Showing posts with label விலைவாசி. Show all posts
Showing posts with label விலைவாசி. Show all posts

Monday, May 11, 2026

மோடியின் உபதேசம் ஊருக்குத்தான், எப்போதும் போல

 


மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில உபதேசங்களை அருளியுள்ளார்.

அவை


"வீட்டிலிருந்து வேலை" என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்

ஒரு வருட காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிருங்கள்,

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பீர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவீர்,

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்திடுவீர்,

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை நோக்கிச் செல்வீர்,

அன்னிய பிராண்டட் பொருட்களை வாங்குவதை குறைத்து சுதேசிப் பொருட்களுக்கு மாறுங்கள்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பீர்.

இந்த உபதேசங்கள் எல்லாம் ஒரு கடுமையான தாக்குதலுக்கு நம்மை தயார்ப்படுத்தும் உத்தி. கொரோனா காலத்தில் செய்யப்பட்டது போல லாக் டவுன் கொண்டு வரலாம். 

பெட்ரோல், டீசல்,சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள்  ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படலாம்.

அன்னிய பிராண்டட் பொருட்கள் மீது கை வைக்கும் தைரியம் 56 இஞ்ச் மாவீரனுக்குக் கிடையாது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

இந்திய மக்களை ஒரு வருட காலத்திற்கு வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லியுள்ள மோடி வரும் மே 15 அன்று ஒரு வார கால சுற்றுப் பயணம், அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.  

தன்னுடைய உபதேசம் மற்றவர்களுக்குத்தான், மக்களுக்குத்தான், தனக்குக் கிடையாது என்பதில் தெளிவாக உள்ளவர் மோடி. தான் சொன்னதை தானே மீறுகிறோமே என்ற கூச்சமும் கொஞ்சமும் இல்லாதவர்.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் இருந்ததால் இரண்டு மாதம் கட்டுப்பாடாக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே இருந்தால் என்ன ஆகும்?

மேலே உள்ள படத்தை மீண்டும் பார்க்கவும். 

Sunday, May 3, 2026

அடுத்து என்ன, அதானே மோடி????


 ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாகவும் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனையாகவும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 993 ரூபாய் அளவிற்கு உயர்த்தி உள்ளது.

அதன் விளைவாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும். டீக்கடைகளும் வேறு வழியின்றி விலையை உயர்த்துவார்கள். அதனால் சில டீக்கடைகள் செயல்பட முடியாமல் மூடி விடுவார்கள். அந்த தொழிலை நம்பி பிழைப்பை நடத்துபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்.

ஒரேயடியாக எல்லா பொருட்களின் விலையை உயர்த்தி விட்டால் மக்களுக்கு தாக்குதலின் தீவிரம் புரியாது என்பதற்காக முதலில் கமர்ஷியல் சிலிண்டரின் விலையை மட்டும் உயர்த்தி விட்டார்கள். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல அடுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரும்.

அவற்றின் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும். பேருந்துக் கட்டணம் தொடங்கி லாரிக் கட்டண உயர்வால் சங்கிலி விளைவாக எண்ணற்ற பொருட்களின் விலைகளின் உயரும்.

விலையை உயர்த்துவதற்கு முன்பாக, என்ன விலை வேண்டுமானால் விற்கட்டும், கிடைத்தால் சரி என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

மோடியின் முரட்டு பக்தர்கள் வாழும் மாநிலங்கள் போல தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலிண்டர் வருவதற்கு கண்டிப்பாக தாமதம் ஆனது. வழக்கமாக பதிவு செய்த நாளிலேயோ அல்லது மறு நாளே வேலூரில் சிலிண்டர் வந்து விடும். இக்காலகட்டத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் வந்தது.

கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு பல உணவகங்களை மூட வைத்தது. என் சொந்த அனுபவம் ஒன்றை சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியூர் சென்ற போது இரவு உணவுக்காக ஒரு பிரபல உணவகத்திற்கு சென்ற போது இடம் கிடைக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.  வேறு சில உணவகங்கள், உள்ளே நுழையும் முன்னே நாங்கள் மூடி விட்டோம், இனி சேவை கிடையாது என்றார்கள். ஒரே ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றால் சப்பாத்தி மட்டுமே இருப்பதாக சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையே கொண்டு வரச்சொன்னால் அது வரவும் 45 நிமிடங்கள் ஆனது. 
கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒரே ஒரு சிலிண்டரை வைத்து சமாளிப்பதால் தாமதமாகிறது என்றார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை. கிடைத்தாலே போதும் என்ற மன நிலை நிலவுகிறது. இல்லையில்லை. அப்படிப்பட்ட மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டார்கள்  மோடி வகையறாக்கள்.

இந்த விலை உயர்விற்கும் சங்கிகள் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூடர்களால்தான் மோடி பிரதமராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


Tuesday, March 10, 2026

முட்டாள்தனமாய் அன்புமணி, ஆணவமாய் பத்ரி சேஷாத்ரி

 


அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரின் காரணமாக இரான் மட்டும் பாதிக்கப்படவில்லை, பாதிப்பு இந்தியர்களையும் எட்டிப் பார்த்து விட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடங்கி விட்டது. 

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது யார் பொறுப்பு?

திமுக அரசுதான் தீர்வு காண வேண்டும் ஒருவர் சொன்னால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

மத்தியரசு தீர்க்க வேண்டிய பிரச்சினையை மாநில அரசை தீர்க்கச் சொல்கிறீர்களே, முட்டாள்தனமா இல்லையா என்றுதானே கேட்பீர்களே!

ஆமாம் என்று சொல்கிறீர்களா ! அப்படியானால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு மட்டம் போடப்போகும் அன்புமணியிடம் கேளுங்கள், நீர் என்ன முட்டாளா என்று.


பிரெட் கிடைக்காமல் பட்டினிக் கொடுமையில் அவதிப்பட்ட பிரான்ஸ் மக்களிடம் கேக் சாப்பிடச் சொன்னார் ராணி மேரி அண்டோனியா.

நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாததால் அவற்றின் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது என்றார் நிர்மலா அம்மையார்.

இந்த ஆட்களுக்கு இணையாக கேஸ் இல்லையென்றால் என்ன இன்டக்சன் ஸ்டவில் சமையுங்கள் என்று பிரச்சினையை திசை திருப்புகிறார் கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரி.

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பழி வரக்கூடாது, மோடி மீது விமர்சனம் வரக்கூடாது என்றெல்லாம் எப்படி டிசைன் டிசைனாக மடை மாற்றுகிறார்கள் பாருங்கள்.

இவர்களை எல்லாம் எக்காலத்திலும் யாரும் நம்ப முடியாது. 

Tuesday, August 29, 2023

பயந்துட்டீரா டிமோ?

 


டிமோவின் தேர்தல் பயம் கீழேயுள்ள அறிவிப்பில் தெரிகிறது.


சரி, பெட்ரோல், டீசல் விலையை எப்போ குறைக்கப் போறீர் ????

Friday, January 7, 2022

வீதிகளெங்கும் மக்கள் தலைகளாக . . .

 





*நாளொரு கேள்வி: 06.01.2022*

தொடர் எண் : *585*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
###########################

*கஜகஸ்தான் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகள்*

கேள்வி: கஜகஸ்தானில் ஒரே அமளி துமளியாய் இருக்கிறதே!

*க.சுவாமிநாதன்*

கஜகஸ்தான் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாடு. வடக்கே ரஷ்யா, கிழக்கே சீனாவை எல்லைகளாக கொண்டது. *தெருக்கள் முழுவதும் போராட்டக்காரர்கள் தலைகள்* தென்படுவதாக செய்திகள் கூறுகின்றன. 

விமான நிலையம், அரசு  செயலகம், பல அரசு அலுவலகங்கள் எல்லாம் போராட்டக் காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கின்றன. 33 காவல் வாகனங்கள் உட்பட 120 வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன. 400 வணிக கூடங்கள் தாக்கப்பட்டுள்ளன.  *எமர்ஜென்சியை* அதிபர் பிரகடனம் செய்துள்ளார். அமைச்சரவை பதவி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளது. 

*கேஸ் விலை* உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு லிட்டர் கேஸ் இந்திய ரூபாய் மதிப்பில் 10.20 லிருந்து ரூ 21 க்கு கிடு கிடு என உயர்ந்திருக்கிறது. 100% விலை உயர்வு. 90 சதவீத வாகனங்கள் கேஸ் மூலம் ஓடுகிற நாட்டில் மக்கள் மத்தியில் கோபம் வருவது இயல்புதான். 2019 இல் இருந்தே விலையை சந்தை தீர்மானிக்கும், மின்னணு வர்த்தகத்திற்கு நகரும் என்ற கொள்கை நிலை நோக்கி அரசு செல்ல ஆரம்பித்தது. அதன் உச்ச கட்ட தாக்கத்தைத்தான் அந்த தேசம் இன்று சந்தித்து வருகிறது.

ஆனால் இப் போராட்டத்தின் *வேர்கள்* கேஸ் விலை உயர்வை விட ஆழமானது. 

*ஒன்று,* உலக மயக் கொள்கைகளின் தோல்வி. சந்தை தீர்மானிக்கும் என்றால் மக்கள் நலன் பறி போகும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 

*இரண்டாவது,* வருமானம் மீதான தாக்குதலாக மக்கள் பார்க்கிறார்கள். சராசரி வருமானம் ரூ 35000 ஆக உள்ள அந்த நாட்டில் எங்கள் வருமானத்தை ரூ 2,00,000 ஆக உயர்த்துங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். 

*மூன்றாவது,* அங்குள்ள பொருளாதார நிலைமைகளின் மீதான குவி கோபம் (Pent up anger) ஆகும் இது. பெரும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகியுள்ள சூழலில் அதன் விளை பொருளாக இந்த கோபம் அமைந்துள்ளது.

ஆகவே கஜகஸ்தான் அனுபவம் எல்லா நாடுகளுக்குமே பாடம்தான். 

என்றாலும் இன்னும் கூடுதல் செய்திகளுக்காக காத்திருப்போம். வேறு பரிமாணங்கள் உண்டா என்பதையும் ஆய்வு செய்வோம்.

*செவ்வானம்*

Tuesday, November 2, 2021

கொள்ளை எப்போது நிற்கும் ?

  


காலையில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது பகீரென்றாகி விட்டது.

 ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை  ரூபாய் 108.00

 மூன்று நாட்கள் முன்பாக இருந்தது 105 ரூபாய்

 இந்த கொ:ள்ளை எப்போதுதான் நிற்கும்? எந்த விலையில் நிற்கும்?

 இப்போதும் மோடியை ஆதரிப்பவர்கள் நிச்சயமாக முட்டாள்கள், மூடர்கள், மடையர்கள்.

 

Tuesday, October 26, 2021

அச்சப்படுத்தும் செஞ்சுரி



 *நாளொரு கேள்வி: 25.10.2021*


வரிசை எண்: *512*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*செஞ்சுரி அடித்த டீசல்*

கேள்வி: டீசல் விலை உயர்வு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

*க.சுவாமிநாதன்*

இது கிரிக்கெட் சீசன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்பே டீசல் செஞ்சுரி அடித்து விட்டது. *தேசம் என்ற கேலரியில் அமர்ந்திருக்கிற யாரும் கை தட்டவில்லை. ரசிக்கவில்லை.* அதிர்ந்து போயிருக்கிறார்கள். 

நேற்று காலை இந்து நாளிதழின் மாநகர பக்கத்தில் டீசல் விலை உயர்வு பற்றிய செய்தி ஒன்று உள்ளது. மேற்கு மாம்பலத்தில், வேளச்சேரியில், மேட வாக்கத்தில், கேளம்பாக்கத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 100 ஐ கடந்து விட்டது. பைசாக்களில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். 

