Wednesday, January 31, 2024

“மாலன்”ன்னா அடிப்பாங்க!

 


மூமூமூமூத்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரியை நேற்றிலிருந்து  முகநூலில் அடி பின்னிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர் எழுதிய பதிவொன்று.

 


இந்த பதிவிற்கு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம். இதற்கு அடிக்காமல் வேறெதற்கு அடிப்பது!

 ஆனால் இதிலே ஒரு விஷயம் என்னவென்றால் போர்த்தந்திர நிபுணர் மேஜர் மாலன் இப்போது எழுதிய பதிவல்ல இது. மூன்றாண்டுகள் முன்பு எழுதியது. அப்போது மாலனுக்காக நான் தயாரித்த ஸ்பெஷல் பாயசம் கீழே உள்ளது.

 

Tuesday, February 2, 2021

காந்தியைக் கொன்றது மாலனே

 


காந்தியை கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொல்லவில்லை என்று வரலாற்றை மாற்றுவதற்கு மிகவும் மெனக்கட்டதன் மூலம் காந்தியை   கொலை செய்த படுபாவிகள் பட்டியலில் இணைந்துள்ள மூமூமூத்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலனுக்கு வாழ்த்துக்கள் .

ராணுவ தந்திர மேதையாக மட்டுமல்லாமல் பொருளாதார மேதையாகவும் உருவெடுத்துள்ளார் மாலன். அது பற்றி தனிக் கச்சேரி விரைவில்.  ஆஜானின் குண்டர் படை தளபதி போதைக்கவி, முத்தக்கவி லச்சூவும் பொருளாதார மேதையாக மாறியுள்ளார். அவருக்கும் நிச்சயம் உண்டு கச்சேரி.

முந்தைய பதிவு மீண்டும் உலா வந்து இப்போது வாங்கிக் கொண்டிருக்கிறார். அதில் தவறே கிடையாது. கோட்சேவையும் ஆர்.எஸ்.எஸ் ஸையும் பாதுகாக்க அவர் செய்த திசை திருப்பும் வேலை அவ்வளவு கேவலமானது, நச்சுத்தன்மை உடையது. அந்த கருத்திற்காக அவர் வருந்தவில்லை. திரும்பப் பெறவில்லை. அதனால் அவரை அடி பின்னுவது மிகச் சரியானது.

 ஆமாம்.

 அதனால் எத்தனை நாளானாலும் “மாலன்”ன்னா  அடிப்போம்.

 பிகு: மாலனுக்கு எழுதப்பட்ட ஏராளமான எதிர்வினைகளில் தோழர் ஷோபனா நாராயணன் அவர்களின் பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. ஊமைக்குத்து. அதை சுட்டு நாளை பகிர்கிறேன்.

 

கோட்சேவையும் சேர்த்துதானே டிமோ?

 


மகாத்மா காந்தி என்ற பெயரையே பயன்படுத்தாமல் அவருக்கு அவரின் புண்ணிய திதி (அப்படித்தாங்க எழுதியிருக்காரு)யன்று ஒரு வணக்கம் சொல்லியிருக்கிறார் டிமோ.



என்ன டிமோ, மற்ற தியாகிகள் என்று நீர் சொல்வது கோட்சேவைத்தானே! ஏனென்றால் வேறெந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வழியிலும் உமது செயல்பாடு இருந்தது கிடையாது. கோட்சே கொன்றது ஒருவர். ஆனால் உமது ஆட்சியில் ..........................

Tuesday, January 30, 2024

நல்லிணக்கத்தை சீரழிக்காதீர் யுவர் ஆனர்

 


நம் நீதிபதிகள் சில சமயம் கருப்பு அங்கிகளுக்குப் பதிலாக காவி அங்கிகள் அணிகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

 


இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் மாற்று மதத்தவர் இந்து கோயில்களுக்கும் வருவது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் காட்சிதான்.இதனால் எந்த ஒரு கடவுளும் கோபித்துக் கொண்டு மாற்று மதத்தவரின் கண்ணை குத்தியதாக எந்த ஒரு சம்பவமும் இது நாள் வரை நடந்ததாக தெரியவில்லை. சபரிமலை ஐயப்பன் கோயிலின் அன்றாட வழிபாட்டின் துவக்கமும் நிறைவும் கே.ஜே.யேசுதாஸின் “ஹரிவராசனம்” பாடலுடன்தான்.  கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காசி விஸ்வநாதர் கோயிலை விட்டு வர மாட்டேன் என்றவர் பாரத ரத்னா ஹெனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான். மீனாட்சியை  தரிசிக்க எத்தனையோ ஐரோப்பியர்கள் தினந்தோறும் மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

 உடல் நலன் சரியாக வேண்டும் என்று வைத்தீஸ்வரன் கோயிலோடு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவையும் வேண்டிக் கொள்பவர்கள் பலர்.

