Tuesday, April 29, 2014

மனைவியை நேசிக்கிறவங்க "பிரஸ்டீஜ்" வேண்டாம்னுதான் சொல்லனுமோ?

இன்று முக நூலில் நான் பார்த்த அதிர்ச்சிகரமான தகவலை இங்கே
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
 



முன் குறிப்பு : தயவுசெய்து கண்ணாடிக்கல் பொருத்தப்பட்ட அடுப்புகளை யாரும் வாங்க வேண்டாம். இது சற்று நீளமான பதிவு என்பதால் படிக்காமல் செல்பவர்களுக்கும் இந்த முக்கியத் தகவல் தெரிய வேண்டும் என்று இதை முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறேன்.

இந்த விபத்து நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்தப் புகைப்படங்களை முன்னமே பகிர்ந்திருக்க வேண்டியது. என்னுடைய கைப்பேசியில் ஏற்பட்ட பழுதினால் இவற்றை எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு பெரும் விபத்திலிருந்து நாங்கள் தப்பித்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சில வாரங்கள் முன்பு காலை ஒரு 6, 6.30 மணிக்கு பெரும் சப்தத்துடன் இந்த அடுப்பு வெடித்தது. அதன் கண்ணாடிச் சில்லுகள் டைனிங் ஹால் வரை தெறித்து விழுந்தன. சமையலறையிலோ காலைக்கூட வைக்க முடியவில்லை. அத்தனைத் துகள் கண்ணாடிகள் எங்கும். ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முன்பு வாங்கியது. கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மெர்ஸி அம்மா நல்ல வேளையாக இது வெடிக்கும் பொழுது வேறு பக்கம் திரும்பி, ஒரு 4,5 அடி தொலைவில் தள்ளி நின்றிருந்தார். இருந்தும் அவருடைய கைகளில் சில கண்ணாடித் துண்டங்கள் பட்டு லேசான சிராய்ப்புகள் இருந்தன. (அவற்றையும் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் என்று பின்புதான் தோன்றியது). அவர் முகத்தில் தெரிந்த பயம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சில நாட்களில் விடிகாலையில் எழுந்துவிட்டால் சச்சின் கிச்சனில் அவருடந்தான் இருப்பான். நான் சொல்லிச் சொல்லி அவனை அவன் பேபி சேரில் அமர்த்தி வைக்க ஆரம்பித்தார். அன்று சச்சினும் அவருடன் கிச்சனில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றே என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. (இன்னும் ஒரு சாக்குப் பையில் அத்தனைக் கண்ணாடிச் சில்லுகளையும் பொறுக்கியெடுத்து, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்)

டி.டி.கே கம்பெனி எம்மாதிரியான தரக் கட்டுப்பாடுகளை இந்தப் பொருளை சந்தைக்குக் கொண்டு வருமுன் கடைபிடித்தனர் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அதில் கோளாறு நடந்திருக்கிறது. சமையல் செய்யும் சூடைக்கூடத் தாங்க முடியாத கண்னாடிகளைத்தான் அவர்கள் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனரா? இம்மாதிரி ஒரு விபத்தை நான் எங்கேயும் கேள்விப் பட்டதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று மணி நேரங்கள் பதைபதைப்புடன் பொறுத்திருந்து 9.30 மணி வாக்கில் அவர்களுடைய கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்தேன். விபத்தில் எதுவும் இழப்பு இல்லையெனினும் அதன் பயங்கரம் அவர்களுக்கு உறைக்க வேண்டும் என்பதற்காகவே சிறிது படபடப்புடனும், அவசரத்துடனும் தான் பேசினேன். அவர்களுடைய சர்வீஸ் செண்டர் வளசரவாக்கத்தில் என்னுடைய வீட்டிலிருந்து கல் எறியும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் கஸ்டமர் கேரில் அழைத்துப் பேசி பதிவு செய்த எண் இல்லாமல் அவர்கள் வரமாட்டார்கள். காலையில் பதிவு செய்தாகிவிட்டது. இது சர்வீஸ் கால் இல்லை, விபத்து நடந்திருக்கிறது, அதனால் உடனடியாக வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். வழக்கம் போல் வழ வழாவென்று ஏதோ காரணங்களை அடுக்கிவிட்டு சர்வீஸ் செய்பவரை முடிந்தவரை சீக்கிரம் அனுப்புகிறோம் என்றனர்.

மாலை வரை யாரும் வரவில்லை. மீண்டும் மாலையில் அழைத்து சற்றுக் கோபமாகப் பேசினேன். மறுநாள் காலையிலேயே அனுப்புகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். மறுநாளும் யாரும் வரவில்லை. மூன்றாவது முறையாக மறுநாள் மதியம் நானே அழைத்தேன். அப்பொழுதும் ஏதோ காரணங்களைக் கூறினர். நான் இன்றும் யாரும் வரவில்லையெனில் புகார் (யாரிடம்!!!) செய்ய வேண்டி வரும் என்றேன். இரண்டாவது நாளும் மாலை வரை யாரும் வரவில்லை. இது என்னை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியது. எத்தனை பெரிய அவலம் இது. முறையாக அவர்களுடைய கம்பெனிக்கு அழைத்து பதிவு செய்து இரண்டாவது நாளின் முடிவில்கூட யாரும் வரவில்லை.

ஒரு ஆறு மணி போல் நான்காவது முறையாக அவர்களை மீண்டும் அழைத்தேன். அப்பொழுது என்னுடன் பேசியவரிடம் அவருடன் பேச விருப்பமில்லை என்றும் அவருடைய மேலதிகாரியிடம் தருமாறும் சொன்னேன். இரண்டு மூன்று பெர்களிடம் ஒன்று விடாமல் திரும்பத் திரும்ப விவரித்த பிறகு ஒருவர் ஆறுதல் கூறுவதுபோல் ஏதேதோ சொன்னார். நான் அவருடைய ஆறுதல் அவசியமற்றது எனவும், இதுவரை அவர் கம்பெனியிலிருந்து யாரும் வராததற்கான காரணம் மட்டுமே எனக்கு முக்கியம் என்றும் கூறினேன். அவரிடம் காரணம் இல்லை. ஆனால் மறுநாள் காலை நிச்சயம் தன்னுடைய Service Engineerஐ அனுப்புவதாக சத்தியம் செய்தார். என்னால் வேறு என்ன செய்திருக்க முடியும், காத்திருப்பதைத் தவிர. (ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருடன் பேசிய பொழுதும் என்னுடைய தொலைபேசி எண், வீட்டு முகவரி என்று அனைத்தையும் கொடுத்தேன். மேலதிகத் தகவலாக அவர்களுடைய சர்வீஸ் செண்டர் என் வீட்டின் மிக அருகில் இருப்பதையும் அவர்களிடமே தெரிவித்தேன்)