முன்பெல்லாம் *பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை வித்தியாசம்* நிறைய இருக்கும். ஆனால் இப்ப பெட்ரோல் லிட்டர் விலையான ரூ 104 ஐ டீசல் நெருங்கி விட்டது. டூரிஸ்ட் டாக்சி ஒட்டுபவர்கள் டீசல் வண்டி என்றால் லாபம் என்று நினைத்த காலம் மலையேறி விட்டது.

அண்ணா நகரில் ஒருவர் புலம்பியது அதில் செய்தியாக உள்ளது.  _" _சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கார் வாங்கினேன். அப்போது பெட்ரோலை விட டீசல் விலை லிட்டருக்கு ரூ 15 குறைவாக இருந்தது. இன்னைக்கு கார் டேங்க் ஐ நிரப்ப ரூ 5000 ஆனவுடன் திக் கென்று இருந்தது_ " 
டூரிஸ்ட் கார்களின் ரேட் அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் சண்டை போடுகிறார்கள். இருந்தாலும்  டூரிஸ்ட் கார்காரர்கள் ரேட்டை ஏற்றி விட்டார்கள். ஃப்ரீடம் டிராவல்ஸ் என்ற கம்பெனியின் உரிமையாளர் கூறும் போது " _கிலோ மீட்டருக்கு ரூ 4 அல்லது ரூ 5 உயர்த்த வேண்டும். இப்போது உள்ள ரேட்டுகள் டீசல் விலை ரூ 70 ஆக இருந்த போது நிர்ணயித்தது ஆகும். இப்ப எப்படி கட்டுப்படியாகும்_ ?"
என்கிறார். நிறைய பேர் காரில் போவதை குறைத்து விட்டார்கள். 

இந்த செய்தி எல்லாம் நடுத்தர மக்களின் கஷ்டங்கள். இவர்கள் நிலைமையே இதுவெனில் சாதாரண மக்களின் நிலைமை என்ன? அவர்கள் முதுகு மீது மறைமுக சுமையாக ஏறுவதால் நேரடியாக கோபப்பட கூட முடியாது. ஆமாம். அவர்கள் வாங்குகிற *காய்கறி, பலசரக்கு சாமான்கள் எல்லாவற்றின் விலையும்* ஏறிவிடும். இவற்றை ஏற்றி வருகிற லாரி, அரைபாடி லாரி, வேன் கட்டணங்களை யார் சுமப்பது? 

பெட்ரோல் டீசல் ஆகியன இடையீட்டு சரக்காகும். இதன் விலை நிறைய சரக்குகளின் விலைகளில் பிரதிபலிக்கும். *நுகர்வோர் விலை குறியீட்டெண், பணவீக்கம்* அதிகரிப்பது இதனால்தான். 

விலையில் பாதிக்கு மேல் உள்ள வரிகளை குறைக்காமல் மக்களின் பாடுகள் குறையாது. ஆனால் வேதனை என்னவென்றால் விலை கூட கூட வரியும் கூடும் என்பதே. எடைக்கு வரி இல்லை, விலைக்கு வரி என்பதே காரணம். 

*செவ்வானம்*

Sunday, September 12, 2021

பிள்ளையார் அருள் யாருக்கு?

 


நான் ரசித்த கேலிச்சித்திரம்.

நிர்மலா அம்மையாரை விலைவாசியை குறைக்கச் சொல்லுங்கள் 

என்று

வேண்டுகிற பக்தனுக்கா

அல்லது

விலைவாசியை சகித்துக் கொள்ளும் சக்தியை பக்தனுக்கு அளி

என்று

உத்தரவிடும் நிர்மலா அம்மையாருக்கா

யாருக்கு பிள்ளையார் அருள் பாலிக்கப் போகிறார்?


Sunday, May 2, 2021

இன்றா, நாளையா மோடி?

 


ஐந்து மாநில தேர்தல்கள் காரணமாக ஒன்றரை மாதமாக கட்டுப் படுத்தி வைத்துள்ள, அல்லது கட்டி வைத்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை மீண்டும் எப்போது உயர்த்த எப்போது உத்தேசம் மோடி?

இன்றா? நாளையா?


Monday, February 22, 2021

மஹா பயங்கர "அயோக்கியத்தனம்" மேடம்

 


பெட்ரோல்  டீசல் விலை உயர்வு குறித்து வாய் திறந்துள்ள நிர்மலா அம்மையார் அது "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று சொல்லியுள்ளார். விலையை குறைக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும் சொல்லியுள்ளார்.

விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்களே தவிர அரசு அல்ல.

கச்சா பொருளின் விலை உயர்ந்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாது.

மத்தியரசு வரியை குறைத்தாலும் மாநில அரசுகள் வரியைக் குறைக்காவிட்டால் பயனில்லை. 

இதெல்லாம்தான் அவர் உதிர்த்த கருத்து முத்துக்கள்.

அவர் சொன்னதெல்லாம் சரியா?

விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது அரசுதான். அரசு அப்பொறுப்பை மீண்டும் தன் வசம் எடுத்துக் கொள்ள முடியும்.

கச்சா பொருளின் விலை குறைந்தாலும் இங்கே விலை குறையாமல் இருப்பதுதானே பிரச்சினை!

ஜி.எஸ்.டி வரம்பின் கீழ் பெட்ரோல்  டீசல் வந்து விட்டால் இந்தியா முழுதும் ஒரே விதமான வரிதானே இருக்கும்! அதை செய்ய ஏன் அரசு தயாராக இல்லை? ஜி.எஸ்.டி என்றால் 28 % க்கு மேல் வரி போட முடியாது. மாநிலங்களுக்கும் பங்கு தர வேண்டும். 

உண்மை இப்படி இருக்க "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று செண்டிமெண்ட் வசனம் பேசி தப்பிப்பதுதான் "மஹா பயங்கர அயோக்கியத்தனம்" நிர்மலா மேடம். 


Saturday, February 20, 2021

மோடிஜிக்கு தங்க மனசுஜி





இந்த நல்லவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் என் அறிவுக் கண்ணை திறந்தவர் இவர்தான்.

