Showing posts with label தந்தை பெரியார். Show all posts
Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Saturday, February 28, 2026

கட்சியின் பெயரை மாத்திடுங்க எடப்பாடி

 


நாளை மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்தை பாஜகவினரின் கட்டளைப்படி அதிமுக அகற்றியுள்ளது. 


இன்றைய எடப்பாடி திமுகவிற்கு தந்தை பெரியாரெல்லாம் தேவை இல்லை என்பதினால் கட்டளையை நிறைவேற்றி விட்டார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெ கூட முக்கியமில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடிய போது சேலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரின் கட்டவுட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த போது எம்.ஜி.ஆர், ஜெ வின் கட்டவுட்டுகள் தம்மாத்தூண்டாக இருந்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். 

சங்கிகளுக்கு தந்தை பெரியாரை மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவையும் பிடிக்காது. அறிஞர் அண்ணாவை இழிவு படுத்தியவர்களோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொல்லித்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது என்.டி.ஏ விலிருந்து வெளியே வந்தார்கள். மக்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத்தான் இப்போது மீண்டும் கூட்டணிக்குள் நுழைந்துள்ளார் எடப்பாடி.

இன்று தந்தை பெரியார் படத்தை நீக்கச் சொன்ன பாஜக உங்கள் கட்சியிலின் பெயரிலிருந்தும் கட்சியின் கொடியிலிருந்தும் அண்ணாவை நீக்கச் சொல்வார்கள். நீங்களும் வெட்கமில்லாமல் அதை செய்வீர்கள். பாஜக சொல்லி செய்வதற்குப் பதிலாக நீங்களே உங்கள் கட்சியின் பெயரை எ.தி.மு.க என மாற்றி விடுங்கள்.

எதிமுக என்றால் எடப்பாடி திமுக என்றும் சொல்லலாம். எட்டப்பன் திமுக என்றும் சொல்லலாம். 

Tuesday, February 11, 2025

ஆட்டுக்காரனையும் எச்.ராசாவையும் கைது செய்யுங்கள்

 


தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட காவிக்கயவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் சொதப்பல்கள் காரணமாக மதுரையில் ஒரு கூட்டத்தை கூட்டிய தெனாவெட்டில் மீண்டும் பல வதந்திகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.

அந்த வதந்தி என்னவென்று கீழேயுள்ள படங்கள் சொல்லும். (படங்கள் உதவி திரு முகமது பஷித்)

மிக முக்கியமாக கடைசியில் உள்ள படங்களை பார்க்கவும்.











ஆக, காவிக்கயவர்கள் போட்டோஷாப் மோசடி செய்து மதுரையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர் உறுதியாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சங்கி குணாம்சத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சேகர் பாபுவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

கலவரத்தை தூண்ட சதி செய்யும் எச்.ராசா, ஆட்டுக்காரன், காடேஸ்வரா சுப்புரமணி, அர்சுன் சம்பத் போன்றோரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்கள் வெளியே வராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் மண் என்பதை வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் செயலிலும் காண்பிக்க வேண்டும், 

Saturday, February 8, 2025

ஆட்டுக்காரனை நம்பிய சீமானின் நிலை

 


ஆட்டுக்காரன் பேசியது கீழே உள்ளது.



வழக்கம் போல டெபாசிட் இழக்கும் பயிற்சியை செய்த சீமானின் மனநிலை, ஆட்டுக்காரனின் பேச்சை கேட்டதும் எப்படி இருந்திருக்கும் என்பதை மேலே உள்ள படம் சொல்கிறது.

Tuesday, March 5, 2024

ஆர்.என்.ரெவி எனும் கொள்ளையன்

 


ஆளுனர் எனும் அரசியல் சாசனப்பதவிக்கு அருகதையற்ற ஆர்.என்.ரெவி, சனாதன மனு தர்மத்தின் தரகனாக, சனாதனத்திற்கு எதிரான ஆளுமைகளை சனாதனத்தின் ஆதரவளார்கள் என்று கடத்திக் கொண்டுச் செல்லப் பார்க்கிறான்.

