Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Wednesday, March 25, 2026

கடுப்பிலிருந்து விடுபட விவால்டி அற்புதம்

 


மாறுதலாக ஒரு இசைப் பதிவு.

முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வளர்ந்த வயலின் கலைஞர்களுக்கு நிகராக அந்த சிறுவன் பியானோ வாசிப்பது அற்புதமாக உள்ளது.

அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும். 

எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி  உதவிகரமாக இருந்தது.

பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்? 

விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது. 

விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.

Saturday, April 26, 2025

மிருதங்கச் சக்ரவர்த்தியும் பேபியும்

 





சில வருடங்கள் முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். மிருதங்கச் சக்ரவர்த்தி என்ற நடிகர் திலகத்தின் படத்தில் அவருக்காக மிருதங்கம் வாசித்த இசை மேதை சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமன் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

 

தோழர் எம்.ஏ.பேபியின் இசை ஞானம் பற்றியும் திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மத நல்லிணக்கச் சிந்தனையைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் கட்டுரை இது. 

Wednesday, January 6, 2016

சக்ரவர்த்திக்கு பேபி பாராட்டு

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மிருதங்கச் சக்ரவர்த்தியான திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களது எண்பதாவது பிறந்த நாளை ஒட்டி அவரைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் தேசாபிமானி நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. 

திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் இசையை கேட்டு மகிழ்ந்துள்ளேன். அவரது சிறந்த குணம் பற்றி இக்கட்டுரை மூலமே அறிந்து கொண்டேன். 

அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.

தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்குள் இருக்கிற கலா ரசிகனையும் இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்.




 காவிரிக் கரையின் நாதப் பிரவாகம்


                                                                                     எம்.ஏ.பேபி

 தனது பயணத்தை ஆர்ப்பரித்துத் துவங்கும் காவிரி தமிழக எல்லையைத் தொடும் போது சாந்தமாக ஓடிவருகிறாள். அதன்பின் சமதளங்களில் தனது அமைதியான பயணத்தைத் தொடர்கிறாள். அது ஒரு அழகிய காட்சியாகும். அதேபோல் காவிரி கரையோரம் அமைந்துள்ள உமையாள் புரத்திலிருந்து எழும் மிருதங்கநாதம் சாந்தமும் அழகும் நிறைந்ததாகும். நாதத்தின் பரிணாமங்கள் உமையாள்புரம் சிவராமனின் விரல்களின் வாயிலாக உயிர்த்தெழுகிறது. ஒரு சங்கீத பிரவாகம் போல் அனுபவிக்கக்கூடிய மிருதங்கநாதம்.

கர்நாடக சங்கீதத்தின் சாந்தமான அகநிலை அழகை மிருதங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தும் கலைஞனாக இந்த 80 வயதுக்காரர் இன்றும் நம்முடன் இருக்கிறார். ஆன்மாவுக்குரிய இன்ப - துன்பங்கள் மூலம் பெறும் ஒரு கலை அனுபவமாகும் உமையாள்புரத்தின் மிருதங்கநாதம். கச்சேரியின் இறுதியில் இசைக்கப்படுவது எனக் கருதும் ‘தனியாவர்த்தனம்‘ பலரது கைகளில் காதைப் பிளக்கும் வெடிச் சத்தமாகும். ஆனால் காவிரி பிரவாகம் போல் சாந்தமாகத் துவங்குகிறது உமையாள்புரத்தின் தனியாவர்த்தனங்கள். 

தாளத்தின் தாழ்ந்தும், உயர்ந்துமுள்ள நாதத்தின் சுகமான புயலை உருவாக்கி, நிறை செய்து ஒன்றும் நடக்காததுபோல் அவர் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பவர்கள் அதிசயித்துப் போவார்கள்.கர்நாடக இசைக் கச்சேரிகளின் பொற்காலமான இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் பெரும் புகழ்பெற்ற பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்ததன் மூலம் உமையாள்புரம் இசை உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார், 

