Showing posts with label இந்தி திணிப்பு. Show all posts
Showing posts with label இந்தி திணிப்பு. Show all posts

Thursday, March 5, 2026

எச்சரிக்கையாக இருப்பீர் அதிகாரிகளே! பலியாடாகாதீர்

 



திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ஒரு அலங்கார வளைவு வைத்து அதற்கு "கர்த்தவ்ய த்வார்" என்று இந்தியில் பெயர் வைக்கிறார்கள்.

தோழர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கிறார். முதல்வரும் இணைகிறார். கண்டனம் வலுக்கிறது.  எடப்பாடி கூட மெல்லமாக செல்லமாக சிணுங்கி வைத்தார். இறுதியில் அந்த "கர்த்தவ்ய த்வார்" எழுத்துக்கள் நீக்கப்பட்டது.

இது  அப்பட்டமான இந்தி திணிப்பு. மோடி அரசின் இந்தி வெறிக்கு ஒரு உதாரணம். 

இந்த வெறிக்கு அதிகாரிகள் பலியாடுகள் ஆகக்கூடாது.

நான் இதைச் சொல்வதற்கு காரணமுண்டு. 

ரயில்வேயில் நிகழ்ந்த இந்தி திணிப்பிற்கு முட்டு கொடுக்க முடியாமல் இந்தியிசை, அதிகாரிகள் மீது  பழி போடுகிறார்.


"சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதாக மத்தியரசு மேல் தேவையின்றி பழி போடப்படுகிறது" என்று அவர் பிரச்சினைக்கான காரணியை திசை திருப்புகிறார்.

அனைத்து அதிகாரிகளும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

மத்தியரசு சொல்கிறது, அமைச்சர் சொல்கிறது என்று நீங்கள் அரசியல் சாசன, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிரச்சினைகள் வரும் போது கடைசியில் நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள். 

ஆட்சியாளர்களின் கைப்பாவைகள் அல்ல நீங்கள்!

ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தவறினை சுட்டி காட்டும் தைரியம் இருந்தது. 

ஆனால்

மோடி காலத்தில் எல்லாமே மாறி விட்டது.

பதவிக்காக சலாம் போடும் அதிகாரிகள் எதிர்காலத்தில் வருந்துவார்கள். 


Saturday, February 14, 2026

இந்தில பேசினா தப்பாத்தான் வரும்

 


இனிமேல் தமிழ்நாடு, பாண்டிச்சேரி எல்லைக்குள் இந்தியில் பேசக் கூடாது என்று ஜண்டா அமித்ஷா முடிவெடுத்திருப்பார். கீழேயுள்ள காணொளியை பாருங்கள், அமித்ஷா யாரை திட்டுகிறார் என்பதும் தெரியவில்லை, புதுவை முதல்வர் யார் என்பதும் தெரியவில்லை. இதுதான் அங்கேயுள்ள பாஜகவினரின் அரசியல் தரம். 

சரியான காமெடி இது.



Sunday, January 11, 2026

பராசக்தியால் பாஜகவிற்கு ஏன் பதற்றம்?

 


"பராசக்தி" நேற்று மதியக் காட்சி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. விபத்திற்குப் பிறகு அரங்கில் சென்று பார்த்த முதல் படம். அதுவும் முதல் நாளில் . .  பாதுகாப்பாக உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று மகன் உறுதியளித்து அதன் படியே செய்தான்.

 படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்றால் சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள இன்னொரு முறை பார்க்க வேண்டும். பாகுபலி பல்வாள் தேவன் இப்படத்தில் நடித்துள்ளதே என் மகன் சொல்லித்தான் தெரிந்தது. அதனால் படம் பற்றி விரிவாக பின்பு எழுதுவேன்.

படத்தைப் பற்றி யாரெல்லாம் மோசமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 

தவெக தற்குறிகளும் சங்கிகளும்.

ஜனநாயகனுடன் போட்டியிட தயாராக இருந்ததால் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பது இயல்பானது.

காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தால் அது நியாயமானது. 

ஆமாம். தமிழ்நாட்டின் மோசமான முதலமைச்சர் என்று பெயர் பெற்ற பக்தவத்சலத்தின் கொடூரத்தையும் இந்திரா காந்தியின் தந்திரத்தையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மண்ணாந்தைகளாக காங்கிரஸார் இருந்ததையும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) படம் அம்பலப்படுத்துகிறது. 

தமிழ்நாட்டின் சசி தரூர் கதர் சங்கி மாணிக்கம் தாகூரைத் தவிர வேறு காங்கிரஸ் ஆட்கள் யாரும் எதிர்த்ததாக தெரியவில்லை. 