திருவள்ளுவர், வள்ளலாரைத் தொடர்ந்து அவன் இப்போது கடத்த முயற்சிப்பது ஐய்யா வைகுண்டரை . . .

ஆனால் அவனுக்கு இருவர் சிறப்பான செருப்படி கொடுத்துள்ளனர்.

ஐய்யா வழி பதியின் தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார்.


தமிழ்நாட்டின் சபாநாயகர் திரு அப்பாவு


இதற்கெல்லாம் அந்த ஜந்து கூச்சப்படாது. அடுத்து வேறு ஒரு ஆளுமையை கடத்த முயற்சிக்கும்.

யார் கண்டது!

அது தந்தை பெரியாராகக் கூட இருக்கலாம். 

Saturday, December 16, 2023

தந்தை பெரியாரை கடவுளாக்கும் காவிகள் ...

 


காவிச்சங்கிகள் தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து ஒரு படத்தை உலவ விட்டுள்ளார்கள்.

பன்றியின் வடிவத்தில் அவரை வரைந்து கையில் யூரின் பேக்கேடு நிற்பது போல வரைந்துள்ளார்கள்.

சங்கிகளைப் பொறுத்தவரை எலி வினாயகரின் வாகனம், நாய் பைரவரின் வடிவம், பசு மாடு கோமாதா. அதே வரிசையில் பன்றி மகாவிஷ்ணுவின் வராக அவதாரம். ஆக சங்கிகள் தந்தை பெரியாரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதியுள்ளார்கள்.

அப்படியெல்லாம் இல்லை, இழிவுபடுத்தத்தான் வரைந்தோம் என்று சொல்வார்களா?

அப்படி சொன்னால் அது மகா விஷ்ணுவை இழிவு படுத்துவதாக அமைந்து விடாதா?

தசாவதாரம் படத்து பாட்டு நினைவுக்கு வருகிறதே!

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது"

சங்கிகள்தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு தெரிவது என்ன?

பன்றியா? வராக அவதாரக் கடவுளா?

பிகு : தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து அவர் கையில் யூரின் பேக் பிடித்திருப்பதாக படம் போட்டுள்ளார்கள். சிறு நீரகக் கோளாறு உள்ளவர்களையெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் இன்று சிறுநீர் பை பயன்படுத்தும் தேவை உள்ளவர்கள்தான். என் தந்தைக்குக் கூட பக்க வாதம் வந்த பின்பு அவர் வாழ்வின் கடைசி ஆறு மாதங்கள் சிறுநீர் பையுடன் தான் இருந்தார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

ஏபிவிபி யின் அகில இந்தியத் தலைவன் டாக்டர் சுப்பையா, பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக பண்டிட் ஒருவன் ஒரு பழங்குடி மீது சிறுநீர் கழித்ததும்தான் அசிங்கம்.

Monday, October 23, 2023

அவர் தடி கொண்டு அவர்களை . . .

 


என்ன எழவென்று அல்காரிதம் என்று தெரியவில்லை. ட்விட்டருக்கு போனால் சங்கிகளின் பக்கங்களைத்தான் காண்பிக்கிறது. சில சமயங்களில் பதிவு எழுதுவதற்கான கன்டென்ட் கிடைக்கிறது என்றாலும் சில நேரங்களில் எரிச்சலும் வருகிறது.

அப்படி எரிச்சலூட்டிய பதிவு ஒன்று கீழே . . .


பரம்பரை சங்கி போல இந்த பஞ்சத்துக்கு சங்கியான ஜந்துவும் பேசுகிறது.

தங்களின் மூன்று எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று ஆர்.எஸ்.எஸ் கோல்வாக்கர் வெளிப்படையாக பிரகடனம் செய்தது இந்தாளுக்கு தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் அபத்தமாக உளரும் வாய்ப்பு அதிகம்தான். பிழைப்புவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களையெல்லாம் தந்தை பெரியாரின் தடி கொண்டுதான் அடிக்க வேண்டும். 


Friday, September 16, 2022

பாஜகவினரின் அயோக்கியத்தனம்

 


மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பாஜகவினர் அடித்துள்ள சுவரொட்டியை பாருங்கள்.



