Thursday, August 20, 2020

முல்லா தாஸ்


 ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழ விஜயசங்கர் ராமச்சந்திர்ன் அவர்களின் முகநூல் பதிவு.

டூபாக்கூர் தாசுக்கு முல்லா தொப்பி போட்டு விட்டது நான்.


முல்லா தாஸ்

அந்த ’மூத்த பத்திரிக்கையாளருக்கு மூன்று கேள்விகள்’ வீடியோவை சகித்துக் கொண்டு பார்த்தேன். இந்தப் பதிவு அந்தக் கேள்விகளுக்கு பதில் அல்ல. இது சங்கிகளுக்கு அறிவுரை.

சீனப் புரட்சி, சீனத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்கு ஆகியவை குறித்து இடதுசாரிகளிடையே (அர்பன் நக்ஸல்கள்) நடக்கும் விவாதங்கள், கடுமையான விமரிசனங்கள், விளக்கங்கள் எல்லாமே அச்சு ஊடகத்திலும் இணைய தளத்திலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஊடக வரலாறு, இன்றைய ஊடக நிலை போன்றவற்றைக் குறித்து என் ராம் உட்பட பல பத்திரிக்கையாளர்களும் அறிஞர்களும் எழுதிய ஏராளமான கட்டுரைகளும் உரைகளும் இருக்கின்றன.

மொழிப் பிரச்சினை குறித்த விமரிசனங்களும் விவாதங்களும் இப்படித்தான்.

எஸ்.எஃப்.ஐ, போன்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்குள்ளேயும் இந்த விவாதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கருத்து வேறுபாடுகளும் ஏராளம்.
அந்த மனிதரின் கேள்விகளுக்கு  ஃபிரண்ட்லைன், எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, மெயின்ஸ்ட்ரீம், மன்த்லி ரெவ்யூ போன்ற ஏராளமான பத்திரிக்கைகளில் பதில் கிடைக்கும்.
பஞ்சஜன்யாவிலும், ஆர்கனைசரிலும், ஸ்வராஜ்யாவிலும் தேடினால் கிடைக்காது.

முல்லாவின் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை தெரு விளக்கின் அடியில் நின்று முல்லா எதையோ தேடிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறீர்கள் என்று கேட்ட போது வீட்டு சாவியைத் தேடுகிறேன் என்றார். எங்கு தொலைத்தீர்கள் என்று கேட்டால் வீட்டில்தான் தொலைத்தேன் என்றார். ஏன் இங்கு தேடுகீறீர்கள் என்று கேட்ட போது இங்குதானே விளக்கு வெளிச்சம் இருக்கிறது என்றாராம் முல்லா.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே...

காக்கா பிரியாணி துன்னுட்டு பேசுனா காக்கா குரல் கேட்காம உன்னி கிருஷ்ணன் குரலா கேட்கும் என மூதறிஞர் விவேக் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

(பின் குறிப்பு: இந்து பத்திரிக்கை போட்டோக்களை விற்பது பிரச்சினையாம். கோவில் பிரசாதத்தையும், இறை தரிசனத்தையும் டிக்கெட் போட்டு விற்பவர்கள் இப்படிக் கேட்பது....

மேலும் மார்க்சின் படத்தை இந்து இணையதளத்தில் தேடினால் மார்க்சின் படம்தான் வரும். மாங்காயின் படம் வராது)


No comments:

Post a Comment