 ஆட்டுக் கறியோ, மாட்டுக் கறியோ, கோழிக்கறியோ வேக கூடுதல் நேரம் ஆகும் என்பதால் உங்கள் சமையல் எரி வாயு சிலிண்டர் சீக்கிரமாக தீர்ந்து விடும். காய்கறியை வேக வைத்தால் சிலிண்டர் நீண்ட நாள் வரும். ஆகவே  காய்கறி மட்டுமே பயன்படுத்துவீர் என்று சொன்னால் கேட்பீர்கள். என் உணவு, என் உரிமை என்று கோஷம் போடுவீர்கள். அதனால்தான் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி உங்கள் உடல் நலன் மேல் உள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் மோடிஜி. கறி வாங்குவதை மிட காய்கறி வாங்குவதும் உங்கள் பணத்தை சேமிக்கும். காய்கறி கூட பச்சையாக சாப்பிட்டால் இன்னும் நல்லது என்பதால் அடுத்த முறை நூறு ரூபாய் உயர்த்தவுள்ளார். அதற்காக அவரை மனமாற பாராட்டுவதே நம் கடமை. 

 தொலைக்காட்சிகளில் வில்லேஜ் சமையல் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பவர்களுக்கு விறகடுப்பு சமையலின் ருசி தெரியும். ஆகவே உங்கள் நாவின் ருசியை கூட்டும் நோக்கமும் மோடிஜிக்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

 விறகுக்கு எங்கே போவது என்று கேட்காதீர்கள். சாமியார்கள் தொடங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைவருக்கும் மோடிஜி ஏன் காட்டு நிலங்களை அளிக்கிறார். அவர்கள் ஆசிரமம் அமைக்கவும் தொழிற்சாலை கட்டவும் காட்டை அழிக்கும் போது கிடைக்கும் மரங்கள் உங்கள் விறகுத் தேவைக்கு உதவும் என்பதால்தானே அவர்களுக்கு காட்டு நிலத்தை அளிக்கிறார் மோடிஜி.

 காடுகளை அழித்தால் மழை என்ன ஆகும் என்று கேட்காதீர்கள். மழை அதிகமாக பெய்து வெள்ளம் வந்தால் உங்களுக்குத்தானே சிரமம்!

 உடல் பெருத்து விட்டது, சர்க்கரை நோய் வந்து விட்டது. இன்னும் பல பிரச்சினைகள். நடைப் பயிற்சி செல்லுங்கள் என்று சொன்னால் கேட்பதே இல்லை.  அதனால்தான் மோடிஜி பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டார். இனி நடந்துதானே ஆக வேண்டும்! உங்களின் ஒவ்வொரு பாதச்சுவடும் மோடிஜிக்கு நன்றி, நன்றி என்றே பதிவாகும்.

 மோடியோட நல்ல மனசை இத்தனை நாள் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்று மிகவும் வெட்கமாக இருக்கு.

 எனவே மோடிஜி என்ன செய்தாலும் அதில் மக்களுக்கான நல்ல சிந்தனை இருக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்..

 பிகு 1 : எனக்கு இப்போது ஒரே ஒரு கவலை  என்றால் இதை நிஜமான சீரியஸ் பதிவு என்று நினைத்து சங்கிகள் மோடிக்கு ஆதரவான பதிவு என்று பகிர்ந்து கொள்வார்களே என்பதுதான். 

பிகு 2 : போன வாரம் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்ட போது 91.47 என்று இருந்த ஒரு லிட்டர் விலை நேற்று 93.39 பைசா.

பிகு 2 : சதமடிக்கும் போது மோடிக்கு ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்யலாமா இல்லை கேக் வெட்டி கொண்டாடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சதமடிக்கும் முதல் பிரதமர் என்றால் சும்மாவா?

Wednesday, February 10, 2021

குறை சொல்றது ரொம்ப தப்புங்க . . .

 


பெட்ரோல், டீசல் விலையை 60 முறைதான் ஏத்தினாங்களாம். தினசரி ஏத்தியிருந்தா ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போ குறைந்த பட்சம் 200 ரூபாய் இருந்திருக்கும். அது இல்லாம இப்போ வெறும் 90 ரூபாய்தான் இருக்கு.




அதனால மோடிஜி அரசாங்கத்தை குறை சொல்றது ரொம்ப தப்புங்க . . .


Thursday, October 22, 2020

வெங்காயமே! கமலே! நன்றி

 


 

தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு இல்லை என்று இத்தனை நாள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டிருந்தேன்.

 




இப்போதுதான் அது தவறு என்று தெரிகிறது.

 வெங்காயமே தன் விலையை நிர்ணயித்துக் கொண்டு உயர்ந்து போய் விட்டதே! தானே தன் விலையை நிர்ணயத்திக் கொண்ட முதல் விவசாய உற்பத்திப் பொருளான வெங்காயத்திற்கு மனமார்ந்த நன்றி.

 அத்தியாவசியப் பொருட்கள் தடைச்சட்ட,ம் அகற்றப்பட்டதால் பதுக்கல் அதிகமாகி விலை உயர்ந்து விட்டது என்று மத்தியரசு மீதும் பதுக்கல் பேர்வழிகள் மீதும் கோபப்பட்டது தவறு என்பதை மய்யமாக உணர்த்தியதற்கு நன்றி திரு கமல் அவர்களே!

Monday, October 5, 2020

இன்ஸ்டன்ட் காபியில் இவ்ளோ கொள்ளையா?

 


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் பெ.சண்முகம் அவர்களின் கேள்வி இது.

பில்டர் காபிக்கான காப்பித் தூள் (சிக்கரி சேர்க்காமல்)  அரைக் கிலோ இருநூற்றி இருபது ரூபாய்தான். இன்ஸ்டன்ட் காபி பயன்படுத்தாத காரணத்தால் இந்த கொள்ளை இது நாள் வரை தெரியவில்லை. பெரும்பாலான இன்ஸ்டன்ட் காபித் தூள்களில் சிக்கரியின் சதவிகிதம் 30 % லிருந்து 40 % வரை இருக்கும். 

