Thursday, July 31, 2014

போலிச்சாமியார் நித்தியானாந்தாவின் வாய்க்கொழுப்பு

காமுகன், பணத்தாசை பிடித்தவன், பெண்களை மோக வலையில் வீழ்த்தி அவர்களின் வாழ்வை சூறையாடிய கேவலமான ஜென்மம், கடவுள் பெயரைச் சொல்லி பக்தர்களை ஏமாற்றும் கபட சன்யாசி, பக்தர்கள் தொடங்கி மதுரை ஆதீனம் வரை மோசடி செய்த திருட்டுப் பேர்வழி, மனிதன் என்று சொல்லக் கூட அருகதையற்ற கீழ்த்தரமான நித்தியானந்தா கம்யூனிஸ்டுகளை குறை சொல்லி இருக்கிறான்.

தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி போராடும் தியாகத்தீயில் புடம் போட்ட கம்யூனிஸ்டுகளைப் பற்றி இந்த புடலங்காய் சாமியாருக்கு என்ன தெரியும்?

இவன் சொன்னதையும் ஒரு செய்தி என்று ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறதே, அதை என்ன சொல்வது?

இவனது லீலா வினோதங்கள் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்ற வெகுஜன அமைப்புக்களின் தோழர்கள் இவனை திருவண்ணாமலையில் துரத்தி அடித்தது மறந்து போய் விட்டது போலும்.

பணம் கொடுத்து இவன் மற்றவர்களை விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால் இவன் ஜாலமெல்லாம் எங்களிடம் எடுபடாது.

மறுபடியும் திருவண்ணாமலையில் கால் வைத்துப் பார்க்கட்டும். அப்போது எங்கள் தோழர்கள் அவனுக்கு மீண்டும் பாடம் புகட்டுவார்கள்.

காவிக்கட்சி ஆட்சிக்கு வந்ததால் இந்த காலிக்கும் தைரியம் வந்து விட்டது போல.

ஐம்புலன்களையும் அடக்குபவர்கள்தான் துறவிகள் என்று சொல்வார்கள். இப்போது சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் அப்படிப்பட்ட ஆசாமிகள் கிடையாது. அதிலும் இவன்தான் மிகப் பெரிய போலியாயிற்றே. அதனால்தான் இவனால் இப்போது நாவையும் அடக்க முடியவில்லை.

சோனியா காந்திக்கு ஒரு கடிதம். இப்போதாவது புத்தி வருமா?BANGLADESH-INDIA-DIPLOMACY-HEALTH-CONFERENCE

காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு முக்கியமான காரணம் அதன் மோசமான உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள்தான்.

மோடியும் அதே நாசகரப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார். எங்கள் வழியில்தான் பாஜகவும் செல்கிறது என்று சிவகங்கைச் சீமான் உள்ளிட்ட காங்கிரசிற்கு பாடை கட்டிய பெரிய மனிதர்கள் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவது அபாயகரமானது, அதற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது அபத்தமானது என்று சுட்டிக்காட்டி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்திக்கு ஒரு நீண்ட கடிதம் அளித்துள்ளார்.

அதைப் படித்து அதிலுள்ள விபரங்களை புரிந்து கொண்டு தனது திசையை மாற்றினால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் அக்கட்சி சவக்குழிக்குள் அடக்கமாவதை யாராலும் தடுக்க முடியாது.

தோழர் அமானுல்லாகான் அனுப்பிய கடிதத்தின் நகலை கீழே அளித்துள்ளேன். நேரம் இல்லாமையால் தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.