மோடி இந்த கலவரக் கயவர்களுக்கு சமூக நல்லிணக்கப் பெரியாராம்.

பெரியாரை எந்நேரமும் இழிவு படுத்திக் கொண்டே அவர் பெயரை சமூல நல்லிணக்க எதிரி மோடிக்கு சூட்டுவது மிகப் பெரிய அயோக்கியத்தனம்.

வெட்கம் கெட்டவர்கள். 


Friday, September 17, 2021

தமிழ்நாட்டிற்கு தனியா ஒரு நாள் . . .


ஹேப்பி பர்த் டே ஜி

என்ன நீ இங்கிலிஷ்ல சொல்ற! சமஸ்கிருதம் இல்ல இந்தில சொல்லு.

ஜீ இங்க எச்.ராசா மட்டும்தான் இருக்காரு. அவர் கிட்ட கத்துகிட்டு உங்களுக்கு இந்திலயே வாழ்த்து சொல்றேன்.

நாசமா போச்சு! அவனுக்கு பிறந்த நாளுக்கும் செத்த நாளுக்கும் வித்தியாசம் தெரியாது. நீ எதுல வேணா வாழ்த்து சொல்லு. அவனை மட்டும் ட்ரான்ஸ்லேட் செய்யச் சொல்லாதே!

 ஓகேஜி.

 சரி, உங்க ஸ்டேட் முழுக்க என் பர்த்டே போஸ்டர், பேனர்தானே! பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் என் பிறந்த நாள்தானே செய்தி . . .

 ………………………………..

 என்னய்யா, பிள்ளையார் சதுர்த்திக்கு மீந்து போன கொழுக்கட்டையை வாயில வச்சுருக்கய்யா ?

 இல்லை ஜி. இங்க நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சோம். நீங்க கொடுத்து விட்ட காசு வச்சு, அன்னதானம் செஞ்சோம், லட்டு எல்லாம் கொடுத்தோம். காபி, டீ கூட கொடுத்தோம்யா . . .

 அப்ப நாந்தானய்யா டாக் ஆப் தி ஸ்டேட்டா இருக்கனும்?

 ஆமாம்ஜி. ஆனா

 என்னய்யா ஆனா?

 இன்னிக்கு இங்க இன்னொருத்தருக்கும் பொறந்த நாளு. தமிழ்நாட்டில ரொம்ப பேரு அவரு பிறந்த நாளைத்தான் கொண்டாடினாங்க, பேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலயும் அவருதான். இந்த ஸ்டாலின் வேற “சமூக நீதி நாள்”ன்னு அறிவிச்சு உறுதி மொழியெல்லாம் எடுக்க வச்சுட்டாரு. நம்ம மத்யமர் சங்கிங்க   கூட என்னமோ பெரிசா உங்களை சீண்டலைஜி.

 யாருய்யா அந்த ஆளு? அவ்ளோ பெரிய அப்பாடக்கர்?

 அந்த ராமசாமி நாயக்கருங்க.

 அதாரு?

 அதாங்க பெரியார்.

 இப்படி புரியற மாதிரி சொல்லு. அந்த கிழவனால எப்பவுமே நமக்கு தலைவலி தான்யா. செத்து இத்தனை வருஷம் கழிச்சும் மக்கள் நினைவுல வச்சுருக்காங்கய்யா. சரி தமிழ்நாட்டில மட்டும்  எனக்கு வேற ஒரு நாளை பிறந்த நாளா முடிவு பண்ணி கொண்டாடலாம். அந்த நாளில்லயாவது எதுவும் வில்லங்கம் எதுவும் இல்லாம பாத்துக்கய்யா . . .

 ஆட்டுக்கார அண்ணாமலைக்கும் மோடிக்கும் நடைபெறக்கூடிய உரையாடல் இப்படி இருக்கலாம் என்ற கற்பனைதான் மேலே உள்ளது.




 தமிழர்களை புரிதல் உள்ளவர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் அவர் மறைந்து  48 ஆண்டுகளுக்குப் பின்பும்  உற்சாகமும் எழுச்சியும் தருவது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. இன்றைய சங்கிக் காலத்தில் அவருக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. 

