Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Wednesday, February 18, 2026

அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Monday, January 12, 2026

அருவி மட்டும் உறையவில்லை . . .

 






மேலே உள்ள படங்கள் எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ட்ராங் என்ற நீர் வீழ்ச்சி. அதீத குளிரில் அருவி அப்படியே உறைந்து போய் விட்டது. பனிக்கட்டியாய் காட்சி அளிக்கும் அருவியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்களாம். இதுதான் செய்திகளில் சொல்லப்பட்டது.

சொல்லப்படாதது ஒன்று.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை எழாத வண்ணம் ஆட்சியாளர்களின் மூளை வெறுப்பால் உறைந்து போய் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி நினைவுக்கு வராத வண்னம் மத்தியரசு முற்றிலுமாக வன்மத்தால் உறைந்து போயுள்ளது.

காஷ்மீரின் அழகு கண்ணுக்குத் தெரிவது போல அதன் கண்ணீர் கண்ணுக்கு தெரியாதது பெருந்துயரம் . . .

Saturday, December 6, 2025

அதிகாலை அழகே

 


இன்றைய "ஆங்கில இந்து" நாளிதழில்  முதல் பக்கத்தில் வெளியான படம்தான் மே#லே உள்ளது.

காஷ்மீர் தால் ஏரியின் அழகான காட்சி.

காஷ்மீர் எழில் மிகுந்த அழகான இடம்.

அமைதியான இடமா?

மோடி ஆட்சி அதை  அமைதியாய் இருக்க அனுமதிக்காது என்பது சோகமான உண்மை. 

Saturday, October 8, 2022

சிங்காரப்பேட்டை TO செங்கம்

 சிங்காரப் பேட்டையிலிருந்து செங்கம் செல்லும் வழியில் ஒரு மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அழகிய தோற்றம் புகைப்படங்கள் வாயிலாக உங்கள் பார்வைக்கு 







Thursday, August 25, 2022

தரையில் தோன்றிய அழகு நட்சத்திரங்கள்

 


ரெய்ப்பூரிலிருந்து சென்னை திரும்புகையிலும் ஜன்னலோர இருக்கையே கிடைத்தது. இரவு நேரத்தில் விமானத்திலிருந்து பார்க்கையில் ரெய்ப்பூர் நகரிலும் சென்னை மாநகரிலும் ஒளி வீசிய மின் விளக்குகள் ஏதோ நட்சத்திரக் கூட்டமே தரையில் தெரிவது போல அவ்வளவு அழகாக அருமையாக இருந்தது.

 

அந்த அற்புதக் காட்சிகள் உங்களுக்காக.

 

முதலில் பார்க்கும் படங்கள் ரெய்ப்பூர் நகரம்.







 அடுத்து பிரம்மாண்டமான நட்சத்திரக் கூட்டமாக தெரிவது சென்னை மாநகரம்.







 

Saturday, August 20, 2022

மேகத்திற்கும் மேலே . . .

 கடந்த மாதம் ரெய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஜன்னலோர இருக்கை கிடைத்ததால் மேகக் கூட்டங்களுக்கு மேலே விமானம் பறக்கையில் அந்த அழகிய காட்சியை புகைப்படங்கள் எடுக்க முடிந்தது.

 அவை உங்கள் பார்வைக்கும் இங்கே . . .






Friday, June 3, 2022

மழை வருவது மயிலுக்கு தெரியும். மயில் வருவது . . .

 


கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில்  மயில்கள் அகவும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் கண்ணில் எப்போதாவதுதான் தென்படும்.

அப்படி தென்பட்டு தோகை விரித்தாடிய தருணத்தை அலைபேசியில் கைப்பற்றி வலைப்பக்கத்தில் விடுவிக்கிறேன்.







மயிலைப் பார்த்த போது  "மழை வருவது மயிலுக்குத் தெரியும்" என்ற ரிஷிமூலம் படப்பாட்டு மனதுக்குள் ஒலித்தது.

அப்பாடல் காட்சியை முகப்புப் படமாக வைக்க யூட்யூபரை நாடினேன். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா ஆகியோர் ஓடி, ஆடி, குதித்தது போல இப்பாடலில் கே.ஆர்.விஜயாவை ஓடி, ஆடி, குதித்து நடனமாடவைத்து  அவரை டார்ச்சர் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

பிகு: கிட்டத்தட்ட மூன்று வாரமாக ட்ராப்டிலிருந்த பதிவுக்கு இன்று விடுதலை. 

Friday, May 13, 2022

ஏரிக்கரை குளிர்க்காற்றே!

 


கொடைக்கானல் ஏரியில் காலைப் பொழுதில்  ஏரியின் அழகை கரையிலிருந்து குளிர்க்காற்றை அனுபவித்தபடி எடுத்த படங்கள் இங்கே.











பிகு: பதிவுக்கு தலைப்பு கொடுத்த "ஏரிக்கரை பூங்காற்றே" பாடல் காட்சி.