Smt. Sonia Gandhi,                                                                       July 28, 2014                                                                                    
President,
Indian National Congress,
10, Janpath, New Delhi-110011

Dear Madam,

FDI HIKE IN INSURANCE

The All India Insurance Employees’ Association is the biggest and oldest trade union of insurance employees.  We have been playing a very constructive role in the growth of the public sector insurance industry with a clear understanding of its role in the national economy.  We have been agitating against the FDI hike in the insurance sector from 26 percent to 49 percent.  Our opposition is not based on any partisan reasons but on the grounds of its impact on the national economy. We firmly believe that financial sector is the key to national development and liberalization of this sector is fraught with dangerous consequences. The global financial meltdown and the consequent economic crisis vindicate our understanding. Therefore, we are disturbed by the statements of the important functionaries of the Indian National Congress in support of the decision of the NDA government to hike the FDI and steps towards privatization of the public sector general insurance companies.  We, therefore, wish to place our views on the subject and request you to reconsider the support to Insurance Laws (Amendment) Bill.

The global insurance scenario is not very happy. Since the financial crisis in 2008, the advanced industrialized nations are experiencing stagnation in premium income. The annual growth rate in North American is (-) 2.9%, Oceania (-) 3.7% and Western Europe (-) 0.6%. (Sigma Report 3/2014). Moreover the demography has made insurance a difficult business to operate in these markets. Therefore, it is natural for the multinational companies to demand further opening up of the insurance sector in India which is very promising with a young population. But we need to carefully analyse the consequences of higher FDI limit and the benefits or otherwise to our national economy. Today there is a consensus world over that domestic savings play a large role in capital formation and economic development and therefore it is not prudent to allow the foreign capital greater access and control over the domestic savings by increasing the FDI limit.

The two major arguments in favour of increase in the foreign equity limits are:

(1) The private insurance companies are starved of funds and it has become inevitable to increase the FDI limit; and

(2) The increase in the FDI limits will help deepening the insurance market and increase the levels of penetration.  The resources so generated will help funding of long term infrastructure projects.

We are not in a position to agree with both these arguments on the basis of the existing realities. The reasons for our disagreement are:

a)    Insurance Sector unlike manufacturing is not capital intensive. In many countries the start-up capital for an insurance company is much lower than in India. The high solvency margin and other regulations are so framed as to make it look that an insurance company cannot do business without FDI. (FDI in insurance – R.Ramakrishna – Actuary).

b)   There are around 50 joint venture companies operating in the country both in life and non-life segments. The Indian promoters of these companies are big industrial and financial houses. They have enough resources including easy access to funds for deployment in case of need.  They also have the option of raising resources through initial public offerings.

It is not possible to accept that they lack resources for investment in their insurance ventures.

c)   There is no relationship between the capital employed and the business procured. The following table justifies our argument. The data is as on 31st March 2013.

Slno
Name of the Company
Total Capital & Reserve (in Crore)
Total Premium Income earned (in Crore)
1
Bajaj Alliance
4844
6893
2
SBI lIFE
2710
10450
3
Bharathi AXA
1999
745
4
HDFC Standard
2204
11323
5
LIC
100
208000

d)   The above table clearly points out that higher capital does not mean higher mobilization of premium income. What bring increase in premium income is a better trained agency force and other efficient channels of distribution.

e)   Insurance penetration and density depend upon the growth of the national economy and the disposable income in the hands of the people. Despite poor incomes and very little disposable incomes, India has done extremely well in insurance. The World Economic Forum gave Indian Life Insurance industry the top global ranking and it ranked India number 3 in general insurance business in terms of density. India’s global ranking is 11 in volumes of life insurance premium in 2013. (Sigma Report.)

f)     The criticism on insurance penetration is unnecessary, though there is a great possibility for improvement. Life insurance penetration in India at 3.1% compares favourably with 3.2% of United States, 2.9% of Canada and 3.1% in Germany. India has a higher level of penetration than all the Latin American countries and many of the developed nations. We can improve upon this if the incomes levels and disposable incomes increase.

g)   The argument that entry of private sector has deepened insurance market needs close scrutiny. We may point out that LIC recorded compound annual growth rate of 19.5% in the nineties. We strongly believe LIC would have continued to grow at this rate had the sector not been opened. With a 19.5% CAGR the total premium of LIC would have been Rs.337256 crore for 2013-14. Interestingly the combined TPI of LIC and the private companies is the same figure for 2013-14. This again makes it clear that the entry of private companies did not result into expansion of the market. Rather the private companies tried to capture a share of the market created by the public sector. It is also a fact that the private companies concentrated on the big ticket policies with no social obligation for the poor and disadvantaged.