முசிறி சுப்பிரமணிய ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், அரியாக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், எம்பார் விஜயராகவாச்சாரி, சாத்தூர் கிருஷ்ணன், பல்லடம் சஞ்சீவராவ், பாப்பா வெங்கிடராமையா, துவாரம் வெங்கிடசாமி நாயுடு, டின்.என்.ராஜரத்தினம் பிள்ளை, முடிகொண்டான் வெங்கிடராம ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடி சீனிவாச ஐயர், வி.சௌடய்யா ஆகியோருக்கு மிருதங்கம் வாசித்தபோது உமையாள்புரம் இளைஞனாக இருந்தார்.டாக்டர் பி.காசிவிஸ்வநாத ஐயர், கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாகப்பிறந்த சிவராமனுக்கு சிறந்த கல்வி கிடைத்தது. இளங்கலை பட்டமும், சட்டப்படிப்பும் பயின்ற பின்புதான் அவர் முழு நேரமும் இசைக்கென செலவிடத் துவங்கினார். காசிவிஸ்வநாத ஐயர் டாக்டராக இருந்த போதிலும் ஒரு சிறந்த இசை கலைஞராகவும் விளங்கினார். வாய்ப்பாட்டு மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கமும் நன்றாக வாசிக்கக் கூடியவராகத் திகழ்ந்தார். இசைக் கலைஞர்களுக்கு மருத்துவம் பார்ப்பவர் என்ற முறையில் அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

 கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய திருக்கொடிக்காவல் கிருஷ்ணய்யரின் சீடர்தான் காசி விஸ்வநாத அய்யருக்கு இசை பயிற்றுவித்தார். காசிவிஸ்வநாத அய்யரின் வீடு விருந்தினர்களாக வந்த இசைக் கலைஞர்களால் எப்போதும் மனமகிழ்ச்சி தருவதாகவே இருந்தது.இசையால் நிரம்பி வழிந்தது. இத்தகைய சூழலில்தான் சிவராமன் வளர்ந்தார். அவ்வாறு சங்கீதத்தை விட்டுப் பிரிய இயலாத உறவு அங்கு துவங்கியது. பெரிய இசைக் கலைஞர்கள் வீட்டின் பால்கனியிலிருந்து பாடும் வேளையில் சிறுவனான சிவராமன் அருகில் உள்ள ஏதாவது ஒன்றில் தாளம் தட்டித் துவங்குவார். இதைக் கவனித்த அவரது பாட்டி சிவராமனுக்கு ஒரு கஞ்சிராவைப் பரிசாக வழங்கினார். தாளமிடுவதில்தான் சிவராமனுக்கு விருப்பம் என்பதைக் கண்டுகொண்ட அவரது தந்தை அவரை மிருதங்கத்தின் பக்கம் திருப்பிவிட்டார். பின்னாளில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானாக மாறிய போதிலும் அவருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், விமர்சகராகவும் விளங்கியது அவர் தந்தையே.சிவராமனின் ஏழாவது வயதில் ஆறுபதி நடேச ஐயர்தான் அவருக்கு மிருதங்கத்தின் பாலபாடங்களைக் கற்றுக் கொடுத்தார். 

1945ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள காளகஸ்தீஸ்வரசுவாமி கோவிலில் அரங்கேற்றம் நடைபெற்றது. அன்று கும்பகோணம் சீனிவாச அய்யரின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தார். 

தொடர்ந்து தஞ்சாவூர் நடையில் மிருதங்கம் வாசிப்பதில் வல்லவரான தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வாயிலாக மேலும் பல பாடங்களை கற்றறிந்தார் சிவராமன். சங்கீதத்தின் அறிவு உலகம் சிவராமனுக்கு தனது கதவுகளைத்திறந்துவிட்டது. 1948ல் வைத்தியநாத ஐயர் காலமான பிறகு பாலக்காடு மணி ஐயரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். மிருதங்கத்திலிருந்து சரியான நாதத்தை வெளிக்கொணரும் உத்திகளை மணி ஐயரிடமிருந்து கற்றுக் கொண்டார். அதன்பிறகு கும்பகோணம் ரகு ஐயரிடம் பாடங்கள் பயின்றார். இந்த காலகட்டத்தில் பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தார்.16ம் வயதில் சிவராமன் தனது தாயை இழந்தார். 1951-ல் மணி ஐயரின் ஆலோசனைப்படி தனது வசிப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி மகாதேவ பாகவதரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். 

