கடைசி நான்கு தலைமை நீதிபதிகளால் உச்ச நீதிமன்றம் சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சொன்ன பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது.
ஒரு பாஜக தலைவர் ஒருவரின் பிரம்மாண்டமான பைக்கின் மீது தற்போதைய தலைமை அமர்ந்து போஸ் கொடுத்ததை கண்டித்தது வழக்கிற்கான முக்கிய காரணம்.
நீதி மன்ற அவமதிப்பு வழக்கிற்காக உச்ச நீதிமன்றம் அனுப்பிய இரண்டு பக்க நோட்டீஸிற்கு பிரஷாந்த் பூஷன், தன் கருத்துக்கள் ஒன்றும் அவமதிப்பு கிடையாது, அரசியல் சாசனம் அளித்துள்ள ஜனநாயக உரிமைகள் என்று பல முன்னாள் நீதிபதிகள் தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களோடு 132 பக்கத்துக்கு பதில் அளித்துள்ளார். எனவே மன்னிப்பு கேட்கும் வாய்ப்பே கிடையாது என்று தெளிவு படுத்தி விட்டார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் ஜமியா மில்லியா இஸ்லாமியாவிலும் ஷாஹீன்பாக்கிலும் தாக்குதல்கள் நடந்த போது வேடிக்கை பார்த்தது உச்ச நீதிமன்றம் என்று ஆணித்தரமாக மீண்டும் குற்றம் சுமத்தி உள்ளார்.
உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது
பிகு: ஒரு விஷயத்தில் மட்டும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். பாஜக தலைவர் ஒருவரின் பைக்கில் அமர்ந்ததை கண்டிக்கையில் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டலாமா என்று கேட்டேன். ஸ்டாண்ட் போட்ட பைக்கில்தான் தலைமை நீதிபதி அமர்ந்திருந்தார் என்பதை கவனிக்கவில்லை. ஸ்டாண்ட் போட்ட வண்டியில் சும்மா உட்கார ஹெல்மெட் அவசியமில்லை. அந்த கேள்விக்கு மட்டும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
No comments:
Post a Comment