சரியாக அன்று நான்காவது முறை ஃபோன் செய்து முடித்தவுடன் என்னுடைய கைப்பேசியில் ஏதோ பழுது. மீண்டும் அதை செயல்படுத்த முடியவில்லை. என்னிடம் வேறு கைப்பேசியும் இல்லை. மெர்ஸி அம்மாவின் எண் என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியும் என்பதாலும், அன்றுதான் ஆஸ்கார் ப்ரொடக்ஷன்ஸ் அவர்களுடைய கம்பெனியிலிருந்து ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் வல்லினம் திரைப்படத்தின் டி.வி.டியைக் கொடுத்தனுப்பி சப் டைட்டில் வேலையைத் தொடங்கியிருந்தேன் என்பதாலும், அவர்கள் கொடுத்த நேரத்தில் வார்த்தையைக் காப்பாற்றி வேலையை முடிக்க வேண்டும் என்ற பரபரப்பும், முதன் முதலில் செய்யப்போகும் வேலை, சரியாக அமைய வேண்டுமே என்ற கவலையும் ஒன்று சேர அவற்றில் என் முழுக் கவனமும் இருந்ததாலும் என்னால் வெளியில் சென்று வேறு செல்ஃபோனும் வாங்க முடியாத சூழல்.

ப்ரெஸ்டீஜ் கம்பெனிக்கு நான்கு முறை அழைத்தாகிவிட்டது, ஒவ்வொரு முறையும் வீட்டு முகவரியும் கொடுத்தாகிவிட்டது என்ற காரணத்தினாலும், வேலைப்பளுவினாலும் என் கைப்பேசியைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அன்று தொடங்கிய என் வேலை அடுத்த ஆறு நாட்களுக்கு எந்த வித ஒய்வொழிச்சலும் இன்றி செய்யவேண்டியிருந்ததால் மற்ற விஷயங்களை நான் மறந்தே போனேன். ஆனாலும் தினமும் ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. என்னுடைய எண் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் வீட்டில் இருபத்தி நான்கு மணிநேரமும் நாங்கள் இருந்தோம். ஒரு கஸ்டமர் விபத்தைப் பற்றி பதிவு செய்ததற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அவர்கள் யாரையாவது அன்று அனுப்பியிருப்பார்கள். இது அவர்களின் அலட்சியமன்றி வேறில்லை. என் வீட்டிற்கு வந்து, யாருமில்லாதிருந்தால் மட்டுமே நான் பொறுப்பேற்றிருக்க முடியும். என்னுடைய தொலைபேசி எண் கிடைக்காததை நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது அலட்சியம் அன்றி வேறில்லை.

சில நாட்களில் என்னுடைய கைப்பேசி சரியாகிவிட்டது. ஆனால் இன்று வரை அவர்களிடமிருந்து ஒரு அழைப்பும் இல்லை. என்னுடைய கம்ப்ளெயின்டை அவர்கள் என்ன காரனம் கொண்டு மூடியிருக்கக்கூடும்? தொலைபேசி எண் இல்லை என்றா? முகவரியைக் கொண்டு எதுவும் முயற்சி செய்யவில்லையா?

டி.டி.கே கம்பெனியின் மீது நுகர்வோர் நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடர்ந்து என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறவும், இந்த மாடல் அடுப்புகளை அவர்கள் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தவும் மேற்கொண்டு ஆனவற்றைச் செய்ய வேண்டும். மற்ற வேலைகளுக்கு மத்தியில் இந்த வேலையின் பளு நிச்சயம் அயர்ச்சி தரக்கூடியது. ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கம்பெனியிடத்தில் 10,000/- 15,000/- சர்வ சாதாரணமாக நாசமாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் பணம் என்பதைவிடவும், அவர்களின் அலட்சியம் என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது. இதற்கு முன்னும் The ING Vysya Insurance Company Ltd, The Indian Public School, Karur என்று இவர்கள் மீது ஏமாற்று வழக்குத் தொடுக்க எண்ணியிருந்தேன். குழந்தைகள் பராமரிப்பிலும் வேறு சில பொறுப்புகளிலும் சுத்தமாக நேரமில்லாமல் அதற்கான எந்த உத்வேகமும் இல்லாமல் போய்விட்டது.

இந்த முறை நிச்சயம் விடுவதாக இல்லை. அவர்கள் இந்த மாடல் பொருட்களை சந்தையிலிருந்து திரும்பப் பெற வேண்டும். இங்கு என்னுடைய லிஸ்டில் இருக்கும் பத்திரிகை நண்பர்கள் அவசியம் என்று கருதினால் இந்தப் பதிவையும், புகைப்படங்களையும் உபயோகித்துக் கொள்ளலாம். யாரும் வழக்கறிஞர்கள் இருந்தால் நேரமிருப்பின் இது குறித்து உங்கள் அறிவுரைகளை (இது வீண் என்பதைத் தவிர) வழங்கினால் நன்றியுடையவளாவேன்.

(பி.கு : இங்கு பதிவதன் மற்றொரு முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் எனக்கு இது தேவைப்படலாம் என்பதுமாகும். இந்தப் பதிவையும் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதுகிறேன்).
 
இதைப் படிக்கும் போது எனக்கு தோன்றியதுதான்
தலைப்பின் வாசகம்
 
 மனைவியை நேசிக்கிறவங்க "பிரஸ்டீஜ்" வேண்டாம்னுதான்
சொல்வாங்க..
(4 photos)

Monday, April 28, 2014

மோடி ஜால்ராக்கள் படிக்க வேண்டாம். தாங்க மாட்டீர்கள்

 மேற்கு வங்க மாநிலத்தில் இடது முன்னணி ஆட்சிக்காலத்தில்
வளர்ச்சியே இல்லை என்றும் குஜராத்தில்தான் பாலாறும் தேனாறும்
ஓடுவதாகவும் சில பால் குடி மறவா பாலகர்களும் சில பல் விழுந்த
கிழவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த விபரங்களை படித்தால் இத்தனை நாட்கள் இப்படி அபாண்டமாய் பொய் பேசிக் கொண்டிருந்தோமே என்று அவர்களுக்கு மாரடைப்பு வரலாம். ஆகவே படிக்காமல் போவது உங்கள் உடல் நலனுக்கு நல்லது.