தனது சொந்த கல்விக்குச் செலவழித்ததைவிட அதிக நேரம் தனது குருமார்களுடன் செலவழித்து கலை ஆய்வு நடத்தினார் சிவராமன். மூத்த வழக்கறிஞர்களின் கீழ் இளைய வழக்கறிஞர்கள் பயிற்சி பெறுவது போலத்தான் இதுவும் என்று ஒரு வழக்கறிஞருமான உமையாள்புரம் ஒருமுறை குறிப்பிட்டார். உங்களுக்கு வழக்கறிஞர் வேடம் தேவையில்லை என்று அவரது நலம் விரும்பிகள் கூறினார்கள். அதில் வழக்கறிஞர்களும், இசைக் கலைஞர்களும் உட்படுவர். மிருதங்கம் வாசிப்பதில் உறுதியுடன் நின்றால் பல உயரங்களைத் தொட இயலும் என்று அவர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தினர். அது உண்மையானது என்று இன்று உமையாள்புரம் கருதுகிறார்.உமையாள்புரம் கையாண்ட முறைகள் மிருதங்கநாதத்தின் அடையாளங்களாக மாறின. பெரிய அளவில் உடல் அசைவுகள் இல்லாமலேயே மிகச் சிறந்த நாதத்தை வழங்குவதே அவரது முறையாக இருந்தது. மிருதங்கத்திலிருந்து எழ வேண்டியது நாதம்தான். மாறாக, வெடி ஓசை அல்ல என்ற நம்பிக்கைதான் அவரை முன்னோக்கிச் செலுத்தியது. தாளம் ஒரு இரைச்சல் அல்ல, அது நாத அதிசயமாகும் என்பதை உணர்த்துவதற்குத்தான் உமையாள்புரம் முயற்சித்தார்.

 மிருதங்கத்தைக் கையாளும் முறையும், நிசப்தமும் இடையிடையே உள்ள அதிர்வுகளும் அவரது மிருதங்க வாசிப்பிற்கு மெருகூட்டுகின்றன. பாடகர்களின் திறமையை மேலும் வெளிக்கொணர்வதுதான் உமையாள்புரம் என்ற பக்கவாத்தியக்காரரின் தனிச்சிறப்பு.தாளவாத்தியம் என்றில்லாமல், ஒரு நாதவாத்தியமாகத்தான் மிருதங்கத்தை உமையாள்புரம் கருதுகிறார். 


அவர் மிருதங்கத்தின் வாயிலாக இசையை வெளிப்படுத்துகிறார். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பாடகருக்கு முழுமையான சங்கீத ஆதரவும், மிருதங்கக் கச்சேரி நடத்தும்போது மிருதங்கத்தின் மூலமாக ஒரு சங்கீதக் கச்சேரியையும் அவர் லட்சியமிடுகிறார். தனது நடையை ‘சிவராமன் பாணி’ என்று அவர் கூறுகிறார்.கற்பனை வளத்தின் சங்கீத சொரூபமான எம்.டி.ராமநாதனுக்கும், அரியாக்குடியன் ப்ரியப்பட்ட சீடரான பாலக்காடு கே.வி.நாராயணசாமிக்கும் உமையாள்புரம் மிருதங்கத்தை அர்ப்பணிப்பது ரசிகர்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அனுபவமாகும். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் நடைபெற்ற 

செம்மங்குடியின் ஒரு கச்சேரி எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு சங்கீத அதிசயமாகும். மிகப் பெரிய பாடகரின் ஆலாபனைத் திறமையோடு ஒத்திணைந்தும், சல்லாபித்தும் இசைக்கும் லால்குடியின் வயலினும், உமையாள்புரத்தின் மிருதங்கமும் சேரும்போதுதான் ஒன்றுக்கொன்று ஒப்பிட இயலாத அனுபவங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.சமூகத்தில் ஏற்படும் சலனங்களைக் கவனிப்பதற்கும், அன்பால் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உமையாள்புரம் தயாரான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

