Showing posts with label சி.பி.ஐ. Show all posts
Showing posts with label சி.பி.ஐ. Show all posts

Friday, February 27, 2026

மோடிஷா அரசியல் செய்ய முடியாதே ஜட்ஜய்யா?

 


ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி உயர் நீதிமன்றம் ஊழல் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவித்துள்ளது. 

மோடி, அமித்ஷாவின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வரும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளுக்கு கிடைத்த சவுக்கடி இத்தீர்ப்பு.

தென் பகுதி மக்களை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு வேறு குட்டு வைத்துள்ளது. 


சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை இனியாவது தங்களது சுயேட்சைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அடிமைகளாய் இருப்பதை நிறுத்த வேண்டும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே மோடி-அமித்ஷா வகையறாக்களின் வாஷிங் மிஷின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


Friday, February 23, 2024

உண்மையைச் சொன்னால் சி.பி.ஐ ரெய்டு

 


ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது ஆளுனராக இருந்த சத்யபால் மாலிக்   வீட்டை     சி.பி,ஐ  ரெய்ட் செய்துள்ளது.

அப்படி என்ன தவறு செய்தார் அவர்?

சாதாரண தவறா அது?

 புல்வாமாவில் 44 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்கள் கொல்லப்பட்டது நினைவில் உள்ளதா? அதையே ஆயுதமாக்கி      மோடி தேர்தலில் வென்றதும் நினைவில் உள்ளதா?

 தீவிரவாதத்தாக்குதல் நடைபெறைவுள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்த போதும் மோடி அதை அலட்சியம் செய்து வீரர்களின் உயிர் பறிக்க காரனமாக  இருந்தது மோடி என்ற உண்மையை      சொன்னவர் அவர்.

 குடியரசுத்தலைவர் ஆட்சி  அங்கே நடந்து கொண்டிருந்த போது அரசு ஊழியர்களுக்காக ஒரு      குழுக் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் ஒரு டுபாக்கூர் திட்டத்தை ரிலையன்ஸ் அம்பானி கொண்டு வர இவரோ அதனை ரத்து செய்து விட்டார்.

 இது போதாதா?

 புல்வாமா பற்றி பேசாதே என்று மோடியும் அமித்ஷாவும் உத்தரவு போட்ட பின்பும் கூட அதைப்பற்றி பேசினால் தன் வர்லாற்றில் எழுதினால் அதுவும் தேர்தல் நேரத்தில் பேசினால் சி.பி.ஐ ரெய்டு வராமல் பாரத ரத்னா விருதா கொடுப்பார்கள்?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

 

Saturday, December 16, 2023

அமலாக்கப்பிரிவென்ன பெரிய அப்பாடக்கரா?

 


அமலாக்கப்பிரிவு அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறையால் கைது செய்யப்பட்டது நினைவில் உள்ளதா?

அந்தாளை தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை விசாரிக்கக் கூடாது, சி.பி.ஐ தான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு சங்கி வழக்கு போட, சென்னை உயர்நீதிமன்றமோ "கைது செய்த தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை" தான் விசாரித்து வழக்கை நடத்த வேண்டும். சி.பி,ஐ விசாரணையெல்லாம் கூடாது என்று தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.

ஆமாம். சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு அதென்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

எதற்கு சி.பி.ஐ விசாரணை கேட்கிறார்கள் என்பதை யூகிப்பது சுலபம்.

ஒரே முதலாளியின் ஏவல் நாய்கள்தான் சி.பி.ஐ யும் அமலாக்கத்துறையும்.

அதனால் வழக்கிற்கு சமாதி கட்ட சி.பி.ஐ யால் முடியும் என்பதற்காகத்தான். . .

Thursday, September 8, 2022

மோடியின் ஏவல் நாயாய் . . .

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி.

நேற்று வருமான வரித்துறை புது டெல்லியில் மூன்று இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. வேலுமணி, தங்கமணி போல ஊழல் மந்திரிகளின் வீடுகளில் அல்ல.

OXFAM INDIA

CENTRE FOR POLICY RESEARCH

PUBLIC SPIRITED MEDIA FOUNDATION.

இந்த மூன்றுமே தன்னார்வ அமைப்புக்கள். 

இதிலே OXFAM அமைப்பு உலக அளவில் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தரும் அமைப்பு. அதன் அறிக்கைகள் பல முறை பொருளாதார வளர்ச்சி குறித்து மோடி சொன்ன பொய்களை தகர்த்துள்ளது.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள், உரைகள் ஏற்பாடு செய்வது இரண்டாவது அமைப்பு.

இன்னமும் விலை போகாத இணைய தள இதழ்களுக்கு நிதி திரட்டுவது மூன்றாவது அமைப்பு.

இப்படியெல்லாம் சுயேட்சையான அமைப்புக்கள் செயல்படலாமா? அதனால்தான் மோடி தன் ஏவல் நாயான வருமான வரித்துறையை அங்கே ஏவி விட்டார்.

அதே போல மோசமான ஏவல் நாயாக மாறிப்போன இன்னொரு நிறுவனம் சி.பி,ஐ.  கண்ட நாயெல்லாம் அதற்கு மொட்டை பெட்டிஷன் அனுப்பும் அளவிற்கு அதன் மதிப்பு அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

Sunday, December 13, 2020

அந்த C.B.I யே திருடினா?