We are, therefore, convinced that opening up the sector did not benefit the economy nor did it benefit the insuring public. The claims that opening up of insurance sector would open the floodgates for the foreign capital to benefit infrastructure remain unsubstantiated. The insuring public with high lapsation ratio and high rate of claim repudiation by the private companies has suffered. In the face of these realities, it is imprudent to give the foreign capital a greater space and control over the domestic savings.  We have real apprehension that FDI hike will only succeed in hastening the process of mergers and acquisitions which would have serious impact on the public sector and consequently the national economy itself. The claim that even when the foreign equity limit is raised to 49%, the management and control will remain with the Indians is unconvincing. You are aware that with 26% equity participation the foreigners are now controlling the functioning of many of the joint venture companies.

We, therefore, request you to review your support to the FDI hike. We will be very happy to answer any clarification required on our assessment. We will also be happy to meet you personally to explain our stand if it so required.

Thanking you,
Yours faithfully,
Sd/- (Amanulla Khan)
President, A.I.I.E.A


Wednesday, July 30, 2014

ஒட்டு கேட்டாங்களா? கேட்கலயா?

 http://images.indiatvnews.com/politicsnational/Nitin_Gadkari_r7923.jpg
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீட்டில் ஒட்டு கேட்டு உளவு பார்த்தார்களா? பார்க்கவில்லையா?

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என்று அலறுகிறார் கட்காரி. இல்லையில்லை ஒட்டு கேட்கப்பட்டது என்று அடித்துச் சொல்கிறது காங்கிரஸ் கட்சி. வேறு பிழைப்பில்லாமல் பொய் சொல்கிறது காங்கிரஸ் கட்சி என்று  பாரதீய ஜனதா அரசு பரிதாபமாக பேசுகிறது. 

"அந்த குழந்தையே நீங்கதான் சார்" என்பது போல காங்கிரஸ் ஆட்சியில் அக்டோபர் மாதத்தில்தான் ஒட்டு கேட்கும் கருவியே பொருத்தப்பட்டது என்று ஆதாரம் காட்டிச் சொல்கிறார் சர்வதேச கோமாளி சுப்ரமணிய சுவாமி. "நானே சும்மா இருக்கேன், இவன் எதுக்கு ஏழரையை கூட்டறான்" என்று தவிக்கிறார் கட்காரி.

சொல்லுங்க சார் சொல்லுங்க,
நிஜமா சொல்லுங்க, என்னதான் நடக்குது இங்கே?

நீங்க எதுவும் சொல்லவில்லையென்றால் 

அமெரிக்கா ஒட்டு கேட்டது, அதனால்தான் வெளியே சொல்ல பயப்படுகிறது பாரதீய ஜனதா 

என்றோ

மோடியே தன் அமைச்சர்களை ஒட்டு கேட்பதை எப்படிய்யா நான் வெளியே சொல்வது என்று கட்காரி பயப்படுகிறார்

என்றோ

நானும் இந்த நாட்டு மக்களும் கற்பனை செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

அதனால்தான் கேட்கிறேன்

ஒட்டு கேட்டாங்களா? கேட்கலயா?

ஜெ இதற்கு மேல்முறையீடு செய்வாரா?

 கும்பகோணம் நெருப்பில் எரிந்த நீதிஅந்த கொடூரம் நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்புதான் நீதி தேவதையின் கண்கள் பாதி மட்டும் திறந்துள்ளது. பாதி திறந்த கண்கள் பார்வைக் கோளாறுக்கும் உட்பட்டு விட்டது.

