சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Friday, August 2, 2019
Thursday, February 8, 2018
தமிழ்மணம் முடங்கியுள்ளதா?
சமீபத்தில் தமிழ்மணம் சில நாட்கள் செயல்படவில்லை. அப்போது சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் இருந்தது.
அதற்குப் பிறகு மீண்டும் செயல்பட்டது. மூன்று மாத ரேங்க், வார ரேங்க் ஆகியவையெல்லாம் வந்தது (நமக்குக் கூட ஒரு ஜம்ப் இருந்தது)
இப்போது ஒரு மூன்று நாட்களாக அந்த பக்கம் காலியாக உள்ளது.
இது எனக்கு மட்டுமான பிரச்சினையா?
மீண்டும் நம் வலைப்பக்கத்தை இணைக்க வேண்டுமா?
விபரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
Tuesday, January 10, 2017
இது எனது வெள்ளை அறிக்கை
செல்லா நோட்டு பிரச்சினை தொடர்பாக வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கியோ, வெற்று முழக்க மோடியோ ஏற்கப் போவதில்லை.
அந்த 75 நாட்களில் அப்பல்லோவில்
நிகழ்ந்தது என்ன என்பதற்கான வெள்ளை அறிக்கையை பிரதாப் ரெட்டியோ சசிகலாவா வைக்கப்
போவதில்லை.
சரி, நாமாவது ஒரு வெள்ளை அறிக்கை
சமர்ப்பிப்போமே என்ற ஆசையில் முன்வைக்கிறேன்.
கடந்தாண்டு படித்த புத்தகங்கள் பற்றி
நேற்று ஒரு வெள்ளை அறிக்கை வைத்திருந்தேன். அது போல ஒரு பதிவுதான் இது.
2016 ம் ஆண்டில் என் வலைப்பக்க
பரிவர்த்தனைகளைப் பற்றிய வெள்ளை அறிக்கை இது.
கடந்தாண்டு நான் எழுதிய பதிவுகளின்
எண்ணிக்கை 522.
மாதம்
குறைந்தபட்சம் நாற்பது என்ற சராசரியில் எழுதியுள்ளேன்.
எப்போதும் போல பெரும்பாலான பதிவுகள்
அரசியல் பதிவுகள்தான். நவம்பர் எட்டிற்குப் பிறகு ஐம்பத்தாறு இஞ்ச் மார்பரே
ஏராளமான நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.
பரபரப்பான தலைப்புக்கு கிடைக்கிற
வரவேற்பு போல மற்ற தலைப்புக்களுக்கு கிடைப்பதில்லை. தெரிந்த அனானிகள், தெரியாத
அனானிகள், காவி அனானிகள் என்று கொசுத் தொல்லைக்கும் குறைவில்லை.
துல்லியமான தாக்குதலுக்குப் பிறகு
எழுதிய இந்த தேசத்துரோகி பேசுகிறேன்" என்ற
பதிவுதான் எனது வலைப்பக்க வாழ்வில் அதிகபட்சமாக 11,392 ஹிட்கள் பெற்ற பதிவு. இந்த
பதிவுக்கு முன்பாக வீரம் காட்டிக் கொண்டிருந்த காவிகள், இதற்கு பதில் சொல்லாமல்
எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்கள்.
கடந்தாண்டுதான் அதிகமாக 2,43,908 பார்வைகளும் கிடைத்துள்ளது. இந்த ரேஞ்சில் சென்றால் அநேகமாக இந்த ஆண்டில்
பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை அடைய முடியும் என்று நம்பிக்கை வந்துள்ளது. ஒன்பது லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் கிடைக்கும் நம்பிக்கை.
வலைப்பக்க அனுபவத்தில் புரியாத புதிராக
இருப்பது தமிழ்மணம் அளிக்கும் தர வரிசைதான்.
வாராவாரம் அளிக்கும் தர வரிசையில்
தொடர்ந்து ஒரு ஆண்டாக பத்து இடங்களுக்குள் இருந்தாலும் மூன்று மாத அடிப்படையிலான
தர வரிசை என்னமோ இருபதிற்கு மேல்தான் உள்ளது. இது எப்படி என்று புரியவே இல்லை.
Tuesday, May 31, 2016
தமிழ்மணத்தில் ஏன் இப்படி? அடிக்கடி
சில மாதங்கள் முன்பாகத்தான் கவனித்தேன்.
தமிழ்மணம் வெளியிடுகிற சூடான இடுகைகளில் ஒரு சின்ன வேறுபாடு இருப்பதை.
முகப்பு பக்கத்தில் வெளியிடும் சூடான இடுகைகள் பட்டியலுக்கும் உள்ளே சென்று பார்த்தால் கிடைக்கும் பட்டியலுக்கும்.
