Showing posts with label பாலின சமத்துவம். Show all posts
Showing posts with label பாலின சமத்துவம். Show all posts

Tuesday, February 20, 2024

அண்ணியார் ஓய்வு - சேகருக்கு ஜெயில்

 


அண்ணியார் கிரிஜா வைத்யநாதன் தலைமைச் செயலாளராக இருந்த வரை எஸ்.வி.சேகரை நெருங்க முடியாத சட்டத்தின் கரங்களுக்கு இப்போதுதான் உண்ர்வும் உயிரும் வந்துள்ளது போல!

இனியாவது நாவட்டக்கத்துடன் நடந்து கொள்ளட்டும்.

Thursday, February 10, 2022

ஓநாய்கள், வேங்கை,ஆபத்தான லிபரல்கள்

 


அவர்களே மேலும் ஆபத்தானவர்கள்.

காணொளியை பார்த்த உடன் தோன்றிய கருத்துக்கள்.

காவிக் கயவர்கள் கூட்டம் மாணவர்கள் என்ற போர்வையில் துரத்தினாலும் அதற்கு கொஞ்சமும் அஞ்சாமல் உறுதியோடு அத்தனை பேரையும் தன்னந்தனியாக ஒற்றை ஆளாக சமாளித்து தக்கதொரு எதிர்வினை ஆற்றிய அந்த வீரப் பெண்ணின் தைரியத்தைத்தான் பாராட்ட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றிய முதல் சிந்தனை.

படிக்க வேண்டிய மாணவர்களை இப்படி ரௌடிகளாக, தற்குறிகளாக, வெறியர்களாக, மூடர்களாக, பொறுக்கிகளாக பாஜக கூட்டம் மாற்றி வருகிறதே என்று கோபம் அடுத்து வந்தது. படித்த பலரே முட்டாள்களாக மாறியுள்ளார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. பாஜகவுக்கு தேவைப்படும் குண்டர் படையாகத்தான் இந்த மாணவர்கள் மாறப் போகிறார்கள். அவர்களின் எதிர்காலம் இருண்ட காலம்தான். நாளை இவர்கள் கூட்டுப் பாலியல் குற்றவாளிகளாகக் கூட மாறுவார்கள்.

நேற்றிலிருந்து முக நூலில் வலம் வருகையில் லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர் சொல்லி வரும் கருத்துக்கள் மிகவும் எரிச்சலைத் தருகின்றன.

ஹிஜாப் அணிவதே அவசியமில்லாத ஆணிதானே! இதற்கு ஒரு பிரச்சினையா என்றொரு கேள்வி.

அதற்கு என்னுடைய பதில் தெளிவானது. அந்த உடையை அணிய வேண்டுமா, இல்லையா என்பது பெண்களின் விருப்பம். அணிந்து கொள்ள வேண்டும் என்று திணிக்கவோ, அணியக் கூடாது என்று மிரட்டவோ யாருக்கும், எந்த மத அடிப்படைவாதிக்கும் அருகதை இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் அணியக்கூடாது என்று மிரட்டுகிறவர்கள் ஒன்றும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக பெண்களை வெறும் போகப்பொருளாக, அடிமையாக பார்ப்பவர்கள்.  அவர்கள் செய்யும் கலவரத்தை நியாயப்படுத்துவதாக இருக்கிறது இந்த லிபரல்களின் பேச்சு. கபாலி படத்தில் வரும் வசனம் போல “நான் கோட் சூட் போட்டு கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா உனக்கு பிடிக்காதுனா நான் அப்படித்தாண்டா போடுவேன், அப்படித்தாண்டா உட்காருவேன்” என்று சொல்ல வேண்டிய தருணம்தான் இது.

அடுத்து “அல்லா ஹூ அக்பர்” என்று சொல்வது கூட மத அடிப்படைவாதம் என்றொரு பிதற்றல்.

நூறு ஓநாய்கள் துரத்திக் கொண்டு வருகையில் கலவர முழக்கமாக “ஜெய்ஸ்ரீராம்” என்று அவர்கள் முழங்குகையில் அந்தப் பெண்ணின் உடனடி எதிர்வினை “அல்லா ஹூ அக்பர்”. அந்த வீர வேங்கையின் முழக்கம்தான் அந்த ஓநாய்களை நிலை குலைய வைத்தது.