 


முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரு நிறுவனத்தை சீல் வைத்து அதன் கைவசமிருந்த  400 கிலோ தங்கத்தை லாக்கரில் வைத்து பூட்டி பாதுகாத்து ஜாக்கிரதையாக வைத்துள்ளது சி.பி.ஐ.

அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்காக அந்த தங்கத்தை கேட்டது எஸ்.பி,ஐ. சி.பி.ஐ மறுத்தது. நீதிமன்றத்திற்கு பிரச்சினை போக பல வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை ஸ்டேட் வங்கி எடுத்துக் கொள்ள தீர்ப்பு வந்தது.

72 சாவிகள் கொண்டு பூட்டப்பட்ட லாக்கரை திறந்து பார்த்தால் 300 கிலோ தங்கம் மட்டுமே இருந்துள்ளது. எடை மெஷினில் தவறு இருந்திருக்கலாம் என்பதே சி.பி.ஐ வாதம்.

ஊரெங்கும் நடக்கும் ஊழலை விசாரிக்கும் சி.பி.ஐ யே செய்த திருட்டை விசாரிக்க சி.பி சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். எங்களை இன்னொருவர் விசாரிப்பதா என்ற சி.பி.ஐ க்கு உங்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது என்று கேட்டுள்ளார் நீதிபதி.

சி.பி.ஐ இந்த அளவிற்கு சீரழிந்ததற்கு யார் காரணம்?

நாகேஸ்வரராவ் மாதிரியான பொறுக்கிகள் எல்லாம் தலைவராக இருந்தால் சி.பி.ஐ வேறெப்படி இருக்கும்!

பிகு: இந்த திருட்டு வேலை நடந்தது சென்னையில். தமிழகத்திற்கு எப்பேற்பட்ட பெருமை!

Monday, October 12, 2020

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, சி.பி.ஐ மோசடியை ஆரம்பிச்சுட்டாங்க . . .



 ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரக் கொலை வழக்கை மொட்டைச் சாமியார் எப்போது சி.பி.ஐ க்கு மாற்றினாரோ, அப்போதே வழக்கின் மூடு விழா தொடங்கி விட்டது.

இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி அதனை உறுதிப் படுத்தி விட்டது.

ஹாத்ராஸ் வழக்கு மாற்றப்பட்டவுடன் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை தனது இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டது.

கூட்டுப் பாலியல் வன் புணர்ச்சி, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் இருந்துள்ளது.

கொஞ்ச நேரம்தான்.

எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ?

சி.பி.ஐ அந்த F.I.R ஐ தன் இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டது. மோசடி விசாரணையின் முதல் கட்டம் இது.

அடுத்தடுத்த மோசடிகளையும் பார்க்கத்தானே பார்க்கத்தானே போகிறோம்!


Tuesday, September 29, 2020

அப்போ அந்த பத்து கோடி ரூபாய்?

  


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் டிசம்பர் 2016 ல் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். கணக்கில் வராத பணமாக ரொக்கமாக ரூபாய் நூறு கோடியும் தங்கமாக நூறு கிலோவும் கைப்பற்றப்பட்டது என்று அவரை கைது செய்த போது சி.பி.ஐ அறிக்கை கொடுத்தது.

 நூறு கோடி ரூபாய் ரொக்கமும் நூறு கிலோ தங்கமும் ஏன் கணக்கில் வராத பணம் என்பதற்கு எந்த கணக்கும் (அதாவது ஆதாரம்) எங்களிடம் இல்லை என்று சொல்லி சி.பி.ஐ இன்று வழக்கை மூடி விட்டது.

 சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த அதே வேளையில் தமிழகத்திற்கு மிகப் பெரிய இழிவாக அன்றைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறையிலேயே சோதனை நடந்தது.

 ராம் மோகன் ராவ் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் பணி செய்யவும் பணி ஓய்வு பெறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போதே சேகர் ரெட்டி கேஸ் என்ன ஆகும் என்பது தெரிந்து விட்டது. ஆகவே சி.பி.ஐ முடிவில் அதிர்ச்சி அடையவோ, ஆச்சர்யப்படவோ ஏதுமில்லை.

 என்னுடைய கோரிக்கை எல்லாம் ஒன்றுதான்.

 சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற நூறு கோடி ரூபாய் ரொக்கத்தில் பத்து கோடி ரூபாய் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள். அதாவது ஐந்து லட்சம் சிப்பு வைக்கப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுத்தாள்கள்.



 எந்த சமயத்தில் ?

 நிலைமை சீரடையவில்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள் என்று மோடி காலக்கெடு கொடுத்திருந்த ஐம்பது நாட்களுக்குள்.

 ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கூட பார்க்க முடியாமல், பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பாக பைத்தியக்காரர்கள் போல நாம் கால் கடுக்க நின்று, ஏடிஎம், ஏ.டி.எம் மாக திரிந்து கொண்டிருந்த நேரம்.

 வங்கியில் பணம் மாற்ற வந்தவர்களுக்கு அடையாள மை வைத்து அசிங்கப் படுத்திய காலம் அது.

 சேகர் ரெட்டி மேல சி.பி.ஐ. கேஸ் நடத்து இல்ல நடத்தாம அவனுக்கு மறுபடியும் அறங்காவலர் பதவி கொடு.

அது பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

 ஆனா, பத்து கோடி ரூபாய்க்கு ஐந்து லட்சம் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்கு எப்படி வந்தது என்று

 எங்களுக்கு தெரிஞ்சே ஆகனும். ஆமாம், தெரிஞ்சே ஆகனும்.