 நம்பிக்கை இல்லாவிட்டாலும் குடும்பத்தினரின் உணர்வுகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் உள்ளே வருபவர்களும் என்னைப் போல ஏராளம்.

இந்த மத அமைதியை, நல்லிணக்கத்தை

பொருந்தாத,

அமலாக்க முடியாத,

துவேஷத்தை உருவாக்கும்

நெருடல் தீர்ப்புக்களால் பாழாக்காதீர்கள் நீதிபதியம்மா அவர்களே!

கோட்ஸேவின் தோட்டாக்களை . . .

 


சுதந்திர இந்தியாவின்
முதல் களங்கம், அந்த 
முதல் அரசியல் படு கொலை,
கோட்சேவின் தோட்டாவிற்கு
காந்தி மட்டுமா குறி!
மத நல்லிணக்கமும் 
மக்கள் ஒற்றுமையும்
மாண்டு போகத்தானே சுட்டான் அவன்!
சுட வைத்தார்கள் அவர்கள்!!

கோட்சேவின் தோட்டாக்கள்,
இன்றும் துரத்துகிறது,
ஆளும் கட்சியாய், அதன் குருபீடமாய்,
அற்ப சங்கிகளாய்,
அமலாக்கத்துறையாய், ஆளுநரிகளாய்,
மக்கள அழிக்க மேலும் வெறியுடன்.

தாக்க வரும் தோட்டாக்களை 
துரத்தி விட தவறினால் 
ஆயிரமாயிரம் காந்திகள்
ரத்தம் சிந்துவர்,
அஞ்சலி செலுத்த யாருமின்றி



Monday, January 29, 2024

அரண்மனை நாயே, அடக்கடா வாயை

 


அழையா விருந்தாளியாக தியாகிகள் மண்ணாம் வெண்மணிக்குச் சென்ற ஆட்டுத்தாடி ரெவி, அங்கே உள்ள தியாகிகள் நினைவகத்தைப் பார்த்து விஷம் கக்கியுள்ளான்.  தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களின் வியர்வையால் உருவாக்கப்பட்டுள்ள வெண்மணி தியாகிகளுக்கு காலத்தால் அழியாத நினைவகத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளான். அப்பகுதி மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துள்ளான். தான் வகிப்பது ஒரு அரசியல் சாசனப்பதவி என்பதை மறந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வம்பிழுத்துள்ளான்.

"நக்குகிற நாய்க்கு செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது" என்ற பிரிவைச் சேர்ந்த  இவனுக்கு பதில் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனாலும் கலைஞரின் பழைய வசனம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

"அரண்மனை நாயே, அடக்கடா வாயை" 

சிரிப்பு மூட்டாதீங்க டமில்ம்யூசிக் மேடம்

 


மதுரை AIIMS ஒற்றை செங்கல் வைத்த டுபாக்கூர் வைபவத்திற்கு ஐந்தாண்டுகள் நிறைந்து விட்டதாம்.


இதனை அனைவரும் கலாய்த்துக் கொண்டிருக்கையில் கலாய்ப்பதற்கு கூடுதல் CONTENT கொடுத்துள்ளார் ஆளுனர் வேலையை மறந்து இன்னும் பாஜக மாநிலத் தலைவராகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழிசை அம்மையார். . .


ஏம்மா, பார்த்து பார்த்து கட்டறதுக்கு ஒத்தை செங்கல்லுக்கு துணையா இன்னும் அடுத்த செங்கல் கூட வரலையே ! ஆமாம், இதுவரை டிமோ திறந்து வச்ச மீதி எல்லாமே, பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட அயோத்தி கோயில் உட்பட மற்ற அனைத்து கட்டுமானங்களும் தரமற்றதுதானா? சொல்லுங்க மேடம் சொல்லுங்க . .