அதையும் சேர்த்துப் பார்த்தால் அநியாயக் கொள்ளைதான். ஆனால் இதன் பலன் விவசாயிகளுக்குச் செல்லவில்லை, இனியும் செல்லாது என்பதுதான் கொடுமை. 



திரு.மோடி அவர்களே, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ காபி கொட்டையை131ரூபாய் க்கு வாங்கி நெஸ்லே கம்பெனிகாரன் ஒரு கிலோ காப்பி தூள்11299 ரூபாய் என்றும் அமேசான் மூலம் வாங்கினால்42%கழிவு போக 6699 ரூபாய் என்றும் நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்களே இந்த பகாசூர பகல்கொள்ளையை உங்களின் வேளாண் சட்டம் எந்த வகையில் தடுக்கும்?விளக்குவீர்களா?

பிகு: படத்தில் உள்ள விலையைப் பார்த்து நீங்கள் சொல்வது தவறு என்று யாரும் பின்னூட்டம் போட வேண்டாம். அது நூறு கிராம் பாட்டில். தோழர் சண்முகம் ஒரு கிலோவிற்கான விலையை சொல்லியுள்ளார். 

Thursday, December 5, 2019

உங்க பாரம்பரிய வெங்காயமெல்லாம் வேண்டாம் . . .



நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா இல்லையா என்பது எங்களுக்கு முக்கியமில்லை.

வெங்காயம், பூண்டு சாப்பிடாத உங்கள் குடும்ப பாரம்பரியம் பற்றியும் எங்களுக்கு சிறிதும் கவலையில்லை.

வெங்காயம் சாப்பிடாதது என்னவோ பெரிய புனிதம் என்று அளக்கும் உங்கள் ஆணவம் எரிச்சல் மட்டுமே அளித்தது நிதியமைச்சர் அவர்களே!

உங்கள் உணவு பழக்கமும் உங்கள் குடும்ப பாரம்பரியமும் என்ன எழவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

ஆனால் 

நிதியமைச்சர் என்ற நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நாட்டை சீரழித்து வருகிற உங்களுக்கு

வெங்காய விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டால் பதில் சொல்லும் பொறுப்பு இருக்கிறது.

இந்த பாரம்பரிய வெங்காயத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பதில் சொல்லுங்க பாப்போம் . . .


Friday, February 12, 2016

வலி தெரியாமல் வதைக்கும் ரயில்வே




யில்வே துறை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சேவைத்துறையாகவே நீடித்து வந்தது. ஆனால் அனைத்தும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மயங்களின் வலையில் சிக்கிவிட்ட மத்திய அரசுகளால் இதை மட்டும் பாதுகாக்க முடியுமா?
 
மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாஜக அரசு ரயில்வே துறையை தனி யார் மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந் ததே. அதற்கு முன்பு மக்களிடமிருந்து தன்னால் எவ்வளவு சுரண்ட முடியும் என்ற முயற்சியில் அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 2013-14 கணக்கின்படி இவ் வாண்டில் சுமார் 840 கோடிப்பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதாவது நா ளொன்றுக்கு சுமார் 2கோடிப்பேர் இந்திய ரயிலில் பயணம் செய்கின்றனர். இவர் களிடம் ஆளொன்றுக்கு ஒரு ரூபாய் சுரண் டினால் ஆண்டொன்றுக்கு ரூ. 840 கோடி யையும் சுரண்டலாம் என்று மத்திய பாஜக அரசு கணக்கிட்டுள்ளது. 

ஆனால் ஒரு பயணியிடம் ஒரு ரூபாயை மட்டுமல்லாது, பயணிகள் அனைவரிடம் இருந்தும் எவ் வாறு பணத்தைக் கறக்கலாம் என்பதை அது நன்கு கணக்கிட்டுள்ளது.ஒரு பயணியின் துயரம்நீங்கள் ஹைதராபாத் செல்ல வேண் டும் என்றால், முந்தைய ரயில்வே விதி களின்படி மதுரையில் இருந்து சென் னைக்கு ஒரு ரயிலிலும், அங்கிருந்து ஹை தராபாத்துக்கு மற்றொரு ரயிலிலும் முன் பதிவு செய்து கொண்டு பயணம் செய்ய லாம். அதற்கு கட்டணமாகச் செலுத்தும் தொகை மதுரையில் இருந்து ஹைதரா பாத் செல்வதற்குரிய தூரத்தின் அடிப்படை யில் (வநடநளஉடியீiஉ னளைவயnஉந உhயசபந) கணக் கிடப்படும். ஆனால் தற்போது அவ்வாறு கணக்கிடப்படுவதில்லை என்று ஒருபணி நியமன நேர்காணலுக்காக ஹைதரா பாத் சென்ற பயணி தன்னுடைய அனுப வத்தை வேதனையுடன் பகிர்ந்து கொள் கிறார்.அவருக்கு திங்களன்று காலை பத்துமணிக்கு நேர்காணல். மதுரையில் இருந்து செல்லும் கச்சேகுடா விரைவு ரயில் (சென்னை சென்ட்ரல் போன்று கச்சே குடா ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு ரயில் சந்திப்பு)திங்கள் பிற்பகலில் சென்றடை கிறது. மற்ற இரண்டு வண்டிகளான ராமேஸ் வரம் - ஓக்கா விரைவு ரயிலும், நாகர் கோயில் - கச்சேகுடா விரைவு ரயிலும்ஞாயிறு அன்று கச்சேகுடா சென்றடை யாது. 