சங்கிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பராசக்தி சங்கிகளில் கருத்தியலான "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்பதற்கு எதிரானது.

பாஜக அரசு இன்று செய்து கொண்டிருக்கிற இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பது சங்கிகளுக்கு எரிச்சலூட்டுகிறது.

இந்தி திணிப்பை  எதிராக தமிழர்கள் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், வங்க மொழி பேசுபவர்களும் எதிர்த்தார்கள் என்ற உண்மையை சொல்வதால் சங்கிகளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சங்கிகள் ஒன்றை எதிர்த்தால் அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று அர்த்தம். சங்கிகள் ஒன்றை அழிக்க நினைத்தால் அதை ஆதரிப்பது நம் கடமை. 

அதனால் 

பராசக்தி பார்ப்போம், 

அதுவும் திரை அரங்கில் பார்ப்போம்.


Monday, April 21, 2025

இப்படித்தான் இந்தித்திணிப்பு மும்மொழிக் கொள்கை வழியாக


மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸின் அறிக்கை மும்மொழிக் கொள்கை வழியாக எப்படி இந்தி திணிக்கப்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.



 ஆசிரியர்கள் கிடைக்கவில்லை, மாணவர்கள் இல்லை என்பதெல்லாம் வழக்கமான பாஜக ஜும்லா. அவ்வளவுதான்.  மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பு கிடையாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த சங்கிகள் இப்போது இதற்கு என்ன சொல்வார்கள்

Wednesday, November 20, 2024

எல்.ஐ.சி – இந்தி – முரண்பாடுகள்

 


நேற்று முன் தினம் முழுதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்ட விஷயம் எல்.ஐ.சி இணைய தளம் தொடர்பானதுதான். ஊழியர் பணி விதிகளுக்கு கட்டுப்பட்டவன் என்ற முறையில் அது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

 ஆனால் இந்த சர்ச்சையில் நான் கவனித்த ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டவே இந்த பதிவு,

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விமர்சனத்தை முன் வைத்த அனைவருமே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள். ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள். பங்கு விற்பனைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளம் உள்ளிட்ட  மக்கள் மன்றங்களில் பேசியவர்கள், எழுதியவர்கள். இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜி.எஸ்.டி கூடாது என்றவர்கள்.

 இவர்களோடு மல்லு கட்டியவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறந்தவை” என்று சொன்ன மோடியின் ஆதரவாளர்கள். எல்.ஐ.சி யின் பங்கு விற்பனையை வாயில் உமிழ்நீர் வடிய ஆதரித்தவர்கள், இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி வசூலிப்பது அநியாயமானது என்று ஊழியர்கள் குரல் கொடுத்த போது செவிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டவர்கள்.

 ஆக அவர்களின் கரிசனம் எல்.ஐ.சி யின் மீதல்ல, இந்தியின் மீது . . .

 

Friday, July 26, 2024

முட்டாள்களே நம்புவார்கள்

 


மன்னராட்சியின்  அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தின் மையப் பகுதியில் எழுந்தருள வைத்து விட்டு


குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த ஆடம்பர அரங்கின் பெயரை "தர்பார் ஹால்" என்பதிலிருந்து "ஜன தந்திரிக் மண்டப்" என்று பெயர் மாற்றியதற்கு "மன்னராட்சியின் அடையாளமாக தர்பார் என்ற பெயர் இருப்பதுதான் காரணம் என்று சங்கி அரசு சொல்வதௌ முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்.


"அசோகா ஹால்"  என்ற இந்த அரங்கின் பெயரை "அசோகா மண்டப்" என்று மாற்றியதன் மூலம் மன்னராட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் உடாப்ஸ், இந்தித் திணிப்புக்கு இப்படி குடியரசு முலாம் பூசி விட்டார்கள் என்பது நன்றாக புரிகிறது.  

Thursday, April 11, 2024

திணிச்சா சாக்கோபார்தான் மோடி

 


மோடி  சென்னையில் சாலைக் காட்சி நடத்திய போது"ஆப் கி பார், சாக்கோ பார்"  என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.

வெயில் காலமென்பதால் "பதினைந்து லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, சாக்கோபார் ஐஸ் கிரீமாவது கொடு" என்று கேட்கிறார்களோ என்று நினைத்தேன்.