எரிந்து விழுந்து தொன்னூற்று நான்கு  இளந்தளிர்களின்  வாழ்வை கரிக்கட்டையாய் சிதைத்த  அந்த பாவிகளுக்கு வெறும் பத்தாண்டுகள் மட்டும் சிறைத்தண்டனையாம். இரண்டு கைகளால் லஞ்சப் பணத்தை வாங்கி வாங்கி  போட்டு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அதிகார வர்க்க மிருகங்களுக்கு விடுதலையாம்!

நீதி தேவதையின் கண்களை கறுப்புத் துணி போட்டு கட்டியிருந்தால் அதன் மூளையை கரன்சி நோட்டுக்களால் கட்டியிருப்பார்களோ?

இது வழங்கப் பட்ட தீர்ப்பா இல்லை வாங்கப் பட்ட தீர்ப்பா என்ற கேள்வியை  சிறு குழந்தைகள் கூட   கேட்கும்.

நீதி இங்கே தாமதிக்கப்பட்டது.
இப்போது மறுக்கப்பட்டது.

ஊழல் பேர்வழியான மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் திருமதி கல்யாணி மதிவாணனுக்கு ஆதரவாக  அப்பீல் செய்த ஜெ இந்த அநியாயமான தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வாரா?

Tuesday, July 29, 2014

வேலூர் வீரனுக்கு வாழ்த்துக்கள்இங்கிலாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சதீஷ் சிவலிங்கம் எங்கள் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

சத்துவாச்சாரி பகுதி பளு தூக்கும்  போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் வெற்றி வீரர்களை உருவாக்கியுள்ளது.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கடினமான உழைப்பால் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ள சதீஷிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். 


ரயில் சீட்டிற்கு அடியில் ஒரு அனாமதேயப் பெட்டி - பதட்டமான அந்த நொடி

இரண்டு நாட்கள் கோவை அருகில் ஒரு தொழிற்சங்க வகுப்பில் கலந்து கொண்டு இரவு வேலூர் திரும்ப  சேரன் எக்ஸ்பிரஸில்  ஏறுகிறோம். அந்தப் பெட்டியில் நாங்கள்தான் முதலில் ஏறுகிறோம்.  

1 முதல்  6 வரை அனைத்து சீட்டுகளும் எங்களுடையதுதான். எங்கள் பைகளை சீட்டிற்கு அடியில் வைக்க குனிந்தால் அங்கே அதற்கு முன்பே ஒரு கனமான பெட்டி அனாமதேயமாக  கிடந்தது.க்ரிச், க்ரிச் என்று சப்தம் வேறு வந்தது. அதை வெளியில் எடுக்க நினைத்தால்  சீட்டோடு கட்டி வைக்கப் பட்டிருந்தது.

மின்சார இணைப்பு அளிக்கப்படாத அந்த நிமிடத்தில் அந்த பெட்டியில் என்ன இருக்குமோ என்று ஒரு நிமிடம் அனைவருக்குமே பதட்டம்  வந்து விட்டது. யாரோ வெடிகுண்டு வைத்து விட்டு போயிருக்கிறார்களோ என்று தான் உடனடியாக தோன்றியது.

கடைசியில் மொபைலின் வெளிச்சத்தில் பார்க்கும் போது சிரிப்பு  வந்து விட்டது.

அந்த அனாமதேயப் பெட்டி, எலிகளைப் பிடிப்பதற்காக ரயில்வே  வைத்திருந்த எலிப்பொறி. அந்த சப்தம் ஏற்கனவே சிக்கியிருந்த எலியார் உருவாக்கிக் கொண்டிருந்த உயிருக்கான வேண்டுகோள்.

வெடிகுண்டு என ஒரு நிமிடம் நாங்கள் கருதிய அந்த அனாமதேயப் பெட்டி இதுதான். 

 

Saturday, July 26, 2014

கேரட் கீர் தயாரிக்க குறிப்பும் வேண்டுமா?