முகப்பு பக்கத்தில் இல்லாத பதிவு உள்ளே சென்று பார்த்தால் இருக்கிறது.
அடிக்கடி இது போல நிகழ்கிறது.
இங்கே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்
உள்ளே, முதல் பக்கத்தில் இருக்கிற "அதிரப்பள்ளிக்கு போகாதீங்க" என்ற பதிவு முகப்புப் பக்கத்தில் காணவில்லை பாருங்கள்.
முகப்புப் பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும்படி ஏதேனும் கொள்கை இருக்கிறதா என்ன? மற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
Saturday, April 18, 2015
தமிழ்மணம் கவனத்திற்கு - பத்மாவதி, கதிர், சண்முகம், ஐயப்பன், துரை, திலகம், வளர்மதி மற்றும் ரவிவர்மா
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்கிறீர்களா?
இந்த நிமிடத்தில் தமிழ்மணத்தில் உள்ள இன்றைய முப்பது சூடான இடுகைகளில் ஒன்பது இடுகைகள் இவர்களது பெயர்களில்தான் உள்ளது. வேறு வேறு பெயர்களில் இருந்தாலும் எல்லா இடுகைகளும் செல்வது பயணக்கட்டுரை.ப்ளாக்ஸ்பாட் என்ற வலைப்பக்கத்திற்குத்தான்.
சரி அங்கே போனாலும் அந்த பதிவை படிக்க முடியுமா?
ஒரு நாலு விளம்பரங்கள் பதிவின் மீது வந்து உட்கார்ந்து கொண்டு நம்மைப் பார்த்து இளிக்கும்.
ஏற்கனவே திரு வருண் இது பற்றி எழுதியிருக்கிறார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் தமிழ்மணத்தால் எடுக்கப்படவில்லை. நம்முடைய நேரத்தை இந்த பயணக்கட்டுரை விரயம் செய்கிறது. எரிச்சலூட்டுகிறது.
முன்பு ஒரேயடியாக பாலியல் சார்பான பதிவுகள் வந்த போது அனைவரும் குரல் கொடுத்ததால் தமிழ்மணம் நடவடிக்கை எடுத்தது.
இப்போதும் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கீழே அந்த பட்டியல் இருக்கிறது/
பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ..
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி .
காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்... சமையல் பிரியர்களே Share ...
..
சென்னை தியாகராய நகரில் ரூ.200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ...
Tuesday, October 21, 2014
தமிழ்மணம் தடை செய்யாதா?
தமிழ் மணத்தின் இன்றைய சூடான இடுகைகள் என்ன என்று இப்போது பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
முப்பது சூடான இடுகைகளில் பாதிக்கும் மேல் பாலியல் தொடர்பானதே.
ம்ஞ்சள் பத்திரிக்கைகளின் புதிய வடிவமாக சிலர் இணைய வலைப் பக்கங்களை பயன்படுத்துகிறார்கள் போலும். இந்த பதினாறு இடுகைகளை எழுதியுள்ளது என்னமோ மூன்று பேர்தான். அதில் ஒருவர் பெயர் ஜெய காந்தன் என்று இருப்பது இன்னொரு கொடுமை.
த்மிழ் மணம் நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது.
இது போன்ற வலைப்பக்கங்களை தமிழ்மணத்திலிருந்து அகற்றாமல் "சூடான இடுகைகள்" என்ற அந்தஸ்து தருவது நியாயமில்லை.
உடனடியாக நடவடிக்கை தேவைப்படுகிறது.
உடனடியாக நடவடிக்கை தேவைப்படுகிறது.
Saturday, January 5, 2013
என்னாச்சு? தமிழ்மணத்திற்கு என்னாச்சு?
வழக்கமாக ஜனவரி முதல் தேதி அன்று
தமிழ்மணம் கடந்தாண்டு வலைப்பக்கங்களின்
ரேங்க் பட்டியலை வெளியிடும். வலைப்பக்கம்
எழுதுபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்
நிகழ்வு இது.
ஆனால் இந்தாண்டு ஐந்து தேதிகளாகியும்
இன்னும் 2012 ம் ஆண்டிற்கான பட்டியல்
வெளிவரவில்லை.
என்ன காரணம்?
யாருக்காவது தெரியுமா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
தமிழ்மணம் கடந்தாண்டு வலைப்பக்கங்களின்
ரேங்க் பட்டியலை வெளியிடும். வலைப்பக்கம்
எழுதுபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்
நிகழ்வு இது.
ஆனால் இந்தாண்டு ஐந்து தேதிகளாகியும்
இன்னும் 2012 ம் ஆண்டிற்கான பட்டியல்
வெளிவரவில்லை.
என்ன காரணம்?
யாருக்காவது தெரியுமா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
Subscribe to:
Posts (Atom)