பிறகுதான் தெரிந்தது அது

"அப் கி பார் சார் சௌ பார் இந்த முறை நானூறுக்கு மேல்"

மோடியை குஷிப்படுத்த இந்தியில் முழக்கம் போடலாம் என்று எந்த முட்டாள் கொடுத்த யோசனையோ அது, இந்தி தெரியாத தமிழர்கள் "சார் சௌ பார்" என்பதை சாக்கோ பார் ஆக்கி விட்டார்கள்.

இந்தியைத் திணித்தால் இப்படித்தான் ஆகும் என்பதை முட்டாள் சங்கிகள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

அப்புறம் மோடி இந்த முறை நானூறும் கிடையாது, நாடும் கிடையாது. சாக்கோபார் ஐஸ் கிரீம் வேண்டுமானால் பார்ஸல் அனுப்பறேன். 

Wednesday, January 10, 2024

நியாயமில்லை இந்தியடிமை மாலனே!

 


இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்தும் அதற்கு மூத்த்த்த்த்த எழுத்து வியாபாரி மாலன் போட்ட பின்னூட்டமும் கீழே உள்ளது.


நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அமலாக்கி அரசு அனைத்திலிருந்தும் விலக வேண்டும் எனும் டிமோவை ஆதரித்து அந்த அனைத்து அயோக்கியத்தனத்துக்கும் புல்லரிக்கும் விளக்கம் கொடுக்கும் மாலனுக்கு இங்கே தமிழ்நாட்டு அரசு இந்தி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமாம்.

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தான் சொன்னதற்கு முரணாக எழுதினால் விட்டு விட முடியுமா?

முதலில் ஒரு பின்னூட்டம் போட்டேன். சூடு போதாது என்பதற்காக இன்னொரு பதிவும் போட்டேன்.


இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஜென்மமா அது? 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத ஜந்து.

பிகு: ஒரு அனாமதேயம் ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஜந்து. நானுமே பிச்சை போட்டுள்ளேன். அது இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு அசிங்கமான பெயருடன் வந்து பின்னூட்டம் போடும். அதுவும் வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத ஜந்துதான்.

Sunday, November 5, 2023

தடங்கல் கூட இந்தித்திணிப்புக்காகவா?



 இந்தித் திணிப்புக்கு எதிராக சு‌.வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைமை பொது மேலாளர் பதில்!...

_________________________________________________
இண்டேன் சமையல் எரிவாயு பதிவுக்கான ஐ.வி.ஆர்.எஸ் இணைப்பில் இருந்த மாநில மொழிகள் தொடர்புக்கான தெரிவு நீக்கப்பட்டு இருந்தது. தொடர்பு கொண்டால் இந்தி மொழி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. சாமானிய மக்கள் வீட்டில் சோறு பொங்க இந்தி கற்றுக் கொண்டா வர முடியும்? இது அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைமை பொது மேலாளர் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்
“தற்போது இப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

“இந்தியன்ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) – 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம்.

இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வுக் காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன்,

இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத்தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான்.
எப்படியோ இன்னொரு இந்தித் தடங்கல் நீங்கியுள்ளது என்பது மகிழ்ச்சிதான். விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம்.
*
- சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்.

தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.

Sunday, July 2, 2023

காசிக்கு போக காசு போதாதா?

 



 

ஏன் இந்தி படிக்க வேண்டும் என்று அறிவுஜீவி சங்கி சொல்லியுள்ள காரணம் கீழே . .

 




கங்கையில அஸ்தியை கரைக்க காசிக்கு போக வேண்டுமானால் பயணச் செலவுக்கு காசு இருந்தால் போதாதா? இதற்காக இந்தி வேறு கற்றுக் கொள்ள வேண்டுமா? நான் அறிந்த வரை இந்த மாதிரி திதி கொடுக்கும் வேலைகளுக்காக தமிழ்நாட்டு புரோகிதர்கள் ஏராளமாகவும் அதை விட அதிகமான எண்ணிக்கையில் அவர்களுக்கான புரோக்கர்களும் இருக்கிறார்கள். அதனால் இந்தி எல்லாம் தேவையில்லாத ஆணியே.

 

காசியில் எப்படி அஸ்தி கரைக்கிறார்களோ, அதே அளவில் அஸ்தி கரைக்க ராமேஸ்வரத்திற்கு வட மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் யாராவது தமிழ் கற்றுக் கொள்வார்களா என்ன?

 

இந்தி திணிப்புக்கு என்னவெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!