புதிய தொழிற்சாலை வேலைவாய்ப்புகளிலும் மேற்குவங்கத்தைவிட குஜராத் பின்தங்கியே இருக்கிறது 

 

 
புதுதில்லி, ஏப். 26-சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி தொழில்உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing
sector) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களையும்விட மேற்கு வங்கமே முதலாவதாக உள்ளது என்பதும், இதில்குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேற்படி தேசிய மாதிரி சர்வேயின்படி தெரியவரும் உண்மைகள் வருமாறு:2004ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ((manufacturing sector) நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் மேற்குவங்கத்தில் முந்தைய இடது முன்னணிஆட்சி புரிந்த சமயத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

ஒட்டுமொத்தத்தில் நாடுமுழுவதும் 58.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், 24 லட்சம் வேலைவாய்ப்புகள் மேற்குவங்கத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பாஜக ஆளும் குஜராத்தில் இதே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது 14.9 லட்சம் வேலைவாய்ப்புகள்தான். மேற்குவங்கத்தில் சிங்கூரில் டாட்டாவின் நானோதொழிற்சாலை அமைக்கப்படுவதைப் பலவிதங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டுதடுத்து நிறுத்திய பின்னரும்கூட தொழில் வளர்ச்சியில் மேற்குவங்க இடது முன்னணிஅரசு சாதனை படைத்திருப்பதையே தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு 2007-08ல்கட்டவிழ்த்துவிட்ட, தொழில்வளர்ச்சிக்கு எதிரான துஷ்பிரச்சாரத்தையும் மீறி, மேற்கு வங்கஇடது முன்னணி அரசு 12 சதவீதம் தொழில் வளர்ச்சியை அடைந்திருந்தது என்று அப்போது மேற்கு வங்க மாநில நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா கூறுகிறார்.

சமீபத்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் “உற்பத்தித்துறையில்’’, “வேலை வாய்ப்புகளில்’’ நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம் என்றும் “குஜராத் மாடல்’’ என்றும் நரேந்திரமோடி சரடு விட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தேசியமாதிரி சர்வே இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும், ஆட்சியிலிருந்த கடைசி ஆண்டான 2010-11ம் ஆண்டில் கூட சுமார் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்தோம் என்று அசிம் தாஸ் குப்தா கூறினார். “2006ம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணிக்குக் கிடைத்த வெற்றி, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தொழில்மய முன்னேற்றத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுவிரிவான முறையில் மக்களால் அறியப்பட்டது,’’ என்றுஇடதுமுன்னணி தலைவர்களில் ஒருவர் கூறினார். 

சிறிய அளவிலான உற்பத்திப் பிரிவுகள் (small-scale manufacturing units) அதிக அளவில் இருப்பது மேற்கு வங்கத்தில்தான் என்றும் அசிம் தாஸ் குப்தா கூறினார். “1991க்கும் 2011க்கும் இடையேயான ஆண்டுகளில், தோழர் ஜோதிபாசு தலைமையின்கீழ் நாங்கள் எங்கள் தொழில் கொள்கையைத் திருத்தி அமைத்தபோது, புதிதாக 2,531 பெரிய மற்றும் நடுத்தர உற்பத்திப்பிரிவுகளை அமைத்தோம்’’ என்றும் அசிம்தாஸ் குப்தா கூறினார். 

1960களுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் மயம் மிகவும் சிறப்பாக இருந்தது 2004-2011ம்ஆண்டுகளில்தான் என்றும்,சிங்கூரில் திரிணாமுல் காங்கிரசும் மாவோயிஸ்ட்டுகளும் பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முன்னர் அக்கால கட்டத்தில் 1,872 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். (ந.நி.)

நன்றி - தீக்கதிர் 27.04.2014

Sunday, April 27, 2014

பாபா ராம்தேவ் எனும் இழிபிறவியும் மோடியும்




ராகுல் காந்தியை நான் ஒரு அரசியல்வாதியாக என்றுமே மதித்ததில்லை. எல்.ஐ.சி பணியில் ஒரு மாதத்திற்கு முன்பு
பணியில் சேர்ந்த ஒரு தோழருக்கு உள்ள புரிதலோ அல்லது
தெளிவோ இல்லாத தற்குறி என்பது நான் வெளிப்படையாக
வைக்கிற விமர்சனம். 

ஆனால் ராகுல் காந்தி மீது போலிச்சாமியாரும் மோசடிப் 
பேர்வழியுமான பாபா ராம்தேவ் தொடுத்துள்ள தாக்குதல்
என்பது இந்த மக்களவைத் தேர்தலிலேயே இதுவரை
நடந்துள்ள தரக்குறைவான பேச்சு இதுதான்.

ராகுல் காந்தியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு
தலித் பெண்களை கேவலமாக பேசியுள்ளான் அந்த போலி.

அவன் மீது சாதாரண வழக்கு மட்டுமல்ல.தீண்டாமை 
வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பெண்களையும் தலித்களையும் இழிவு செய்த இந்த
மோசடி பேர்வழியை மோடியும் மோடியை இந்த
போலியும் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள்
என்றால் இருவரின் யோக்கியதையும் என்னவென்று
புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மனிதனின் அயோக்கியத்தனமான  பேச்சை
பாஜக நியாயப்படுத்தியுள்ளது. அதற்கு ஷாநவாஸ் கான்
என்ற இஸ்லாமியரை பயன்படுத்தியுள்ளது ராம்தேவின்
பேச்சை விட மிகப் பெரிய அயோக்கியத்தனம்.

கடவுளை கடுமையாக விமர்சிக்கும் மோடி

"நான் கடவுளாக இருந்தால் ஒரு விரல் தொடுகையில் கங்கையை
சுத்தம் செய்து விடுவேன்" என்பது மூலம் மோடி உலகிற்கு என்ன
செய்தி சொல்ல வருகிறார்.

இப்போது உள்ள கடவுள் யாருக்கும் கங்கையை சுத்தம் செய்யும்
சக்தி கிடையாது என்றா?

இப்போது உள்ள கடவுள் யாரும் கங்கை நதியின் சுத்தம் பற்றி
கவலைப் படவில்லை என்றா?

இல்லை இதுவரை கடவுளே இல்லை என்று சொல்கிறாரா?

என்ன இதுவரை காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் யாரும் 
லாயக்கில்லை என்றவர் அந்த பட்டியலில் கடவுளையும்
இணைத்து விட்டார்.

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்தீகர்களை விட
மோசமான விமர்சனம் கடவுளின் பெயரால் அரசியல்
செய்யும் நரேந்திர மோடியால்தான் செய்யப்பட்டுள்ளது
என்பதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் பக்தர்களே!