Sunday, January 28, 2024

உங்கப்பா சங்கிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

 


பாவம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்பாவை அசிங்கப்படுத்தினால் மனசு கஷ்டமாகத்தானே இருக்கும். நீங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, உங்கப்பா சங்கிதான், சொல்லப்போனால் சங்கியை விட மோசமான சந்தர்ப்பவாதி. படம் ரிலீஸாகர சமயத்தில அவர் செய்யற ட்ராமாவை நீங்க செய்யறீங்க! அவ்வளவுதான்.

லால் சலாம் படத்தில நடிச்சதையெல்லாம் பெருசா பேசாதீங்க! "நிலம் எங்கள் உரிமை" ன்னு "காலா" படத்தில போராட்டம் நடத்திட்டு "போராட்டம், போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்" ன்னு பேசியவர்தான இவரு!

அதனால இவர நம்பவே முடியாது . . .

கொக்கர கொக்கரக்கோ, விடியல் கொக்கரக்கோ

 


விஜய்யின் ஹிட் படமான "கில்லி" யில் இடம் பெற்ற "கொக்கர கொக்கரக்கோ, விடியல் கொக்கரக்கோ" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Saturday, January 27, 2024

அயோத்தி - சுவரின் பலி தொடங்கியதா?

 



கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தியை படியுங்கள்.


மனைவியை கைவிட்டவரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட , மனைவியை காட்டுக்கு அனுப்பியவரின் கோயிலுக்குப் போனால் இப்படித்தான் ஆகும் என்று சொன்னால் மனம் புண்பட்டு விட்டது என்று சிலர் ஃபீல் செய்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.

பலி தொடங்கி விட்டது என்ற தலைப்பு கூட தவறுதான். ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த பின்புதானே அந்த கோயிலே கட்டப்பட்டது. 

Friday, January 26, 2024

ஜனாதிபதி - ரொம்பவுமே நல்லவங்க . . .

 


நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டது போலவே ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையிலும் புறக்கணிக்கப்பட்டார் இந்திய முதல் குடிமகள்.

ஆனாலும் அவர் தன் குடியரசு தின உரையில் ராமர் கோயிலை விதந்தோந்தி பேசினார். இந்திய நீதித்துறையின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் அடையாளம்தான் ராமர் கோயில் என்று வேறு காமெடியாக பேசினார். அதை எழுதிக் கொடுத்த ஆளுக்கே எழுதும் போது சிரிப்பு வந்திருக்கும்.

எவ்வளவுதான் அரசால் இழிவு படுத்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசை பாராட்டவே செய்கிறார்.

பாவம் ரொம்பவே நல்லவர்!

அடுத்தாண்டாவது குடியரசு தினம் அர்த்தமுள்ளதாகட்டும்



 இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்

 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்

சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்
அனைவருக்கும் சம வாய்ப்பினையும்
சகோதரத்துவத்தையும்
கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்
 பாதுகாப்போம்

 என்று சொல்கிற அரசியல் சாசனத்தை இந்தியா அமலாக்கிய நாளான  குடியரசு தினம், 

வெற்றுக் கொண்டாட்டமாகத்தான் பத்து வருடங்களாக உள்ளது. அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள எந்த உரிமையையும் வழங்காத, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சீரழிக்கிற கேடு கெட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் வந்தால் வெற்றுக் கொண்டாட்டத்தின் இறுதி ஆண்டாக இன்றைய தினம் இருக்கும். குடியாட்சி மறைந்து போகும்.

குடியரசு தினம் அர்த்தமுள்ளதாக டிமோ வகையறாக்களை வீழ்த்துவதே நம் கடமை என்பதையே குடியரசு தின வாழ்த்துச் செய்தியாக உரித்தாக்குகிறேன். 

Thursday, January 25, 2024

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கய்யா

 


"கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க" என்ற வசனத்துக்கு மிகவும் பொருத்தமான ஒரு கட்டுக்கதை கீழே உள்ளது.


அப்படியெல்லாம் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. கண் மூடியிருப்பதும் திறந்திருப்பதும் மட்டும்தான் வித்தியாசம்.

ஆமாம், யாரய்யா அந்த குரங்கு? பிரதான் மந்திரியை சொல்றாரோ?