Thursday, March 30, 2023

தயிர் - தஹி - தொலைந்து விடுவீர்

 


"வெறும் நரேந்திரா" அரசின் ஒரு அற்பத்தனமான முயற்சி, தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்று அச்சடிக்க வேண்டும் என்ற உத்தரவு.


இதற்கு தமிழ்நாட்டு முதல்வரின் எதிர்வினை மிகவும் அருமை.


"தொலைச்சிருவோம் ரேஸ்கல்ஸ்" என்பதைத்தான் மிக நாகரீகமாக "தொலைந்து விடுவீர்கள்" என்று எழுதியுள்ளார்.

இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டால் சரி.

உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புக்கு இந்தியை பரப்பும் வேலையெல்லாம் எதற்கு?

"வெறும் நரேந்திரா"வின் நண்பனான ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புக்கள் பற்றித்தான் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் வருகிறது. அதிலாவது கவனம் செலுத்தினால் பரவாயில்லை.


Wednesday, November 2, 2022

ஓசி குருமாவுக்கா இந்தி ?

 


கீழே உள்ளதை பலரும் முன்னமே பார்த்திருப்பீர்கள். யாரோ பகடி செய்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு அந்த ட்விட்டர் பக்கத்துக்குப் போனால் இந்த மனிதன் சீரியஸாகத்தான் எழுதியுள்ளார். நிறைய பேர் கன்னாபின்னாவென்று கலாய்த்தாலும் கூட “இதுதான் என் அனுபவம்” என்று சீரியஸாக விளக்கம் கொடுத்துள்ளார்.

 


 எக்ஸ்ட்ரா சாம்பார்,சட்னி, குருமா ஓஸியில் வாங்கத்தான் இந்த ஆளுக்கு இந்தி பயன்படுகிறது.

 இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று தோன்றியது. இவ்வளவு அல்பத்தனமாக நடக்கும் மனிதனின் பின்னணி என்ன என்று அறிய அவரது புரொஃபைலைப் பார்த்தேன்.

 ஆம்.

 நீங்கள் நினைப்பது சரிதான்.

                             

சங்கிதான். சங்கியேதான். இதிலே சார்ட்டட் அக்கவுண்டட் வேறு. இட்லி, தோசை, சப்பாத்தி கூட இந்தியில்  பேசி ஓசியில் பெற்றிருக்கலாம்.

Friday, October 21, 2022

என்ன எழவிற்கு கிழக்கில் தமிழ்

 


கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி ஜாதி வெறிப் பித்து தலைக்கேறி மன நிலை பாதிக்கப்பட்டு அபத்தமாக உளறிக் கொண்டு இருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று சொன்ன மனிதன் தானே!



அறிஞர் அண்ணாவை IDIOT என்று திட்டிய மனிதன்.




சமஸ்கிருதம் போல தமிழில் இலக்கியம் இல்லை என்று தொடர்ந்து தமிழ் மீது வக்கிரத்தை கக்கிக் கொண்டிருக்கிற பேர்வழி.





வரும்படி இல்லாத பதவி போனால் நஷ்டமில்லை என்று திராட்சை கிட்டாத நரியாய் புலம்பும் ஜந்து.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான். உனக்கு மிகவும் உயர்ந்ததாக, உன்னதமாக தோன்றும் சமஸ்கிருதத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டியதுதானே!

என்ன எழவுக்கு தமிழில் நூல்களை வெளியிடுகிறார் இந்த வெறியர்?

கசு, துட்டு, பணம், Money, Money

Tuesday, May 3, 2022

அப்டீங்களா அம்மணி ????

 


இந்தி பேசறவங்களை கெட்டவங்கன்னு யாருமே சொல்லலியே அம்மணி! இந்தியை மட்டும்தான் பேசனும்னு சொல்றவங்க, இந்திய திணிக்கறவங்க, இவங்களைத்தான் கெட்டவங்கன்னு சொல்றோம்.

அவ்ளோ நல்லவங்க, தமிழ் பேசற எங்களை மாதிரி நல்லவங்க கூட பேச அவங்க ஏன் தமிழ் கற்றுக் கொள்ளக் கூடாது?

டி.ஆர் மாதிரி அடுக்கு மொழி தமிழ் கூட வேணாம். உங்க வீட்டுக்காரர் மாதிரி ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை தமிழ் கூட போதும்.

அதையும் சொல்லுங்களேன் அம்மணி . . .

Monday, May 2, 2022

இப்போதே தட்டி வைக்காவிட்டால்

 


அந்த மகரிஷி சரக் சப்த் என்பது வெறுமனே சம்ஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்ல, மனு தர்மத்தின் அடிப்படையிலானது. அதை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது இயல்பானதே. ஆனால் தமிழ்நாட்டில் அதை அமலாக்க வேண்டுமென்று நினைப்பது ஆபத்தானது.

