கொரோனா
காலத்தின் மிகப் பெரும் துயரமாக நான் பார்ப்பது இக்காலக்கட்டத்தில் இறந்து போனவர்கள்
அவர்களுக்கு வழக்கமான காலத்தில் இறந்து போனால் கிடைக்கக் கூடிய இறுதி மரியாதை கிடைக்காமல்
போவதே!
அஞ்சலி
நிகழ்வில் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால் இயற்கை
மரணத்திற்குக் கூட செல்ல முடியாத நிலைமை உருவாகி விட்டது. இந்த வாரம் மட்டுமே ஓய்வு
பெற்ற ஒரு அதிகாரியின் இறப்பிற்குச் செல்ல இயலவில்லை.
குடும்பத்திலும்
ஒரு மரணம் கொரோனா காரணமாக. மிகவும் நெருங்கிய உறவினராக இருந்தாலும் பயணிக்க முடியவில்லை.
அப்படியே பயணித்திருந்தாலும் முகத்தைக் கூட பார்த்திருக்க முடியாது.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் கணவர் தோழர்
ஏ.பி.விஸ்வநாதன் கடந்த திங்கள் அன்று இறந்து போனார்.
இத்துயரச்
செய்தி வந்த சில நிமிடங்களுக்குள்ளாக கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.லட்சுமணன் அவர்கள்
காலமானார் என்ற இன்னொரு துயரம் தொடர்ந்தது.
சாதாரண
நேரமாக இருந்திருந்தால் எண்ணற்ற தோழர்களின் பங்கேற்போடு இவர்களின் இறுதி ஊர்வலம் நடந்திருக்கும்.
ஆனால் இப்போதோ?
வாழும்
போது கிடைக்கிற மரியாதையை விட இறக்கும் போது கிடைக்கும் மரியாதை மிகவும் முக்கியமானது.
அதனை
மறுக்கிற கொரோனா என்றுதான் ஒழியுமோ?
பிகு:
இன்று காலை பகிர்ந்து கொள்வதற்காக நேற்று மாலை எழுதிய பதிவு. அதற்குள்ளாகவே மக்களவை உறுப்பினரும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான திரு வசந்தகுமார் காலமான தகவல் வருகிறது. இது என்றுதான் முடியுமா?
No comments:
Post a Comment