Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Tuesday, May 31, 2016

இதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா






நாலு பாட்டு, மூன்று பைட், கொஞ்சம் பஞ்ச் டயலாக், கூடவே கொஞ்சம் காமெடி, வெளிநாட்டில் டூயட், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - இப்படியாகவே நாம் காணும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இருக்கின்றன, இரண்டரை மணி நேரம்  ஜாலியாய் பொழுதைக் கழிக்கத்தான் சினிமா என்பதும் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில்  மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் உள்ளே இருக்கும் அரசியலையும் பேசுகிற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது. 

நூல் அறிமுகம்

நூல்                        அரசியல் பேசும் அயல் சினிமா 
ஆசிரியர்                இ.பா.சிந்தன்
வெளியீடு              பாரதி புத்தகாலயம்
                                    சென்னை 600018
விலை              ரூபாய் 140.00


பதினைந்து திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. நோக்கியா தொலைபேசி தயாரிப்பதற்காக சுரண்டப்படுகிற காங்கோ நாட்டு கனிம வளம், தொழிலாளர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், அதைப் பற்றி காங்கோ சென்று ஆய்வு நடத்துகிற பிராங்க் எனும் பத்திரிக்கையாளரின் அனுபவங்கள், அவர் எழுப்பும் கேள்விகளை அலட்சியமாக புறம் தள்ளுகிற நோக்கியா நிர்வாகம் - இதையெல்லாம் சொல்கிறது Blood in Mobile

தொழிலாளர்களின் உரிமைகளை கேட்பவர்களை கொல்லுகிற கொலைகார நிறுவனம்தான் கோகோ கோலா என்பதை The Coca Cola Case விவரிக்கிறது. போராடும் தலைவரின் அறையில் சேகுவாரா படம் இருந்த காரணத்தால் அவருக்கான நீதியை  நீதிமன்றம் மறுத்தது என்பது கூடுதல் செய்தி.

நமக்கு இனிப்பான சுவையளிக்கும் சாக்லேட்டுக்களில் குழந்தைத் தொழிலாளர்களின் குருதி இருப்பதை கண்ணீரோடு The Dark side of Chocolate பார்த்தால் உணரலாம்.  

பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய எகிப்து நாட்டுப்படம்  678, தண்ணீரை விற்பனைப் பொருளாக்கிய பன்னாட்டுக் கம்பெனியை துரத்தியடித்த பொலிவிய மக்களின் போராட்டத்தைச் சொன்ன Even the Rain,  தேங்காய் மூலம் தன்னிறைவை அடையத் துடிக்கும் பூகென்வில் என்ற சிறு நாட்டின் கண்ணீர் கதையான The Coconut Revolution, தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கனவுகளோடு முயற்சித்த புர்கினோ பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபர் தாமஸ் சங்கராவை ஏகாதிபத்தியம் கொலை செய்த சதியைச் சொல்லும் The Upright Man, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை ஐந்து காமெராக்கள் உடைக்கப்பட்டபோதும் சளைக்காமல் பதிவு செய்கிற  5   Broken Cameras  ஆகியவை நமக்கு படிப்பினை தரும் படங்கள். 

இரான் அரசால் தண்டனை வழங்கப்பட்ட பிரபல இயக்குனர் “ஜாபர் பனாகி” தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையை வாய் வழியாக சொல்வது “This is not a film”. இந்தப்படம், ஒரு கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பென் டிரைவ் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது என்பது முக்கியமான செய்தி. க்யூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பற்றிய படங்களும் இந்நூலில் உண்டு.

இத்திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் அவை சொல்லும் அரசியல் செய்திகள்  பற்றி மட்டுமே இந்த நூல் விரிவாக பேசுகிறது. அழகியல் அம்சங்களான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவை பற்றியும் எழுதினால் நூலின் நோக்கம் நீர்த்துப் போகலாம் என்று ஆசிரியர் கருதி இருந்தால் அதுவும் சரிதான்.