காத்திருப்போர் பட்டியல் என்பதற்குப் பதில் இடை நீக்கம் செய்வது இன்னும் பொருத்தம்.

இது போல நச்சு பரப்பும் ஆசாமிகளை தலையில் தட்டி வைக்காவிட்டால் விஷக்கிருமிகள் வேகமாக பரவும்.

பிகு: அதென்ன மகரிஷி சரக் சப்த்? நாளை பார்ப்போம். . . .

Saturday, April 30, 2022

இந்தி கட்டாயமென்றால் இந்தியா?????

 


மொட்டைச் சாமியாரின் மந்திரி ஒருவன் பேசியதை கவனியுங்கள்.




சங்கிகளோ ஏன் நீதிமன்றங்கள் கூட இந்த வெறிப்பேச்சை கண்டிக்க மாட்டார்கள்.

ஆனால் இதற்கு  யாராவது

"இந்தி தெரிந்து கொள்வது கட்டாயமென்றால் இந்தியாவே எங்களுக்கு தேவையில்லை"

"நாங்கள் தனி நபராக ஏனய்யா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், தனி நாடாகவே வெளியேறுகிறோம்"

"இந்தி தெரியாதவனை கண்டா வெறுப்பா இருக்கு, அவன் கொடுக்கிற வரி மட்டும் இனிக்குதா?"

என்றெல்லாம் எதிர்வினை ஆற்றினால் அப்போது மட்டும் பிரிவினை பேசுவதாக எல்லோரும் ஓடி வருவார்கள்.

முதல்ல அவனை பிடிச்சு உள்ளே போடுங்க சார்.

Sunday, April 10, 2022

தெரிந்திருந்தால் எடப்பாடி ????

 


எடப்பாடி தனக்கு முழுமையான தகவல் தெரியவில்லை என்று சொன்னதை நான் ஏற்கிறேன்.

அவர் முதலமைச்சராக இருந்த போது கார்ப்பரேட் களவாணிகளுக்காக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரிந்து கொண்டே என்று சொன்ன "பொறுப்பான முதல்வர்" அவர்.

என் கேள்வி ஒன்றுதான்.

அமித்ஷா பேசிய தகவல்கள் முழுமையாக தெரிந்திருந்தால் மட்டும் என்ன கிழித்திருப்பீர்கள்?

அதிமுகவின் சாவர்க்கரான நீங்கள் அமித்ஷாவுக்கு ஜால்ரா அடித்திருக்கப் போகிறீர்கள்.

இதற்கு எதற்கு ஒரு வெட்டி பந்தா?

Saturday, April 9, 2022

அமித்துக்கு இதுதான் பதில்

 

இந்தி திணிப்பு முயற்சியை மீண்டும் துவக்கியுள்ளார் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித் ஷா.

எல்லோரும் இந்தி பேச வேண்டும் என்ற அவருக்கு இதுதான் பதில்.



Wednesday, October 27, 2021

இந்தி தெரியாது போடா, கர்னாடகத்திலும்

 

இந்தி உங்களின் தாய் மொழி...*   *எங்களுடையது அல்ல*

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு. “இந்தி தெரியாது போடா என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டார்கள் போல.

 *நாளொரு கேள்வி: 26.10.2021* 

 தொடர் எண்: *513*

 இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு. வெங்கடேசன்* (சி.பி.எம்)

##########################

 *இந்தி உங்களின் தாய் மொழி...*

 *எங்களுடையது அல்ல*

 

கேள்வி: அண்மைக் காலமாக இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள், கருத்துக்கள் அதிகம் வருகிறதே!

 

*சு. வெங்கடேசன்*

 

ஆம். அதற்கான எதிர் வினைகள் எழுவதும் அதிகரித்திருப்பது மகிழ்வை தருகிறது. அதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்கிறது

 

அண்மையில் இந்திய தணிக்கையாளர் கழக தலைவர் *ஜம்பு சாரியா* _"தாய் மொழியான இந்தியின் ஆற்றலை உணர்ந்து அதை இந்திய தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்"_ என்று அக் கழகத்தின் *"தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்"* இதழில் எழுதியுள்ளார். அக் கழகத்தின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று ஒரு கடிதம் ஒன்றை உடனே அனுப்பினேன்

 