அந்த ஓநாய்களுக்கு அஞ்சி அவர் தன் ஹிஜாபை அகற்ற வேண்டுமென்று எதிர்பார்த்தார்களோ என்னவோ!

நான் மதிக்கும் ஒரு தோழரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் “அவர்கள் இருவரும் CROSS செய்தார்கள், CORNER செய்யவில்லை, அவரவர்கள் மத முழக்கத்தைச் சொல்லிக் கொண்டார்கள்” என்று அது ஏதோ சாதாரணமான விஷயமாக கடந்து போனது மிகவும் கடுப்பாகவே இருந்தது. தோழர் உயிரோடு இருந்திருந்தால் அவரே எதிர்வினையாற்றி இருப்பார்.

சங்கிகள் ஆபத்தானவர்கள். இந்த லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சங்கிகளை விட மேலும் ஆபத்தானவர்கள்.

பிகு 1 : மேலே உள்ள ஓவியத்தை தீட்டியது தோழர் ரவி பாலேட்

பிகு 2 : பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான சர்வதேச தினமாக 25 நவம்பர் அனுசரிக்கப்படுகிறது. ஆரஞ்சு தினம் என்றும் ஐ.நா பெயரிட்டுள்ளது. அனுசரிப்பதற்கும் கொண்டாட்டத்திற்கும் வித்தியாசம் புரியாமல் ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்த கொண்டாட்டம் எனும் கூத்தெல்லாம் கூட நடக்கும். ஆனால் இந்தியாவில் சங்கிகளின் அடையாளமான ஆரஞ்சு மற்றும் காவி நிறம்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு மூல காரணம். தோழர் ரவி பாலேட்டின் ஓவியம் அதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. 

Sunday, October 14, 2018

#Metoo - குறுகிய பார்வை வேண்டாமே . . .



#Metoo  

அமைப்புரீதியானதொரு இயக்கமல்ல.
என்றோ ஒரு நாள் அமைதியாக கடந்த ஒரு வலியை இன்று சிலர் நினைவு கூர்கின்றனர்.

அன்றைக்கு அதைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கலாம் . . .
அச்சம் இருந்திருக்கலாம் . . .
சமூகம் கடித்துக் குதறினால் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் இருந்திருக்கலாம் . . .

அன்று நடந்ததை இன்று ஒருவர் சொல்ல,
நானும் கூட பாதிக்கப்பட்டேன் 
என்று வேறு சிலரும்
கடந்த கால கசப்பை நினைவு கொள்ள,
பலரும் தங்கள் வேதனைகளை பகிர்ந்து கொள்ள . . .

இன்று என்ன நடக்கிறது?

அன்று ஏன் சும்மா இருந்தாய்?
இன்று ஏன் பேசுகிறாய்?

கேள்விக்கணைகள் தொடுக்கலாம் . . .
ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளையே அறிவிக்கிறார்கள் . . .

ஏராளமான நையாண்டிகள் . . .

மூன்றாவது படிக்கையில் ஜடையை இழுத்ததற்காக இன்று கைது . . .

இத்யாதி இத்யாதி . . .

பிரச்சினைகளை திசை திருப்பும் உத்திகள் என்றும் பலர் சொல்கின்றார்கள். யார் அவர்கள் என்று தேடிப்பார்த்தால் அவர்கள் சொல்லும் பிரச்சினைகள் குறித்தெல்லாம் எந்த காலத்திலும் எந்த வித சிறு கவலையும் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். 

அந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், தங்கள் கவனத்தை திசை திருப்பிக் கொள்ளவில்லை, #Metoo என்பவர்களோடும் இணைந்து நிற்கிறார்கள்.


பின் ஏன்?

குற்றம் சுமத்துபவர் பிடிக்காதவர் என்பதாலும் 
குற்றம் சுமத்தப்படுபவர் பிடித்தவர் என்பதாலுமா?

இப்பிரச்சினை ஒன்றும் வைரமுத்து-சின்மயி என்ற இருவரோடு சுருங்கிப் போன பிரச்சினையல்லவே! இருவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது என்று முன்பு சொன்னதை நினைவு படுத்துகிறேன். ஆனால் இந்த இருவர் மட்டுமல்ல சர்ச்சை. 