சண்டை மூட்டும் ஆட்டுத்தாடி . . .

 



மகாத்மா காந்தியை மட்டம் தட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை உயர்த்திப் பேசியுள்ளது ஆட்டுத்தாடி ரெவி. அந்தாளுக்கு நேதாஜி மீதெல்லாம் மரியாதை கிடையாது. இவர்களின் குருநாதர் சாவர்க்கரின் முதலாளியான பிரிட்டிஷார் கடை பிடித்த “பிரித்தாளும் சூழ்ச்சி” தந்திரம்தான்.

 


ஆட்டுத்தாடியின் பேச்சில் கடுப்பானவர்களில் சிலர் காந்தியை உயர்த்திப் பேசுவார்கள், அதிலும் சிலர் நேதாஜியை மட்டம் தட்டுவார்கள். நேதாஜியின் ஆதரவாளர்கள் காந்தியை மட்டம் தட்டுவார்கள். இப்படியே இது ஒரு சர்ச்சையாக போகும். அதைப் பார்த்து ரெவி இளித்துக் கொண்டிருக்கும்.  ரெவியும் டமில் மியூசிக்கும் ஆட்டுக்காரனும் நிர்மலா அம்மையாரும் பொய்களைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயற்சித்தது மறைந்து போய் விடும்.

 வரலாறு இல்லாததால் பொய்யான வரலாற்றை பரப்புகிறது ஆட்டுத்தாடி. மகாத்மா காந்தியின் வருகைக்குப் பின்பே விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷாருக்கு அச்சத்தை உருவாகியது. ஆனால் அவர் 1945 ஆகஸ்டில் மறைந்து விட்டார்.  இந்திய விடுதலையை இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது 1946 ல் நடைபெற்ற கப்பற்படை மாலுமிகளின் புரட்சி. பம்பாயில் நடைபெற்ற அப்போராட்டத்திற்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.  இதெல்லாம் ஆட்டுத்தாடிக்கு தெரிந்திருந்தால் உளறிக் கொண்டிருக்க மாட்டார்.

 சாவர்க்கரை வழிபடும் ஜந்துவிற்கு விடுதலை யாரால் வந்ததென்று எதற்கு கவலை? சுபாஷ் சந்திர போஸே சாவர்கரையும் இந்துத்துவ சக்திகளையும் கழுவி ஊற்றியுள்ளார். அந்த ஆவணங்களை மீண்டும் உலா வர வைத்ததுதான் ரெவியின் சதியால் விளைந்த பயன்.




சுபாஷ் சந்திர போஸ்:
மதவாதம் தன் அசிங்கமான தலையைத் தூக்கி முழு நிர்வாணமாக நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் விவரமறியாதவர்களும் கூட விடுதலைக்காக ஏங்குகின்றனர். இந்துக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து ராஜ்ஜியம் வேண்டும் என்கிற குரல் கேட்கிறது. இவையெல்லாம் பயனில்லாத சிந்தனைகள். உழைக்கும் வர்க்கம்   சந்திக்கும் பிரச்சினைகள் எதையாவது மதவாதம் தீர்க்க முடியுமா? அப்படிப்பட்ட எந்த அமைப்பாவது வ்றுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தீர்வுகளை வைத்திருக்கிறதா? சாவர்க்கரும் இந்து மகாசபையும்
செய்யும் முஸலிம்  எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு நடைமுறையில் பிரிட்டிஷ் அரசுடன் அவர்களின் கூட்டுறவு என்பதே பொருள்.

 தமிழில் : தோழர் விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர். FRONT LINE 

 ஆனால் இதற்கெல்லாம் அந்த ஜந்து ரோஷப்பட்டுக் கொண்டு ஒரு முழம் கயிற்றையோ, தண்டவாளத்தையோ, பாலிடாயிலையோ தேடாது.

 சங்கிகளுக்கு ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

 இந்திய விடுதலை என்பது நீண்ட நெடிய போர். இதிலே காங்கிரஸிற்கும் பங்கு உண்டு, கம்யூனிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு. முஸ்லீம் லீக்கிற்கும் பங்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ் மட்டுமே துரோகப் பாத்திரத்தை வகுத்தது.  இந்திய மக்கள் ஜாதி, மதம் மறந்து போராடியதன் வெற்றிக்கனிதான் இந்திய சுதந்திரம்.