Saturday, April 26, 2014

ஏரியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்

கடும் கோடையிலிருந்து தப்பிக்க ஏலகிரி புங்கனூர் ஏரியில் இளைப்பாறுங்கள்








மன்மோகன் சோனியாவிற்கு சொன்ன நல்ல செய்தியும் ரொம்பவே நல்ல செய்தியும்




உலகின் ஆயுள்காலத்தை முடிக்கலாம் என்று முடிவு செய்த கடவுள்
அதை அறிவிக்க உலகின் மூன்று முக்கியமான புள்ளிகளை அழைக்கலாம் என்று நினைத்து அமெரிக்காவின் ஒபாமா, ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இந்தியாவின் மன்மோகன்சிங் ஆகியோரை அழைத்து அந்த தகவலைச் சொல்கிறார். ஏப்ரல் மாதம் முப்பதாம் நாள் உலகம் அழிந்து விடும் என்பதை மக்களுக்கு தெரிவித்து விடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்.

வெள்ளை மாளிகை மூலம் அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் பேசிய பாரக் ஒபாமா, ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. கடவுள் இருக்கிறார் என்பது நிரூபணமாகி விட்டது. ஆனால் அவர் உலகை அழிக்கப்போகிறார் என்பது கெட்ட செய்தி என அறிவிக்கிறார்.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் முன் தோன்றிய விளாடிமிர் புடின் இரண்டு கெட்ட செய்திகள் இருக்கிறது. கடவுள் இல்லை என்று இத்தனை நாட்களாக நாம் சொன்னது தவறாகி விட்டது என்பது முதல் கெட்ட செய்தி. அந்த கடவுள் இன்னும் நான்கு  நாட்களில் உலகை அழிக்கப் போகிறார் என்பது இரண்டாவது செய்தி என்று அறிவித்தார்.

சோனியா காந்தியிடம் ஓடி வந்த மன்மோகன்சிங் மூச்சிறைக்க சொன்னார். "மேடம் இரண்டு நல்ல செய்திகள் இருக்கிறது. உலகின் மிக முக்கியமான மூன்று புள்ளிகளில் ஒருவராக கடவுள் என்னை தேர்ந்து எடுத்துள்ளார் என்பது நல்ல செய்தி. இன்னொன்று இந்த தேர்தலில் நாம் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போவோம் என்ற கவலை இனி தேவையில்லை. பெட்டிகளை திறக்கும் முன்பே உலகம் அழிந்து விடும்"

(எனக்கு வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம்)  

Friday, April 25, 2014

இரு முதல்வர்களின் சொத்து விபரம் – முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடு



நாற்பத்தி ஒன்பது நாள் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை விட மூன்று முறை முதல்வராக இருந்த மோடியின் சொத்து மதிப்பு குறைவு. அப்படியென்றால் யார் நல்ல அரசியல்வாதி என்ற ஒரு கேள்வி இன்று முகநூலில் எழுப்பப்பட்டிருந்தது.

எப்படியாவது மோடிக்கு நல்ல பெயர் வாங்கித்தந்து விட வேண்டும் என்ற வேகத்திலும் மோகத்திலும் தாங்கள் சொல்வது என்னவென்றே தெரியாமல் ஏதோதோ சொல்கிறார்கள்.

நாற்பத்தி ஒன்பது நாள் ஆட்சியிலேயே கேஜ்ரிவால் இவ்வளவு சொத்து சேர்த்து விட்டார். ஆனால் மோடி மூன்று முறை முதல்வராக இருந்தும் இவ்வளவு சொத்து சேர்க்கவில்லை பாருங்கள் என்பதுதான் அவர்கள் சமூகத்திற்கு சொல்ல நினைக்கும் செய்தி.

நாற்பத்தி ஒன்பது நாள் ஆட்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் சொத்து சேர்த்தாரா என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருந்தால் அது சரியாக இருக்கும். இல்லை யாராவது முதலாளிக்கு ஆதாயம் செய்தாரா என்று சொல்லி இருந்தால் கூட சரியாக இருக்கும். ஏனென்றால் பதிமூன்று நாள் ஆட்சிக் காலத்திலேயே எண்ரான் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து மகாராஷ்டிர மின் வாரியத்தையும் இந்திய வங்கிகளையும் நஷ்டத்திற்கு கொண்டு வந்த பெருமை வாஜ்பாய் அரசாங்கத்திற்கு உள்ளதல்லவா?

யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை விட அது எப்படி சேர்ந்தது? வருமானத்திற்கு பொருத்தமானதா அல்லது வருமானத்தை விட அதிகமானதா என்பதுதான் முக்கியம்.

அடுத்தது அப்படி சொத்து சேர்த்ததோ அல்லது வருமானம் வந்ததோ நேர்மையான வழியிலா அல்லது அவர்கள் வருமானம் சேர்ப்பதற்காக அரசாங்கக் கொள்கைகள் மாற்றப்பட்டதா அல்லது வளைக்கப்பட்டதா என்பதும் முக்கியம்.

தன் பெயரில் நேரடியாக சொத்து சேர்த்துள்ளாரா? மற்றவர்களின் சொத்துக்களை அதிகரிக்க உதவியுள்ளாரா? என்பதும் முக்கியமான கேள்வி.

வெறும் மஞ்சள் பையோடு திருட்டு ரயிலேறி வந்ததாக சொல்லும் கலைஞரின் குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்ற கேள்வி போலவே டீக்கடை வைத்திருந்த ஒருவருக்கு அன்றாடம் தனி விமானத்தில் பறக்கும் அளவிற்கு எப்படி வசதி வந்தது? அதற்கு விமானம் தரும் அதோனி நிறுவனம் மோடியால் பெற்ற ஆதாயம் என்ன?

இத்தனை கேள்விகள் வரும் என்பது தெரியாமல் ஆர்வக் கோளாறில் எழுதியுள்ளது அரசியல் முதிர்ச்சியின்மையா இல்லை மோடி மோகமா?

கங்கை அழுததால் அதிகரித்தது பாவம்



http://www.terragalleria.com/images/india/indi39047.jpeg

அபலையாய் மனைவியை ஒதுக்கிய பாவம்,
ஆரணங்கு ஒருத்தியை துரத்திய பாவம்,
இஸ்லாமியர்களை கொன்ற பாவம்,
என்கவுண்டர் நாடகம் நடத்தி
உயிர்கள் பல எடுத்த பாவம்,
நாயின் பிள்ளை என்று சொல்லி
ஆணவமாய் நடந்த பாவம்,
பொய்கள் பல பேசி பேசி
பொய்யராய் வாழும் பாவம்.

எத்தனை முறை முழுகினாலும்
எந்த நதியிலும்
நீங்காது இவர் பாவம்.

இவரைத் தான்தான்  அழைத்தாக
சொன்ன இன்னொரு பொய்யைக்
கேட்டு கங்கை அழுத
கண்ணீரால் இணைந்தது
இன்னொரு பாவம்.

பாவத்தின் சம்பளமாய்
இவருக்கு மட்டும் 
பதவிதான் வேண்டுமாம்....
 

