ஊடகவியாலாளர் தோழர் கவின் மலர் அவர்களின் பதிவில் அவரது
புகைப்படத்தோடு ஆபாச வாசகங்களோடு சசிகுமார் என்றொரு சங்கி
பின்னூட்டமிட்டிருந்தான். அதனை அகற்ற வேண்டும் என்று அவர் முகநூல் நிர்வாகத்தை
வலியுறுத்தினாலும் அந்த ஆபாச வாசகம் தங்களின் சமூக தர விதிகளுக்கு (Community
Standards) க்கு முரணானது அல்ல என்று சொல்லி நீக்க மறுத்து விட்டது.
இதைப் பற்றி முன்னரே எழுதியிருந்தேன். முக நூலின் இந்திய
நிர்வாகத்தில் சங்கிகள் புகுந்து விட்டனரா என்றும் கேட்டிருந்தேன்.
ஆம். அந்த சந்தேகம் உண்மையே.
இதனை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அம்பலப்படுத்தி விட்டது.
இந்தியாவின் முக நூல் தலைமை நிர்வாகி ஆங்கி தாஸ் என்பவர்.
இவருடைய சகோதரி ராஷ்மி தாஸ் என்பவர். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரௌடி மாணவர்
பிரிவான ஏ.பி.வி.பி யின் ஜே.என்.யு கிளை தலைவராக உள்ளவர். இப்போது WORLD ORGANIZATION OF YOUTH AND STUDENTS என்ற அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த
அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அங்கமான RASHTRIYA KALA MANCH எங்கே செயல்படுகிறதோ
அங்கிருந்துதான் செயல்படுகிறது. அம்பானிக்கு ஆதரவாக கட்டுரைகளும் எழுதுபவர்.
ஆக சங்கி குடும்பத்தைச் சேர்ந்தவரின் கையில் முக நூலின்
கட்டுப்பாடு இருப்பதால்தான் சங்கிகளின் ஆபாச பேச்சுக்களோ, வெறியூட்டும் உரைகளோ
அகற்றப்படுவதில்லை. அதே நேரம் சங்கிகளுக்கு எதிரான கருத்துக்களை சொல்பவர்கள்
முடக்கப்படுகின்றனர்,
ஏற்கனவே பெரும்பாலான அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களுக்கும்
ஆட்சியாளர்களிடம் விலை போய் விட்டது. சமூக ஊடகங்களும் அதே திசை வழியில் செல்வது
நல்லதல்ல . . .
No comments:
Post a Comment