ரயிலை விட்டு இறங்கியவுடன் நேர் காணலுக்குச் செல்ல முடியாது என்பதால், அவர் ஞாயிறு அன்றே ஹைதராபாத் செல்லத் திட்டமிட்டார். அதன்படி அவர் வெள்ளியன்று பாண்டியன் விரைவுரயிலில் சென்னைக்கும், சென்னையி லிருந்து ஹைதராபாத்துக்கு சார்மினார் விரைவு ரயிலில் பயண முன்பதிவு செய் தார். தொலைதூர கட்டண நிர்ணய அடிப் படையில் அவர் ரூ.516(சுமார்) ரயில் வேக்கு செலுத்த வேண்டும். ஆனால்ரயில்வே அவரிடம் ரூ.740 கேட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் ஏன் கட்ட ணம் கூடுதலாக உள்ளது என்று கேட்டார். அதற்கு முன்பதிவு அலுவலர் மதுரை யில் இருந்து நேரடியாக ரயில்கள் செல் லும் இடத்துக்கு மட்டுமே தொலை தூரக் கட்டண நிர்ணய முறை நடை முறைப்படுத்தப்படும் என்றும் நீங்கள் கேட்டபடி முன்பதிவு செய்தால் அம் முறைப்படி கட்டணக் கணக்கீடு செய்யக்கூடாது என்று ரயில்வே உத்தரவிட்டுள் ளது என்று கூறியுள்ளார். அத்துடன் அங் குள்ள தகவல்பலகையில் ஒட்டப் பட்டுள்ள அறிவிப்பையும் அவர் சுட்டிக் காட்டினார்.இந்த அறிவிப்பின்படி அகமதாபாத், ஆக்ரா போன்ற நகரங்களுக்குச் செல்ல விரும்புவோர் மதுரையில் இருந்து செல்லும் வண்டிகளில் மட்டுமே பதிவு செய்தால் தொலைதூரக் கட்டண நிர்ணய முறையின்படி பலன் அடைய முடியும்.இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாபத்துக்கு உள் ளாக வேண்டும். 

இனி வருங்காலங்களில் மும்பை, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடு களுக்குச் செல்வது குறித்து முன்யோ சனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சண்டிகர், டேராடூன், கொல் கத்தா, ஓக்கா, சூரத், போன்ற நகரங் களுக்கு மதுரையில் இருந்து பல ரயில்கள் இருந்த போதும், அவை நமது விடுமுறை, பண் டிகை நாட்கள், நேர்காணல் போன்றவை களையொட்டி பயணம் செய்வதற்கு பொருந்தாத வகையில் வாராந்திர, வார மிருமுறை, வாரம் மும்முறை செல்லும் வண்டிகளாகவே உள்ளன. ரயில் பயணி களைச் சுரண்ட ரயில்வே கண்டு பிடித் துள்ள ஒரு தந்திரமாகும் இது.

ரயில்வே நிதி நெருக்கடி

ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்ளும் இந்தியக் குடிமகன் பயணத் தேதிக்கு 120 நாட்களுக்கு முன்னதாக தன்னு டைய பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ரயில்வே ஒரு சுற்ற றிக்கை மூலம் அறிவித்தது. 1970களில் 30 நாட்களுக்கு முன்னதாக ஒருவர் தனதுபயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள் ளலாம். 1980களில் கணினி மூலம் பதிவு கள் செய்யப்பட்ட பின்னர் இந்த நாட்கள் 60 ஆக உயர்த்தப்பட்டன. சில ஆண்டு களுக்கு முன்பு இவை 120 நாட்களாக மாற்றப்பட்டு, பின்னர் மே 2014 முதல் 90நாட்களாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.4.2015 முதல் இந்நாட்கள் மீண்டும் 120ஆக உயர்த்தப்பட்டது. இது ஏதோ பயணி களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முற் போக்கு நடவடிக்கை போல் மத்தியில் ஆண்ட இரு கட்சிகளும் நாடகமாடின. 

ஆனால் இது ரயில்வேயின் நிதி நெருக் கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக் கையே ஆகும்.விமானப்பயணங்களின் போது முன் பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு, முன்பதிவு செய்யப்படும் நாளில் இருந்து பயணமாகும் நாட்களுக்கும் இடையில் உள்ள நாட்கள் 30க்கு மேல் இருந்தால் பயணக்கட்டணத்தில் சலுகை அளிக்கப் படும். இந்த நாட்கள் 60, 90, 120, 150, 180 நாட்கள் இருந்தால் இந்தப் பய ணச் சலுகை அதிகரித்துக் கொண்டு செல்லும். ஆனால் ரயில்வே முன்பதி வில் இந்தக் கட்டணச் சலுகை அளிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விமானப்பயணத்தில் கட்டணச் சலுகையுடன், பயண நேரமும் குறைவு என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். மதுரை - தில்லி பயணக்கட்டணம் ரயிலில்முதல் வகுப்பு ஏசியில் ரூ.5725 ஆகும். 

ஒரு மாதத்துக்கு முன்பாக முன்பதிவு செய்தால் சலுகையாக ரூ.300 அளிக்கப்படும். ரயிலில் தில்லி செல்ல பயணிக்கும் நேரம் சுமார் 42 மணி நேரமாகும். ஆனால் விமானத்தில் பயணம் செய்தால் அதிக பட்சமாக 11 மணி நேரமாகும். விமான வேகத்தில் ரயில் செல்ல முடியாது என்பது கவனிக்கத்தக்கது.ஒரு வங்கியில் ரூ.1000த்தை சிறுசேமிப்பில் போட்டு வைத்தால் 4 விழுக் காடு வட்டி அளிக்கப்படும். அதாவது ஆண் டுக்கு ரூ.40 கிடைக்கும். இதுவே நிர்ணய சேமிப்பாக இருந்தால் அதற்கு வட்டி விகி தம் குறைந்தது 8சதவீதமாக இருக்கும். ரயில்வே நான்கு மாதங்களுக்கு முன்பாக பெறும் பயணக்கட்டணத்துக்கு வட்டிஅளிக்க வேண்டும் அல்லவா? அதைத் தானே விமான நிறுவனங்கள் செய்கின் றன. பிறகு ஏன் ரயில்வே செய்ய மறுக் கிறது? இவ்வாறு நான்கு மாதங்களுக்கு வசூலாகும் பணத்தை வைத்து தனது அன் றாட நிர்வாகச் செயல்களைச் சமாளித்து வருவதால் பயணிகளுக்கு சலுகை தரமறுக்கிறது. 