கேரட்டுகளை தோல் சீவி வெட்டி வேகவைத்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஓட விட்டு  ஆற வைத்த் ஆடை நீக்கிய பாலில் கலந்து ஏலக்காய் பொடியும் போட்டு பிரிட்ஜில் வைத்து  டம்ப்ளரில் ஊற்றிக் கொடுக்கும் போது கொஞ்சம் பொடி செய்த முந்திரியையும் தூவிக் கொடுத்தால்  கேரட் கீர் சுவையாக இருக்கும்.

இதை எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பும் அவசியமா என்ன?

 

அன்னியர்களுக்காய் பொய்களை அள்ளி விடும் மோடி அரசு

மனசாட்சியற்ற மனிதர்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய்களை அள்ளி வீசியுள்ளார்கள்.

இன்சூரன்ஸ் துறையில்  அன்னிய நேரடி மூலதன  வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்ரு முடிவெடுத்துள்ளது. இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப்படவோ எதுவுமில்லை. இருபது வருடங்களாக இருக்கிற ஒரு பிரச்சினையை முதலாளிகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க மோடி முயன்றுள்ளார்.

1994 ல்  இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக என்ற பெயரில்  அமைக்கப்பட்ட மல்கோத்ரா குழு அறிக்கை சொன்ன முக்கியமான  இரண்டு பரிந்துரைகள்.

எல்.ஐ.சி யின் 50 % பங்குகள் விற்கப்பட வேண்டும்.

இன்சூரன்ஸ் துறையில்  தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டுதான் தொழில் செய்ய வேண்டும்.

இதிலே எல்.ஐ.சி யின் பங்குகளை  தனியாருக்கு விற்கக் கூடாது என்று பதினைந்தாவது நாடாளுமன்றம் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டது.

இந்திய முதலாளிகளோடு  கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டுக் கம்பெனிகள் எவ்வளவு மூலதனம் வைத்துக் கொள்ளலாம் என்ற பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது.

குஜ்ரால் காலத்தில்  ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும் போது 1997 ல் இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை கொண்டு வருகிறார். தனியார்மயமே கூடாது என்று இடதுசாரிகள் எதிர்க்கையில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி கூடாது என்று பாஜக எதிர்த்தது. அதனால் ப.சி அந்த மசோதாவை வாபஸ் வாங்கினார்.

அடுத்து இந்தியா ஒளிர்ந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 1999 ல் அன்னிய கம்பெனிகள் 49 % வரை மூலதனத்தில் பங்கு வைத்திருக்கலாம் என்ற ஷரத்தோடு யஷ்வந்த் சின்கா மசோதா கொண்டு வர அப்பொது காங்கிரஸ் 26 % வரை இருந்தால் போதும் என்று சொல்ல அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு  மசோதா நிறைவேறியது. தனியார் கம்பெனிகளும் கடையைத் திறந்தார்கள். 

அப்போது வாஜ்பாய் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

இன்சூரன்ஸில்  வெளிநாட்டவரை அனுமதித்தால் ஐந்தே ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கொண்டு வந்து கொட்டுவார்கள் என்பது. 

ப.சி மீண்டும் 2004 ல் நிதியமைச்சரான உடனேயே அன்னிய மூலதன வரம்பை  49 % ஆக உயர்த்த வேண்டும் என்றார். எங்கள் சங்கம் நடத்திய நாடு தழுவிய இயக்கங்களால் உருவான கருத்தோட்டம் , ஆட்சிக்கு ஆதரவளித்த இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு இவை காரணமாக  அந்த முயற்சி தடைபட்டது.  ஆனாலும் இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு  2008 ல் அதற்கான மசோதாவை மீண்டும் கொண்டு வந்தார். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் நடத்திய வீரப் போராட்டம் காரணமாக மசோதா நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்குச் சென்றது.