Thursday, April 24, 2014

வயதாகி விட்டது இப்போதுதான் தெரிகிறது

முதல் முறையாக வாக்களிக்கும் மகனோடு சேர்ந்து 
வாக்குச்சாவடி வரிசையில் நிற்கும் போதுதான்
நமக்கு வயதாகி விட்டது என்பது தெரிகிறது.

இவர்கள் என்றுமே சட்டங்களை மதிப்பவர்கள் கிடையாது

கீழே உள்ள செய்தி தமிழ் ஹிந்து இணையதளத்தில்  இப்போது
பார்த்தது.
----------------------------------------------------------------------------------------

சென்னையில், ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்காத விப்ரோ உள்ளிட்ட 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். 

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. 

ஆனால், சென்னையில் விப்ரோ, ஹெ.சி.எல்., டெக் மகிந்திரா, சொடெக்ஸோ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டன. 

சோழிங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இந்நிறுவனங்கள் இயங்கியதாக தெரிவித்தார்.
மேலும், அங்கு பணிபுரிந்த சுமார் 3,500 ஊழியர்களையும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

--------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் விதிகளை மட்டுமா இவர்கள் மதிக்காமல் இருக்கிறார்கள்?

இந்தியாவின் வரி விதிகளை மதிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்க மாட்டார்கள்.
அவர்கள் நிறுவனம் செயல்படும் நகராட்சிக்கோ, மாநகராட்சிக்கோ
செலுத்த வேண்டிய தொழில் வரி போன்றவற்றை செலுத்த
மாட்டார்கள். 
இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம் கூட பொருட்டு
கிடையாது.

தாங்கள் எப்போதும் இந்திய சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்
என்ற நினைப்பிலே இருப்பவர்கள்.

இன்று எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நல்ல தொடக்கமாக
இருக்கட்டும்.

முதலாளிகளுக்கு அடிபணிந்து கிடப்பதே தங்கள் பாக்கியம்
என்ற அடிமை மனப்பான்மையிலிருந்து அரசுகளும்
வெளிவருவதும் மிகவும் முக்கியம்.

நீங்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவரா?

நீங்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவரா?

அப்படியென்றால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும்
மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களுமான 
இடதுசாரி சக்திகளை ஆதரிப்பீர்கள்.

இந்தியாவின் எதிர்காலம் இடதுசாரிகளிடம் மட்டுமே பத்திரமாக
இருக்கும்.

காங்கிரசை நிராகரிப்பீர், பாஜக வை தோற்கடிப்பீர்

இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்



Wednesday, April 23, 2014

பொய்யருவி மணியனின் பித்தலாட்டம்

நம்ம தரகுப்புயல் பற்றி இன்றைய தீக்கதிர் நாளிதழில் வந்த
அருமையான கட்டுரை. இப்படிப்பட்ட பிழைப்பு இந்த 
மனிதனுக்கு அவசியமா? மார்க்சிஸ்ட் கட்சி கேரளாவில் நடத்திய
நிகழ்ச்சியின் புகைப்படத்தை குஜராத்தில் நிலைமை சரியாகி
விட்டது என்று எழுத கூசவில்லையா.

இந்த லட்சணத்தில் இவரே தன்னை நேர்மையானவர் என்று
சொல்லிக் கொள்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்
பட்ட விஷயங்களுக்கு என்னய்யா பதில் என்றால் வாயே 
திறக்கவில்லை.

கொழுக்கட்டை வைத்துள்ளார் போலும்.

இனி கட்டுரையை படியுங்கள்.

 பொய்யருவியின் பித்தலாட்டம்
 

தமிழகத்தில் பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதில் வைகோவையே வந்து பார் என சவால் விடும் சவடால்காரர், தமிழருவி மணியன் ‘ரௌத்திரம்’ என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்துகிறார்.

அந்த ஏட்டில் (ஏப்ரல் 2014) குஜராத் கலவரத்திலேயே குளிர் காய்ந்துவிடலாம் என்று இடதுசாரிகள் கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கியுள்ளனர் என ஏகடியம் பேசியுள்ளார். மதவெறி நெருப்பில் தேசத் தைத் தள்ள தளராமல் இவர் ஓடி ஓடிக் கூவினாலும் மக்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். அதே பத்திரிகையின் 65ம் பக்கத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் கொலைவெறிக் கும்பலால் சாவின் விளிம்பிலிருந்து தப்பிப் பிழைத்த குத்புதீன், மத நம்பிக்கையின் வழியே மதவெறி ஏற்றப்பட்டு கொலை வெறியனாக்கப்பட்ட கூலித் தொழிலாளி அசோக்மோச்சி; இந்த இருவரும் இணைந்து கைகோர்க்கும் படத்தை ‘படமே பேசும்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 

கொலைவெறித் தாண்டவமாடிய குஜராத் இப்போது அமைதி தவழ்கிறது என்று கூற வருகிறாராம். அதற்கு அடுத்த பக்கத்தில் தமிழருவி ‘லட்சியம் வெல்லட்டும்’ என பாஜக கூட்டணிக்கு வெட்க மில்லாமல் வாக்குக் கேட்டிருக்கிறார். பிதற்றலின் பிம்பமாக மாறி அங்குமிங்கும் அல்லாடுவதை அந்த இதழ் முழுவதும் காண முடிகிறது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதவெறியின் இரத்த சாட்சியான குத்புதீன் மற்றும் அசோக்மோச்சியை ஒரே மேடையில் அழைத்து வந்து நிறுத்தியது. மோதிக் கொண்டோர் உயிர் இழந்து, உடைமை இழந்து கண்ட மிச்ச சொச்சம் என்ன? அதில் குத்புதீன், மோச்சி இரு வரும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

மோதிக் கொண்டு ரத்தப்பலியான நாங்கள் இன்றும் நடுத்தெருவில்தான் நிற்கிறோம். எங்களை மோதவிட்ட முதல்வர் மோடியை பிரதமராக்கி குளிர்காய ஆர்எஸ்எஸ்சும், கார்ப்பரேட்களும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு தான் இழைத்த கொடுமைகளை எண்ணி மனம்மாறிய மோச்சி பின்னாளில் மன்னிப்புக் கேட்டார். ஆனால் மோடிஜி இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை. 

மோச்சி அன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால், குஜராத்தில் முதலாளிகள் மேலும் வசதியாகியிருக்கிறார்கள். இதைத்தான் பாஜக வளர்ச்சி என்கிறது. நான் அதனை வளர்ச்சியாக பார்க்கவில்லை என கூறுகிறார் குத்புதீன். உண்மை இப்படியிருக்க, தமிழருவி குறுக்குச்சால் அடித்து பாஜகவிற்கு காவடி தூக்கி முந்தி நிற்க ஆசைப்பட்டு, கடைசியில் முச்சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
மக்களின் உண்மையான எண்ணம், மனஓட்டம், விருப்பம் ஆகியவற்றை துல்லியமாகப் படம் பிடித்துள்ளதாம், ரௌத்திரம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு. அதில் பாஜக அணிக்குத்தான் முதலிடம். அதுவும் 40 தொகுதிகளிலும் பாஜகவின் ஓட்டு பிளாஸ்திரி கூட்டணிக்கே கிட்டுமாம் என்று பகல் கனவு காண்கிறார்.

