கோகுல்ராஜ் ஆணவக்
கொலைக்காக ஜாதி வெறியன் யுவராஜ் “சாகும் வரை சிறை” தண்டனை பெற்றதற்கு “ஆயிரம்
யுவராஜ் வெளியே இருக்கிறார்கள்” என்று ட்வீட்டிய கட்டெறும்பு என்ற பெயரில் இசக்கி
போலீசிடம் கொடுத்த சாவர்க்கர் கடிதத்தில் (இனி மன்னிப்பின் இன்னொரு பெயர்
சாவர்க்கர்) தனக்கு பத்து நாட்கள் முன்பாகத்தான்
ஆபரேஷன் நடந்துள்ளது, டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும், சுகர் பேஷண்ட் என்றெல்லாம் எழுதியுள்ளதை வைத்து அவனை ஏதோ
கலகலப்பு படத்து சந்தானத்தின் அல்லக்கை அடியாட்கள் ரேஞ்சில் பலரும் கலாய்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கட்டெறும்பு காமெடியன் இல்லை. அவனுடைய ட்விட்டர்
பக்கத்திற்கு சென்றிருந்தேன். முழுக்க முழுக்க நஞ்சு கக்கும் மத வெறிப்
பதிவுகள்தான். ஆயிரம் அயோக்கிய சங்கிகளில் இவனும் ஒரு அயோக்கிய சங்கி.
அவ்வளவுதான்.
கட்டெறும்பு போல விஷம் கக்கும் ஏராளமான ஜந்துக்களின் பதிவுகளை
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அன்றாடம்
பார்க்கிறேன்.
கட்டெறும்புவின் முகப்பு படத்தில் உள்ள சாவர்க்கரின் கொள்கை
வழியில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் ஒன்றும் பெரிய மனிதனாகி விட
மாட்டார். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு
கேட்டு விட்டு பின்பு மகாத்மா காந்தியை படுகொலை செய்ய ஸ்கெட்ச் போடுமளவிற்கு
சாவர்க்கர் மோசமாக போனாரோ, அது போல இந்த கட்டெறும்புகளும் இன்னும் மோசமாக
செல்வார்கள்.
ஏற்கனவே ஒடிஷா விபத்திற்கு சதிதான் காரணம் என்று பரப்ப
ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் நெருங்க நெருங்க விஷத்தின் வீச்சு அதிகமாகிக்
கொண்டே இருக்கும். அதனால் இவர்களை காமெடியர்களாக பார்த்து கலாய்த்து விட்டு
போகக்கூடாது.