 சென்னையில் நடைபெற்ற கியூபா ஆதரவு மாநாட்டின் துவக்கமாக உமையாள்புரம், வழங்கிய மிருதங்கவாசிப்பை ‘மிருதங்க சக்கரவர்த்தியாக நடித்த சிவாஜிகணேசன் உள்பட சபையினரின் இடைவெளியில்லாத கைதட்டலைப் பெற்றது. அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதலாவது மதச்சார்பற்ற கலாச்சார சங்கமத்திலும் உமையாள்புரம் தனது தாள அர்ச்சனையுடன் பங்கேற்றார்.மதவாதம் சமூகத்தில் ஏற்படுத்திய மாபெரும் தவறை திருத்திக் கொள்வதற்கு தனது மிருதங்க இசையொலியின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.நாடு பத்மவிபூஷன் விருது வழங்கி உமையாள்புரத்தை கவுரவித்தது. அதற்கும் முன்பு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. 2001ல் கர்நாடக சங்கீதத்தின் பெருமைக்குரிய விருதான ‘சங்கீதகலாநிதி’ விருதை மதறாஸ் மியூசிக் அகாதெமி உமையாள்புரத்திற்கு வழங்கிச் சிறப்பித்தது. கேரள பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 

மத்திய அரசின் சங்கீத - நாடக அகாதெமியின் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், அங்கீகாரத்தையும் அவர் பெற்றுள்ளார். கடைசியாக ‘ஸ்வரலயா’ விருதும் அவரைத் தேடி வந்தது. உலகெங்குமுள்ள இந்திய சங்கீத கலா ரசிகர்களுக்கு முன்னால் அவர் மிருதங்கம் வாசித்துள்ளார். கடந்த டிசம்பர் 17 அன்று 80 வயதைத் தொட்ட உமையாள்புரத்தின் இசைச் சேவை மேலும் அதிக காலம் இவ்வுலகிற்குக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.



Thursday, April 10, 2025

அந்த அரசியல்வாதியும் இசை ஞானமும்

 


சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவின் முகநூல் பதிவொன்று மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதனை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்.

"திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிச் சொல்ல என்னிடம் ஒரு கர்னாடகக் கதை ஒன்று உள்ளது.

திரு ஆர்.எம்.வீரப்பன் பல கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு தொடர்ச்சியாக வருபவர்.

நான் புதுமுகமாக இருந்த காலத்தில் என்னுடைய கச்சேரி ஒன்றுக்கு வந்திருந்தார். அந்த கச்சேரியில் நீலகண்ட சிவன் முகாரி ராகத்தில் உருவாக்கிய "இன்றைக்கு சிவ கிருபை வருமோ?" என்ற கீர்த்தனையை பாடினேன். 

கச்சேரி முடிந்ததும் மேடைக்கு வந்து என்னை பாராட்டிய அவர் "சிவ கிருபை வருமோ" கீர்த்தனையின் அனு பல்லவி வரிகளை சொல்லச் சொன்னார். பாதியில் நிறுத்திய அவர், நான் எங்கே தவறு செய்தேன் என்று சுட்டிக் காட்டி "இந்த கீர்த்தனையை முசிறி பாடி கேட்டுள்ளீர்களா?' என்றும் கேட்டார். அதனை நான் கேட்க வேண்டியது அவசியம் என்பதை அவர் நாசூக்காக சொன்னார்.

கர்னாடக இசைக் கலைஞர்களான எங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்றொரு கருத்து உண்டு. அது எவ்வளவு தவறான கருத்து என்பதை இச்சம்பவம் உணர்த்தியது." 

இந்த சம்பவத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே இசை ஞானம் கொண்ட இன்னொரு அரசியல் வாதி நினைவுக்கு வந்தார். மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் பற்றி அவர் எழுதிய கட்டுரையைக் கூட இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த அரசியல்வாதி யார்?

அவர்

தோழர் எம்.ஏ.பேபி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர்.

பிகு :  அவருக்கு வாழ்த்து தெரிவித்தோ, மதுரை போய் விட்டு வந்தது பற்றி கூட இன்னும் எழுதவில்லை என்பதும் இப்போது நினைவுக்கு வந்தது. எழுதுவேன்.  