Tuesday, August 17, 2021

மதி(அற்ற)மாறனின் கருகல் தாலிபன் தோசை

 


"ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வருவதை தான் வரவேற்பதாகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்ற கேள்வியோடு தோசை மதிமாறன் ஒரு எட்டு நிமிட காணொளி வெளியிட்டுள்ளார்.

தாலிபனை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் என்ற சித்திரத்தையும் உருவாக்கப்பார்க்கிறார். அதற்காக வியட்னாம், கம்போடியா, ஏஞ்சலினா ஜோலி என்றெல்லாம் சுற்றி சுற்றி வருகிறார்.

அமெரிக்காவை எதிர்க்க தாலிபனை ஆதரிப்பது, வரவேற்பது என்பதெல்லாம் அபத்தமானது, பிற்போக்குத்தனமானது.

தன் இறுதி நாள் வரை பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியார் பெயரை பெண்ணடிமைத்தனத்தை அமலாக்கும் தாலிபனை ஆதரிக்கும் மணிமாறா இனி உன் நாவால் உச்சரிக்காதே! 

பெரியார் பெயரை சொல்ல அருகதையற்றவன் நீ. 

Wednesday, April 14, 2021

எடப்பாடி முகத்தில் பூசப்பட்ட கரி

 


தான் மிகச் சிறந்த அடிமை என்பதை நான்காண்டுகளாக காண்பித்துக் கொண்டிருந்த எடப்பாடி அரசு வீட்டுக்கு போகும் முன்பாக மோடி விசுவாசத்தை காண்பிப்பதற்காக ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை என்ற பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று பெயர் மாற்ற அனுமதித்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்து பெயர் என்ற விளக்கெண்ணெய் விளக்கங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்கிகளுக்கு பிடிக்காது என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

பெரியார் திராவிடர் கழகத்தினர் அதனை கரி பூசி மறைத்துள்ளனர்.

அது நிஜத்தில் எடப்பாடி முகத்தில் பூசப்பட்ட கரி.

பிகு : ஓவியம் திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்

Thursday, December 24, 2020

அவர்தாம் பெரியார் . . .

 


“அறிவைத் தடுப்பாரை,

           மானம் கெடுப்பாரை
          வேரோடு பெயர்க்க வந்த 
           கடப்பாரை

                       - கவிஞர் காசி ஆனந்தன்

 “தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” 

                      -  பாரதிதாசன்

தந்தை பெரியாருக்கு அஞ்சலி

ஒவியம் : திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்

Thursday, September 17, 2020

பெரியார் 142, படமும் கவிதையும்

 


தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் பார்த்த ஏராளமான பதிவுளில் என்னை ஈர்த்த ஒரு பதிவையும் கவிதையையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஓவியருமான தோழர் ஸ்ரீரசா அவர்கள் பெரியார் பற்றி படமெடுத்த அனுபவத்தை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த பதிவு கீழே உள்ளது.

 


பெரியார் படமும்  யதார்த்தா ராஜனும்...

--------------------------------

யதார்த்தா ராஜன் என்று ஊர் உலகத்துக்கு அறியத் தெரியும் ஆர்.எஸ்.ராஜன், பல்கலைக் கழகத்தில் சேஷாத்திரி ராஜன்... ஆனால் பல்கலை ஊழியர்கள் பலரும் ராஜனை சாமி என்றுதான் அழைப்பார்கள்... மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விப் பல்லூடக ஆய்வு மையத்தில் 1987 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை கல்விப் படத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். 

 

முதன் முதலில் ராஜன் தயாரிப்பாளர், நான் தயாரிப்பு உதவியாளர். ஆனால் நானும் அவ்வப்போது படங்கள் தயாரிக்க அவர் அனுமதித்தார். அதோடு மட்டுமல்லாமல் எனது படங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன நின்று செய்வார். அப்போது அவர் எனக்குத் தயாரிப்பு உதவியாளராக மாறிவிடுவார். அத்தகைய பண்பு ராஜனுடையது.

 

நாங்கள் ஆங்கிலத்தில்தான் படம் எடுப்போம். படம் எடுத்து டெல்லி பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு அனுப்பி விடுவோம். அவர்கள் அதனைப் பார்த்து, திருத்தங்கள் இருந்தால் செய்யச் சொல்லி, ஒளிபரப்புப் பட்டியலில் சேர்த்து ஒளிபரப்புவார்கள். 