 இங்கே காந்தியும் கதாநாயகர், சுபாஷ் சந்திர போஸும் கதாநாயகர், பகத்சிங்கும் ஜவஹர்லால் நேருவும் இன்னும் பல தலைவர்களும் நாயகர்கள். ஒரே ஒரு வில்லன் கம் காமெடியன் உங்கள் குரு கோழை செல்ஃபி சாவர்க்கர்தான்.

 

Wednesday, January 24, 2024

ராமருக்கே விபூதியா போலிப் பேராசிரியா?

 


பாஜகவின் போலிப் பேராசிரியன் ராம.சீனு ஒரு படத்தைப் போட்டு இது 22.01.2024 அன்று அயோத்தியில் கூடிய பக்தர்கள் கூட்டம்னு பதிவு போடறான். 


கெட்டிக்காரனின் புளுகுக்கே எட்டு மணி நேரம்தான் கணக்கு என்றால் இந்த ஃபராடின் புளுகு எத்தனை நேரம் நீடிக்கும்.

இந்த படம் போன வருடம் பூரி ஜகன்னாதரின் ரத யாத்திரை விழாவில் எடுக்கப்பட்ட படம் என்பது நிரூபணமாகி விட்டது.


இப்படியெல்லாம் பொய் சொல்லித் திரிய கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது போல . . .

Tuesday, January 23, 2024

பாவம் கழியாது டிமோ

 


சூப்பராக சொல்லி விட்டார், தமுஎகச தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன். 

கோயில் திறந்தாச்சு, அப்புறம் ????

 


பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் கோயில் கட்டி சாதனை செய்த டிமோ, அடுத்து பின் வரும் சாதனைகளை செய்யப்போகிறார்.

2014 ல் கொடுத்த வாக்குறுதிகள் படி . . . .

 அனைவரது வங்கிக் கணக்குகளிலும் பதினைந்து லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும்.

 ஆண்டுக்கு இரண்டு கோடி என்ற கணக்கில் பத்து வருடத்திற்குமாக சேர்த்து இருபது கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

 இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைந்து விடும். ஒரு ரூபாய்க்கு நாற்பது டாலர் கிடைக்கும்.

 சமையல் எரிவாயுவின் விலை நூறு ரூபாயாகவும் பெட்ரோலின் விலை லிட்டர் ஐந்து ரூபாய் என்றாகி விடும்.

 இந்தியா முழுதும் அமைதிப் பூங்காவாகி மத நல்லிணக்கம் காப்பாற்றப்படும்.

 பெண்கள் மீதான கொடுமைகள் நின்று விடும். உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் கொடுமைகளே நிகழாது.

 தீண்டாமைக் கொடுமை அகன்று சமூக நீதி நிலவும்.

 கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு தனி நபர் வருமான வரி குறைக்கப்படும்.

 வங்கியில் கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகள் இந்தியாவிற்கு இழுத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

 எல்லையைத் தாண்டி தீவிரவாதிகள் வருவது முற்றிலும் நின்று விடும்.

 சீனா, தான் ஆக்கிரமித்த இடங்களிலிருந்து வெளியேறி விடும்.

 இவை அத்தனையையும் டிமோ செய்து விடுவார்.

 நெஜமாவா?

 எத்தனையோ அயோக்கியத்தனம் செஞ்சுட்டாரு, இந்த நல்லதெல்லாம் செய்ய மாட்டாரா?

 அயோத்தி கோயிலில் இருக்கற ராமர் இதையெல்லாம் சொடுக்கு போடும் நேரத்தில் செய்ய டிமோவுக்கு சக்தி கொடுக்க மாட்டாரா?

 யாருப்பா அது? ராமருக்கே பிராணன் கொடுத்தவரு டிமோ, அவருக்கு சக்தி கொடுக்கற அளவுக்கு ராமருக்கு ஏதுய்யா சக்தின்னு கேட்கறது!

 பிகு: டிமோ இது நாள் வரை சாமானிய மக்களுக்கு கொடுத்ததையும் இனி கொடுக்கப் போவதையும் சிம்பாலிக்காக சித்தரிக்கும் புகைப்படத்தை எடுத்த அந்த புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள்.