Monday, December 16, 2024

வாஹ்! ஜாகீர் …

 


உலகெங்கும் இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்த தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் காலமாகி விட்டார்.

 தாஜ் மஹால் டீ விளம்பரத்தில்தான் அவரை முதன் முதலில் பார்த்துள்ளேன். அதி வேகமாய் நடனமாடும் விரல்களும் னெற்றியில் அலைபாயும் தலைமுடியும் புன்னகைத்த முகமுமாய்  உள்ளத்தை கவர்ந்தவர். வாஹ்!தாஜ் என்ற அந்த விளம்பரத்தை யாரால் மறக்க முடியும்.



 எப்போதும் சோம்பி வழியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பான நிகழ்வாக அவரது தபேலா நாதம் ஒலிக்கும்.

 


ஒரே ஒரு முறைதான் அவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

 அது திருவையாறு தியாகராஜ உத்சவம். மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரி அது.

 அந்த நிகழ்ச்சியில் தபேலாவில் ஜாகீர் உசேனும் தவிலில் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுவும் நடத்திய தனி ஆவர்த்தனம் காலம் முழுதும் நெஞ்சில் நிலைக்கும்.

 அதன் இரு  காணொளிகள்  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 




ஒரு குழந்தை தன் தந்தையின் தலையில் தபேலா வாசிக்கும். அதுதான் ஜாகீர் உசேன் ஏற்படுத்திய தாக்கம்.

 அவருடைய அப்பா உஸ்தாத் அல்லாரக்கா, பண்டிட் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பவர். ஜாகீர் உசேனும் அவருக்கு வாசித்துள்ளார்,

 


தந்தையை மிஞ்சிய தனயானாக, சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஜாகீர் உசேன். தபேலா என்றால் முதலில் நினைவுக்கு வருபவரும் அவர்தான்.

 அவருக்கு மனமார்ந்த அஞ்சலி.

 

Wednesday, September 11, 2024

நான் ரசித்தது உங்களுக்கும் . . .

 


முக நூலில் நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி உங்களுக்காகவும், நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு . . .


அந்த குழந்தையின் முயற்சியையும் அதை விட அதன் உடல் மொழியையும் நான் வெகுவாக ரசித்தேன். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கலைஞனாக உருவெடுப்பான் என்று நம்புகிறேன். . .

Thursday, January 26, 2023

தேன் குரல் –விருது –பத்து பாடல்கள்

 


தேன் குரல் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது மகிழ்சியளித்தது.

அவரின் மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களை இன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த பாடல்களின் காணொளிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து தனிப் பாடல்களும் ஆண் பாடகர்களோடு இணைந்து பாடிய ஐந்து பாடல்களும் பகிர்ந்துள்ளேன். அவர் தேசிய விருது வாங்கிய “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலை இன்று நிறைய பேர் கேட்டிருப்பார்கள் என்பதால் அதை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளேன்.

நான் பெற்ற இசையின்பத்தை நீங்களும் பெறுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

 மல்லிகை என் மன்னன் மயங்கும்

 


 கண்டேன் எங்கும் பூமகள்

 

 

 

டி.எம்.எஸ் அவர்களோடு “இலங்கையின் இளங்குயில்”

 


யேசுதாஸ் அவர்களோடு “தங்கத்தில் முகமெடுத்து

 


ஜெயச்சந்திரன் அவர்களோடு “கண்ணன் முகம் காண”

 


எஸ்.பி.பி அவர்களுடன் “ஒரே நாள், உனை நான்

 

மலேசியா வாசுதேவன் அவர்களுடன் “ எங்கே நான் காண்பேன் என் காதலன்?"

 

வாணி ஜெயராம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பிகு: பத்து பாடல்களுக்கும் காணொளியை தரவிறக்கியிருந்தாலும் இரு பாடல்களைத் தவிர மற்ற பாடல்களில் காற்று மட்டுமே வந்ததால் யூட்யூப் இணைப்பையே வழங்கி விட்டேன்

Friday, May 21, 2021

நவகேரள கீதாஞ்சலி

 நவகேரள கீதாஞ்சலி

மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

பதிவிற்குக் கீழே காணொளியும் உள்ளது. அவசியம் கண்டு மகிழுங்கள்.