அதற்கடுத்த பக்கத்திலேயே விஜயகாந்தும் ராமதாசும் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் அரசியல் வாய்ச்சண்டைக்காரர்கள், அறிவார்ந்த சாணக்கியர்கள் இல்லை. தமிழகத்தில் மாற்று அணியால் மாற்று அரசியல் மலர வாய்ப்பில்லை என தமிழருவி புலம்பியிருக்கிறார். 

பாவம், காற்றில் வெண்ணெய் எடுக்க முயன்று மண்ணைக் கவ்வியிருக்கிறார் தமிழருவியார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.ஒரு வேளை தமிழருவி, காவியருவியில் கலந்ததில், பொய்யருவியாக உருமாறி தற்போது ஞாபக மறதியால் அவதியுற லாம். 

கீழ்க்கண்ட வாக்கியங்களைப் படிக்கும்போதாவது அவருக்கு நினைவு திரும்புகிறதா என பார்க்கலாம்...“வெள்ளாட்டுடன் நட்புக் கொள்வதால் வேங்கை வள்ள லாருக்கு வாரிசாகுமா? படமெடுக்கும் பாம்புக்குப் பால் வார்த்து, நேசத்துடன் நெஞ்சில் வைத்துக் கொஞ்சினால் கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கி விட்டு அன் றாடம் அது அகிம்சையைப் போதிக்குமா? கோடி லிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்குச் செய்தாலும் பாரதிய ஜனதாஎன்னும் கரித்துண்டின் கறுப்பு நிறத்தை மாற்றி விட முடியாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பாரதிய ஜனதாவின் அணுகுமுறை இருந்தாக வேண்டும் என்பது அதன்பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி”(இன்று புதிதாய் பிறப்போம் என்ற நூலில் தமிழருவி மணியன்)

- எம். கண்ணன்

நன்றி - தீக்கதிர் 23.04.2014

துள்ளிக் குதிக்க வேண்டும் போல் உள்ளது

மூன்று நாட்களாக பெரும் அவஸ்தை.

எனது வலைப்பக்கத்திற்குள் நுழைந்தால் உடனடியாக
அது வேறு ஏதோ டுபாக்கூர் தளத்திற்கு போய் விடும்.

எழுதியதை யாரும் படிக்கவும் முடியாது.
படித்த பின் திட்டவும் முடியாது.

எப்படி நிகழ்ந்தது என்பதும் புரியவில்லை.
எப்படி சரி செய்வது என்பதும் தெரியவில்லை.

எங்களின் சென்னை 2 கோட்டத்தின் முன்னாள்
பொதுச்செயலாளர் தோழர் சி.டி.சுரேஷ்குமார்
எங்கே கோளாறு என்பதை கண்டுபிடித்துக் கொடுத்தார்.

அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லை.

பிறகு சில சோதனை முயற்சிகளை செய்து பார்த்தேன்.
சிக்கல் நீங்கியிருந்தது. பிறகு தமிழ்மணம் பட்டையையும்
இணைத்து விட்டேன்.

ஒரு வழியாக மீண்டும் செயல்பட தொடங்கி விட்டேன்.

உண்மையிலேயே துள்ளி குதிக்க வேண்டும் போல உள்ளது

Tuesday, April 22, 2014

முதன் முதலாக, முதன் முதலாக, பரவசமாக

எனது முதல் சிறுகதை தீக்கதிர் நாளிதழின் ஞாயிறு இணைப்பான
வண்ணக்கதிர் 20.04.2014 இதழில் வெளியானது.

முதன் முதலில் எழுதிய சிறுகதையே பிரசுரமானது பரவசம்
அளித்த அனுபவம்


 

Sunday, April 20, 2014

நீ செல் நரகத்திற்கு

இதுதான் எங்கள் வீடு,
இந்தியாதான் எங்கள் நாடு.
இங்கேதான் பிறந்தோம்,
இங்கேதான் வளர்ந்தோம்,
முதுமையிலோ இல்லை
உங்களைப் போன்ற 
மூர்க்கர்களாலோ
எங்கள் வாழ்வு முடிந்தாலும்
இங்கேயே சாம்பலாய் 
மறைவோம்.

எங்கள் முன்னோர்
ரத்தம் சிந்திப் பெற்ற
சுதந்திரக் காற்றை
சுவாசித்துக் கொண்டே

மனிதம் மறந்த அரக்கனை
உண்மை மறைக்கும் பொய்யனை

உயிர் உள்ளவரை
உணர்வுள்ளவரை
பேசிக்கொண்டும்
எழுதிக்கொண்டும்
எதிர்த்துக் கொண்டே
இருப்போம், இந்தியாவைக் காப்பாற்ற.

எங்களை வெளியேறச் சொல்ல
உனக்கேது உரிமை?
எங்களின் வெப்பக் காற்று
வீசிக் கொண்டே இருக்கும்.
அநீதிக்கு எதிராக அனலாய்
பொங்கிக் கொண்டே இருப்போம்.

உண்மைகளின் உஷ்ணத்தை
உன்னால் தாங்க முடியாவிட்டால்
உங்கள் புராணங்கள் உருவாக்கிய
நரகத்திற்கு நீ செல்.
இந்தியா மாறிடும்
சொர்க்க பூமியாய்.

கண்ணதாசன் சொன்னது புரிந்ததா? நன்றாக புரிந்ததா?

 

கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால் 
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள் ! 
சிங்கந்தான் மான்குலத்தை சீராட்டி வளர்க்குமென்றால் 
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள் ! 
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
 தலையிலே ஏதோ தகராறு என்று பொருள் ! - கவியரசு...


உலகமயம், தனியார் மயம், தாராளமயத்தால் 
இந்தியாவின்  பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்
என்று சொல்கிற மன்மோகன்சிங், ப.சிதம்பரம்
வகையறாக்களுக்கு  கவியரசின் இக்கவிதை
சமர்ப்பணம் 

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் செலக்டிவ் அம்னீஷியா

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்
இணைந்து தனி அணியாக போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின்
எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் சிக்கலாகிப் போய் விட்டது.

