

அரசே அதனை செய்வது மிகவும் கேவலமானது.