தோழர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னனியின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று கேரளத்தில் நடைபெற்ற பதிவியேற்பு விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் 53 பேர் பங்களிப்பு செய்த இசை ஆல்பம் ஒளிபரப்பப் பட்டது.

முப்பது நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் இ எம் எஸ் அவர்களின் உரையுடன் துவங்குகிறது. 1957ல் பதவியேற்ற முதல் அமைச்சரவையில் தோழர் இ எம் எஸ் பேசிய பேச்சின் குரல் பதிவு, “ நான் பிறந்த போது இருந்த கேரள சமூகமல்ல இப்பொழுது இருப்பது, நிறைய்ய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இம்மாற்றத்துக்கு நானும் சிறிய பங்களிப்பு செய்துள்ளேன்”.

நாராயண குருவின் வார்த்தைகள் இடம்பெறும் பாடல் துவங்குகிறது. மகாகவிகள் வள்ளத்தோள், உள்ளூர், வயலார், ராமவர்மா, பாஸ்கரன், இடைச்சேரி, கடம் மணிட்டா, மற்றும் தற்காலத்தின் சிறந்த கவி பிரபா வர்மா ஆகியோரின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

“நாங்கள் துவக்கிவைத்த, நல்ல வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலை எனது வாழ்நாளில் கிட்டாமல் போகலாம், அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஏனெனில் எமது தோழர்கள் அந்நிலையை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தோழர் ஏ.கே. கோபாலன் “எண்ட ஜீவித கதா” என்ற தன்னுடைய
சுயசரிதையின் இறுதி வரிகள் இடம்பெற்றுள்ளன.

”நாங்கள் அழமாட்டோம், நாங்கள் தோற்கமாட்டோம், நாங்கள் வெல்வோம்” என்ற பாடல், 
“நாங்கள் சோதரர்கள்…” என்ற பாடல்,

நிறைவாக “வளர்ந்த நாடுகளில் உள்ள வாழ்க்கை நிலை கேரளாவின் மக்கள் பெறவேண்டும். அதனை வரும் 25 ஆண்டுகளில் அடைவதற்க்கு வலிமையான அடித்தளம் அமைப்போம்” என்று கேரளத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு இடம்பெறுகிறது.

கேரள கம்யூனிச இயக்கத்தின் இரத்தசாட்சியான வரலாற்றுப் பக்கங்களை கவிதைகளாலும், காட்சிகளாலும், இசையாலும் நினைவுபடுத்துகிறது #நவகேரள_கீதாஞ்சலி

காணொளியை அவசியம் பாருங்கள்



Saturday, January 9, 2021

அனுபவிச்சு பாடறாரய்யா!




ஆன்மீக அரசியல் குறித்த நேற்றைய பதிவிற்கு திருவிளையாடல் படத்தின் "பாட்டும் நானே, பாவமும் நானே' பாடலின் காட்சியை எடுக்க அப்பாடலை பார்த்தேன். அப்பாடலை முழுமையாக பார்த்தேன். 

பாடலுக்கு நடிகர் திலகம் வாயசைத்துள்ளார். ஆனால் அவரே அனுபவித்து பாடியது போல அல்லவா இருக்கிறது! 

இந்த பாடலில் மட்டுமா? மற்ற பாடல்களில் எப்படி?

உடனடியாக நினைவுக்கு வந்த வேறு சில பாடல்களை பார்த்தேன்.

ஒரு இசை விற்பன்னர் அனுபவித்து பாடினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அனைத்து பாடல்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்துள்ளது, தொடையில் தாளம் போடுவது உட்பட.

நான் பெற்ற இன்பத்தை உங்களுக்கும் மகிழ்ச்சியோடு கடத்துகிறேன். பாடலோடு மட்டும் நிறுத்தாமல் தில்லானா மோகனாம்பாளின் "நகுமோமு" கீர்த்தனைக்கு வாசித்ததும் சேர்த்து. 


 








Wednesday, November 4, 2020

இப்போது அவர் மறைவு பேரிழப்பு

 வயலின் வித்தகருக்கு அஞ்சலி


வயலின் மேதை பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன். மூத்த தலைமுறைக் கலைஞர்களில் எஞ்சியிருந்தவர் அவர் மட்டுமே. 