நூலிலே விவாதிக்கப்பட்ட படங்களை பார்க்கத் தூண்டும் விதத்தில் எளிய நடையில் எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

(எங்கள் சங்கச்சுடர் மே 2016 இதழிற்காக எழுதப்பட்டது)

Thursday, January 14, 2016

வெட்கப்பட வைத்த இரண்டு நூல்கள், 42 திரைப்படங்கள்

கடந்த வருடம் படித்த நூல்களில் இரண்டு முக்கிய நூல்கள்

திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு செழியன் அவர்கள் எழுதிய 
"உலக சினிமா (பாகம் ஒன்று)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் 
துணைப் பொதுச் செயலாளர் தோழர் கருணா அவர்கள் எழுதிய
"பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்"



இரண்டு நூல்களுமே முக்கியமான உலக சினிமாக்களைப் பற்றி நமக்கு அறிமுகம் செய்து வைக்கிற நூல்கள்.

பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட நல்ல திரைப்படங்கள், திரைப்படங்கள் என்ற மொழி எப்படி இருக்க வேண்டும் என்ற முன்னுதாரணம் படைத்த படங்கள்  பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன இந்த நூல்கள்.

வெறும் அறிமுகம் என்று சொல்ல முடியாமல் அத்திரைப்படங்களையே நாம் பார்ப்பது போன்ற உணர்வை இரு நூல்களும் உருவாக்கியது. அந்த அளவிற்கு சிறப்பான எழுத்து நடை. 

கருணா இருபத்தி ஆறு திரைப்படங்கள் குறித்து எழுதியுள்ளார் என்றால் செழியன் இருபத்தி ஒன்பது படங்கள் பற்றி எழுதியுள்ளார். பனிரெண்டு திரைப்படங்கள் இரண்டு நூல்களிலும் இடம் பெறுவது அந்த திரைப்படங்களின் சிறப்பைச் சொல்கிறது என்றே கருதுகிறேன். 

அப்படிப் பட்ட படங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
இதோ அந்த பட்டியல் இங்கே உங்களுக்காக.

Sl No
Karuna
Sl No
Sezhiyan
1
A mountain patrol
1
A short film about love
2
Adaminda magan Abu
2
Carandiru
3
Battleship Potemkin
3
Central station
4
Bicycle thieves
4
Children of heaven
5
Caterpillar
5
Cinema Paradiso
6
Children of heaven
6
Citizen kane
7
Cinema Paradiso
7
City lights
8
Father
8
Good bye lenin
9
Harichandrasi Factory
9
Hotel Rwanda
10
Kikijiro
10
Khamosh pani
11
La strada
11
La strada
12
Life is beautiful
12
Life is beautiful
13
My uncle
13
Maria full of grace
14
pick pocket
14
Meghe dhake tara
15
Postman in the mountain
15
Pick pocket
16
Spring, summer, fall
16
Postman in the mountains
17
The 400 blows
17
Rabbit proof fense
18
The Cyclist
18
Rashomon
19
The day I become a
19
Run lola run
20
The Great Dictator
20
The 400 blows
21
The Pianist
21
The battle of algiers
22
The Red Baloon
22
The Cyclist
23
The road home
23
The day I became a women
24
The way home
24
The Extra Terastrius
25
The White Baloon
25
The Pianist
26
Tokyo Story
26
The return


27
The road home


28
The way home


29
Together

ஆனால் கவனித்தீர்களா?

கருணாவின் புத்தகத்தில் இரண்டே இரண்டு இந்திய திரைப்படங்கள் பற்றி உள்ளது என்றால் செழியனின் புத்தகத்திலோ ஒரே ஒரு இந்தியப் படம்தான்.

அப்படியென்றால் இந்திய சினிமாக்கள் இன்னும் உலக சினிமாக்கள் பட்டியலில் வருவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

பின் குறிப்பு : தலைப்பில் ஏதோ வெட்கம், 42  என்றெல்லாம் உள்ளதே என்று கேட்கிறீர்கள் அல்லவா?

ஆமாம். மொத்தமாக எழுதப்பட்டுள்ள நாற்பத்தி மூன்று படங்களில் 
Great  Dictator தவிர வேறு எந்த படத்தையும் பார்த்ததில்லை. அதனால் உருவான வெட்கம்தான். 

சரி, இனிமேல் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.