பாஜகவின் யஷ்வந்த் சின்கா (ஆம்  அதே பழைய நிதியமைச்சர்தான்) தலைமையிலான  நிலைக்குழு  அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரையை நாடாளுமன்றத்திற்கு அளித்தது. அத்ற்குச் சொன்ன காரணம் மிகவும் எளிமையானது, ஆனால் உண்மையானது. 

உலகப் பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டு நிறுவனங்கள் சிக்கி தவிக்கையில் இந்திய மக்களின் சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அவர்கள் கைகளுக்குச் செல்வது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும். 

இன்சூரன்ஸ் பரவலை அதிகமாக்குவது, புதிய தொழில் நுட்பங்களை கொன்டு வருவது, புதிய பாலிசிகளை அறிமுகப் படுத்துவது என்று சொல்லப்பட்ட காரணங்கள் எதுவுமே தனியார் கம்பெனிகளால் நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகி விட்டது.

அதே போல பாலிசிதாரர் சேவை என்ற விஷ்யத்திலும் தனியார் கம்பெனிகள் மோசமாகவே இருக்கிறது. இறப்பு கேட்புரிமம் வழங்குவதில் அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை ஏராளம். குப்பைக் காரணங்கள் சொல்லி இறப்பு கேட்புரிமங்களை நிராகரிப்பது அன்றாடம் நடக்கிறது. தீவிரவாதிகளுடன் மோதினால் உயிர் போகும் என்று தெரிந்தே மும்பை தீவிரவாதிகளோடு சண்டையிடப் போனார் என்று சொல்லி காவல்துறை உயரதிகாரி ஹேம்ந்த் கார்கரேவின் கேட்புரிமத்தை நிராகரித்தது ஒரு தனியார் கம்பெனி. 
 

அன்னிய மூலதனத்தை உயர்த்த வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூலதனத்திற்கான உடனடி தேவை இருக்கிறது. அன்னிய கம்பெனிகளின் மூலதன அளவை அதிகரித்தால் மட்டுமே மூலதனம் கிடைக்கும்.

இரண்டாவதாக சொல்வது அன்னிய மூலதன வரம்பை அதிகரித்தால் வெளிநாட்டிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கொட்டும். உடனடியாக அறுபதாயிரம் கோடி ரூபாய் வரும்.

இவை எல்லாம் எப்பேற்பட்ட ஏமாற்று வேலை தெரியுமா?

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமானால் இப்போதுள்ள 74:26 என்ற விகிதத்திலேயே அதிகரித்துக் கொள்ள முடியும். உதாரணமாக பஜாஜ் அலையன்ஸ் என்று வைத்துக் கொள்வோம். கூடுதலாக ஐம்பது கோடி ரூபாய் மூலதனம் போட வேண்டுமென்றால் பஜாஜ் முப்பத்தி ஏழு கோடியும் வெளிநாட்டு அலையன்ஸ் பதிமூன்று கோடியும் முதலீடு செய்யலாம். ஆகவே அன்னிய மூலதன வரம்பை உயர்த்தினால் மட்டுமே மூலதனத்தை அதிகரிக்க முடியும் என்று சொல்வது பித்தலாட்டம்.

அடுத்த படியாக புதிதாக பங்குகளை வெளியிடுவதன் மூலமும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர்கள் தயாராக இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக இன்சூரன்ஸ் வணிகம் செய்தும் இன்னும் லாபத்தை தொட்டுப் பார்க்காத தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பங்குகளை வாங்குவதற்கு இந்திய முதலீட்டார்களும் அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் அவ்வளவு மூடர்களா என்ன? பங்குச்சந்தை சூதாடிகளின் “உள்ளே வெளியே” சூதாட்டத்தில் சாதாரண முதலீட்டாளர்கள் வேண்டுமானால் பாதிக்கப்படுவார்களே தவிர பிணந்தின்னிக் கழுகுகள் அல்ல.

அடுத்த படியாக வெளிநாட்டு நிறுவனங்கள் கோடிகளாக கொட்டுவார்களா?