வயலின் இசை மீது எனக்கு ஈர்ப்பு வருவதற்கான முக்கியக் காரணம் அவர்தான். கர்னாடக சங்கீதம் என்றால் அது ஜவ்வு மாதிரி மந்த கதியில் இசைக்கப்படுவது என்று மனதில் இருந்த எண்ணத்தை மாற்றியது திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் ஒரு காசெட்டை கேட்ட போதுதான். 

கல்யாணி ராகத்தில் தியாகராஜர் கீர்த்தனையான "ஏதா உண்ரா" வை அவர் வேகத்துடன் ஸ்வரங்களை பாட, அவருக்கு சற்றும் சளைக்காமல் வயலினில் திரு டி.என்.கிருஷ்ணன் பதிலளித்ததும் வயலின் என்ற இசைக் கருவியின் மீது நாட்டத்தை திருப்பியது.  மகனை வயலின் வகுப்புக்கு அனுப்புவதற்கான வித்து இவரிடமிருந்துதான் கிடைத்தது.

அந்த பாடலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். முழுமையாக கேளுங்கள். கர்னாடக சங்கீதம் அறியாதகவர்களுக்குக் கூட புது அனுபவமாக இருக்கும்.




திருவையாறு தியாகராஜர் விழாவில் அவர் வாசித்த "நகுமோ"


கீழே உள்ள காணொளி மிகவும் முக்கியமானது. கிறிஸ்துமஸ் தினத்தன்றும் அதற்கு முதல் நாளும் அவர் கண்டிப்பாக "ஜிங்கிள் பெல்ஸ்" வாசித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது அவர் வழக்கம்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக இருந்த அவர் மறைவு இன்றைய சமூக சூழலில் பெரும் இழப்பு என்பதை கர்னாடக இசை ரசிகர்கள் அல்லாதவர்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.


ஜிங்கில் பெல்ஸ் கேளுங்கள் 




Friday, April 17, 2020

இளம் கலைஞனின் எழில் ஓவியங்கள்


















மேலே உள்ள ஓவியங்களை வரைந்த ஓவியர் கீழே உள்ளார்.




எங்கள் புதுவை 2 கிளையில் பணியாற்றும் தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி.

ஏழாவது படிக்கும் இச்சிறுவன் கறுப்பு வெள்ளை நிறங்களை பயன்படுத்தி வரையும் ஓவியங்கள் அபாரமாக உள்ளது. 

மேலும் கீ போர்டில் வாசிக்கும் திறனும் உள்ளது. யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

எதிர்காலத்தில் உயரங்களை தொட வாழ்த்துக்கள்

Saturday, April 11, 2020

இசை விருந்து மட்டுமல்ல



பண்டிட் ரவிசங்கரின் 100 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மகளும் மற்ற சீடர்களும் அளித்த ஒரு இசை விருந்தை காலையில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அதைப் பார்த்து விட்டு எங்கள் புதுவை கிளை 1 தோழர் ஆர்.மனோகர் கீழே உள்ள காணொளியை வாட்ஸப்பில் அனுப்பி இதுவும் உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அந்த அற்புதமான காணொளியை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். காணொளிக்கு கீழே பகிர்ந்து கொண்டுள்ள  சில கருத்துக்களையும் பார்த்து விடுங்கள்.




இந்த இசை நிகழ்ச்சி 1967 ல் அமெரிக்காவில் நிகழ்ந்தது. முழுமையாக பார்ப்பதற்கான காணொளி இணைப்பு இங்கே உள்ளது

இந்த நிகழ்வில் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பது உஸ்தாத் அல்லா ரக்கா.  ஜாகீர் உசேனின் தந்தை மற்றும் குரு என்றால் இன்றைய தலைமுறைக்கு எளிதாய் புரியும்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக இதைப் பார்க்கிறேன். இந்தியாவின் இரண்டு ஒப்பற்ற கலைஞர்கள் மதம் கடந்து இசைக்க, அமெரிக்கர்கள் அதிலே கட்டுண்டு கிடக்கிறார்கள். நிகழ்வு முடிந்ததும் ஒரு நிமிடத்திற்கும் மேல் நீடிக்கிற ஆரவாரம் அதற்கு உதாரணம். 








எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் விஸ்வநாதரும் கங்கையும் இருக்கிற வாரணாசியை விட்டு வெளியே என் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்ற ஷெனாய் இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கானை நம்மால் மறக்க இயலுமா?

இந்த ஒற்றுமையை, இந்த பன்முகத் தன்மையை இந்த சோதனைக் காலத்திலும் சிதைக்க முயல்கிற காவிகளின் வெறியூட்டலுக்கு நாம் இரையாகப் போகிறோமா?

இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும். 

இன்றைய காலை இசையோடு இனிமையாய் . . .


இன்றைய காலை இசையோடு இனிமையாய் தொடங்கியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர் அனுப்பியிருந்த காணொளி அவ்வளவு சுகானுபவம். 

ஏப்ரல் ஏழாம் தேதி இந்திய இசை மேதை பண்டிட் ரவிசங்கரின் 100 வது பிறந்த நாள். அதை ஒட்டி அவர் மகள் அனுஷ்காவும் மற்ற சீடர்களும் பண்டிட் ரவிசங்கர் உருவாக்கிய "சந்தியா ராகத்தை" சிதார் மற்றும் சில இசைக் கருவிகள் மூலம் அளித்திருந்தார்கள்.




காலை ஏழு முப்பது மணியிலிருந்து இதை எழுதும் வரை மூன்று முறை பார்த்து விட்டேன். 

அந்த அளவிற்கு என் மனதை ஆக்கிரமித்து விட்டது இந்த இசை. 

அவசியம் பாருங்கள். நிச்சயம் உங்கள் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்.


Sunday, May 12, 2019

எம்.எஸ்.வி, கண்ணதாசன் மே, மே




கீழேயுள்ள செய்தியை நீண்ட நாட்கள் முன்பாகவே இயக்குனர் திரு ஏ.சி.திருலோக்கசந்தர் அவர்களின் கட்டுரைத் தொடரில் படித்தது நினைவில் உள்ளது.

1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான " அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை. மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் MSV கவிஞரை பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார்.

கவிஞர் கடுப்பாகி என்னடா விச்சு எப்ப பார்த்தாலும்  மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட இந்தா போட்டுக்கோ பல மே என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும் மாதிரி எழுதினார் கவிஞர்.

இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!



பாடலின் காணொளி இணைப்பு  இங்கே உள்ளது

இப்போது இன்னொரு தகவல் உலா வருகிறது.

கர்ணன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே சிறப்பானது. அதிலே மிகவும் இனிமையானது “இரவும் நிலவும் மலரட்டுமே!”

அந்த பாடல் உருவானது பற்றி இப்போது உலவும் தகவல் கீழே

அந்த பாடல் கம்போஸிங்கிற்காக மெல்லிசை மன்னர் கவியரசரை அழைத்துள்ளார். இன்று மே தினம். எனக்கு விடுமுறை நாள் வர முடியாது என்று மறுத்துள்ளார். எம்.எஸ்.வி விடவில்லை. கவிஞரின் வீட்டிற்கே சென்று அடம் பிடித்து அவரை அழைத்துச் சென்றுள்ளார். மே தின விடுமுறையை கெடுத்து விட்டாயே என்று சொல்லி விட்டு ஒவ்வொரு வரியும் “மே” யில் முடிவது போல எழுதிக் கொடுத்து விட்டார்.

இத்தகவல் உண்மையா என்று சொல்ல இருவரும் இல்லை. கர்ணன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே பெங்களூரில் ஒரு விடுதியில் தங்கி ஒரு வார காலத்தில் எழுதப்பட்டது என்றும் படித்துள்ளேன். அத்தகவல் உண்மையாயிருக்கும் பட்சத்தில்  மேதினத்தன்று  எழுதப்பட்டது என்பது தவறு.

எது எப்படி இருந்தால் என்ன?



அந்த இனிமையான பாடலை இன்னொரு முறை கேளுங்களேன்.

காணொளி இணைப்பு  இங்கே உள்ளது