Showing posts with label பென்ஷன். Show all posts
Showing posts with label பென்ஷன். Show all posts

Tuesday, February 24, 2026

சிந்துபைரவி பென்ஷன் காமெடியும் தவெக தற்குறிகளும்

 


சிந்துபைரவி திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை முதலில் பாருங்கள்.


மத்தியரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ள எட்டாவது ஊதியக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் (TERMS OF REFERENCE) என்பதில் ஓய்வூதியங்களை மாற்றி அமைப்பது என்பது இடம் பெறவில்லை. அதனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய தர்ணாவில் வேலூரில் நான் பங்கேற்றேன். தர்ணாவை நிறைவு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அப்போது நான் இந்த திரைப்படக் காட்சியை குறிப்பிட்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தில் பென்ஷனை நிறுத்துவது என்ற கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ அதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு மோசமானவர்கள் என்று பேசினேன்.

நேற்று வேறொரு காணொளியைக் கண்டேன்.

அது எங்கள் வேலூரில் சொல்லப்பட்டது என்பது ஒரு பெரிய கொடுமை.

அந்த கொடுமையை நீங்களும் பாருங்கள்.


தப்பித் தவறி, ஒரு மோசமான விபத்தாக இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருமானால்  வயதானவர்களின் வாக்குரிமையை மட்டுமல்ல உயிர் வாழும் உரிமையைக் கூட பறித்து விடும் போல . . .

இப்படிப்பட்ட மோசமான புரிதல் காரணமாகத்தான் விஜய்யையும் அவர் கூட்டத்தையும் தற்குறிகள் என்று சொல்கிறோம். தாங்கள் ஏன் தற்குறிகளாக இருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அவர்கள். 

Sunday, January 4, 2026

பென்ஷன் திட்ட முன்னேற்றமும் சங்கிக் கதறல்களும்

 


பங்களிப்பு வரையறுக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதியதொரு பென்ஷன் திட்டத்தை தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது. அது பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்று அல்ல என்ற போதிலும் எதிர்கால ஓய்வூதியத்தை பங்குச்சந்தை சூதாடிகளிடம் ஒப்படைக்கும் புதிய பென்ஷன் திட்டத்தினை விட மேலானது. பென்ஷன் தொகை என்ன என்பது தெளிவானது. இன்னும் முன்னேற்றம் தேவை என்பதில்  மாற்றுக்கருத்து கிடையாது. 

இத்திட்டத்தை சங்கிகள் எதிர்பார்க்கவில்லை போல . . .

இரண்டு விதமான கதறல்கள் கேட்கிறது.

இத்திட்டம் ஒரு ஏமாற்றுத்திட்டம் என்பது ஒரு விதமான கதறல்.

அரசு ஊழியர்களின் மிரட்டலுக்கு அடிப்ணியக்கூடாது என்று காலையில் சுமந்து தொடங்கி வைக்க, மக்களின் பணம் பறி போகிறது என்று ஓயாத கதறல் இன்னொரு புறம்.

அதானி, அம்பானி தவிர வேறு யாருக்காவது சின்ன பலன் கிடைத்தால் கூட சங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியாது போல . . .



Sunday, August 25, 2024

UPS - உழைப்பாளிகளின் வெற்றி

 


புதிய அல்லது தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிணைந்த பென்ஷன் திட்டத்தை (UNIFIED PENSION SECHEME)  ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவித்து உள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இருந்த மிகப் பெரிய அநீதி நீக்கப்பட்டதுதான் யுபிஎஸ்.

பழைய பென்ஷன் திட்டத்தில் பலன் வரையறுக்கப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு வரையறுக்கப்பட்டதே தவிர பலன் என்ன வரும் என்பது தெரியாது.

இப்போது புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில் 25 ஆண்டுகள் பணிக்காலம் உடைய ஊழியர் ஓய்வு பெறும் வேளையில் பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 % பென்ஷனாக வழங்கப்படும். 

ஓய்வூதியர் இறந்தால் அவர் பெறும் பென்ஷனில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்காக அரசின் பங்களிப்பு தற்போதுள்ள 14 % என்பதிலிருந்து 18 % ஆக உயர்த்தப்படும்.

2004 முதல் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வந்ததன் வெற்றி இது. இந்திய மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவை மைனாரிட்டியாக மாற்றியதன் விளைவு இது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களவைத் தேர்தலில் கவனம் பெற்றதன் காரணமாக நிகழ்ந்த மாற்றம் இது.

ஒன்றிணைந்த பென்ஷன் திட்டம் என்ற பெயர் மாற்றம் செய்து   பழைய பென்ஷன் திட்டத்தின் அடிப்படை பலனை அளிப்பதற்குப் பதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு  பழைய பென்ஷன் திட்டத்தையே விரிவு படுத்தியிருக்கலாம். ஆனாலும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதுவும் நடக்ககும், கண்டிப்பாக . . .