2014ல் ஆட்சிக்கு வந்த வுடன் தே.ஜ.கூட்டணி அரசு முன் பதிவுக் காலத்தை 120 நாட்களில் இருந்து90 நாட்களாகக் குறைத்தது. அடுத்து வந்த 11 மாதங்களில் ஏற்பட்ட நிதி நெருக் கடிக்கு காரணம் முன்பதிவுக்காலத்தை குறைத்தது தான் என்பதை உணர்ந்த அது மீண்டும் முன்பதிவுக்காலத்தை மீண்டும் 120 நாட்களாக உயர்த்தியது.மக்களைச் சுரண்ட ரயில்வே கண்டு பிடித்த மற் றொரு தந்திரமாகும் இது.

அவதிப்படும் மக்கள்

கடந்த நவம்பர் 12 முதல் ரயில்வே முன் பதிவு ரத்து கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சில அபூர்வமான சூழ்நிலைகளில் பய ணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு சிலசலுகைகள் கிடைத்துள்ளன.இதற்கு முன்பு ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத் துக்குள் ஒருவர் பயணத்தை ரத்து செய்து 25 சதவீதம் கட்டணத்தை திரும்பப் பெற முடியும் என்று ரயில்வே விதிகள்கூறுகின்றன. ஆனால் புதிய விதிகளின் படி ரயில் புறப்பட்ட பின் பயணத்தை ரத்து செய்ய முடியாது. அதே போல் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குமுன்பு வரை 50 சதவீதம் கட்டணக்கழி வுடன் பயணத்தை ரத்து செய்ய முடியும். ஆனால் இப்போது இந்த நேரம் 6 மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது.முதல் வகுப்பு ஏசி முன்பதிவு ரத்துக்கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ. 240 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் பயணம் செய்வோர் உயர்தட்டு மக்க ளும்,அரசு அதிகாரிகளும் தான். இவர் களில் உயர்தட்டு மக்கள் இந்த உயர்வைத் தாங்கக்கூடியவர்கள். அவர்களில் பெரும் பாலோர் விமானத்தில் அல்லது சொந்தக் காரில் பயணிக்கின்றனர். அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் பயணிப்பவர்கள். அவர்கள் ரத்து செய்வதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.வழக்கம் போல் அரசு உண்மையான பயணிகளை தரகர்களிடம் இருந்து பாதுகாக்கவும், அரசு அளிக்கும் பயணச் சீட்டு நடவடிக்கைகளைத் தவறாகப் பயன் படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் ரத்துக் கட்டணத்தை உயர்த்துவதாகக் கூறு கிறது. ஆனால் இப்போதும் ரயில்வே நிலை யங்களில் தரகர்களின் ஆதிக்கம் குறைய வில்லை. பயணிப்பவரின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கும் இவர் களுக்கு இதுவெல்லாம் ஒரு சுமையாகத் தெரியாது.
ஏனெனில் அவர்கள் இதையும் பயணிகளிடம் வசூலித்து விடுவார்கள். எனவே ரத்துக் கட்டண உயர்வால் லாபம்அடைவது ரயில்வே துறை மட்டுமே. 2011- 12 - ஆம் நிதியாண்டில் ரத்துக்கட்டண வசூல் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.564.12 கோடியாகும். இது 2013-14-ஆம் நிதி யாண்டில் ரூ.932.99 கோடியாக அதிகரித் துள்ளது. தற்போதைய உயர்வுக்குப் பின் ரயில்வே 
 ரத்துக்கட்டண வசூல் மூலம் பல மடங்கு உயர்த்தி விடும்.

சுவிதா ரயில் அறிமுகம்

கடந்த ஆண்டு அறிமுகமான பிரிமியம் ரயிலை ரத்து செய்து விட்டு ரயில்வே புதிதாக சுவிதா ரயிலை இவ்வாண்டு ஜூலை முதல் அறிமுகம் செய்துள்ளது. பிரிமி யம் ரயில் பயணச்சீட்டை இணைய தளம் மூலம் மட்டுமே பெற முடியும். இதனால் இது எதிர்பார்த்த பலனை அரசுக்கு அளிக்க வில்லை. எனவே சுவிதா ரயிலை அறிமுகம்செய்துள்ளது.இந்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு அல்லது ரத்துக்கு மாற் றாக அளிக்கப்படும் (ஆர்ஏசி) பயணச் சீட்டுகள் மட்டுமே அளிக்கப்படும். இச் சீட்டுகளை இணையதளத்தின் மூலம் அல்லது முன்பதிவு கவுண்ட்டரில் பெற்றுக் கொள்ளலாம். இதன் கட்டணம் சாதா ரண அதிவிரைவு ரயில்களை விட கூடுத லாக இருக்கும்.அதாவது கிட்டத்தட்ட தட்கல் கட்டணத்தை ஒட்டி வரும். முதல் இருபது விழுக்காடு பதிவு முடிந்த வுடன், கட்டணம் உயர்த்தப்படும்.தட்கல்கட்டணத்தைப் போல் மூன்று மடங்கு கட்டணம் வரை செலுத்த வேண்டியிருக் கும். இந்த ரயிலில் அரைக்கட்டணம், முதியோர்,மகளிர் கட்டணச்சலுகை உள் ளிட்ட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. முன்பதிவுக்கட்டணம், விரைவு ரயில் கட்ட ணம் உள்ளிட்ட பிறகட்டணங்கள் வசூலிக்கப்படும்.பயணிகள் அங்கீகரிக்கப் பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி உள்ளது.இது குறிப்பிட்ட நாட்களில் ஓடும் வண்டி அல்ல. பயணச் சீட்டுக்கு அலைமோதுவோரிடம் பணம் பறிக்கும் திட்டத்தோடு இந்த ரயில் ஓட்டப்படுகிறது.இந்த ரயில்களில் வண்டி புறப்படுவதற்கு முன்பு 30 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம். இந்த ரயிலில் பயணச்சீட்டை எப்போது ரத்து செய்தாலும் 50விழுக்காடு கட்ட ணமும், இதர கட்டணங்களும் கழித்துக் கொள்ளப்படும். 