 

நான் 90 களில் பெரியார் பற்றிய ஒரு படம் செய்தேன். அதற்கு ராஜன் அனைத்து நிலைகளிலும் மிகப் பெரிய உதவிகள் செய்தார். 

 

அப்போதெல்லாம் இப்போது போல இணைய வசதிகள இல்லை. படங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டும். அல்லது வரைந்து உருவாக்க வேண்டும். அல்லது புத்தகங்களில், அல்லது இருக்குமிடங்களில் சென்று படம் பிடித்து காட்சிப் படிமங்களை உருவாக்க வேண்டும். 

 

தோழர் வீரமணியின் அனுமதி பெற்று சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலகம் சென்று அங்கே பலவற்றைப் படம் எடுத்தோம். அங்கே உள்ள பெரியார் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல ஓவியங்கள் எங்களுக்கு மிகவும் கை கொடுத்தன. எல்லாவற்றையும் விட திரு.வீரமணி அவர்கள் மிகச் சிறந்த நேர்காணல் ஒன்றையும் ஆங்கிலத்தில் அளித்தார்கள். படம் ஒளிபரப்பாகமல் முடங்கிவிடக் கூடாது என்ற கூருணர்வில், அவர் வழக்கமான பாணியில் இல்லாமல் பார்ப்பனர் பற்றிய அதிரடியான சொல்லாடல்களைத் தவிர்த்துவிட்டு. பெரியாரின் சிறப்புகளை வெகு அழுத்தமாக நேர்நோக்குப் பார்வையில் முன்னெடுத்து வைத்தார். அகில இந்திய அளவில் ஒளிபரப்பானால் அதற்கான வாய்ப்புகளை நாம் ஏன் அடைக்க வேண்டும் என்று அதற்கான விளக்கத்தையும் அப்புறம் பேசும் போது கூறினார்.

 

பெரியார் பற்றிய உயிர்க் காட்சிப் பதிவுகள் (Live Shots) ஏதும் இருக்கிறதா எனத் தேடினோம். அப்போதுதான் மலையாள ஒளிப்பதிவாளரும், இயக்குநருமாகிய ராமு காரியத் பெரியாருடன் ஒரு நாள் என்ற பெயரில் பெரியாரைப் படம் எடுத்து வைத்திருந்த தகவல் கிடைத்தது. ராஜன் அதனை எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடித்து அதன் பிரதி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அப்புறம் அதனை டெலிசினி மாற்றி எந்திரத்தின் வழியாகக் கொடுத்து வீடியோவாக மாறறம் செய்ய வேண்டுமே. அது எங்கிருக்கிறது என்று தேடி, ராஜன் தான் அப்போது ஏக்நாத் அவர்கள் வைத்திருந்த கேசட் பிரதி எடுக்கும் நிறுவனத்தில் அந்த எந்திரம் உள்ளதெனக் கண்டுபிடித்து, அங்கே சென்று அதனை மாற்றிக் கொண்டு வந்தோம். அப்புறம் இடஒதுக்கீடு பற்றி ஒரு பேராசிரியர் பேசி எடுத்திருந்த விஎச்எஸ் கேசட் ஒன்று கிடைத்தது. அதில் அண்ணாவும பெரியாரும் ஊர்வலத்தில் செல்லும் ஒரு சிறு துண்டுப்படம் கிடைத்தது.

 

இவையெல்லாம் அந்தப் படத்துக்குப் பெரும் பலமாக அமைந்தன.

 

பெரியார் படத்தின் ஆரம்பக் காட்சியாக எரியும் நெருப்புக் காட்சியை வைக்க எண்ணினோம். அந்தப் பின்னணியில் படத்தின் துவக்க வசனங்கள் ஒலிக்கும். அந்த நெருப்பின் ஊடாக உலகின் பல தத்துவவாதிகளின் படங்கள் டிசால்வ் முறையில் வந்து செல்லும். அப்போதெல்லாம் இப்போது போல இணையத்தில் சுட்டுக் கொள்கிற வசதிகள் இல்லை. ராஜனின் ஆலோசனைப்படி இரண்டு தூக்கு விறகை வாங்கி, இருட்டும் வரை காத்திருந்து, இரவில் அந்த விறகுகளை மொத்தமாக எரிய வைத்து அந்தக் காட்சிகளைப் படம் பிடித்தேன்.