திரு ஜம்பு சாரியா அவர்களே, உங்கள் கூற்று அதிர்ச்சியை தருகிறது. *இந்தியாவில் 19500 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக, மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக உள்ளது. இந்தி எல்லாருக்குமான தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்குமான தாய் மொழியும் அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லாருக்குமானதும் அல்ல. ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல. இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்திற்கும் எதிரானது.*

 

மேலும் உங்கள் நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உடையது. *பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346 படித்து பாருங்கள்.* இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதை திணிக்க முடியாது. மாநில சட்ட மன்றங்கள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8 வது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்து இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே உங்கள் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு *தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.* சட்டத்திற்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்

 

*2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே  இந்தியை சொந்த மொழியாக கொண்டவர்கள் 39 % பேரே.*

 

திரு ஜம்புசாரியா! இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். எனது தாய் மொழி தமிழ். *எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களை விட அதிகமானது.* எனக்கு மட்டுமல்ல உங்களின் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்துகிற ஒவ்வொரு குடி மக்களுக்கும் அவரவர் தாய் மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று இந்தி பேசாத பேசாத மாநிலங்களை சேர்ந்த கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும்

 

ஆகவே உங்கள் "தாய் மொழி" கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய

வேண்டும்

 

தமிழகம் என்றும் இந்தித் திணிப்பை அனுமதிக்காது என்று எழுதி இருந்தேன்

 

இன்று திரு ஜம்புசாரியா அவர்களின் பதில் இந்து பிசினஸ் லைன் உள்ளிட்ட முன்னணி இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது

 

*இந்தியை திணிக்க நினைக்கவில்லை - இந்திய தணிக்கையாளர் சங்கத் தலைவர்.* 

 

இது ஊடகத் தலைப்புகளில் ஒன்று. "இந்தி நம் தாய் மொழி" என்ற அவரின் கூற்றுக்கு எதிரான நமது எதிர்வினைகளுக்கு கிடைத்த வெற்றி இது. தமிழ்நாடு எதிர்வினைகளில் முன் நின்றது எனும் செய்தியேடுகளின் கருத்தும் நமக்கு பெருமை அளிக்கிறது.

 

*இரயில்வே* மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டுமே பயிற்சி என்பதற்கு நான் தெரிவித்த எதிர்ப்பின் அடிப்படையில் ஆங்கிலப் பயிற்சிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே *அஞ்சல்* படிவங்கள் தமிழில் இல்லை என்பது குறித்து ஆற்றிய எதிர் வினையால் தமிழ் படிவங்கள் உடனே நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

இப்படி மீறல்களுக்கான எதிர் வினைகளும், மக்களின் கவன ஈர்ப்பும் ஒருங்கே அரங்கேறுகின்றன. நமது விழிப்பே இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தும்

 

*செவ்வானம்*

இந்த பதிவை பகிரும் வேளையில்தான் நேற்று முகநூலில் எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் எழுதியது நினைவில் வந்தது. அந்த பதிவு இங்கே.


போனவாரம் தமிழ் நாட்டில் Zomato இன்று கர்நாடகாவில் kfc புறக்கணிப்போம்.

Kfc ஹாலில் இந்தி பாட்டுகள் மட்டும் வைக்கிரீர்களே கன்னட பாடல்களையும் வையுங்கள் என்று கேட்டதற்கு ஒரு மூடன் இந்திதானே தேசிய மொழி என்று பதில் சொல்லி மறுத்து இருக்கிறான்.

கர்நாடகாவில் இணையம் முழுவதும் kfc யை புறக்கணிப்போம் என்று வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கிராமப்புற மேல் சாதி நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் இருந்த வரை இன உணர்வு பெரிய அளவுக்கு வளரவில்லை.

இப்போது நகர மயம் அதிகரிக்க அதிகரிக்க, படிப்பறிவு அதிகரிக்க மேலும் மேலும் தேசிய இனங்கள் விழித்து எழுந்து வருகின்றன.

கார்ப்பரேட் கொள்ளைக்கு நகரமயம் ஊக்குவிக்க படுகிறது. ஆனால் கூடவே இன உணர்வும் வளர்கிறது.

கார்ப்பரேட் உள்ளூர் மொழியில் தொடர்பு கொள்ள தயாரகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்து, இந்தி, இந்தியா என்ற பித்து இருக்கிறது இல்லையா அதை திருப்திப் படுத்த இந்தி ஆதரவு நிலை எடுக்கிறார்கள் போலிருக்கிறது.

கன்னட சகோதரர் களுடன் இணைந்து நிற்போம்.