நீங்கள் ஏன் தனியாக நிற்கக் கூடாது என்று இத்தனை நாள் கேள்வி
கேட்டுக் கொண்டிருந்த அறிவிஜீவிகள் பலர் இப்போது தனியாக
நிற்பதையும் நையாண்டி செய்வதன் மூலம் அவர்கள் இத்தனை நாள்
கம்யூனிஸ்டுகள் மீது காட்டிய கரிசனம் போலித்தனமானது என்பதை
நிரூபித்து தாங்களும் போலித்தனமானவர்களே என்பதையும்
அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதோ இத்தனை நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த இயக்கமும்
போராட்டமும் நடத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தது போலவும்
இப்போது திடிரென களத்திற்கு வந்தது போலவும் சில அரசியல்
மேதைகள் எழுதுகிறார்கள்.

பரிதாபத்திற்குரிய அந்த ஜீவன்கள் இப்போதுதான் தங்கள்
கும்பகர்ண உறக்கத்தைக் கலைத்துள்ளார்கள் போலும். இல்லை
யாருமற்ற தனித்தீவில் இத்தனை காலம் வாழ்ந்து விட்டு 
இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார்கள் போலும். 
இல்லையென்றால் அவர்களுக்கு செல்க்டிவ் அம்னீஷியா வியாதி
இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி, கல்வி வணிகமயமாக்கல், அண்ணா நூலக இட
மாற்றம் போன்ற கல்வித்துறைப் பிரச்சினைகள், மின் வெட்டு,
தொழில்கள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள், பரமகுடி துப்பாக்கிச்
சூடு, தர்மபுரி கலவரம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள்,
திருக்கோயிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன் கொடுமை,
சென்னை அமில வீச்சு போன்ற மாதர் பிரச்சினைகள், வறட்சி
நிவாரணம் கேட்ட முற்றுகைப் போராட்டம் என்று மாநிலம் 
தழுவிய இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது.
இதெல்லாம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக நடந்தவை.

இவற்றைத் தவிர  மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக
நடைபெற்ற போராட்டங்கள் எண்ணிலடங்கா. மாவட்ட அளவிலும்
ஒன்றிய அளவிலும் மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ர வெகு ஜன அமைப்புக்களும்
நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையை அளவிடுவது சிரமம்.

தேர்தலுக்காக மட்டும் களத்திற்கு வரும் அமைப்பு மார்க்சிஸ்ட் 
கட்சியல்ல. திமுகவின் ஆட்சிக்காலத்திலும் சரி, அதிமுகவின்
ஆட்சிக்காலத்திலும் சரி உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள்
பிரச்சினைகளுக்காக போராடியது, இனியும் போராடப் போவது
மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே.

இது அந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும்.

ஆனால் ஒப்புக் கொள்ள மனம் வராது.

ஏனென்றால் அவர்களுக்கு  செல்க்டிவ் அம்னீஷியா வியாதி
என்று சொல்ல மாட்டேன்.

மனசாட்சியற்ற, இன்னும் சொல்லப் போனால் இதயமே 
இல்லாதவர்கள் அவர்கள். வீட்டில் அமர்ந்து சொகுசாக 
வலைப்பக்கங்களிலும் முகநூலிலும் வெட்டியாக பின்னூட்டம்
போடுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவர்கள்.

அடுத்தவர் பிரச்சினைக்காக அரை மணி நேரம் கூட செலவழிக்க
முடியாத வாய்ச்சொல் வீரர்கள் அவ்வளவுதான்.

Saturday, April 19, 2014

இவரெல்லாம் வரணும், நல்லா வரணும்

வெகு நாட்களாக வலைப்பக்கம் பக்கம் வராமல் இருந்த 
தோழர்  மாதவராஜ், தனது தீராத பக்கங்கங்களில் 
எழுதியுள்ள பதிவு  இது.

விருதுநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சார்பாக போட்டியிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ் பற்றி எழுதியுள்ள
அற்புதமான கட்டுரை இது.

 

இதில் ஒரு வார்த்தை கூட மிகையில்லை. தோழர் சாமுவேல் ராஜ்
உடன் கடந்த ஐந்தாண்டுகளாக நெருங்கிய பழக்கம் உள்ள நான்
கண்டிப்பாகச் சொல்வேன்.

விருதுநகர் தொகுதியின் மிகச் சிறந்த வேட்பாளர், களப் போராளி,
உண்மையான மக்கள் ஊழியன் தோழர் சாமுவேல் ராஜ் மட்டுமே.

அவரைத் தேர்ந்தெடுப்பது அத்தொகுதி மக்களுக்கு நல்லது.

Friday, April 18, 2014

காலி நாற்காலிகளோடு பேசும் பாஜக தலைவர்

கீழே நீங்கள் காணும் படம் இன்று  மாலை தஞ்சையில் நடந்த 
பொதுக் கூட்டத்தில் பாஜக அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்
பேசும் போது எடுத்தது.


படத்தை எடுத்த தோழர் களப்பிரன் தன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து
கொண்டதையும் படித்து விடுங்கள் ( ஆ, எத்தனை ப)

 தஞ்சையில் - ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் பா.ஜ.க. கும்பல்..!

தஞ்சையில் இப்போது மூன்று  நாடாளுமன்றத்தொகுதிகளுக்கான (தஞ்சை, மயிலாடுதுறை, நாகை) பிஜேபியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இராஜ்நாத் சிங் பேசிக்கொண்டிருக்கிறார். பல கட்சி கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 90%நாற்காளிகள் காலியாக இருக்கின்றது. அகில இந்திய தலைவரின் கதியே இது எனில், மற்றவர்கள்...

மோடி அலை வீசுதாம்ம்ம்ம்....
எங்கன்னு சொல்லுங்க பாஸ்...

நீங்கவேனும்னா பாருங்க நாளை பத்திரிகை முழுவதும் கூட்டம் குவிந்ததாக கதைவிடுவார்கள்


(மோடி அலை வீசினா அவரு ஏங்க ரசனி, விசய் னு ஒவ்வொத்தரா
பாக்கப் போறாரு? - இது என் கமெண்ட்)

சரி சரி இன்னொரு காலி நாற்காலி படத்தையும் பாத்துடுங்க.

அது மம்தா தீதி டெல்லியில பேசினது.

பாவம் விஜய் அதுக்கு சரிப்பட மாட்டார்

டான்ஸ், பைட், பஞ்ச் டயலாக் என்று எந்த மாற்றமும் இல்லாமல்
கெட் அப்பிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த மாற்றமும் செய்ய
முயற்சிக்காமல் இருக்கும் விஜயிற்கு அரசியலில் மட்டும்
எத்தனை எத்தனை தடுமாற்றங்கள் என்பதற்கு இந்த படம்தான்
உதாரணம்.


அவரு அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டாருங்கிறதுக்கு இன்னும்
ஏதாவது ஆதாரம் வேண்டுமா என்ன?