ரெவி, நிர்மலா - அருகதையற்றவர்கள்.

 



 

தினமலரில் ஒரு பொய்ச்செய்தி வருகிறது. அதை பகிர்ந்து கொண்டு ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார் நிர்மலா அம்மையார்.

 


கவர்னர் வேலையைத் தவிர மற்ற எல்லா எழவையும் செய்கிற ஆட்டுத்தாடி ரெவி, மாம்பலத்தில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனாராம், அங்கே முகத்தில் புலப்படாத அச்ச உணர்வு அங்கே இருந்த பூஜாரிகள் முகத்தில் தென் பட்டதாம். கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வை பார்க்க இவர் ஏதாவது நெற்றிக்கண் ரஜினிகாந்த் மாதிரி ஏதாவது ஸ்பெசல் கண்ணாடி அணிந்திருந்தாரா என்ன?

 

ஆனால் அந்த கோயில் அர்ச்சகர், ரெவியின் கன்னத்தில் அடித்தது போல, அது சொன்னது பொய் என்று சொல்லி விட்டார்.

 

பொய்ப்பிரச்சாரம் மூலம் பிரிவினையை, வெறுப்பை, கலவரத்தை தூண்டும் இந்த இரண்டு ஜந்துக்களும் அரசியல் சாசனப் பொறுப்பில் இருக்க தகுதியற்றவர்கள்.

 

தமிழ்நாடு அரசு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும். இவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

 

சுமோடா வழக்காக இதையும் சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளுமா?

Monday, January 22, 2024

தெய்வக்குழந்தையா? முட்டாப்பசங்களா . .

 


உத்தரப்பிரதேசத்தில் இன்று மெயின் கேலிக்கூத்தைத் தவிர ஒரு  கேலிக்கூத்திற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். 

பல தனியார், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் ஆப்பரேஷன் செய்து இன்று ஆண் குழந்தைகளை பிரசவிப்பதற்கான ஏற்பாடு. கருவின் பாலினம் கண்டறிவதே கிரிமினல் குற்றம். ஆனால் இங்கே அதற்கடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.

எதற்கு?

இன்று பிறக்கும் ஆண் குழந்தைகள் ராமர் போல தெய்வக்குழந்தைகளாக இருப்பார்களாம்.

அட முட்டாப்பசங்களா!

குழந்தை, தாய் இருவரின் உடல் நிலை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் செய்யப்படுகிற முட்டாள்தனம். முழுமையாக வளர்ச்சி அடையாத குழந்தையை வெளியில் எடுத்தால் அதன் எதிர்காலம் என்னாகும்?

அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை!

அதுவும் பொருத்தம்தான் ...

கட்டிய மனைவியை தீயில் இறங்க வைத்து பின் கர்ப்பிணி என்றும் பாராமல் காட்டிற்கு அனுப்பியவரைப் போல குழந்தை வேண்டும் என்று  விரும்புபவர்கள் மட்டும் சமத்துவ சிந்தனையோடா இருப்பார்கள்!

ஆணாதிக்கவாதிகள்தான் . சங்கி குணாம்சம்தானே இது!

அந்த கோயிலில் கடவுள் இல்லை . . .

 


இரண்டு நாட்கள் முன்பாக பகிர்ந்து கொண்ட தாகூரின் கவிதையைத்தான் மறுபடி பகிர்ந்து கொள்கிறேன்,

ஆமாம்.  100 ரூபாய் கட்டணத்தில் இலவச பாப்கார்னோடு குளுகுளு அரங்கத்தில்  ஒளிபரப்பாகும் ஒன்றில் என்ன பக்தி இருக்கிறது !

மோப்ப நாய்களும் ட்ரோன்களும் வைத்து அசைவ உணவை தேடுபவர்கள்  எத்தனை முகமது அக்லக்குகளை கொல்வார்களோ?

மருத்துவமனைகளை மூட வைத்து எத்தனை நோயாளிகளை இறக்க வைக்கப் போகிறார்களோ! (இதிலே வேறொரு கேலிக்கூத்து உள்ளது. அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) 

என்ன எழவு பெருமிதம் பேசினாலும் மசூதியை இடித்த இடத்தில் கட்டப்படுவது என்றைக்கும் இந்தியாவிற்கும்  ஒரு அவமானச் சின்னம்தானே! 