இது மக்களைக் கொள் ளையடிக்கும் செயல் அல்லவா?மக்களுக்கு சேவைத்துறையாக ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ரயில்வே துறை சில ஆண்டுகளுக்கு முன்புவரை சேவைத்துறையாகவே நீடித்து வந்தது. ஆனால் அனைத்தும் உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற மயங் களின் வலையில் சிக்கி விட்ட மத்திய அரசு களால் இதை மட்டும் பாதுகாக்க முடியுமா?இதையும் தனியார் மயமாக்கும் முயற்சி யில், உணவு, பயணச்சீட்டு வழங்கல் போன்றவை ஏற்கனவே தனியாரிடம் ஒப் படைக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழலில் தேஜ கூட்டணி அல்லது ஐமு கூட்டணி அரசு ஆகிய இரண்டில் எது பதவியில் இருந்தாலும், அவை மக்களிடமிருந்து பணத்தை எவ்வாறு கறப்பது அல்லது அவர்களின் நலன்களை எவ்வாறு பறிப்பது என்பதில் தான் குறியாக உள்ளன.
                                                                                      தோழர் எம்.எஸ்.அருள்தாஸ்

நன்றி தீக்கதிர் 12.02.2016

Friday, November 14, 2014

மோடிக்கு வாக்களித்தவர்களுக்கு சமர்ப்பணம்

பெட் ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என்று சொல்லி மோடி நாமம்  பாடியவர்களுக்கு இச்செய்தி சமர்ப்பணம். சர்வதேச விலை குறைந்த அளவிற்கு இங்கே விலை குறையவில்லை என்பது ஒரு விஷய்ம். 

இப்போது உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது மோடி ஸ்பெஷல் அல்வா.

என்சாய்

 

புதுதில்லி, நவ. 13-
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து, மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் (அதாவது மக்கள் மீது சுமை )ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், இதே அளவு சில்லறை விற்பனை விலையிலும் ஏற்றம் ஏற்படும். இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரிக்கிறது.சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை சரிவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை 6 முறை லேசாக குறைக்கப்பட்டது. டீசல் விலை மூன்று முறை குறைக்கப்பட்டது. 

எனினும், மொத்தம் உயர்த்தப்பட்ட விலையுடன் ஒப்பிடும் போது இந்த குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்தது.இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்யும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலையில் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் சற்று குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அந்த வாய்ப்பை ஒழித்துக்கட்டும் விதமாக திடீரென பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள முடிவால் இந்த வாரக் கடைசியில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை.

விலை உயர்வு நிலவரம்
பிராண்டட் அல்லாத சாதாரண பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.1.20-ல் இருந்து ரூ.2.70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.2.35-ல் இருந்து ரூ.3.85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.சாதாரண டீசல் மீதான வரி ரூ.1.46-ல் இருந்து ரூ.2.96 ஆகவும், பிராண்டட் டீசல் மீதான விலை ரூ. 3.75-ல் இருந்து ரூ. 5.25-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதே அளவுக்கு விலைகள் உயர்த்தப்படுகின்றன.

Friday, September 14, 2012

இந்தியனாய் பிறந்தது உன் தவறு

கல்லைத் தின்பாய்,
மண்ணைத் தின்பாய்,
மக்கிப் போன 
இலையைத்  தின்பாய்,
சாக்கடையில் ஓடும்
எலியைப் பிடித்து
அப்படியே தின்பாய்,
 காசிருந்தால்
கடைக்குச் சென்று
இத்தாலி நாட்டு 
பீட்சா தின்பாய்.


சோறு  தின்ன
அரிசியும் கிடைக்காது,
கூடவே தின்ன
காய்கறி கிடைக்காது.
பொங்கித் தின்ன
சிலிண்டரும் 
கிடையாது. 

காங்கிரஸ்காரன் என்றால்
சோனியா வீட்டுக்குச் செல்,
நிச்சயம் விருந்து
கண்டிப்பாய் உண்டு.

அடுத்தவனென்றால்
பட்டினியில் போயிடு.
இந்தியனாய் பிறந்தது
உன் தவறு.

இதைத்தானே சொல்கிறான்,
மன்மோகனும் சிதம்பரமும்.
வெட்கமின்றி
கேட்டுக் கொண்டே
இப்படியே எத்தனை நாள்
நொந்து வாழ்வாய்?

செங்கொடியின் கீழ் வா,
மனிதனாய் போராடுவோம்,
இந்தியாவை மாற்றியமைப்போம்.

Wednesday, May 30, 2012

விலை உயர்வை திசை திருப்ப இப்படி ஒரு மோசடி நாடகம்

தமிழகத்தின் பல பகுதிகளில்  இப்போது பெட்ரோல்  டீசல்
தட்டுப்பாடு. பல மணி நேரம் பங்குகளில் காத்திருக்க
வேண்டிய அவசியம் உள்ளது.

விலை நூறு ரூபாயானாலும் பரவாயில்லை, பெட்ரோல் 
கிடைத்தால் போதும் என்ற மன நிலைக்கு மக்களைக்
கொண்டு வருகின்ற மலிவான உத்தி இது.

கிட்டத்தட்ட இந்த மனநிலைக்கு மக்களும் வந்து
கொண்டிருக்கிறார்கள். காத்திருக்கும் வேளையில்
கோபம் கொப்பளிக்கிறது. ஆத்திரத்துடன் வார்த்தைகள்
கொட்டுகிறது.

அரசின் மீது,  அதன் வரிகள் மீது, நிர்வாகத்தின் மீது
வர வேண்டிய கோபம் பெட்ரோல்  பங்க் ஊழியர்கள்
மீது வருகின்றது.

விலை உயர்வை திசை திருப்ப பற்றாக்குறை நாடகம்
நடத்தும் அரசின் மீது இந்த கோபத்தை நாம் எப்படி திருப்பப்
போகின்றோம்?