இவரு இப்படினா, இவரை நம்பி வந்த மோடி எப்படி?

கட்டைப் பார்த்து ஏமாந்து போன காவலர்கள். வட போச்சே

இது நேற்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி.

சிதம்பரத்தில் ஒரு தோழரது மகளின் திருமணம். அதற்காக காரில்
சென்றிருந்தோம். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக இரண்டு பிரசுரங்கள் தயார்
செய்திருந்தோம். 

அவற்றை போகும் வழியில் பண்ருட்டியில் கொடுத்து விட்டால்
அங்கிருந்து எடுத்துக் கொள்வதாக விழுப்புரம் தோழர் சொல்லி
இருந்தார். எனவே டிக்கியில் அந்த இரண்டு கட்டுக்களையும்
வைத்திருந்தோம்.

திருவண்ணாமலையை நெருங்குவதற்கு முன்பாக வண்டி
நின்றது. தூங்கிக் கொண்டிருந்த நான் முழித்துப் பார்த்தால்
வண்டிக்கு முன்பாக இரண்டு காவலர்கள். டிக்கியை திறந்து
காண்பியுங்கள் என்று ஒருவர் அதட்டல் போட்டார்.

அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை.

டிக்கியை திறந்ததும் ஒரு காவலர்  உற்சாகமாக சாலையின்
ஒரமாக மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த ஏட்டையாவைப்
பார்த்து " சார் இரண்டு கட்டு இருக்கு" என்று குரல் கொடுக்க
அவரும் பரபரப்பாக கார் அருகே வந்தார்.

கட்டுக்களின் வெளியே சொருகி வைத்திருந்த பிரசுரத்தை
எடுத்து இதுதான் கட்டிற்குள்ளும் உள்ளது என்று சொன்னாலும்
அவர் திருப்தியடையாமல் பிரியுங்கள் என்றார். 

பிரித்ததும் அவர் முகம் போன போக்கே பரிதாபமாக இருந்தது.
"கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்ககிட்ட நோட்டீஸ்தான் சார் இருக்கும்
காசெல்லாம் இருக்காது, கிடையாது" என்றதும் இன்னும் அசடு
வழிந்தார்.

கிளம்புங்க சார் என்று எங்களை அனுப்பி விட்டு மீண்டும் 
ஓய்வெடுக்க மர நிழலுக்கே போய் விட்டார்.

பாவம் அந்த கட்டுக்களில் பணம் இருந்திருந்தால் அவரது
பெயரும் புகைப்படமும் பத்திரிக்கைகளில் வந்திருக்கும்.

 "வட போச்சே".

மோடி சாம்ராஜ்யத்தில் பிடிபட்ட சாராய பாட்டில்கள்

மது விலக்கு அமலில் உள்ளதாக சொல்லப்படும் மோடியின்
குஜராத் மாநிலத்தில்தான் தேர்தலின் போது  மட்டுமே 
கைப்பற்றப்பட்டுள்ள சாராய பாட்டில்களின் அளவு 
பத்து மில்லியன் லிட்டராம். இங்கே இணைப்பு   உள்ளது.

கள்ளச்சாராயம் பிடிபட்டதில் இந்தியாவிலேயே மூன்றாவது
இடமாம். முதலிடம் பெற இன்னும் முயற்சிகள் வேண்டும்
மோடிஜி.

 பத்து மில்லியன் என்றால் ஒரு கோடி லிட்டர் லிட்டர். 
இதில் எத்தனை ஃபுல், ஹாப், குவார்ட்டர், கட்டிங் வரும்
என்பதை குடிமகன்கள்  கணக்கு போட்டுச் சொல்லுங்கள்.

அப்படியே மோடியின் ஆட்சியில் சாராயம் கிடைக்கிறது
என்று கேப்டனிடமும் சொல்லுங்கள்.

அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்

Thursday, April 17, 2014

மிஸ்டர் ராம கோபாலன், சொல்வீர்களா? பதில் சொல்வீர்களா?


மிஸ்டர் ராம கோபாலன், சொல்வீர்களா? எங்கள் தோழர் கவிதா குமார்
எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு பதில் சொல்வீர்களா?

ராம கோபாலனின் மைன்ட் வாய்ஸ் : எங்களுக்கெல்லாம் வெட்கம்,
மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருக்குனு நீங்களா
நெனச்சிக்கிட்டா எப்படி?  நாங்க இன்னும் காலில் கூட விழுவோம்.


முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் வெட்கம் கெட்ட மோடியின் கட்சி

தாமதமாய் அளிக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 
சொல்லப்பட்டுள்ள இரண்டு விஷயங்கள்.

"சுதந்திரம் பெற்று பல வருடங்களான பின்பும் பெரும்பாலான
முஸ்லீம்கள் ஏழ்மை நிலையில் வாடுவது வருத்தத்திற்கு உரியது.
அவர்கள் முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்வித்தரத்தை முன்னேற்ற மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும். "

இதை, இதைத்தான சச்சார் கமிட்டியும் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டியும்
சொன்னது? அந்த கமிட்டி சொன்னது சரியில்ல, எந்த பரிந்துரையையும்
அமலாக்கக் கூடாது என்று குறுக்க நின்னு தடுத்தது யாரு?

அப்போ இந்த மாதிரி முட்டுக்கட்டை போட்டுட்டு இப்போ தேர்தல்
அறிக்கையில் இப்படி எழுதியிருக்காங்க என்றால் 
பாஜகவை விட  மோசடிப் பேர்வழிங்க யாராவது இருக்க முடியுமா?

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

Wednesday, April 16, 2014

பவர் ஸ்டாரும் மோடியும் பாத்துக்கப் போறாங்களாம்

போன வாரம் ரஜனிகாந்தோடு டீ சாப்பிட்ட நரேந்திர மோடி
நாளைக்கு விஜய்யை பார்க்கப் போறாராம்.

காபி சாப்பிடுவாங்களோ இல்லை கூல் டிரிங்க்ஸ் குடிப்பாங்களோ?

ஆனா மோடி கண்டிப்பா பாத்து ஆதரவு கேட்க வேண்டிய ஆள்
நம்ம பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்தான்.

ஏனென்றால் பவர் ஸ்டாரும் மோடியும் ஒரே மாதிரி.
காசு கொடுத்து விளம்பரம் வாங்குபவர்கள்.
மோடி அரசியலின் "பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்"
பவர் ஸ்டார் திரையுலகின் மோடி.



மோடி அலை வீசறப்ப ஏம்பா ஒவ்வொரு சினிமாக்காரங்களா
பாத்துக்கிட்டு இருக்கீங்க.

அப்படியும் மூழ்கித்தான் போகப் போறீங்க