அதனால்தான்  மீண்டும் சொல்கிறேன்.

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை . . .

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை
சொன்னார் ஒரு சாது. 

கடவுள் இல்லையா?

தங்கத்தில் மின்னும் விக்கிரகம்  
அமர்ந்துள்ள அரியாசனம் மட்டுமே
விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டு
பிரகாசிப்பதைப் பார்த்துமா
கோயில் காலியாய் உள்ளதென்று உரைக்கிறாய்

கோபத்துடன் கேட்டான் அரசன்.

அது காலியாய் இல்லை அரசே,
அங்கே உங்கள் அரசின்  
செல்வச் செருக்கு     நிரம்பிஇருக்கிறது.
உங்களைத்தான் சிறப்பாய்  காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,
இந்த உலகின் கடவுளை அல்ல
பதில் சொன்னார் சாது.
வானத்தை முத்தமிட்டு நிற்கும் 
கோபுரம் கொண்ட கோயிலுக்காக
இருபது லட்சம் பொற்காசுகளை 
மழையாய் பொழிந்தேன்.


அனைத்து
 சடங்களுக்குப் பிறகு 

நான்கடவுள்களுக்கு அளித்த

காணிக்கை ஏராளம்.

 
இத்தனை பிரம்மாண்டமான கோயிலில்
கடவுள் இல்லை என்று சொல்ல 
என்ன துணிச்சல் உமக்கு

கொந்தளித்தான் அரசன்.


சாது நிதானமாய் பதிலளித்தார்.

அதே வருடத்தில்தான் 
உம் குடிமக்களில் இருபது லட்சம் பேர் 

கடும் பஞ்சத்தால் அவதியுற்றனர்.

றுமையில் தவித்த அம்மக்கள்

 உணவின்றிஉறைவிடமின்றி

உன் கதவோரம் அடைக்கலம் நாடி

உதவி கேட்டு கதறி அழுதனர்.

ஆனால் அவர்களோ

உன்னால்  துரத்தப்பட்டனர்.


காடுகளிலும் குகைகளிலும்

சாலையோரங்களிலும் 
பாழடைந்த
 பழைய கோயில்களிலும்

வேறு வழியின்றி தஞ்சம் புகுந்தனர்.

இருபது லட்சம் தங்கக்காசுகளைக் கொட்டி

யாருக்காக என்று சொல்லி

ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் 
கட்டினாயோ
  அன்றுதான்

அக்கடவுள் சொன்னார்.

நான்  நித்தம் வசிக்கும் வீடு  

நீல வானின் நடுவே

மின்னும் விளக்குகளால்தான்
 
ஒளியேற்றப்படுகிறது.

என் இல்லத்தின் அடித்தளம்
உண்மை
சமாதானம்கருணைஅன்பு

ஆகிய மதிப்பு மிக்க பொருட்களால்
அமைக்கப்பட்டது
.

வீடற்ற தன் குடிமக்களுக்கே
அடைக்கலம்
 தர இயலாத,

இதயத்தில் வறுமை படைத்த
அக்கஞ்சனால்
 நிஜமாகவே

எனக்கு ஒரு இருப்பிட த்தை
அமைக்க
 முடியுமா என்ன?”

 என்று கேட்டு

  
அந்த நாளில்தான் கடவுள்

நீ கட்டிய கோயிலிலிருந்து வெளியேறி
சாலையோரத்தில்
 மரத்தடிகளில்

வாழும் அந்த வறிய மக்களோடு

இணைந்து கொண்டார்.

விரிந்த கடலின் நுரையின்

 வெறுமையைப் போலவே
 
உன் கோயிலும் வெற்றிடம்தான்.

செல்வச் செறுக்கின் நீர்க்குமிழி மட்டும்தான்.”

 கோபமுற்ற அரசன்

உரத்த குரலில் அலறினான்

 அற்பப் பதரே

உடனே என் நாட்டிலிருந்து வெளியேறு

மீண்டும் சாது நிதானமாகச் சொன்னார்.

“ தெய்வீகத்தை எங்கிருந்து வெளியேற்றினாயோ,

 அங்கிருந்து  பக்தர்களையும்
 
தயவு செய்து வெளியேற்றிவிடு