நேற்றைக்கு  நானா படேகர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு எம்.ஜே.அக்பர் பதவி விலகியிருக்கிறார்.
நாளை முகத்திரை கிழிந்த வேறு யாராவது ஒளிவட்டம் இழக்கலாம். 

முந்தைய பதிவில் சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறேன்.

திருவள்ளுவர் சொன்னதுதான்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாது
நாவினால் சுட்ட வடு.

என்றோ நடந்ததுதான். அன்று சொல்லாததுதான். ஆனால் இன்று அதைச் சொல்லும் தைரியம் சிலருக்கு வந்ததால் நாமும் சொல்லலாம் என்று பலருக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் அறிமுகமே இல்லாத முறைசாராப் பெண்களுக்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது.

என்றோ நடந்ததைக் கூட சொல்கிறார்களே என்று சிலருக்கு அச்சம் வருகிறது என்பதைக் கூட உணர முடிகிறது. #Hetoo என்று கை காண்பித்து விடுவார்களோ என்ற நடுக்கமாகக் கூட அது இருக்கலாம்.

அன்று நடந்த கசப்பை இன்று சொல்பவர்கள் மீது கசப்பைக் காண்பிக்காதீர்கள். 

தங்களை சீண்டுபவர்களை அம்பலப்படுத்தலாம் என்று புதிய நம்பிக்கை அளிப்பவர்கள் அவர்கள். ஆம் அவர்களின் கசப்பான அனுபவமும் இன்றைய தைரியமும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் உறுதியைத் தரும்.

நாம் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் இனியும் பொறுமையாய் கடந்து போக மாட்டார்கள் என்ற அச்சம் கோயில் காளைகளாய் திரியும் சில ஆண்களுக்கும் உருவாகும். 

இது சமூகத்திற்கு நல்லது.
பாலின சமத்துவத்திற்கும் நல்லது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலை மீண்டும் ஒடுக்காதீர்கள் . . .

Sunday, September 30, 2018

சபரி மலை - சம்பிரதாயங்கள் மாறலையா?




அனைத்து வயது பெண்களையும் சபரி மலையில் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் உருப்படியான தீர்ப்பொன்றை அளித்துள்ளது.

அதை விமர்சிக்கிற பலர் முன்வைக்கிற ஒரே வாதம் “சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது”

சபரிமலைக்கு நான் சென்றது கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்பவர்களை அறிந்துள்ளேன்.

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து கொண்டு நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து பெரும் பகுதி தூரத்தை நடந்து சென்றவர்களை அந்த காலத்தில் அறிந்திருக்கிறேன்.

இப்போது அப்படியெல்லாம் அந்த சம்பிரதாயப்படித்தான் செல்கிறார்களா?

மாலையில் மாலை போட்டுக் கொண்டு இரவு புறப்பட்டு விடுகிறார்கள். “பெரிய பாதை” ,”சிறிய பாதை” என்ற வழிகளில் எல்லாம் எத்தனை பேர் செல்கிறார்கள்? பயணத்தின் தூரமும் பயணத்தின் சிரமமும் வெகுவாகக் குறைந்து விட்டதே! இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் சொல்லும் சம்பிரதாயம் காணாமல் போய் விட்டதல்லவா?

மண்டல பூஜை காலத்திலும் மகர விளக்கு காலத்திலும் மட்டும்தான் சபரி மலை திறந்திருக்கும் என்பார்கள். பின்பு விஷூவின் போது திறக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு மாதமும் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

சபரிமலை கோயில் பிரசாதமான அரவணைப் பாயச தயாரிப்பு, பேக்கிங் ஆகியவற்றில் மாற்றமே கிடையாதா?

வசதிக்காக பல சம்பிரதாயங்கள் கைவிடப்படுகிற வேளையில் பாலின சமத்துவம் என்ற உரிமைக்காக  இந்த சம்பிரதாயம் கைவிடப்படுவதில் எந்த தவறும் இல்லை.

மேலும் ஐயப்பனின் பிரம்மச்சர்யம் பாதிக்கப்படும் என்று அபத்தமாக பேசும் ஒரு சிலரிடம் சின்னதாக ஒரு கேள்வி

ஐயப்பன் அவ்வளவு பலவீனமானவரா என்ன?

கடவுளை நம்புபவர்கள்தான் கடவுளை இழிவுபடுத்துகின்றனர், மறுப்பாளர்கள் அல்ல . . .