 

அதைவிடக் கொடுமை, அந்தப் படத்தில் ஒரே ஒரு இடத்தில் பிராமின் என்கிற வார்த்தை வரும். அந்த வார்த்தைக்காகப் படத்தைப் பலமுறை திருப்பி அனுப்பி விவரங்கள், விளக்கங்கள், தகவல் ஆதாரங்கள் என்று கேட்டபடியே இருந்தார்கள். நாங்களும் சளைக்காமல் அவற்றை எல்லாம் அளித்தபடியே இருந்தோம். ஆனாலும் அந்தப் படத்தை இதே போன்ற பெரியாரின் நினைவுநாள் ஒன்றில் ஒரே ஒரு நாள் ஒளிபரப்பி விட்டு, அதோடு முடக்கி விட்டார்கள்.

 

அது பழைய "யு மேட்டிக்" கேசட் வடிவில் எடுக்கப்பட்ட படம். இப்போது அதற்கான பிளேயர் கூடக் கிடைக்காது.

 

ஆனால் நாங்கள் டெலி சினி பண்ணி வைத்த பெரியார் உயிர்க்காட்சிப்  படிமங்கள் அங்கிருந்து வேறொரு பயணத்தைத் தொடர்ந்தது. ஒளிபரப்பான எங்கள் படத்திலிருந்து காட்சித் துண்டுகளைச் சுட்டு அப்போது தூர்தரஷனில் ஒளிபரப்பான பெரியார் பற்றிய படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள்.

 

நிஜநாடக இயக்கத்தின் சார்பில், தமிழகமெங்கும் வலம் வந்த, பேராசிரியர் மு.ராமசுவாமியின் "கலகக் காரர் தோழர் பெரியார்" நாடக ஆக்கத்தில் ராஜனும் நானும் இணைந்து பணியாற்றினோம். அந்த நாடகத்தில் பெரியாரின் உயிர்க்காட்சிகளையும் இறுதியில் பின் திரையில் ஒளிபரப்புவது போல நாடகத்தின் காட்சிகளை வடிவமைதிருந்தோம். அதற்கு ராஜன் மூலம் கிடைத்த ராமு காரியத்தின் பெரியார் பற்றிய காட்சித் துண்டுகளே உதவின.

 

இதன் வழியாகப் பெரியார் பற்றிய உயிரசைவுப் பபடிமங்கள் அந்த நாடகத்தின் வழியாகத் தமிழகம் முழுக்கத் திரும்பத் திரும்ப மேடையேறிப் பரவின.

 

பின்னர் ராமசாமி அந்த நாடகத்தை வீடியோ வடிவிலும் உருவாக்கினார்.

 

இன்றைய பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் பெருஞ்சீடரான அண்ணாவின் பிறந்தநாளில் மறைந்து போன யதார்த்தா ராஜனின் நினைவு இப்படியாகச் சுழன்றது...

 

-ஸ்ரீரசா

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே.பாலபாரதி அவர்களின் கவிதை கீழே உள்ளது.

 

 


உங்கள் வீட்டில் உங்கள் மகள்

கல்வி கற்கிறாரா..

உங்கள் மனைவி வேலைக்குப்போகிறாரா..

18 வயதுக்குமேல்தான்  சகோதரிக்கு திருமணம் 

செய்து வைத்தீர்களா...

தந்தையார்  இறந்தபிறகு

தாயின்  உழைப்பிலேதான்

வளர்ந்தீர்களா..

என்ன ஆச்சரியம்?

உங்கள் நாட்டில் பெண் நிதி அமைச்சரும்

உள்ளாரா?

அப்படியானால் பெரியார்

எப்படி  சிலையாக  இருப்பார்?

அவர் என்றென்றும்

உயிரோடுதான் இருப்பார்...

#பெரியார்142