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் போது யஷ்வந்த் சின்கா என்ன சொன்னார் தெரியுமா?

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதித்தால் அவர்களது வெளிநாட்டுக் கூட்டாளிகள் மூலமாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும். அதைக் கொண்டு இந்தியாவையே தலைகீழாக புரட்டி விடலாம். இதிலும் ஒரு மோசடி ஒளிந்திருக்கிறது. இன்சூரன்ஸ் கம்பெனி துவக்குவதற்காக போடப்படுகிற மூலதனத்தை வைத்து அரசு எதுவும் செய்ய முடியாது. கம்பெனி திரட்டுகிற பிரிமிய வருமானத்தை ஒரு வேளை எல்.ஐ.சி போல அரசின் பத்திரங்களில் முதலீடு செய்தால் அதை வைத்து அரசு செலவழிக்க முடியும். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பங்குச்சந்தையைத் தவிர வேறு எங்கும் அவர்களின் பிரிமிய வருமானத்தை முதலீடு செய்வதில்லை.  மூலதனத்தை வைத்து ஒரு பத்து பைசா மிட்டாய் கூட வாங்க முடியாது. ஆனாலும் சொன்னார்கள், இப்போதும் சொல்கிறார்கள்.

சரி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வந்ததா?

இருபத்தி மூன்று தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு கம்பெனிகளோடு கூட்டணி வைத்துள்ளது. டாடா முதலில் ஏ.ஐ.ஜி யோடு கூட்டணி வைத்திருந்தது. இப்போது அதை கழட்டி விட்டு விட்டது வேறு கதை. சரி எவ்வளவு மூலதனம் இந்த பதினான்கு ஆண்டுகளில் வந்துள்ளது தெரியுமா?

வெறும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மட்டுமே. யஷ்வந்த் சொன்ன ஒன்றரை லட்சம் கோடியில் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே. அப்படியென்றால் இப்போது மட்டும் எவ்வளவு வந்து விடப் போகிறது?

அடுத்து மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

அன்னிய மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தப் போவதால் எந்த ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனமும் அதிகரிக்கப் போவதில்லை.

இந்த மசோதா நிறைவேறுமானால் இந்திய முதலாளிகள் தங்களிடம் உள்ள 74 % பங்குகளில் 23 % பங்குகளை அன்னியக் கூட்டாளிகளுக்கு விற்று அவர்களுடைய பங்குகளை 49 % ஆக உயர்த்தி விடுவார்கள். இந்திய முதலாளிகளின் கஜானாவிற்கு மட்டுமே பணம் செல்லுமே தவிர அந்த பணம் அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கே வரப் போவதில்லை. 

ஆனால் அதே நேரம் ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி திரட்டும் மக்களின் பிரிமிய வருமானத்தில் 49 % தொகையின் கட்டுப்பாடு வெளிநாட்டு கம்பெனிகளுக்குச் சென்று விடும். எந்த திடமான, திரவமான பொருளையோ உற்பத்தி செய்து விற்பதல்ல. இன்சூரன்ஸ். ஏதேனும் நிகழ்ந்தால் குறிப்பிட்ட பலன் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையை காகித வடிவில் விற்பதுதான் இன்சூரன்ஸ்.

தங்களின் சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்த புகழ் பெற்றவை, நிர்வாகக் கோளாறுகளால் தடுமாறுபவை வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்களா? இல்லை என்பதே உலக அனுபவம்.

ஆனாலும் அவர்களுக்கு அடிபணிந்து விட்டது மோடி அரசாங்கம். அதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஏராளமான பொய்களை சொல்லி வருகிறது.

பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்தானே….

பின் குறிப்பு ; இந்த மசோதாவில் இன்னொரு மோசமான ஷரத்து உள்ளது. ஒரு தொழிற்சங்க வகுப்பிற்காக இன்று இரவு கோவை செல்கிறே. அது பற்றி செவ்வாய்க் கிழமை எழுதுகிறேன்.